Showing posts with label 10th Exam. Show all posts
Showing posts with label 10th Exam. Show all posts

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு.

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பொத்தேர்வு எழுத உள்ளநிலையில் தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எந்த பாடத்தில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும். எனவே தேர்வுக்கு தயாராக இருக்க வேண்டும் கூறியுள்ளது.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் வருகிற மே மாதத்தில் நடைபெற உள்ளது. 2021- 2022ம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வுகளுக்கான செயல்முறை தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பொதுத்தேர்வுகளை சுமார் 30 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்த கல்வியாண்டுக்கான  பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா காலத்தில் குறைக்கப்பட்ட பாடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனவே பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் அனைத்து பாடங்களில் இருந்துகள் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்த ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கான வினாக்கள் 2021- 2022ம் ஆண்டிற்கான மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழங்கப்பட்ட முன்னுரிமை பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் முழுவதில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படுகிறது. இதன் பாடத்திட்ட விவரங்களை அறிந்து கொள்ள www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Notification என்ற பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே பொதுத்தேர்வை எதிர்நோக்கும் மாணவர்கள் சற்று கூடுதலாக கவனம் செலுத்தி அனைத்து பாடங்களையும் படித்து தெரிந்து இருக்க வேண்டும். இதற்கு உறுதுணையாக ஆசிரியர்கள் நல்வழிகாட்டுவார்கள். பிள்ளைகளின் கவனம் படிப்பில் இருக்கும்படியாக அவர்களின் பெற்றோர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பொதுத்தேர்வு எழுதும் போது மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் - தேர்வுத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் தொடங்க உள்ள நிலையில், தற்போது மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுதி வருகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 30 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். 




இதனிடையே தமிழகத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டுமா? என்ற கேள்வி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே எழுந்தது. 

இந்த நிலையில் தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Practical Exam Instructions | செய்முறைத் தேர்வு விதிமுறைகள்





10th Science Practical 2022 - Schedule And Instructions DGE Published.

10ஆம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு 2022 - கால அட்டவணை மற்றும் வழிமுறைகள் - தேர்வுத்துறை வெளியீடு.





10th Science Practical 2022 - Schedule And Instructions DGE Proceedings - Download here