Showing posts with label General News. Show all posts
Showing posts with label General News. Show all posts

நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்துக்கு ஒருநாள் ஊதியத்தை வழங்குகின்றனர் ஐஏஎஸ் அதிகாரிகள்

 

தமிழக அரசின் நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்துக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் ஒருநாள் ஊதியத்தை வழங்குகின்றனர். அரசு பள்ளிகளை மேம்படுத்த தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் ஒருநாள் ஊதியத்தை நன்கொடையாக தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News 

பொது தேர்வு எழுதும் மாணவர்களில் வருகையினை தேர்வு நாட்களில் இணையத்தில் பதிவேற்ற உத்தரவு.

 தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 பொது தேர்வு வரும் 13ம் தேதியும்; பிளஸ் 1 பொது தேர்வு 14ம் தேதியும் துவங்குகின்றன. தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.


இந்நிலையில், தேர்வறை கண்காணிப்பாளர்களுக்கு, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா சுற்றறிக்கை:


பொது தேர்வு நடக்கும் ஒவ்வொரு நாளும், தேர்வில் பங்கேற்ற மாணவர்கள், 'ஆப்சென்ட்' ஆனவர்கள் உள்ளிட்டோர் விபரங்களை, அரசு தேர்வுத்துறையின், www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில், தேர்வு கண்காணிப்பு பணியில் உள்ள ஆசிரியர்கள் பதிவேற்ற வேண்டும்.


மாற்று திறனாளி சலுகை பெற்றவர்களின் விபரங்களையும், ஒவ்வொரு தேர்வு நாளிலும், இணையதளத்தில் குறிப்பிட வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Click here for latest Kalvi News 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புன்னகை திட்டம் தொடக்கம்!

 சென்னையில் அரசுப் பள்ளி மாணவர்களின் பல் பாதுகாப்பு திட்டமான புன்னகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புன்னகை திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 


முதல்கட்டமாக 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. மாணவர்களுக்கு ஏற்படும் வாய்வழி தொற்று நோய்களை தடுக்க புன்னகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 1000 இடங்களில் காய்ச்சல் முகாம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் இன்புளூயன்சா எச்3என்2 வகையை சேர்ந்த வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக ஐசிஏஆர் தெரிவித்துள்ளது. காய்ச்சல், தொண்டை புண், இருமல், சளி உள்ளிட்டவை இதன் அறிகுறிகள் ஆகும். எச்3என்2 வைரஸ் கொரோனோ போல வேகமாக பரவும் என்பதால் முகக்கவசம் அணியவும், அடிக்கடி கைகளை கழுவவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தமிழ்நாடு அரசும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த சூழலில் நாளை சென்னையில் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Click here for latest Kalvi News 

அரசு மாதிரி பள்ளிகளில் கட்டாயமாக நுழைவுத் தேர்வு கிடையாது: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

 அப்போது தேர்வு முடிந்ததும் இங்க் அடித்து விளையாடுவோம், இப்போது மாணவர்கள் மேசை உடைத்து விளையாடுகிறார்கள், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 8ம் வகுப்பு வரையில் மாணவர்களின் கல்வி நிலை குறித்து சர்வே எடுக்க சொல்லியிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம் பாலக்காடு அருகே, மாமல்லபுரம் அரசு பள்ளியில் மேசை நாற்காலிகளை உடைத்து ஐந்து மாணவ மாணவிகள் அட்டகாசம் செய்துள்ளனர்.


மேசை மற்றும் நாற்காலிகளை உடைத்த 5 மாணவ மாணவிகள் ஐந்து நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், அப்போது தேர்வு முடிந்தது இங்க் அடித்து விளையாடுவோம். இப்போது மாணவர்கள் மேசை உடைத்து விளையாடுகின்றனர். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில், பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அரசு மாதிரி பள்ளிகளில் கட்டாயமாக நுழைவுத் தேர்வு கிடையாது. எட்டாம் வகுப்பு வரையில் மாணவர்கள் கல்வி நிலை குறித்து சர்வே எடுக்க சொல்லி இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.


