Showing posts with label General News. Show all posts
Showing posts with label General News. Show all posts

தற்காலிக ஆசிரியர்கள் இருப்பின் மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணி விடுப்பு செய்திட இயக்குநர் உத்தரவு.

 2021-2022 கலந்தாய்வில் மாறுதல் பெற்ற ஈராசிரியர் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பதிலி ஆசிரியர்கள் வருகை யின்மை  காரணமாக விடுவிக்கப்படாமல் இருப்பின்.. அப்பணியிடத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பின்.. 

மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பணி விடுப்பு செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்!



Click here to Join WhatsApp group for Daily kalvi news

பள்ளிகளில் வாசிப்பு இயக்க துவக்க விழா - 17.8.2022 அன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் துவக்கி வைக்கிறார்

பள்ளிகளில் வாசிப்பு இயக்க துவக்க விழா - தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் செய்திக் குறிப்பு!

IMG_20220816_224415

IMG_20220816_224425

 மாணவர்களிடையே புத்தகம் வளர்த்தெடுப்பதற்காக பள்ளிகளில் ஒவ்வொரு வாசிக்கும் பழக்கத்தை செயல்பட்டு நூலகப் பாடவேளை இப்பாடவேளைகளை வருகின்றன. வகுப்புக்கும் வாரமொருமுறை வழங்கப்பட்டுள்ளது. பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் வாசிப்புத் திறனையும் படைப்புத் திறனையும் வளர்த்துக் கொள்வதற்கு தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை திட்டங்களை தீட்டியுள்ளது. 
சிறந்த நூலகங்கள் இத்திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர்கள் 6-8 , 9-10 , 11-12 என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படவேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் நூலகத்தில் உள்ள நூல்களிலிருந்து வாரம் ஒன்று வழங்கப்படவேண்டும். அவர்கள் அதை வீட்டுக்கும் எடுத்துக்கொண்டு போகலாம் . அதை வாசித்து முடித்தவுடன் நூலகத்தில் திருப்பித் தந்துவிட்டு அடுத்த நூலை எடுத்துக்கொள்ளலாம் . 

படித்த நூல் குறித்து விமர்சனம் எழுதலாம் . அதை வைத்து ஓவியம் வரையலாம் . நாடகம் நடத்தலாம் . கலந்துரையாடல் செய்யலாம் . நூல் அறிமுகம் , புத்தக ஒப்பீடு , மேற்கோள்கள் குறிப்பிடுதல் , கதாபாத்திரங்களை மதிப்பீடு செய்தல் , புத்தகம் தன் கதை கூறுதல் மற்றும் குறு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் என மாணவர்களின் இது போன்ற படைப்புகள் பள்ளிகளில் சேகரித்து வைக்கப்படும் . 

இவற்றில் படைப்புகளைத் தந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வட்டார அளவிலான போட்டிகளில் பங்கெடுக்க வைக்கப்படுவர் . அதில் வெல்பவர்கள் மாவட்டப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் . 

மாவட்ட அளவில் வெல்பவர்கள் மாநில அளவில் நடத்தப்படும் முகாமில் கலந்துகொண்டு போட்டிகளில் பங்கெடுக்கலாம் . ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 3 பேர் என்கிற வகையில் 114 பேர் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடக்கவிருக்கும் முகாமில் பங்கேற்பார்கள் . இம்முகாமில் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்களைக் கொண்டு அமர்வுகள் ஏற்பாடு செய்யப்படும் . இந்நாட்களில் குழந்தை எழுத்தாளர்களுடன் மாணவர்கள் உரையாடும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படும் . 
மேலும் , மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளும் அவர்களின் புத்தக அனுபவப் பகிர்வுகளும் நடைபெற இருக்கின்றன. 

Click here to Join WhatsApp group for Daily kalvi news

மாநில அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு-முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின். பின்னர் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:

எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது. விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஒய்வூதியத்தொகை இன்று முதல் 18 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

குடும்ப ஒய்வூதியம் ரூ.9,000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். வழித் தோன்றல்களுக்கான மாதாந்திர சிறப்பு ஒய்வூதியம் ரூ 9,000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஒய்வூதியர்களுக்கு 1.07.22 முதல் அகவிலைப்படி 31% இருந்து 34% உயர்த்தி வழங்கப்படும்.

இதன்மூலம் 16 இலட்சம் பேர் பயன்பெறுவர். அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,947 கோடி  கூடுதலாக செலவாகும்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டுகால தொடர் பங்களிப்பு குறித்து எதிர்கால இளம் சமுதாயம் அறிந்துகொள்ளும் வகையில் விடுதலை நாள் அருங்காட்சியகம் சென்னையில் அமைக்கப்படும்.

எளிமை, இனிமை, நேர்மை, ஒழுக்கம், மனித நேயம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறார் அண்ணல் காந்தியடிகள்.

இன்றைக்கு நாட்டுக்கு அவசிய, அவசரமான கொள்கைகள் இவைதான். இத்தகைய அனைத்து மனித நேயக் கொள்கைகளும் கொண்ட திராவிட மாடல் ஆட்சியைத்தான் நாம் நடத்தி வருகிறோம்.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வழித்தோன்றல்களுகக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும். அவர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இனி ரூ.10ஆயிரம் வழங்கப்படும். காசியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கப்படும்.

