Showing posts with label TRANSFER. Show all posts
Showing posts with label TRANSFER. Show all posts

மாற்றுப் பணியில் பணிபுரியும் பகுதி நேர பயிற்றுநர்களை மீண்டும் தாய் பள்ளிக்கு திரும்ப உத்தரவு - Proceedings

 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, நாகப்பட்டினம் மாவட்டம், அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள 216 பகுதி நேர பயிற்றுநர்களின் மார்ச்- 2024 தொகுப்பூதியமானது ஊதிய கேட்புப் பட்டியல் பெறப்படாமல் EMIS வழியாக பெறப்படும் வருகை புரிந்த நாட்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படவுள்ளது. 

எனவே மாற்றுப் பணியில் பணிபுரியும் பகுதி நேர பயிற்றுநர்களின் மாற்றுப் பணி ஆணை இரத்து செய்யப்பட்டு அவர்களின் EMIS Profile மற்றும் தொகுப்பூதியம் பெறும் பள்ளிகளுக்கு உடனடியாக பணிவிடுவிப்பு செய்யுமாறு மாற்றுப் பணியில் பணிபுரியும் பகுதி நேர பயிற்றுநர்களின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் அனைத்து பகுதி நேர பயிற்றுநர்களின் EMIS வருகையை உறுதி செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Education - Dir Transfer Order - இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிடமாறுதல் ஆணை வெளியீடு.

 

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிடமாறுதல் ஆணை வெளியிடப்படுகிறது.



 தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு -1 ஐ சார்ந்த இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மாறுதல் இல்லை - பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

 

IMG_20231216_173151

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பாக,

"தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிக அளவில் உள்ளன. எனவே புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யும்போது இந்த மாவட்டங்களில் நியமனம் செய்யப்பட வேண்டும்.


புதிய நியமனம் பெறக்கூடிய ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகள் பணியிட மாறுதல் வழங்கக்கூடாது. எந்த இடத்தில் பணியில் சேருகிறார்களோ, அந்த இடத்தில் 5 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்.

கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு முதலில் பணியிட மாறுதல் வழங்கவேண்டும். இந்த பணிகளை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 முதல் 30-ம் தேதிக்குள் முடித்து, அதன் பிறகு பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். இந்த உத்தரவின்படி வரக்கூடிய காலங்களில் அனைத்தும் நடைபெற வேண்டும்." என கூறப்பட்டுள்ளது.
 🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 நடப்புக் கல்வியாண்டில் ( 2023-24 ) 01.08.2023 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் ( BT Staff Fixation ) செய்யப்பட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து விவரங்கள் பெறப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட ( Surplus Post With Person ) பட்டதாரி ஆசிரியர்களை அந்தந்த மாவட்டத்திற்குள் உள்ள நிரப்பத்தகுந்த காலிப்பணியிடம் / / கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் ( BT Deployment Counselling ) மூலம் வருகின்ற 20.11.2023 அன்று பட்டதாரி ஆசிரியர்களுக்கு ( Off line : Counselling ) சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரால் கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி நடத்தி முடிக்கப்படவேண்டும்.


DSE - BT Deployment Counselling Instructions 👇

 Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 


அலகு விட்டு அலகு / துறை மாறுதல் - விண்ணப்பிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

 


அலகு விட்டு அலகு / துறை மாறுதல் - விண்ணப்பிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.


IMG_20230913_180819

பெருநகர சென்னை மாநகராட்சி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 139 பள்ளிகளில் உள்ள 190 காலிப்பணியிடங்களுக்கு அலகு விட்டு அலகு / துறை மாறுதல் மூலம் சென்னை மாவட்டம் மற்றும் பிறமாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரிய விருப்பம் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் EMIS இணையதளத்தில் 11.9.2023 முதல் 30.9.2023 வரை தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திடுமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

Chennai Corporation Unit Transfer Proceedings - Download here

Click here for latest Kalvi News 

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு - இன்றைய (18.08.2023) நிலவரம்

 மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு -  இன்றைய (18.08.2023) நிலவரம்: கடைசி வரிசை எண் : 172

 பதவி உயர்வு பெற்றோர்: 152

 பதவி உயர்வை துறப்பு செய்தோர்: 20



Click here to join whatsapp group for daily kalvinews update 


 Click here for latest Kalvi News 

Unit Transfer - Seniority List Released - Available in Individual Login

 

அலகு விட்டு அலகு மாறுதல் - முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு - EMIS வலைதள தனிப்பட்ட உள்நுழைவில் அறியலாம்...

AWD - ஆசிரியர்களுக்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு

 

ஆதிதிராவிடர் நல பள்ளி ஆசிரியர்களின் இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு ஆக, 3ல் நடக்க உள்ளது. அன்றைய தினமே, நடுநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கும் கலந்தாய்வு நடக்கும்.


