குழந்தைகள் கல்விக்கு உதவும் மிலியூ கல்விமுறை

சில குழந்தைகளுக்கு பள்ளியில் சேர்க்கும் வயது வரும்போது பேச்சுத் திறன் பாதிக்கப்படும். பேச்சு திக்குதல், பேச்சின் இடையே நாக்கு குழறுதல் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும். இதுபோன்ற பாதிப்புகள் கொண்ட குழந்தைகளுக்கு மிலியூ (Milieu) கல்வி உதவுகிறது. இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம்.


மேலை நாடுகளில் பிரபலமான இந்த மிலியூ கல்விமுறை மூலமாக எல்கேஜி, யூகேஜி பயிலும் மூன்றரை வயது குழந்தைகள் பலர் பலன் அடைந்து வருகின்றனர். ஆட்டிஸம், டிஸ்லெக்ஸியா, திக்குவாய் பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகள் கொண்ட குழந்தைகளுக்கு மிலியூ கல்வி சிறந்த தீர்வாக அமைகிறது. மிலியூ கல்விமுறையில் எழுத்துமூலம் வார்த்தைகள் குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்படுவதில்லை. இதற்கு மாறாக குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகளிடம் காட்டப்பட்டு பாடம் கற்பிக்கப்படுகிறது.


மிதமான கண்பார்வை மற்றும் செவித்திறன் பாதிப்புகொண்ட குழந்தைகளுக்குக்கூட தற்போது மிலியூ கல்வி உதவுகிறது என குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் சிலருக்கு எழுத்துகளை புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படும். இவர்களுக்கு வார்த்தைகளுக்கு பதிலாக பல்வேறு வடிவங்களில் உள்ள பொம்மைகள் காண்பிக்கப்பட்டு பாடம் எடுக்கப்படும். மேலும் எழுத்துக் கல்விக்கு மாற்றாக இவர்களுக்கு நேரடிக் கல்வி அளிக்கப்படும். இதனால் இவர்கள் எளிதில் உலக அறிவை அடைவர். இந்தியா உள்ளிட்ட பல தெற்காசிய நாடுகளிலும் மிலுயூ கல்விமுறை தற்போது பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

Click here for latest Kalvi News 

01.01.2023- நிலவரப் படி -Middle H.M to BEO panel List தயாரித்தல் சார்ந்து - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 



 தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு மூலம் நியமனம் 2023 ஆம் ஆண்டு 01.01.2023 நிலவரப்படி மாநில அளவில் தகுதிவாய்ந்தோர் முன்னுரிமை பட்டியல் ( Panel List ) தயார் செய்தல் வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2010 க்கு முன்னர் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியராக பணியில் சேர்ந்து 31.12.2022 க்குள் முழுத்தகுதி பெற்ற ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / மாநகராட்சி நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் விவரங்களை அனுப்பக் கோருதல் சார்பு . -- தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Middle H.M to BEO  panel List DEE Proceedings - Download here

 Click here for latest Kalvi News 

வரும் 6ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு: ‘ஆப்சென்ட்’ மாணவர்களை கண்டறிய மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு

 பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு வரும் 6ம் தேதி தொடங்க உள்ளதை அடுத்து, தேர்வுக்கு வர இயலாத மாணவர்கள் விவரங்களை மாவட்ட வாரியாக திரட்ட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்றுடன் முடிவடைந்தது. பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வு நாளையுடன் முடிவடைய உள்ளன. இந்த இரண்டு தேர்வுகளிலும் 17 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு கடந்த 13ம் தேதி தொடங்கிய  நாள் முதல்  இரண்டு தேர்வுகளுக்கு சுமார் 50 ஆயிரம் மாணவ மாணவியர் தேர்வு எழுத வரவில்லை.


