Showing posts with label Educational news. Show all posts
Showing posts with label Educational news. Show all posts

பள்ளிக் கல்வி கூடுதல் பொறுப்பு - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

பள்ளிக் கல்வி கூடுதல் பொறுப்பு - பள்ளிக்கல்வி ஆணையரகம் , இணை இயக்குநர் ( இடைநிலைக்கல்வி ) திரு ச . கோபிதாஸ் சொந்த அலுவல் காரணமாக ஈட்டிய விடுப்பு - 03.06.2022 முதல் 15.06.2022 முடிய சொந்த அலுவல் காரணமாக ஈட்டிய விடுப்பு கோரியமை அன்னார் . பணியிடத்தில் முழுக்கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் செய்து ஆணை வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்...

நடுநிலை, உயர்நிலை ,மேல்நிலைப் பள்ளிகள் பள்ளி தொடங்கும் நேரம் & மதிய நேர செயல்பாடுகள்- பள்ளிக்கல்வி ஆணையரால் வெளியிடப்பட்டுள்ள பதிய கால அட்டவணை-Single Pdf


நடுநிலை, உயர்நிலை ,மேல்நிலைப் பள்ளிகள் பள்ளி தொடங்கும் நேரம் & மதிய நேர செயல்பாடுகள்- பள்ளிக்கல்வி ஆணையரால் வெளியிடப்பட்டுள்ள பதிய கால அட்டவணை-Single Pdf

அரசு மாதிரி பள்ளிகளில் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை!

அரசு நடத்தி வரும் மாதிரிப் பள்ளிகளில், மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.



தமிழகத்தில் மத்திய அரசு நிதி உதவியுடன் 32 மாவட்டங்களில் அரசு மாதிரிப் பள்ளிகளை நடத்தி வருகிறது. மேலும், கூடுதல் வசதிகளுடன் 25 மாதிரிப் பள்ளிகளை 150 கோடி ரூபாய் செலவில் துவங்கவும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

ஏற்கனவே சோதனை முறையில் சென்னையில் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மற்றும் 12 ஆம் வகுப்பில் நன்கு பயிலக் கூடிய மாணவர்களை தேர்ந்தெடுத்து போட்டித் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகளுக்கு உண்டு உறைவிட வசதியுடன் சிறப்பு பயிற்சியும் தமிழக பள்ளிக் கல்வித் துறையால் அளிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல் அரசு நடத்திவரும் மாதிரிப் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 


பத்தாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர் ஒன்பதாம் வகுப்பில் தேசிய அளவில் நடத்தப்படுகின்ற 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு எனப்படும் TRUST தேர்வு மதிப்பெண்களையும், 9ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழித் திறன் தேர்வு எனப்படும் NMMS தேர்வில் பெற்ற மதிப்பெண்களையும், 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான NTSE தேர்வு மதிப்பெண் மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு மாணவர்கள் மெரிட் அடிப்படையில் சேர்க்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் நன்கு பயிலக்கூடிய மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதலே சிறப்பு கவனம் செலுத்துவது மற்றும் சிறப்பு பயிற்சி அளிப்பது போன்றவற்றின் மூலமாக தேசிய அளவிலான கல்வி நிறுவனங்கள் மற்றும் தமிழகத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் நம் மாணவர்கள் உயர் கல்வி படிப்பதை வழிவகை செய்வதற்கு இந்த நடைமுறையை பின்பற்றி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


CEO / DEO க்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!




முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி 19.06.2022 முதல் 21.06.2022 வரை மற்றும் 22.06.2022 முதல் 25.06.2022 வரை நடைபெறுதல்  சார்பு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!


CEO,  DEO Training Proceeding - Download here...

பள்ளிகள் திறப்பு: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளன.

 பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 


இந்த நிலையில், வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 

இது குறித்து தலைமை செயலாளர் இறையன்பு அனுப்பியுள்ள கடிதத்தில், 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறப்பதால் தீவிரமாக தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் தூய்மை இயக்கத்தை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடைப்பிடிக்க வேண்டும்.

 பள்ளிகளை தூய்மைப்படுத்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் தலைமை ஆசிரியர்கள் நிதி வசூலிக்க கூடாது. பள்ளிகளை புதுப்பொலிவுடன் சீரமைத்து வகுப்புகளை நடத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில கல்வி கொள்கை: வரும் 15ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையை வடிவமைக்க, கல்வியாளர்கள், வல்லுனர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிட்டார். 


அதன்படி, மாநில கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைத்தது. அந்த குழுவில் பல்வேறு பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

 இந்த குழு, ஒரு வருடத்தில் கல்வி கொள்கையை வடிவமைத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் உயர் கல்வி, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு மாநிலக் கல்விக் கொள்கை தயார் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், மாநில கல்வி கொள்கையை எப்படி உருவாக்க வேண்டும் என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 15ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். 

