CTET Result 2023: சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு; கட் -ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு?
சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு முடிவுகள் ( செப்.25) வெளியாகி உள்ளன.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ள தேர்வு முடிவைப் பார்ப்பது எப்படி என்று காணலாம்.
அரசு கொண்டு வந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (CENTRAL TEACHER ELIGIBILITY TEST - CTET) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.
அதேபோல மத்திய அரசுப் பணிகளுக்கு சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் பேனா - காகித முறையில் நடைபெறும் தேர்வை சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்துகிறது.
2023ஆம் ஆண்டுக்கான தேர்வு நேரடி முறையில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 29 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்தனர். குறிப்பாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான வகுப்பு ஆசிரியர் பணிக்கு நடத்தப்படும் முதல் தாளை எழுத 15,01,719 பேர் விண்ணப்பித்தனர். அதேபோல 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான வகுப்பு ஆசிரியர் பணிக்கு நடத்தப்படும் இரண்டாம் தாளை எழுத 14,02,184 பேர் விண்ணப்பித்தனர்.
இதற்குத் தேர்வர்கள் ஏப்ரல் 27ஆம் தேதி முதல் மே 26ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். இதில் பொதுப் பிரிவினர், ஓபிசி பிரிவினருக்கு ஒரு தாளுக்கு ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ரூ.1200 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதுவே எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி
பிரிவினருக்கு முறையே ரூ.500 கட்டணமாகவும் ரூ.600 கட்டணமாகவும் பெறப்பட்டது.
இந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. டிஜிட்டல் மதிப்பெண் சான்றிதழ்களையும் சிடெட் சான்றிதழையும் சிபிஎஸ்இ விரைவில் வெளியிட உள்ளது.
கட் -ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு?
பொதுப் பிரிவு தேர்வர்களுக்கு கட் -ஆஃப் மதிப்பெண் 60 சதவீதம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் எஸ்சி, எஸ்டி,ஓபிசி, மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு
தகுதி கட் - ஆஃப் மதிப்பெண் இன்னும் குறைவாகவே இருக்கும்.
பார்ப்பது எப்படி?
* தேர்வர்கள் https://ctet.nic.in/ctet-aug-23-result/ .
* அதில், CTET AUG-23 Result என்ற இணைப்பு தோன்றும். அதை க்ளிக் செய்ய வேண்டும்.
* தொடர்ந்து https://cbseresults.nic.in/ctet_23_aug/CtetAug23.htm என்ற இணைப்பு தோன்றும்.
* அதை க்ளிக் செய்து, பதிவு எண்ணை உள்ளிடவும்.
* தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.
*அதை பதிவிறக்கம் செய்து, வருங்காலத் தேவைகளுக்காகப் பயன்படுத்தலாம்.
2022 தேர்வு
கடந்த 2022ஆம் ஆண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-ற்கான கணினி வழித் தேர்வு (Computer Based Examination) திட்டமிட்டபடி கடந்த 14.10.2022 முதல்19.10.2022 வரையிலும் இருவேளைகளில் நடைபெற்றது. கணினி வழியில் நடைபெற்ற தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதி இருந்தனர்.
கூடுதல் விவரங்களுக்கு: https://ctet.nic.in
Click here to join whatsapp group for daily kalvinews update
Click here for latest Kalvi News