இதற்கான காரணம் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டது. இடைநிற்றல் போன்ற காரணங்களால் மாணவ மாணவியர் தேர்வு எழுத வரவில்லையா, அல்லது தேர்வில் ஆர்வம் இல்லையா என்று கண்டறிய பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி கடந்த 24ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. அப்போதே, பத்தாம் வகுப்பு தேர்வு எழுத பதிவு செய்துள்ள மாணவ மாணவியர் பற்றிய விவரங்களை பெற்றோர் மூலம் கேட்டறியப்பட்டது. மேலும், தேர்வுக்கு பதிவு செய்திருந்தவர்களை கண்டிப்பாக தேர்வில் பங்கேற்க செய்ய வேண்டும் என்று பெற்றோரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. குறிப்பாக பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கு 25 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்கவில்லை என்பதால், செய்முறைத் தேர்வுக்கான இறுதி நாள் மார்ச் 28ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

சென்னையை பொறுத்தவரையில் 1100 மாணவ மாணவியர் பள்ளிகளில் இருந்து இடைநின்றதால் தேர்வுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களில் 650 பேர் தேர்வு எழுத ஆர்வம் உள்ளவர்களாக இருப்பதும் தெரியவந்துள்ளது. அவர்களைப்போல மேலும் பல மாணவர்களை அடையாளம் காண முடியும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அந்தந்த மாவட்டங்களில்,  பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுத  இயலாத நிலையில் உள்ள மாணவர்களை அடையாளம் காண வேண்டும் என்றும், பள்ளிகளில் இருந்து இடைநின்றவர்களையும் அடையாளம் காண வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களை கண்டிப்பாக தேர்வு எழுத வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும்,  தேர்வுக்கு வர இயலாத மாணவ மாணவியர் குறித்த விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் திரட்டி வருகின்றனர்.


 Click here for latest Kalvi News 

தேர்வுகளுக்குரிய பாடவாரியான , அறைவாரியான வருகைப்பதிவேடு பட்டியல் அனுப்ப தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு.

 மார்ச் / ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் முடிவுற்றதும் அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களிடமும் தத்தமது தேர்வு மையத்தில் நடைப்பெற்ற அனைத்து தேர்வுகளுக்குரிய பாடவாரியான , அறைவாரியான வருகைப்பதிவேடு பட்டியல் ( Hall Wise Attendance Sheet ) மற்றும் பெயர்ப் பட்டியல் ( Nominal Roll ) படிவங்கள் தொகுத்துக் கட்டி தங்களின் அலுவலகத்தில் 06.04.2023 அன்று ஒப்படைக்கும் படி தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

தேர்வு முடிவு தொடர்பாக இவ்வலுவலகத்தில் கோரப்படும் அனைத்து விவரங்களையும் உடனடியாக வழங்கிடும் பொருட்டு உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெறப்பட்ட வருகைப்பதிவேடு மற்றும் பெயர் பட்டியல்களை தனித்தனியாக தேர்வு மைய வாரியாக பிரித்து வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது .


 Click here for latest Kalvi News 

ஏப்ரல் 18 மற்றும் 19 தேதிகளில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

 சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 18 மற்றும் 19ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இரண்டு நாட்களும் மூடப்பட்டிருக்கும். 


இருப்பினும், அன்றைய தினம் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். மாவட்ட கருவூலம் மற்றும் துணை கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் செயல்படும் என ஆட்சியர் எம்.பிரதீப்குமார் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். உள்ளூர் விடுமுறைகளுக்குப் பதிலாக ஏப்ரல் 29 மற்றும் மே 13 (சனிக்கிழமை) மாவட்டத்திற்கு வேலை நாட்களாக இருக்கும் என்று திரு. பிரதீப் குமார் மேலும் கூறினார்.


 Click here for latest Kalvi News 

6 - 9 Std | Annual Exam April 2023 - Time Table Published

 

6 - 9 ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு 2023 - கால அட்டவணை 


தமிழகத்தின் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்ரல் 21 ஆம் தேதி முழு ஆண்டுத் தேர்வு தொடங்குகிறது


ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 28 ஆம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.