Click here for latest Kalvi News 

6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வளரறி மதிப்பீட்டு வினாடி வினா நடத்துவது சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள்

  DSE மாவட்டம் தோறும் வளரறி மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் | வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பயிற்சி அளித்தல் - செயல்முறைகள்


பென்ஷன் இணையதளங்களை ஒருங்கிணைக்கிறது மத்திய அரசு

 மத்திய அரசு ஓய்வூ தியதாரர்களுக்கான, பென்ஷன் இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக, மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.வங்கியாளர்களுக்கான விழிப்புணர்வு பயிலரங்கம், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இரண்டு நாள் நடக்கிறது. இதை நேற்று துவக்கி வைத்து, மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது: 

ஓய்வூதியதாரர்களுக்கான சேவைகளை சுலபமாக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆயுள் சான்று அளிக்கும் நடைமுறை, 'டிஜிட்டல்' மயமாக்கப்பட்டது.


'மொபைல்போன் ஆப்' வாயிலாகவும் ஆயுள் சான்றை அளிக்கும் வசதி துவக்கப்பட்டது.


தற்போது, முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் வாயிலாக சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறுவதில், ஓய்வூதியதாரர்களுக்கு உள்ள பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில், ஒருங்கிணைந்த ஓய்வூதியதாரர்கள் இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் வழங்கும் ௧௮ வங்கிகளின் இணையதளங்கள் உட்பட, ஓய்வூதியம் தொடர்பான இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.இது ஓய்வூதியதாரர்களுக்கு சிரமம் இல்லாமல், தங்களுடைய சேவைகளை பெறுவதற்கு உதவும்.இவ்வாறு அவர் பேசினார்.


Click here for latest Kalvi News 

சிறார் திரைப்படத் திருவிழா - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு!

 சிறார் திரைப்படத் திருவிழா - பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு!


அரசுப் பள்ளி மாணவர்கள் தரமான கல்வி பெறவேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது . கல்வி இணைச் செயல்பாடுகளில் அண்மைக் காலமாக தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் ஈடுபடும் வகையில் பள்ளிக் கல்வித் துறை பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது.

CEO Tranfer & DEO to DEO Promotion G.O. by TN SCHOOL EDUCATION!

 CEO Tranfer & DEO to DEO Promotion G.O. by TN SCHOOL EDUCATION!

பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழுள்ள வகுப்பு III- ஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலருக்கு நிர்வாக நலன் கருதி , அவரது பெயருக்கு எதிரே பணியிட மாறுதல் வழங்கி அரசு குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு ஆணையிடுகிறது.


GO NO : 55 , Date : 08.03.2023 - Download here...



Click here for latest Kalvi News 

மார்ச் 8 - இன்று உலக மகளிர் தினம் (International Women's Day) - கொண்டாடப்படுவதற்கான வரலாறு!!!

 ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் மாதம் 8 -ம் தேதி கொண்டாடப்படுகிறது. அது வந்த வரலாற்றை சற்று பின்னோக்கி பார்ப்போம். 

வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும். இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டத்திற்கான வெற்றிகள் அவ்வளவு எளிதாக கிட்டவில்லை. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்தான். 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார். அவர்தான் உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். அதுமுதல் உலகின் பல்வேறு நாடுகளிலும் மகளிர் தினக் கொண்டாட்டங்கள் நடைபெற ஆரம்பித்தன.சமீப காலமாகத்தான் இந்தியாவில் மகளிர் தின கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.



Click here for latest Kalvi News 

“நான் முதல்வன்” - போட்டித் தேர்வுகள் பிரிவு தொடக்கம் - செய்தி வெளியீடு எண்‌ : 479 நாள்‌ : 07.03.2023

 " நான் முதல்வன் திட்டம் " - போட்டித் தேர்வுகள் பிரிவு மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு . உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையில் தொடங்கி வைத்தார்.



 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான " நான் முதல்வன் திட்டத்தின் போட்டித் தேர்வுகள் பிரிவு " தொடக்க நிகழ்ச்சி இன்று ( 07.03.2023 ) சென்னை , கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது. " நான் முதல்வன் திட்டத்தின் போட்டித்தேர்வுகள் பிரிவின் கீழ் அரசுத் தேர்வுகளான எஸ்.எஸ்.சி ( SSC ) . ரயில்வே ( RAILWAY ) , வங்கி ( BANKING ) மத்திய ( UPSC ) தமிழ்நாடு அரசுப்பணி ( TNPSC ) , இராணுவம் ( DEFENCE ) போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தமிழ்நாடு முழுவதும் சிறந்த முறையில் பயிற்றுவிக்கும் வகையில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.



பொதுத் தேர்வு கண்காணிப்பாளராக தனியார் ஆசிரியர்களை நியமனம் செய்ய கூடாது: தேர்வு துறை உத்தரவு

 தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளராக தனியார் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் 13-ம் தேதி தொடங்கி நடக்க உள்ளது. இதற்கான தேர்வு மையங்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை மட்டுமே முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்க வேண்டும்.