இத்துறை பள்ளிகளில் காலியாக உள்ள, பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு மாறுதல் பெற, ஆக., 4 கலந்தாய்வு நடக்க உள்ளது.


* இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., வகுப்புகளை செப்., 1ம் தேதி துவங்க வேண்டும் என, தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. அதற்கேற்ப அகில இந்திய கவுன்சிலிங் திட்ட அட்டவணை வெளியிட்டுள்ளது.


*ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கீழ் செயல்படும், மாணவர்கள் விடுதிகளை ஆய்வு செய்து, அதன் கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், கல்விச் சூழல், உணவுத்தரம், பாதுகாப்பு போன்றவற்றை மறு சீரமைக்க, அரசுக்கு பரிந்துரை அளிக்க, மாவட்ட, மாநில அளவில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.



 Click here for latest Kalvi News 

6-9 வகுப்புகளுக்கு வாரம் இரு பாடவேளைகளுக்கு கலை, கலாசார பயிற்சி வகுப்பு

 

கலைத் திருவிழாவில் மாணவா்களை அதிகளவில் பங்கேற்கச் செய்யும் வகையில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு வாரத்துக்கு இரு பாடவேளைகளில் கலை, கலாசார பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநா் மா.ஆா்த்தி மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாகவும், கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைக்கவும் ‘கலை அரங்கம்’ பயிற்சி மாணவா்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.


அந்த பயிற்சியின் பலனாக சுமாா் 28 லட்சம் மாணவா்கள் கல்வித் துறையால் நடத்தப்பட்ட கலைத் திருவிழா போட்டிகளில் ஆா்வமுடன் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றனா்.


மாநில அளவில் சிறந்து விளங்கிய மாணவா்களுக்கு கலையரசன், கலையரசி விருதும் வழங்கப்பட்டது. தொடா்ந்து நிகழாண்டும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு நடனம், நாட்டுப்புறக் கலை, இசை, காட்சிக் கலை, நாடகம் மற்றும் பொம்மலாட்டம் ஆகிய 5 கலை வடிவங்களில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியா்கள் மற்றும் கலை ஆசிரியா்களை பயன்படுத்தி இந்த பயிற்சி நடைபெறவுள்ளது.


வாரந்தோறும் 2 பாடவேளைகளில் கலை மற்றும் கலாசார பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதற்கிடையே, கலை அரங்கம் செயல்பாட்டுக்காக பிரத்யேக கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் பணிகள் நிறைவுபெற்ற பின் பள்ளிகளுக்கான கலை அரங்கம் அமைத்தல் மற்றும் கலை வடிவங்களின் விவரங்கள் செயலியில் தெரிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு உதவித் திட்ட அலுவலர் (APO) பணியிடங்கள் அனுமதித்தல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 

மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலகங்களுக்கு உதவித் திட்ட அலுவலர் (APO) பணியிடங்கள் அனுமதித்தல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


மாவட்ட வாரியான ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு.

DEO ELEMENTARY OFFICE APO NEW POST Proceedings - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அலகு விட்டு அலகு மாறுதல் செல்லும் ஆசிரியர்களின் தடையின்மைச் சான்று கோரும் விண்ணப்பங்களை பரிந்துரை செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை / பட்டதாரி / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அவரவர்களின் விருப்பம் மற்றும் குடும்ப சூழல் காரணமாக அலகுவிட்டு அலகு / துறை மாறுதல் மூலம் தொடக்கக் கல்வி துறை , மாநகரட்சி , கள்ளர் சீரமைப்புத் துறை , ஆதிதிராவிட நலத் துறை மற்றும் இதரத் துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு மாறுதலில் செல்ல அத்துறையின் ( ப.க.து ) தலைவரால் ( இயக்குநர் ) உரிய தடையின்மைச் சான்று பெறுதல் அவசியமாகிறது.


மேற்படி அலகுவிட்டு அலகு / துறை மாறுதலில் செல்வதற்கு தடையின்மைச் சான்று ( Noc ) கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்களிடமிருந்து கீழ்க்காணும் ஆவணகளை கருத்துருவில் இணைத்து சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் பரிந்துரைக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.


Unit Transfer NOC Instruction -reg - Download here...


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அலகு விட்டு அலகு மாறுதல் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு...

 அலகு / துறை மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் தேதியினை கல்வி தகவல் மேலாண்மையில் ( EMIS online ) பதிவேற்றம் செய்ய ஏதுவாக 14.07.2023 வரை நீட்டித்து ஆணை வழங்கப்படுகிறது . கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கலாகிறது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Mutual transfer Application - Option avail in Emis portal

 2023-2024- Mutual transfer Application - Option avail in Emis portal




 Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Transfer News : மாவட்டத்திற்குள் ஏற்படும் "Resultant Vacancy" பணியிடம் கலந்தாய்வில் காண்பிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!