தேர்வு அட்டவணை 

* 21 ஆம் தேதி ( வெள்ளி ) தமிழ் 

*;24 ஆம் தேதி ஆங்கிலம் 

* 25 ம் தேதி கணிதம் 

* 26 ம் தேதி அறிவியல் 

* 27 ஆம் தேதி உடற்கல்வி 

* 28 ஆம் தேதி வெள்ளியன்று சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது


தேர்வு நேரம்


* 6 ஆம் வகுப்பிற்கு காலை 10 மணி -12 மணி 

* 7 ஆம் வகுப்பிற்கு மதியம் 2 மணி -மாலை 4 மணி வரை 

* 8 ஆம் வகுப்புக்கு காலை 9.30 மணி- 12.00 மணி 

 * 9 ஆம் வகுப்பிற்கு மதியம் 2 மணி- 4.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.


 Click here for latest Kalvi News 

சி.பி.எஸ்.இ., ஆசிரியர்களுக்கு பயிற்சி

 

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளி ஆசிரியர்களும், குறைந்தபட்சம், 50 மணி நேர தொடர் தொழில் மேம்பாட்டு பயிற்சி அளிக்க வேண்டும் என, புதிய கல்வி கொள்கையில் கூறப்பட்டுள்ளது.


சி.பி.எஸ்.இ., விதிகளின்படி, ஒவ்வொரு ஆசிரியரும், குறைந்தபட்சம், 25 மணி நேர பயிற்சியில் பங்கேற்க வேண்டும்.


இதற்காக, சி.பி.எஸ்.இ., சார்பில், நாடு முழுதும், 16 இடங்களில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம், 23 பாடப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும்.


இந்த வகையில், ஒவ்வொரு மாநில கல்வித்துறையுடனும், சி.பி.எஸ்.இ., இணைந்து பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு விரைவில் துவங்கும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 Click here for latest Kalvi News 

EMIS NEW UPDATE- SCHOOL PAVILION PHOTOS

 

🛑 EMIS NEW UPDATE-  SCHOOL PAVILION PHOTOS


🔥 நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளித் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களை ஈர்க்கும் வகையில்


👉 தங்கள் பள்ளியின்


🌟 பள்ளியின் முகப்புத் தோற்றம். ( FRONT END IMAGE)

🌟 சுவர் ஓவியங்கள் (WALL POSTER)

🌟 சிறப்பான செயல்பாடுகள் (GALLERY IMAGES)

🌟 உட்கட்டமைப்புகள்

🌟 பள்ளியின் பின்புறத் தோற்றம்


ஆகியவற்றை புகைப்பட வடிவில் , EMIS தளத்தில் UPDATE செய்ய வேண்டும்


👉 மொபைல் மூலம் எளிமையாக UPDATE செய்வதற்கான DEMO VIDEO👇👇👇



குறிப்பு: புகைப்படம் JPEG FORMAT-ல் 200KB க்கு குறைவாக இருக்க வேண்டும் )

 Click here for latest Kalvi News 

பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் ஆரம்பக் கல்வி பதிவேடு புதுப்பித்தல் வழிகாட்டு நெறிமுறைகள் - சார்பு SPD & DEE செயல்முறைகள்.

 


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2023 -24ஆம் ஆண்டில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகள் ( மாற்றுத்திறனுடைய குழந்தைகள் மற்றும் இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட ) கண்டறிதல் , வகுப்பு மாற்ற செயல்பாடுகள் ( Transition of students from current class to next class ) மற்றும் ஆரம்பக் கல்வி பதிவேடு புதுப்பித்தல் வழிகாட்டு நெறிமுறைகள் - சார்பு  SPD & DEE செயல்முறைகள். 

மாவட்டத்திற்கு இரண்டு விளையாட்டு சிறப்பு பள்ளிகள்

''ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு விளையாட்டு சிறப்பு பள்ளிகள், 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்,'' என, சட்டசபையில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.


அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:


தமிழகத்தில், 2,996 அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 540 அரசு உயர்நிலைப் பள்ளிகளில், 175 கோடி ரூபாய் மதிப்பில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.