கூடுதல் தேவை ஏற்பட்டால், அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பணிமூப்பில் மூத்த முதுநிலை ஆசிரியரை முதன்மை கண்காணிப்பாளராக நியமித்துக் கொள்ளலாம்.


எக்காரணம் கொண்டும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட கூடாது. இந்த வழிமுறைகளை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் பின்பற்றி, புகாருக்கு இடமின்றி தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.



Click here for latest Kalvi News 

நான் முதல்வன்'திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நாளை தொடக்கம்!

 நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். முதலமைச்சரால் துவங்கப்பட்ட மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “போட்டித் தேர்வுப் பிரிவு” இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஓழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் (07.03.2023) நாளை காலை 10.00 மணியளவில் துவங்கப்பட உள்ளது.


“நான் முதல்வன்” திட்டத்தின் போட்டித் தேர்வுகள் பிரிவின் கீழ், அரசு தேர்வுகளான SSC, Railway, Banking, UPSC, TNPSC, Defence, போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்நாடு முழுவதும் சிறந்த முறையில் பயிற்றுவிக்கும் வகையில் இத்திட்டம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே துவங்கப்படவுள்ளது. இப்போட்டித் தேர்வு பிரிவில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்கள் போட்டித்தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் போட்டித் தேர்வு பிரிவு துவங்கப்படவுள்ளது.

இந்த தொடக்க விழாவிற்கு உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அரசு முதன்மை செயலர் உதயச்சந்திரன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் இன்னசென்ட் திவ்யா இளைஞர்களுக்கு ஊக்க உரை அளிக்க கலியமூர்த்தி (ஓய்வு) உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிகழ்ச்சியில் சென்னையை சுற்றியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர்.



Click here for latest Kalvi News 

கல்வித் துறை பணியாளர்களுக்கு `இ-ஆபீஸ்' குறித்து பயிற்சி

 பள்ளிக்கல்வித் துறையில் காகிதப் பயன்பாட்டை குறைக்கும் ‘இ-ஆபீஸ்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், அனைத்துப் பணியாளர்களுக்கும் இதுகுறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


தமிழக அரசு நிர்வாகத்தில் காகிதப் பயன்பாட்டை குறைக்கும்நோக்கில் ‘இ-ஆபீஸ்’ திட்டம் 2022 ஆக. 1 முதல், பல்வேறு துறைகளில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.


அந்த வகையில், பள்ளிக்கல்வித் துறையிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. துறையின் தலைமை அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகம் மற்றும் அரசுப் பள்ளிகளில் விரைவில் இ-ஆபீஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


இதையொட்டி, துறை ஊழியர்களுக்கு இதுதொடர்பாக பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு, அலுவலர்கள், பணியாளர்களின் விவரங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, பள்ளிக்கல்வித் துறையில் கருத்துரு, தகவல் பரிமாற்றம், கோப்புகள் அனைத்தும் இ-ஆபீஸ் மென் பொருள் வாயிலாகவே அனுப் பப்படும்.

CTET - Dec 2022 Result Published

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நடந்த தேர்வுக்கான முடிவுகளை https://ctet.nic.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். முதல் தாள் தேர்வு எழுதிய 14.22 லட்சம் பேரில் 5.79 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாள் தேர்வு எழுதிய 12.76 லட்சம் பேரில் 3.76 லட்சம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.


CTET டிசம்பர் தேர்வின் தாள் 1 க்கு மொத்தம் 17,04,282 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்தனர், அவர்களில் 14,22,959 பேர் தேர்வெழுதினர் மற்றும் 5,79,844 பேர் தகுதி பெற்றுள்ளனர். தாள் 2ல், 15,39,464 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 12,76,071 பேர் தேர்வெழுதி 3,76,025 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் 28, 2022 முதல் பிப்ரவரி 7, 2023 வரை நடத்தப்பட்டது. இதற்கான விடைக்குறிப்பு பிப்ரவரி 14, 2023 அன்று CBSE ஆல் வெளியிடப்பட்டது. சவால்களைச் சமர்ப்பிக்க பிப்ரவரி 17, 2023 வரை கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டது.

