Showing posts with label Illam Thei Kalvi. Show all posts
Showing posts with label Illam Thei Kalvi. Show all posts

இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு மூன்றாவது கையேடு . சுவரொட்டிகள் , அட்டைகள் வழங்க சிறப்பு பணி அலுவலர் உத்தரவு

இல்லம் தேடிக் கல்வி மையங்களில் ஜுன் ஒன்று முதல் மூன்றாவது கையேடு . சுவரொட்டிகள் , அட்டைகளை பெற்று தன்னார்வலர்கள் மையங்களை நடத்திட சிறப்பு பணி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.




இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கான வழங்கப்பட்டுள்ள கட்டகங்கள் , சுவரொட்டிகள் , அட்டைகள் மற்றும் கதை புத்தகங்கள் மையங்களுக்கு வழங்குவதற்கான வழிக்காட்டுதல் :


கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி / இழப்பினை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் " இல்லம் தேடிக் கல்வி " அனைத்து மாவட்டங்களிலும் நன்முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளிலும் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் தொடங்கப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு தற்பொழுது கற்றல் கற்பித்தலுக்கான மூன்றாவது கையேடு , சுவரொட்டிகள் ( Posters ) , அட்டைகள் தொடக்க நிலை / உயர் தொடக்க நிலை என பிரிவு வாரியாக மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மாவட்டவாரியாக வழங்கப்பட்டுள்ள கையேடு . சுவரொட்டிகள் ( Posters ) , அட்டைகளின் எண்ணிக்கை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.


 தன்னார்வலர்களுக்கு பிரிவு வாரியாக வழங்கப்பட்டுள்ள மூன்றாவது கையேடு . சுவரொட்டிகள் , அட்டைகளின் விவரம் பின் வருமாறு



Click Here to Download - Illam Thedi Kalvi - 3rd Module - Pdf

ITK Baseline Survey - தன்னார்வலர்களின் கவனத்திற்கு...

தன்னார்வலர்களின் கவனத்திற்கு..

நீங்கள் அனைவரும் உங்களிடம் பயிலக்கூடிய மாணவர்களுக்கு Baseline Survey செய்து வருகின்றீர்கள். சில பேர் அதை வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள். ஒரு சில கருத்துக்களை உங்களுக்கு மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

🔴ஒரு மாணவனுக்கு Baseline சர்வே எடுக்கும் பொழுத அவன் படிக்கக்கூடிய வகுப்பில் முதலில் survey மேற்கொள்ள வேண்டும்..

🔴ஒவ்வொரு பாடத்திலும் குறைந்த பட்சம் 2 வகுப்புகளுக்கு  மேற்கொள்ளப்பட வேண்டும் .உதாரணமாக மூன்றாம் வகுப்பு பயிலக் கூடிய ஒரு மாணவன் தமிழ் பாடத்தில் உள்ள நான்கு கேள்விகளில் மூன்று கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்திருந்தால் (50% க்கு மேல் ) அம்மாணவனுக்கு Booster Level-ஆக நான்காம் வகுப்பு தமிழ் பாடம் சர்வேயில் ஓபன் ஆகும். இதனையும் அந்த மாணவன் முடித்தால் மட்டுமே தமிழ்பாடம் ஆனது முழுமையாக survey செய்யப்பட்டிருக்கும்.


🔴ஒருவேளை அம்மாணவன் மூன்றாம் வகுப்பு தமிழ் பாடத்தில் கேட்கப்பட்டுள்ள நான்கு கேள்விகளில் ஒரு கேள்விக்கு மட்டுமே சரியாக பதில் அளித்திருந்தால் (50 % க்கு கீழ்) அம்மாணவனுக்கு முந்தைய வகுப்பான இரண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் உள்ள LO மீண்டும் வலுவூட்டப்படும்.. இரண்டாம் வகுப்பு பாடத்திலும் 50  % கீழ் பெற்றிருந்தால் அதற்கு முந்தைய வகுப்பு ஓபன் ஆகும். இதனை அம்மாணவன் முடிக்க வேண்டும். அப்போதுதான் அம்மாணவனுக்கு தமிழ் பாடத்தில் முழுமையாக சர்வே முடிக்கப்பட்டு விட்டதாக அர்த்தம்..


🔴இதேபோன்று ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூகவியல் என அனைத்து பாடங்களிலும் குறைந்தபட்சம் 2 வகுப்புகளுக்கு சர்வே செய்யப்பட வேண்டும். அதாவது அந்த மாணவன் படிக்கக்கூடிய வகுப்பு மற்றும் அந்த மாணவனின் அடைவுத் திறனை பொருத்து அதற்கு முந்தைய வகுப்பு அல்லது அதற்கு அடுத்த வகுப்புக்குரிய வினாக்களுக்கும் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே Baseline Survey-யானது முழுமையாக முடிக்கப்பட்டதாக கருத வேண்டும்.