கடந்த ஓராண்டில் தமிழக பல்துறை சார்ந்த வளர்ச்சியை சந்தித்து வருகிறது. மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம், வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என உள்ளிட்ட சாதனைகளை திமுக அரசு நிகழ்த்தி வருகிறது. செஸ் விளையாட்டுப் போட்டியையும் சிறப்பாக நடத்திக் காட்டியிருக்கிறோம் என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.


Click here to Join WhatsApp group for Daily kalvi news

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு தொழில் பாதை (Career Path) திட்டம் - Press News

 

12 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு IIT, மெட்ராஸ் மற்றும் தாட்கோ நிறுவனம் இணைந்து வழங்கும் தொழில் பாதை (Career Path) திட்டம்.


Press News pdf - Download here...


Click here to Join WhatsApp group for Daily kalvi news

ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் - உயர் நீதிமன்றம் உத்தரவு

 10.03.2020க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Incentive Allowed Judgement - Download here



Click here to Join WhatsApp group for Daily kalvi news

தொடக்க வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம்! - பள்ளிக்கல்வித்துறை

 எண்ணும் எழுத்தும் சிலபஸ் படித்து, அடுத்த வகுப்புக்கு முன்னேறும், குழந்தைகளுக்கு எப்படி கற்பிப்பது என்பது தொடர்பான ஆலோசனை, ஆசிரியர்களிடம் இருந்து பெற திட்டமிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்களிடம் கற்றல் இடைவெளி ஏற்பட்டது.


இது களைய, தொடக்க வகுப்பு மாணவர்களை, பள்ளிக்கு ஆர்வமுடன் வரவழைத்து, கற்றல் திறன் மேம்படுத்த, எண்ணும் எழுத்தும் திட்டம், நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. மூன்றாம் வகுப்பு வரை, பிரத்யேகமாக இத்திட்டத்திற்கு சிலபஸ் உருவாக்கப்பட்டுள்ளது.ஆக்டிவிட்டி சார்ந்த கற்றல், கற்பித்தல் நடைமுறையில், பாடங்கள் சொல்லி கொடுப்பதால், மாணவர்கள் விளையாட்டு வழியாக, பல்வேறு தகவல்களை அறிந்து கொள்கின்றனர். 


எண்கள், எழுத்துகளை அறிமுகம் செய்வதோடு, பிழையின்றி வாசித்தல், எழுதுதல், அடிப்படை கணிதத்திறனுக்கு, இதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தை முழுமையாக, ஒன்றாம் வகுப்பில் இருந்து படித்து, நான்காம் வகுப்புக்கு முன்னேறி வரும் குழந்தைகளுக்கு, சிலபஸ் மாற்றியாக வேண்டும். இக்குழந்தைகளின் கற்றல் திறனுக்கு ஏற்ப, வகுப்பறை செயல்பாடுகள் இருந்தால்தான், பாடங்களை உள்வாங்குவதில் சிக்கல் ஏற்படாது.


இதற்காக, ஆசிரியர்களுக்கான கருத்தாய்வு கூட்டம், சென்னையில் நடந்தது. தொடர்ந்து, மாவட்ட வாரியாக முதன்மை கருத்தாளர்களாக செயல்படும், ஆசிரியர்களிடம் இதுசார்ந்து கருத்துகள் பெற்று, புதிய நடைமுறை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.முதன்மை கருத்தாளர்கள் சிலர் கூறுகையில், 'தொடக்க வகுப்பிலே, புதிய கற்றல் முறை கொண்டு வந்ததால், அடுத்தடுத்த வகுப்புகளில், பாடத்திட்டத்தில் மாற்றங்கள் புகுத்த வேண்டியது அவசியம். 


அடுத்த கல்வியாண்டில், மூன்றாம் வகுப்பு முடிக்கும் குழந்தைகள், நான்காம் வகுப்புக்கு செல்லும் போது, புதிய நடைமுறைகள் கொண்டு வந்தால்தான், கற்றலில் தொய்வு இருக்காது. இது சார்ந்து, அனைத்து ஆசிரியர்களிடமும் கருத்துகள் பெற்ற பிறகு, பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.


Click here to Join WhatsApp group for Daily kalvi news

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகள் - ஆணை வெளியீடு.

 பள்ளிக் கல்வி கல்வியாண்டிற்கு 2021-22 ஆம் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.


GO NO : 220 , Date : 05.08.2022 - Download here....


அனைத்து வகைப் பள்ளிகலும் மண்டல ஆய்வுக் குழுவினரால் இரண்டு தினங்கள் ஆய்வுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு.