கல்வி கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவினருடன் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் : அமைச்சர் அறிவிப்பு

கடந்த 2018ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள 2381 அரசு பள்ளிகளில் எல்கேஜி , யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், எல்கேஜி , யுகேஜி வகுப்புகள் நடப்பு கல்வி ஆண்டு முதல் மூடப்பட்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்படுகிறது. 

எல்கேஜி யுகேஜி வகுப்புகளை வரும் கல்வியாண்டு முதல் மூடுவதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்தது.இதற்க்கு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர் . 

இந்த நிலையில் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்த்துள்ளார் .

எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவைக்கேற்ப நியமிக்கப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார் .

பல்வேறு தரப்பு கோரிக்கையினை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைக்கிணங்க வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் .

அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் மூடல் (LKG, UKG வகுப்புகள்) - பள்ளிக்கல்வித்துறை முடிவு

அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் மூடல்  (LKG, UKG வகுப்புகள்) - பள்ளிக்கல்வித்துறை முடிவு



9ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் 'பாஸ்': பள்ளிக்கல்வித்துறை முடிவு

 ள்ளிக்கு வந்து தேர்வு எழுதிய 9ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கோவிட் பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி பொதுத்தேர்வுகள் நடைபெறாத நிலையில், நடப்பு ஆண்டில் ஆண்டு பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்தது.

10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

இந்த நிலையில், பள்ளிக்கு வந்து தேர்வு எழுதிய 9ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இடைநிற்றலை தவிர்க்கும் விதமாக இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 தேர்வுக்கு வராத மாணவர்களை அழைத்து சிறப்பு தேர்வு எழுத வைக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

1 முதல் 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது 9ம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை எப்படியெல்லாம் அதிகரிக்கலாம்: தொடக்க கல்வி இயக்குநர் சுற்றறிக்கை

தமிழகத்தில் 1 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 13ம் தேதியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 20ம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 27ம் தேதியும் அரசு பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

இந்நிலையில், தொடக்கக்‌ கல்வி இயக்கக நிர்வாகத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ 2022- 23ஆம்‌ கல்வியாண்டில்‌ மாணவர்‌ சேர்க்கைக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.

பள்ளி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில்‌ உள்ள அனைத்து 5 வயதுடைய குழந்தைகளைக்‌ கண்டறிந்து அவர்களை அரசுப்‌பள்ளிகளில்‌ சேர்க்க வீடுதோறும்‌ நேரடியாகச் சென்று உடனடி சேர்க்கையை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டும்‌.

பள்ளியை சுற்றியுள்ள குடியிருப்புகளில்‌ 5+ வயதுடைய குழந்தைகளைக்‌ கண்டறிந்து அவர்களை உடனடியாக அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌.

இடைநின்ற மாணவர்களைக்‌ கண்டறிந்து அவர்களை அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌.

பள்ளி அமைந்திருக்கும்‌ குடியிருப்புப் பகுதிகளில்‌ உள்ள 5+ மாணவர்களை 100% அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்ப்பது தலைமை ஆசிரியர்‌ மற்றும்‌ உதவி ஆசிரியரின்‌ தலையாயக் கடமையாகும்‌.

பள்ளியின்‌ சாதனைகள்‌, வளர்ச்சி, பல்வேறு வகையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள்‌, கல்விமுறை, பாதுகாப்பு குறித்து பெற்றோர்‌ ஆசிரியர்‌ கூட்டம்‌ மற்றும்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழுக்‌ கூட்டத்தின்‌ வாயிலாக பெற்றோர்களிடம்‌ எடுத்து கூறலாம்‌.

பள்ளிகளில்‌ உள்ள திறன்‌ வகுப்பறைகளின்‌ (Smart Class) செயல்பாடுகள்‌ பற்றியும்‌ விரைவுத்‌ துலங்கல்‌ குறியீடு (QR Code) வழியாக பாடக்‌ கருத்துகள்‌ எளிமையாக்கப்பட்டு கற்றல்‌ செயல்பாடு நடைபெறுகின்றது என்பதைப்‌ பற்றியும்‌ பெற்றோர்களுக்கு விரிவாக எடுத்துக்‌ கூற வேண்டும்‌.

தனியார்‌ பள்ளிகளுக்கு நிகரான இணைய வழிப் பாட கற்பித்தல்‌ பற்றியும்‌ வாட்ஸப் வழியாகவும் ஆசிரியர்‌ மாணவர்‌ பாடப் பரிமாற்றங்கள்‌ பற்றியும்‌ பெற்றோர்களுக்கு விரிவாகவும்‌ தெளிவாகவும்‌ தெரிவித்தல்‌ வேண்டும்‌.