இரண்டாம் கட்டமாக, 7,500 அரசு துவக்கப் பள்ளிகளில், 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்


அரசு பள்ளி மாணவர்களின் படிக்கும் பழக்கத்தை, மேலும் ஊக்குவிக்கும் வகையில், மாபெரும் வாசிப்பு இயக்கம், 10 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும்


ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு விளையாட்டு சிறப்பு பள்ளிகள், 9 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்படும்.


வெளிமாநில தொழிலாளரின் குழந்தைகள், தாய் மொழியுடன் தமிழ் மொழி பேசவும், எழுதவும், 'தமிழ் மொழி கற்போம்' என்ற திட்டம் துவங்கப்படும்


சிறைகளில் உள்ள எழுத, படிக்க தெரியாத 1,249 கைதிகளுக்கு, 25 லட்சம் ரூபாய் மதிப்பில் அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்படும்


நாட்டுடைமை ஆக்கப்பட்ட அரிய நுால்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, தமிழக பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்படும். உலக புகழ் பெற்ற இலக்கியங்கள், குழந்தைகளுக்கான நுால்கள், தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படும்


இளைஞர் இலக்கிய திருவிழா, 30 லட்சம் ரூபாய்மதிப்பில் நடத்தப்படும். சென்னை கன்னிமாரா நுாலகத்தில், 5 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு பிரிவுகள் துவங்கப்படும்


அனைத்து மாவட்ட மைய நுாலகங்கள் மற்றும் முழு நேர கிளை நுாலகங்கள், ஆண்டுதோறும் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வாசகர்களுக்கான வசதிகளுடன் படிப்படியாக மறுசீரமைப்பு செய்யப்படும்.


இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 Click here for latest Kalvi News 

எண்ணும் எழுத்தும் - வளரறி மதிப்பீடு (அ) - மதிப்பெண்களை தற்போது உள்ளீடு செய்ய வேண்டாம் - EE Team

 எண்ணும் எழுத்தும் - வளரறி மதிப்பீடு (அ) - மதிப்பெண்களை தற்போது உள்ளீடு செய்ய வேண்டாம்.


Dear Teachers, 

The FA (a) mark entry mechanism is still under testing. Once testing is complete, errors will be rectified and made live in the app again. 

We will inform here once it is ready. Please do not enter any marks until then. 

TN EE MISSION

+1 , +2 - விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில் மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலராக (MVO) முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் உள்ளவர்களை மட்டுமே நியமனம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

 

மேல்நிலைத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில் மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலராக (MVO) முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிநிலையில் உள்ளவர்களை மட்டுமே நியமனம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

Click here for latest Kalvi News 

கனவு ஆசிரியர் போட்டியில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு நாளை (01.04.2023) On Duty வழங்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

 மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சி நிறுவனம் , கனவு ஆசிரியர் 2023 - க்கான போட்டிகளை 01.04.2023 ( சனிக்கிழமை ) அன்று முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 12.45 மணி வரை இணைய வழியே நடத்த உள்ளது 01.04.23 பள்ளி வேலைநாள் உள்ள மாவட்டங்களில் இருந்து இப்போட்டியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு 01.04.23 அன்று மட்டும் பள்ளிக்கு வருவதிலிருந்து விலக்களிக்க ( on duty ) சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .




Click here for latest Kalvi News 

உயர் கல்வித் துறை தொடர்பான மானியக் கோரிக்கை அறிவிப்புகள்

 

ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தானியங்கி நாப்கின் வழங்கும் எந்திரங்கள் மற்றும் ரூ.1.26 கோடியில் நாப்கின் எரியூட்டி எந்திரங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 31) உயர் கல்வித் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். 


இதன் விவரம்:


ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தானியங்கி நாப்கின் வழங்கும் எந்திரங்கள் மற்றும், ரூ.1.26 கோடியில் நாப்கின் எரியூட்டி எந்திரங்கள் அமைக்கப்படும்.

அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு ரூ.10 கோடி - அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில், புதிதாக தொடங்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ரூ.10 கோடியில் 28 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் புதிய வகுப்பறைகளுக்கு தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படும்.