 


திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வகைப் பள்ளிகலும் மண்டல ஆய்வுக் குழுவினரால் 16.08.2022 மற்றும் 17.08.2022 ஆகிய இரண்டு தினங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. ஆய்வில் கீழ்காணும் வழிகாட்டுதல்கள் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


 ஆய்வுக்கான வழிகாட்டுதல்கள் CEO Proceedings - Download here



Click here to Join WhatsApp group for Daily kalvi news



பதவி உயர்வு கலந்தாய்வு தகவல்

இயக்குநர் அலுவலகத்தில் இருந்து முன்னுரிமை பட்டியலை தயார் செய்து உடனடியாக ஒப்புதல் பெற சுற்றறிக்கை அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள நிலையில், அதன் அடிப்படையில் இம்மாதம் 20ஆம் தேதிக்குள் முன்னுரிமை பட்டியல் தயாராகிவிடும் என்றும் பின்னர் அது சார்ந்து விரைவில் அட்டவணை வெளியிடப்பட்டு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதிக்குள் பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வு முடிக்கப்படும் என தொடக்கக் கல்வி துறை தகவல்


 Click here to Join WhatsApp group for Daily kalvi news

தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு 2022 - 2023 | தேர்வுத்துறை அறிவிப்பு

 

பள்ளி மாணவ , மாணவியர்களின் அறிவியல் , கணிதம் , சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022-2023 - ஆம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்தப்படவுள்ளது.


இத்தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500 / - வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்.


இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும் , மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.


தமிழ்நாடு அரசின் 10 - ஆம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும்.


2022-2023 - ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் ( CBSE / ICSE / உட்பட ) பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் , 01.10.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது 


இத்தேர்விற்கு மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும் . எனவே , மாணவர்கள் இத்தேர்விற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.08.2022 முதல் 09.09.2022 வரை பதிவிறக்கம் செய்து , பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ .50 / - சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.


 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் . 09.09.2022 .


TTSE 2022 - Press Release - Download here...


Click here to Join WhatsApp group for Daily kalvi news



Click here to Join WhatsApp group for Daily kalvi news

தமிழ்நாட்டில் மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் தேதி அறிவிப்பு.

 தமிழ்நாட்டில் மொஹரம் பண்டிகை 09.08.2022 (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமைக் காஜி அறிவிப்பு!


ஆகஸ்ட் 10 - உள்ளூர் விடுமுறை

 

சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்த திருவிழா ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதன் முக்கிய திருவிழா ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதனால் சேலம் மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அன்றைய தினம் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் விடுமுறையானது தமிழ்நாடு அரசு பள்ளித்தேர்வுத்துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு பொருந்தாது எனவும், ஆகஸ்ட் 10 ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளதால், அதனை ஈடு செய்யும் வகையில் செப்டெம்பர் 3 ஆம் தேதி (சனிக்கிழமை ) முழு வேலை நாளாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து திருவிழாவில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 Click here to Join WhatsApp group for Daily kalvi news

தமிழக அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: சிற்றுண்டி மெனு முதல் குறிக்கோள் வரை - முழு விவரம்

 

தமிழக அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தைப் பார்ப்போம்.

 முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், இந்தத் திட்டத்தை செயல்படுத்த தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் முழு விவரம்:

1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தபடவுள்ளது.

இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5941 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

23 நகராட்சிகளில் 163 பள்ளிகளில் 17,427 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

11 வட்டாரங்களில் 728 பள்ளிகளில் 42,826 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

6 மலைப்பகுதிகளில் 237 பள்ளிகளில் 10,161 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

உணவு விவரம்

 திங்கள் - அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்

செவ்வாய் - ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி

புதன் - வெண் பொங்கல், ரவா பொங்கல் + காய்கறி சாம்பார்

வியாழன் - அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்

வெள்ளி - ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி + ரவா கேசரி, சேமியா கேசரி.

வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் உள்ளூர் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி

குறிக்கோள்கள்

மாணவர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல்

ஊட்டச்சத்தை உயர்த்துதல்

வருகை அதிகரித்தல்

வேலைக்கும் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமை குறைத்தல்

வழிமுறைகள் 

உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் FSSAI நெறிமுறைகளின் படி இருக்க வேண்டும்

உணவு தயாரிப்பதில் வேறு வெளி மூலப் பொருட்களை சேர்க்கக் கூடாது.

உள்ளூர் சமையல் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்

காய்கறிகளின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்

பள்ளி மேலாண்மை குழு தினசரி உணவை ருசி பார்க்க வேண்டும்

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்

கண்காணிப்பு

இந்த திட்ட செயல்பாட்டை கண்காணிக்க சமூக நலன், ஊரக வளர்ச்சி, நகர்புறம், மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக் கல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள், உணவு பாதுகாப்பு துறை ஆகிய அதிகாரிகள் அடங்கிய குழு மாநில, மாவட்ட, பள்ளி அளவில் அமைக்க வேண்டும்.

Click here to Join WhatsApp group for Daily kalvi news

 

1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்கள்ளுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசாணை வெளியீடு.

 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்கள்ளுக்கு காலை சிற்றுண்டி வழங்க திட்டம்.


முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை- அரசாணை வெளியீடு.


GO NO : 43 , DATE : 27.07.2022 - Download here...


Click here to Join WhatsApp group for Daily kalvi news