மாணவர்கள்‌ சேர்க்கை பற்றி சமூக வலைதளங்களில்‌ ஆடியோ / வீடியோ பதிவுகள்‌ இடம்‌ பெறச்‌ செய்யலாம்‌.

பள்ளியில்‌ சேரும்‌ குழந்தைகளுக்கு ஊக்கப்‌ பரிசு வழங்குவதன்‌ மூலம்‌ மாணவர்‌ சேர்க்கையை மேலும்‌ அதிகரிக்கலாம்‌.

பள்ளி மேலாண்மைக்‌ குழு: 

பள்ளி அமைந்துள்ள குடியிருப்புப்‌ பகுதிகளை பிரித்துக்‌ கொண்டு, ஒவ்வாரு குடியிருப்பில்‌ உள்ள பள்ளி மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்கள்‌ ஆசிரியர்களோடு இணைந்து அப்பகுதியில்‌ உள்ள பள்ளி வயது குழந்தைகளின்‌ பெற்றோர்களிடம்‌ பள்ளியின்‌ சிறப்புகளை எடுத்துக்கூறி மாணவர்‌ சேர்க்கைக்கு உதவுதல்‌

பள்ளி மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்கள்‌ தங்களது குழந்தைகளின்‌ சிறப்பான செயல்பாடுகளை அப்பகுதியில்‌ உள்ள பள்ளி வயதுக் குழந்தைகளின்‌ பெற்றோர்களிடம்‌ நேரடியாக உரையாடச் செய்து அதன்‌ மூலம்‌ மாணவர்‌ சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்தல்‌.

பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களுக்கு மேலாண்மைக் குழுவில்‌ உள்ள உறுப்பினர்கள்‌ குழந்தைகளின்‌ பெற்றோர்களை வரவழைத்து பள்ளி தொடர்பான புகைப்படங்கள்‌ மற்றும்‌ காணொளிகளை திரையிட்டு அரசு வழங்கும்‌ நலத்திட்டங்களை எடுத்துக்கூறி அதன்‌ மூலம்‌ மாணவர்‌ சேர்க்கை நடத்துதல்‌.

பள்ளி மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்களான தலைமை ஆசிரியர்‌, ஆசிரிர்கள்‌, பெற்றோர்கள்‌ உள்ளாட்சி பிரதிநிதிகள்‌, இல்லம்‌ தேடிக்‌ கல்வி தன்னார்வலர்‌ ஆகியோர்‌ ஒன்றிணைந்து குழுவாக செயல்பட்டு பள்ளியில்‌ மாணவர்‌ சேர்க்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள்‌ பற்றி கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகள்‌ எடுக்கலாம்‌.

பள்ளி மேலாண்மைக்‌ குழுவின்‌ பங்கு

ஆசிரியர்கள்‌ எவ்வளவு தான்‌ பள்ளி பற்றிய சிறப்புகளைப் பொதுவெளியில்‌ எடுத்துக்‌ கூறினாலும்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்கள்‌ தாங்கள்‌ வசிக்கும்‌ இடத்தில்‌ உள்ள சக பெற்றோர்களிடத்தில்‌ பள்ளி பற்றி கலந்துரையாடும்‌போது அவர்களால்‌ அதிக தாக்கத்தினை ஏற்படுத்திட முடியும்‌.


பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள்‌ அனைவரும்‌ ஒன்று சேர்ந்து வீடு வீடாக சென்று அரசுப்‌ பள்ளியின்‌ சாதனைகள்‌, கட்டமைப்பு வசதிகள்‌, நலத்திட்டங்கள்‌ கல்வி உதவி தொகைகள்‌ பற்றிப் பெற்றோரிடம்‌ நோடியாக எடுத்துக்‌ கூற வேண்டும்‌.

பள்ளி மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்கள்‌ மாணவர்‌ சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள்‌ எடுத்துச் செல்லலாம்‌ மற்றும்‌ துண்டுப் பிரசுரங்கள்‌ வழங்கலாம்‌.

நம்‌ பள்ளி நம்‌ பெருமை வலைதள செயலியை பொது மக்களிடம்‌ எடுத்துக் கூறி அதன்‌ தனித்துவம்‌ சார்ந்து விளக்குவதன்‌ மூலம்‌ மாணவர்‌ சேர்க்கையை அதிகரிக்கலாம்‌.

பள்ளியில்‌ சேரும்‌ மாணவர்களுக்கு பள்ளி மேலாண்மைக்‌ குழுவின்‌ சார்பில்‌ பரிசுகள்‌ வழங்கி ஊக்கப்படுத்தலாம்‌.