 மாவட்டத்திற்குள் ஏற்படும் "Resultant Vacancy" பணியிடம் கலந்தாய்வில் காண்பிக்கப்படும் என  பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!

2022-23ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயரிவுகள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் காலஅட்டவணைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது.

 ஆணை பெற்றுக்கொளள்லாம் மேற்காண் காலஅட்டவணைப்படி நடைபெறவுள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் வருவாய் மாவட்டத்திற்குள் ( Within District ) விண்ணப்பித்துள்ள அனைத்துவகை ஆசிரியர்களுக்கு அவரவர்கள் முன்னுரிமைப்படி ( Seniority wise ) அம்மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடத்தினை விருப்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்து மாறுதல் மேலும் அடுத்ததாக தங்களுக்குரிய சுழற்சி ( turn ) வரும்போது அம்மாவட்டத்தில் தங்களுக்கென விருப்பம் இல்லாத காலிப்பணியிடம் ஏதும் இல்லையெனில் Not Willing என தெரிவு செய்து கொள்ளலாம் . பின்னர் உள்மாவட்டத்திற்கான கலந்தாய்வு முடிவு பெற்ற பிறகு இறுதியாக மீதம் உள்ள ( Resultant Vacancy ) காலிப்பணியிடத்திற்கான மாறுதல் ஆணை பெறாமல் உள்a Not Willing தெரிவு செய்தவர்களுக்கு மீண்டும் ஒரு முறை மட்டும் ( One Cycle ) இந்த Resultant Vacancy பணியிடத்திற்கு கலந்தாய்வு அவரவர்களின் முன்னுரிமைப்படி நடைபெறும்.



பதவி உயர்வின்றி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங்

 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு இன்றி இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, வரும் கல்வி ஆண்டுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், 8ம் தேதி துவங்குவதாக இருந்தது; நிர்வாக காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது.


இந்நிலையில், திருத்திய கால அட்டவணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதன்படி, 15ம் தேதி கவுன்சிலிங் துவங்கி, 26 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த கவுன்சிலிங்கில், இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் என்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை என்றும் பதவி உயர்வு வழங்கப்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தற்போதைய பதவி நிலையிலேயே கவுன்சிலிங்கை நடத்த, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி கமிஷனரகம் உத்தரவிட்டுள்ளது.


அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதே பாணியில், உபரியாக உள்ள பணியாளர்களையும் இடமாறுதல் செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு.

 வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு 10.05.2023 அன்று நடைபெறுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் வெளியீடு.

 

தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி கல்வி அலுவலர் பணியிடம் - பதவி உயர்வு மூலம் நியமனம் 01.01.2023 நிலவரப்படி வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 31.12.2010 க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிபுரியும் தலைமையாசிரியர்களின் முன்னுரிமை நடுநிலைப்பள்ளி தற்காலிக தகுதிவாய்ந்தோர் பட்டியல் வெளியிடுதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

Teachers General Transfer Councelling Revised schedule - May 2023

 ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் விண்ணப்பங்களை EMIS ல் பதிவேற்றம் செய்ய 01.05.2023 மாலை 5 வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. 

தொடர் விடுமுறை மற்றும் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் கொண்டு வருவதை கருத்தில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 02.05.2023 மாலை 05.00 மணி வரை நீட்டித்தும் , பிறகு பதிவேற்றம் செய்யப்பட்ட இம்மாறுதல் விண்ணப்பங்களின் நகல்களை அலுவலரிடம் ( BEO / DEO / CEO ) நடைபெற்று சம்மந்தப்பட்ட ஒப்படைப்பதற்கான காலக்கெடு 03.05.2023 வரையும் நீட்டித்தும் இதனைத் தொடர்ந்து முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 08.05.2023 காலஅட்டவணைப்படி மாறுதல் கலந்தாய்வு & பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும் . அதற்கான திருத்திய காலஅட்டவணை இத்துடன் இணைத்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது.

Teachers General Transfer Councelling Revised schedule -reg.pdf - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

உபரி ஆசிரியர்கள் மாறுதல் தொடர்பான பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள் ( 29.04.2023 )

 உபரி ஆசிரியர்கள் மாறுதல் தொடர்பான பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் அறிவுரைகள்!


CoSE - Deployment Counselling Instruction.pdf - Download here


Click here for latest Kalvi News 

முதன்மைக் கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து உத்தரவு

 

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு : 111 ஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது

முதன்மைக் கல்வி அலுவலர்களை இடமாற்றம் உத்தரவு





Click here for latest Kalvi News