ரூ. 68.55 கோடியில் 5 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

அண்ணா பல்கலைக்கழக சென்னை தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் (MIT Campus) மாணாக்கர்களின் தேவைக்கேற்ப ரூ.5.87 கோடியில் கூடுதல் உணவுக்கூடம் அமைக்கப்படும்.

பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.180 கோடியில் அரசு கல்லூரிகளில்

உட்கட்டமைப்பு வசதிகள் ஆய்வகங்கள், கழிவறைகள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்திலுள்ள விடுதிகளில் இணைய வசதி ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

சென்னை பல்கலைக்கழகத்தில் 250 மாணவிகள் தங்கும் வகையில் மாணவிகளுக்கு விடுதி கட்டடம் கட்டப்படும்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மனிதவள மேம்பாட்டு பயிற்சி அரங்கம் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

அண்ணா பல்கலைக்கழக கோயம்புத்தூர் மண்டல வளாகத்தில் ரூ. 15.51 கோடியில் புதிய கல்விக் கட்டடம் (New Academic Block) கட்டப்படும்.

ரூ. 150 கோடியில் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் ஒருங்கிணைக்கப்பட்ட கற்றல் மேலாண்மை அமைப்பு மென்பொருள் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை அதிகரிக்க நிறுவப்படும்.

மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய திறன் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் அனைத்து பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் அறிமுகப்படுத்தப்படும்.

சென்னை பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற நூற்றாண்டு விழா மண்டபம் புதுப்பிக்கப்படும்.

தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு மாணாக்கர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படும்


Click here for latest Kalvi News 

பள்ளிக் கல்வித்துறை மானியக்கோரிக்கை 2023 - 2024 ( pdf )

 

மானிய கோரிக்கை எண் 43.பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2023-2024 .

வெளியீடு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

 மானியக்கோரிக்கை எண் - 43 ( pdf ) - Download here

Click here for latest Kalvi News 

அடுத்த கல்வியாண்டிலும் இல்லம் தேடிக் கல்வி திட்டம் தொடரும்...

 2023-2024ஆம் கல்வியாண்டில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கு ₹226.27 கோடி நிதி ஒதுக்கீடு.


அடுத்த கல்வியாண்டிலும் இல்லம் தேடிக் கல்வி திட்டம் தொடர்ந்து செயல்படும்.


Click here for latest Kalvi News 

2009-10ம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 தொடக்கக் கல்வித் துறையில் 2009-10ம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட (15.09.2010ல் பணியில் சேர்ந்தவர்கள்) ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள் : 29.01.2021




Click here for latest Kalvi News 

தமிழ்நாட்டில் உள்ள மாணவ - மாணவியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு !

 கல்லூரி கனவுகளோடு காத்திருக்கும் ஏழை மாணவ - மாணவியர்களுக்கு கரம் கொடுக்க பல தன்னார்வ நிறுவனங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.


Click here for latest Kalvi News 

மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?

 இந்தியா முழுவதும் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளில் 2023 - 24 கல்வி ஆண்டிற்கான ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப முறை மார்ச் 27 முதல் துவங்கியுள்ளது. இது ஏப்ரல் 17 மாலை 7 மணியுடன் முடிவடையும். கேந்திர வித்யாலயா பள்ளிகளில் யார் யாருக்கு இடஒதுக்கீடு மற்றும் முன்னுரிமை, எப்படி சீட் பெறுவது என பார்ப்போம்.


சிவில் மற்றும் பாதுகாப்பு துறையின் கீழ் வரும் கேந்திர வித்யாலா பள்ளிகளில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதனைத் தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்குவர்.


இது தவிர பொதுத் துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகளில் பணியாற்றுபவர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிப்பர். பிறகு அனைத்து பிரிவு குழந்தைகளும் இந்த படிநிலையில் வருவர். பொதுத் துறை நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்களின் கீழ் வரும் கே.வி.,க்களில் அங்குப் பணியாற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொடர்ந்து ஊழியர்களின் பேரக்குழந்தைகளுக்கு, ஓய்வு பெற்ற ஊழியரின் குழந்தை அல்லது பேரக்குழந்தைக்கு என்ற வரிசையில் முன்னுரிமை அளிப்பர். அதன் பின்னர் அனைத்து வகையினரும் இதில் வருவர்.