CBSE ஆனது CTET 2022-23 தேர்வை டிசம்பர் 28, 2022 முதல் பிப்ரவரி 7, 2023 வரை நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தியது. சிபிஎஸ்இ 2022-23க்கான CTET தற்காலிக பதில் விசையை பிப்ரவரி 14, 2023 அன்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் தகுதிச் சான்றிதழ்கள் விரைவில் டிஜிலாக்கரில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் விண்ணப்பதாரர்கள் CTET டிசம்பர்-2022 இன் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் அவர்களுக்கு வழங்கிய  பதிவு எண்ணைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர்.



Click here for latest Kalvi News 

ஓய்வூதியர் குறைதீர் கூட்டங்களை மாவட்டங்களில் நடத்துதல் சார்ந்து வழிகாட்டுதல்கள் வழங்கி அரசாணை வெளியீடு!

 


ஓய்வூதியர் குறைதீர் கூட்டங்களை மாவட்டங்களில் நடத்துதல் சார்ந்து வழிகாட்டுதல்கள் வழங்கி அரசாணை வெளியீடு!

 G.O.Ms.No.38 - Download here


Click here for latest Kalvi News 

விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் தொடர்பு அலுவலரின் (Liaison Officer) பணிகள் குறித்து அரசுத் தேர்வுகள் இணை இயக்குநரின் செயல்முறைகள்!


நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளின் விடைத்தாட்களை விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் அன்றன்றே கலக்கிப் பிரிக்கும் பணியினை மேற்கொள்ள தங்களால் நியமனம் செய்யப்பட்ட தொடர்பு அலுவலர்களுக்கான அறிவுரைகள் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது . இவ்வறிவுரைகளை தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு நியமனம் செய்யப்பட்ட தொடர்பு அலுவலர்களுக்கு வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Liaison Officer Instructions.pdf - Download here 


Click here for latest Kalvi News 

தமிழ் வழியில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் விலையில்லா பாடப் புத்தகங்கள்

 வரும் கல்வி ஆண்டில் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என பாடநூல் கழகத் தலைவர் ஐ லியோனி தெரிவித்துள்ளார். தமிழ் வழியில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பாடப் புத்தகங்கள் விலையில்லாமல் வழங்கப்பட உள்ளதால் கூடுதலாக பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வருவதாக பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி கூறியுள்ளார்.


கடந்த செப்டம்பர் மாதம் முதலே வரும் கல்வி ஆண்டிற்கு தேவையான பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகள் தொடங்கி விட்டதாகவும் வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் போது மாணவர்களுக்கு தடையில்லாமல் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இதுவரை 25 புத்தகங்கள் தமிழில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் மருத்துவத் துறை மாணவர்களுக்கான புத்தகங்களில் 5 புத்தகங்கள் தமிழில் மொழிப் பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு இருப்பதாகவும் மேலும் 13 புத்தகங்கள் மொழிமாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.


Click here for latest Kalvi News 

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறை ஆணை வழங்குதல் தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்.

 


மேல்நிலைக்கல்விப்பணி 01.01.2021 நிலவரப்படி வரை உள்ள 01.01.2013 நிலவரப்படி முதல் காலத்திற்கு பதவி உயர்வு மூலமாக கணிதம் , இயற்பியல் , வேதியியல் , தாவரவியல் , விலங்கியல் மற்றும் உயிரியல் UBL முதுகலைப் பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்றவர்களுக்கு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன் முறை ஆணை வழங்குதல் தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள். 


PG Teachers Regularisation Order - Download here

Click here for latest Kalvi News 

மாதிரிப் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான அடிப்படை தேர்வு (Baseline Assessment) அறிவிப்பு.

 மாதிரிப் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான அடிப்படை மதிப்பீடு (Baseline Assessment) - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 04.03.2023 அன்று நடைபெற உள்ளது - தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலரின் செயல்முறைகள்!



பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு

 பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை விரிவான அறிக்கையாக அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு.



புதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்களை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கு தமிழக அரசின் நிதித்துறை உத்தரவு 

ஊழியர்கள் அளிக்கும் தகவல்கள் நீதிமன்ற வழக்கு, அரசாணைகள் அடிப்படையில் தமிழக அரசு இறுதி முடிவெடுக்கும் - அரசாணை Download here

அரசு ஊழியர்களுக்காக தற்போது நடைமுறையில் உள்ளபுதிய ஓய்வூதிய திட்டத்திலிருந்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு கொண்டு வருவது தமிழக அரசு தீவிர ஆலோசனை 

2004 ஆம் ஆண்டு அமலுக்கு வந்த புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அரசு நடவடிக்கை....