இல்லம்‌ தேடிக்‌ கல்வி தன்னார்வலர்கள்‌ பங்கு

தன்னார்வலர்கள்‌ தங்களது குடியிருப்பில்‌ உள்ள பள்ளி வயதுக்‌ குழந்தைகள்‌ அனைவரும்‌ பள்ளியில்‌ சேர்ந்துள்ள விவரத்தை உறுதிப்படுத்துதல்‌

பள்ளி செல்லாக்‌ குழந்தைகள்‌ தங்கள்‌ குடியிருப்புப்‌ பகுதியில்‌ இருப்பின்‌ அதிக கவனம்‌ செலுத்திட வேண்டும்‌.

தன்னார்வலர்கள்‌ வசித்து வரும்‌ குடியிருப்புப்‌ பகுதியில்‌ புதிதாக பள்ளி வயது குழந்தைகள்‌ உள்ள குடும்பம்‌ குடிபெயர்ந்து வந்திருந்தால்‌ தலைமை ஆசிரியருக்கு தகவல்‌ தெரிவித்துப் பள்ளியில்‌ சேர்த்திட நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டும்‌.

இல்லம்‌ தேடிக்‌ கல்வி தன்னார்வலர்கள்‌ வீடு வீடாகச் சென்று கண்டறிந்த 5+ குழந்தைகளை அரசுப்‌ பள்ளிகளில்‌ சேர்க்க உதவிட வேண்டும்‌.

மேற்கண்ட வழிமுறைகளைப்‌ பின்பற்றி 2022-23ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்''‌.

தொடக்கக் கல்வி - 2022-23ஆம் கல்வி ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பின்வருமாறு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. 

தமிழ்நாட்டில் பள்ளிகளில் சேராத மாணவர்கள் எவரும் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். 86வது சட்டத் திருத்தத்தின்படி தொடக்கக் கல்வி, அடிப்படை உரிமையாக்கப்பட்டு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. மாணவர்களை அரசு பள்ளியை நோக்கி ஈர்க்கும் வண்ணம் செயல்பட வேண்டியது பெற்றோர், ஆசிரியர் மற்றும் தொடக்கக் கல்வி நிர்வாகம் என்ற முக்கூட்டின் தலையாய கடமையாகும். எனவே, 5 வயது பூர்த்தியடைந்த அனைத்து குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கு கீழ்க்கண்ட முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கூட்டம்

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி, அதில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களையும் பங்கு பெறச் செய்து அரசு பள்ளிகளில் கட்டணமே பெறப்படாமல் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகின்றது என்பதை எடுத்துரைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்களை (PRO) அணுகி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக் குறித்து செய்தித்தாட்களில் செய்திகள் வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

SBI Upschool: கதைகள் மூலம் கணிதப்பாடம் - எஸ்பிஐ வங்கியின் புதிய முயற்சி

ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் upschool என்ற இணைய வழி இலவச கல்வித் திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி  அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த டிஜிட்டல் திட்டத்தின் மூலம் கணிதம் மற்றும் மொழி பாடங்களுக்கான தரமான முறையில் கற்பிக்கப்படும் . பெற்றோர் மற்றும் மாணவர்கள் learn.khanacademy.org/upschool என்ற  இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்கள், பாடத் திட்ட அணுகலுக்கான வாட்ஸ்அப் இணைப்பை பெறுவார்கள்.

1 முதல் 10 வகுப்புக்குள் உள்ள குழந்தைகளின் கற்றல் தேவைகளை பூர்த்தி செய்வதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என  எஸ்பிஐ வங்கியின் தலைவர் தினேஷ் காரா தெரிவித்தார்.  வசதி வாய்ப்பற்ற, மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் மாணவர்களின் கணிதறிவு, மொழியறிவில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கதைகள் மூலமாகவும், மகிழ்ச்சியான விளையாட்டு அனுபவங்கள் மூலமாகவும் பாடங்கள் கற்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்னணு கல்வியுடன் கூடிய நடனம், யோகா போன்ற பிற செயல்பாடுகளும் இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விரைவில் அதீநவீன 'பிஎம் ஸ்ரீ பள்ளிகள்' தொடங்கப்படும் : கல்வி அமைச்சர்

எஸ்பிஐ நிதி மேலாண்மை லிமிடெட் நிர்வாக அதிகாரி வினய் எம். டான்சே இதுகுறித்து கூறுகையில், " இது மாணவர்களுக்கு தனிப்பட்ட கற்றல் அனுபவத்தை வழங்குகிறது. மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறோம். கான் அகாடெமி (khan Academy) நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது" என்று தெரிவித்தார்.