இவை தவிர சிறப்பு விதிகளின் கீழ் வகுப்பின் அளவைக் காட்டிலும் குறிப்பிட்ட குழந்தைகள் கூடுதலாக சேர்த்துக்கொள்ளப்படுவர். பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள கேவிக்களுக்கு ராணுவம், விமானப் படை, கப்பல் படையினர் 6 பேரை பரிந்துரைக்கலாம். ஆனால் அவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பினராக இருக்கக் கூடாது.



மேலும் கேந்திர வித்யாலா சங்கதன் ஊழியர்களின் பிள்ளைகள், பரம்வீர் சக்ரா, வீர் சக்ரா, அசோக் சக்ரா போன்ற விருது பெற்றவர்களின் குழந்தைகள், ஜனாதிபதி போலீஸ் மெடல் பெற்றவர்களின் பிள்ளைகள், மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்கள், ஸ்கவுட்டில் ராஷ்டிரபதி புரஸ்கர் விருது பெற்ற மாணவர்கள், கோவிட்டால் பெற்றோரை இழந்து பிஎம் கேர்ஸில் பதிவு செய்த பிள்ளைகள், ஒரே ஒரு பெண் குழந்தை ஆகியோர் சிறப்பு விதியின் கீழ் வருவர்.

தகுதி என்ன வேண்டும்


தற்போது முதல் வகுப்புக்கான அட்மிஷன் ஆரம்பமாகியுள்ளது. குழந்தைக்கு அந்த கல்வி ஆண்டில் கட்டாயம் 6 வயதாக இருக்க வேண்டும். ஏப்., 1 அன்று பிறந்த குழந்தையும் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். மாற்றுத்திறனாளி குழந்தைகள் எனில் பள்ளியின் முதல்வர் 2 ஆண்டுகள் வயதில் தளர்ச்சி வழங்குவார். அதாவது 8 வயதிலும் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.


இடஒதுக்கீடு


எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு உண்டு. 15% இடங்கள் எஸ்.சி., பிரிவினருக்கு, 7.5% எஸ்.டி., பிரிவினருக்கு, 27% இடங்கள்


ஓ.பி.சி., பிரிவினருக்கு என ஒதுக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு உண்டு.


விண்ணப்பிப்பது எப்படி?


https://kvsonlineadmission.kvs.gov.in/index.html என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இது முதல் வகுப்பிற்கான சேர்க்கைக்கு


மட்டுமே. 2 முதல் 9 வகுப்பினர் மற்றும் 11ம் வகுப்பினர் பள்ளி முதல்வரிடம் விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம்.


தேவையான ஆவணங்கள்


குழந்தையின் புகைப்படம்


முதல் வகுப்பில் சேர்க்கப்பட உள்ள குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழை ஸ்கேன் செய்து கொள்ளுங்கள்.


சாதிச் சான்றிதழ், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான சான்றிதழ்


மாற்றுத்திறனாளி எனில் அதற்கான மருத்துவச் சான்று


வசிப்பிடச் சான்று ஆகியவை கட்டாயம்


சேர்க்கை வழி முறை


பொதுவாக கேவி பள்ளிக்களில் ஒரு வகுப்பில் 40 பிள்ளைகள் இருப்பர். அதன்படி ஆர்.டி.இ., எனும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 10 பேர், எஸ்.சி., பிரிவில் 6 பேர், எஸ்.டி., பிரிவில் 3 பேர், ஓபிசி., பிரிவில் 11 பேர் என சேர்க்கப்படுவார்கள்.



முதலில் லாட்டரி முறையில் ஆர்.டி.இ., சீட்டுகள் நிரப்பப்படும். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கான இடங்கள், அரசு ஊழியர்கள் போன்ற முன்னுரிமையாளர்களுக்கான இடங்கள் நிரப்பப்படும். இவற்றிலும் எஸ்.சி., எஸ்.டி., ஒபிசி., இடஒதுக்கீடு பின்பற்றப்படும். அதன் பின்னர் நான்காவது லாட்டில் மீதமுள்ள சீட்டுகள் சாதிவாரி இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும்.



