Showing posts with label Ellam thedi kalvi. Show all posts
Showing posts with label Ellam thedi kalvi. Show all posts

இல்லம் தேடி கல்வி | ITK - தன்னார்வலர்களுக்கு SMC பயிற்சி அளித்தல் தொடர்பான மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் & Training Schedule


பள்ளி மேலாண்மைக் குழு பள்ளி அளவில் வலுப்படுத்துவதற்கு பயிற்சி வழங்கும் முன் முதற்கட்டமாக மிக முக்கியமான பணி ITK தன்னார்வலர்களுக்கு SMC பயிற்சி அளித்தல் மற்றும் அவர்களை முழுமையாக பயன்படுத்தி பள்ளி அளவில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களை வரவழைத்து பள்ளி மேலாண்மை குழுவினை வலுப்படுத்துதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.


இல்லம் தேடிக் கல்வி மையங்கள்* _கோவிட்-19 தடுப்பு நிலையான வழிகாட்டு நடைமுறைகள் வெளியீடு.


இல்லம் தேடிக் கல்வி மையங்கள் கோவிட்-19 தடுப்பு நிலையான வழிகாட்டு நடைமுறைகள் :

இல்லம் தேடிக் கல்வி மையங்கள் செயல்படும் பொழுது கோவிட்-19 நோய்ப் பரவல் தடுப்பிற்காக கீழ்க்கண்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும். 




1) மையங்களுக்கு வரும் குழந்தைகள், தன்னார்வலர்கள், பெற்றோர் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். 

2) மையங்களில் குழந்தைகள் அமர்வதற்கு தவறாமல் சமூக இடைவெளி வட்டங்கள் வரைந்து இருக்கவேண்டும். 

3) குழந்தைகள் மையங்களுக்கு வரும்பொழுது கைகளை முழுவதும் சுத்தம் செய்துகொள்ள சோப்பு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். இவற்றில் கைகளை சுத்தம் செய்து கொண்ட பிறகு குழந்தைகள் மையங்களுக்கு வர ஏற்பாடு செய்தல் வேண்டும்.

4) கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி ( Hand sanitizer) பயன்படுத்தலாம்.

5) குழந்தைகள் வகுப்பில் நெருக்கமாக அமர்வதை தவிர்க்க வேண்டும். மேலும், பாடல் மற்றும் செயல்வழிக்கற்றல் நடைபெறும் பொழுது கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். 

6) இல்லம் தேடி கல்வி மையங்களை பார்வையிடும் அலுவலர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் முழுமையான முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்.

7) தன்னார்வலர்கள் எப்பொழுதும் முகக்கவசம் அணிந்து வகுப்புகள் நடத்த வேண்டும்.

8) குழந்தைகளை கையாள வேண்டி உள்ளதால் தன்னார்வலர்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டு இருத்தல் வேண்டும். 

9) குழந்தைக்கு ஏதேனும் சளி அல்லது காய்ச்சல் தென்பட்டால் உடனடியாக மருத்துவ துறையின் உதவியை பெற்றோர்கள் நாடுவதற்கு தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்தல் வேண்டும். 

10) இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு தேவைப்படும் கிருமி நாசினி மற்றும் சோப்பு ஆகியவற்றை நன்கொடையாகப் பெறுவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் உதவியை கல்வித்துறை அலுவலர்கள் பெறலாம்.

11) இல்லம் தேடி கல்வி மையம் செயல்படும் இடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அவ்விடங்களை அவ்வபோது கிருமி நாசினி கொண்டு தூய்மை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தல் வேண்டும்.

12) தன்னார்வலர்கள் வீட்டில் யாருக்கும் சளி, காய்ச்சல் போன்ற நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் தன்னார்வலர்கள் மையங்களுக்கு வருதல் கூடாது. மருத்துவத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.