பாடங்களில் உள்ள வண்ணங்களுக்கான விளக்கம்


🔴முதலில் ஒரு மாணவனுக்கு சர்வே ஆரம்பிக்கும் பொழுது அனைத்து பாடங்களும் சிவப்பு நிற வண்ணத்தில் இருக்கும். முதலில் ஒரு பாடத்தினை தேர்வு செய்து சர்வே  மேற்கொண்டு அந்த மாணவன் அந்தக் குறிப்பிட்ட பாடத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான சரியான விடைகளை அளித்திருந்தால் அப்பாடமானது சர்வே முடிக்கப்பட்ட உடன் பச்சை நிறமாக மாறிவிடும்..


🔴ஒருவேளை அந்தப் பாடத்தில் 50 சதவீதத்திற்கும் குறைவான சரியான விடைகளை அளித்திருந்தால் அப்பாடமானது சர்வே முடிக்கப்பட்ட பின்பும் சிவப்பு நிறத்திலேயே இருக்கும். உடனடியாக அம்மாணவருக்கு  அதற்கு முந்தைய வகுப்பிற்கு survey மேற்கொள்ள வேண்டும். அதில் 50 % கும் மேற்பட்ட அடைவினைப் பெற்றால் மட்டுமே அந்த பாடம் பச்சை நிறமாக மாறும்.... 


அக்குறிப்பிட்ட மாணவன் அந்த குறிப்பிட்ட பாடத்தில் 50 சதவீத அடைவினை பெறும் வரை  survey மேற்கொள்ள வேண்டும்.இதனை தன்னார்வலர்கள் குழப்பிக்கொள்ளக்கூடாது.

(Submitted successfully என்று வந்தவுடன் உடனடியாக back பட்டனை press செய்யக்கூடாது. நீங்கள் எடுத்த சர்வே ஆனது serverல் update ஆவதற்கு 5 விநாடிகள் காத்திருந்து பின்னர் பேக் பட்டனை அழுத்தவும்)
வகுப்புகளும் வண்ணங்களும்:
🔴முதலில் நீங்கள் ஒரு பாடத்தை தேர்வு செய்து உள் நுழையும் பொழுது வகுப்பு நீல நிற வண்ணத்திலும் அதற்கு பக்கத்தில் உள்ள கட்டத்தில் மஞ்சள் நிற புள்ளியும் காணப்படும் அப்படி என்றால் நீங்கள் இன்னும் சர்வே செய்யவில்லை. இப்படி இருக்கும் வகுப்புகளுக்கு நீங்கள் கட்டாயம் சர்வே செய்ய வேண்டும். ஒருவேளை சிவப்பு நிறவட்ட குறியீடு இருந்தால் அடைவு 50 % கீழ் உள்ளது என்று அர்த்தம். அடுத்து அதற்கு முந்தைய வகுப்பிற்கு survey மேற்கொள்ள வேண்டும் பச்சை நிற வண்ணத்தில் மாறும் வரை....

பச்சை நிற வண்ணத்தில் வந்தால் மட்டுமே ஒரு பாடத்தில் survey சரியாக முடிக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.


குறிப்பு:

🔴ஒரு ஒன்றாம் வகுப்பு மாணவன் ஒரு பாடத்தில் 50 % மேல் அடைவு பெற்றிருந்தால் இரண்டாம் வகுப்பு பாடம் ஓபன் ஆகும் ஒருவேளை 50 %  அடைவிற்கு கீழ் பெற்றிருந்தால் அதற்கு முந்தைய வகுப்பு ஓபன் ஆகாது..

🔴அதே போன்று ஒரு எட்டாம் வகுப்பு மாணவன் 50 % அளவிற்கு கீழாக அடைவு பெற்றிருந்தால் அதற்கு முந்தைய வகுப்பான ஏழாம் வகுப்பு பாடம் ஓபன் ஆகும். ஒருவேளை 50 % மேலாக அடைவினை பெற்றிருந்தால் அவனுக்கு அடுத்த வகுப்பிற்கான பாடம் ஓபன் ஆகாது...

🔴Baseline survey last date extend to 13.05.2022 இதற்கு மேல் நீட்டிக்கப்பட மாட்டாது. அதன் பின்னர் பள்ளிக்கு விடுமுறை என்பதால் விரைந்து முடிக்க வேண்டுகிறோம்.

மாநில இல்லம் தேடிக் குழு.