விண்ணப்பதாரர் பள்ளிக்கு அருகே இருக்கிறாரா என்பதும் பார்க்கப்படும். நகர்ப்புறம் எனில் 5 கி.மீக்குள் இருந்தால் அருகே உள்ளதாக பொருள். பிற இடங்கள் எனில் 8 கி.மீ., இருந்தால் அருகே இருப்பதாகப் பொருள்.


கட்டணம்


ஆர்.டி.இ., சட்டம் 2009ன் கீழ் விண்ணப்பித்து சீட் பெறுவோருக்கு கட்டணம் கிடையாது. புத்தகங்கள், யூனிபார்ம், ஸ்டேஷனரி பொருட்கள் போன்றவற்றுக்கான பில்களை தந்தால் அப்பணமும் திருப்பி வழங்கப்படும். ஆர்.டி.இ., விண்ணப்பிக்க ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். உங்களது நிறுவனம் கல்விக் கட்டணத்தை ஊதிய கட்டமைப்பில் சேர்த்திருக்கக் கூடாது.


மேற்கூறிய தகுதி மற்றும் ஆவணங்கள் இருந்தால், https://kvsonlineadmission.kvs.gov.in/index.html விண்ணப்பித்து சீட் பெறலாம்.


Click here for latest Kalvi News 

TNPSC போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

 

டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் TNPSC குரூப் 1, 2, 2a,3,4 ஆகிய தேர்வுகளுக்கு கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகளை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடத்தவுள்ளது.


டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் TNPSC குரூப் 1, 2, 2a, 3, 4 ஆகிய தேர்வுகளுக்கு கட்டணமின்றி இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இவ்வாண்டு அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அரசின் அறிவிப்பு வரும் முன்னரே வெற்றி பெறுவதற்கான பயிற்சிகளை அறிந்து கொள்வதுதான் நமது நோக்கமாகும்.விண்ணப்பிக்க தகுதியான மாணவர்களுக்கு கட்டணமில்லாமல் பயிற்சி அளிக்க அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் தயாராக உள்ளது. மாணவர்களின் கல்வித் தகுதியை முழுமையாக அறிந்து கொள்ள தமிழ்நாடு அரசின் தேர்வாணைய இணையதளத்தை (www.tnpsc.gov.in) பார்க்கவும்.


தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்களும்,அரசுத் துறைகளில் அனுபவம் பெற்றவர்களும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். இவ்வகுப்புகளை, அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையமும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து நடத்தி வருகிறது.பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய, அனைத்து மாணவர்களும் பயன் பெறும் வகையில் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 12 ஆண்டுகளாக 1300க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். களத்தில் நமக்கு கிடைத்த முன் அனுபவங்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை சிறப்பாக நடத்தி வருகின்றோம்.


சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 வரை வகுப்புகள் வாரந்தோறும் நடக்கும். 01.04.2023 அன்று முதல் வகுப்பு தொடங்குகிறது. மாணவர்கள் TNPSC-யின் குரூப் தேர்வுகளில் முழுமையாக பங்கேற்று தேர்வெழுதும் முழுத் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் முன்பதிவு செய்துவிட்டு வயது மற்றும் இருப்பிட ஆதாரத்தின் நகலுடன், ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப் படமும் கொண்டு வர வேண்டும். மேலும் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். பயிற்சி நடைபெறும் இடம். Dr. அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம், சிஐடியு அலுவலகக் கட்டிடம், 2வது தளம், நெ. 6/9, கச்சாலீஷ்வரர் கோயில் அக்ராஹரம், ஆர்மேனியன் தெரு, சென்னை- 600001.


பயிற்சியில் சேர விரும்புவோர், 90950 06640, 63698 74318, 97906 10961,94446 41712 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள் நம்பிக்கையோடு உறுதியாக தேர்வை எதிர்கொண்டால் எளிதாக வெற்றியை பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு 9444641712 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News