Showing posts with label TRAINING. Show all posts
Showing posts with label TRAINING. Show all posts

உண்டு உறைவிட திறன்‌ மேம்பாட்டு பயிற்சியில் கலந்துகொள்ள அனைத்து மாவட்ட ஆசிரியர்களுக்கும் SCERT அழைப்பு

 மாநில கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனத்தின்‌ மூலம்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ பணிபுரியும்‌ பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதுமையான கற்பித்தல்‌ முறைகள்‌, சிறந்த மதிப்பீட்டு நுட்பங்கள்‌ மற்றும்‌ கற்பித்தலில்‌ மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான உத்திகள்‌ உள்ளிட்ட பாட தொடர்பான பல்வேறு தலைப்புகளில்‌ பல்வேறு கட்டங்களில்‌ பயிற்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.


பாடக்கருத்துகளில்‌ விரிவுரைகள்‌, அறிவியல்‌ சோதனைகள்‌, செயல்பாடுகள்‌, பயிற்சி பட்டறைகள்‌, களப்பயணங்கள்‌ மற்றும்‌ குழு விவாதங்கள்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌, ஆழமாக சிந்தித்து செயல்படவும்‌, பாடத்தை ஆசிரியர்கள்‌ திறம்பட கற்பிக்க உதவும்‌ வகையிலும்‌, மாணவர்கள்‌ எளிதாக புரிந்துகொள்ளும்‌ வகையிலும்‌, இந்த பயிற்சி பயனுள்ளதாக அமைய வேண்டியும்‌, சிறந்த கல்வி நிறுவனங்களில்‌ பணிபுரியும்‌ திறமை வாய்ந்த மற்றும்‌ அனுபவம்‌ வாய்ந்த கருத்தாளர்களிடமிருந்து கற்றுக்‌ கொள்ளவும்‌, மாநிலத்தின்‌ அனைத்து பகுதிகளில்‌ உள்ள பட்டதாரி ஆசிரியர்‌ தன்னார்வலர்களிடமிருந்து கருத்துக்களை பெற்றிடலாமா என்பதற்கும்‌, மேற்படி கற்றல்‌-கற்பித்தல்‌ பணிகளை ஏப்ரல்‌-2023 முதல்‌ தொடர்ச்சியாக இந்நிறுவனத்தின்‌ உண்டு உறைவிட திறன் மேம்பாட்டு பயிற்சியாக நடத்திடலாமா என்பதற்கும்‌, ஆணை வேண்டப்படுகிறது.


எனவே, அனைத்து மாவட்டங்களில்‌ உள்ள பள்ளிகளில்‌ பணிபுரியும்‌, ஆர்வமுள்ள பட்டதாரி பாட ஆசிரியர்களை இணைப்பில்‌. கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து, பதிவு செய்யுமாறு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ மற்றும்‌ அனைத்து மாவட்ட ஆசிரியர்‌ கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கும்‌ அறிவுறுத்தப்படுகிறது.



Click here for latest Kalvi News 

மாணவர்களுக்கு வளரறி மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் , வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் பயிற்சி அளித்தல் சார்ந்து SCERT செயல்முறைகள்

 


ள்ளிக் கல்வி - மாநில மதிப்பீட்டுப் புலம் - மாவட்டம் தோறும் 6 முதல் வகுப்பு வரை வளரறி மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் , வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் பயிற்சி அளித்தல் சார்ந்து SCERT செயல்முறைகள் 


தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான " மாநில மதிப்பீட்டுப் புலம் " பார்வையில் காணும் அரசாணை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பார்வையில் காணும் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் கூட்டக்குறிப்பில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கணினி வழி வினாடி வினா நடத்துதல் தொடர்பாக பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

 Assessment circular - phase 3.pdf - Download here...


Click here for latest Kalvi News 

தலைமை ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

CoSE - HS HM Mentor Training.pdf - Download here


தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சிக்கு ஏற்பாடு

 

அரசு தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு, பெங்களூரில் ஆங்கில மொழி பயிற்சி அளிக்கப்படும்' என, தொடக்க கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது.


சமீப ஆண்டுகளில், ஆங்கில மொழி வழியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.


அதனால், ஆங்கில வழியில் பாடம் நடத்தும் தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அதிகமாக உள்ளது.


அரசு தொடக்க பள்ளிகளில், தமிழ் வழியில் மட்டுமே கற்றுத் தருவதால், மாணவர் சேர்க்கையும் குறைந்துள்ளது.


எனவே, அரசு தொடக்க பள்ளிகளில், ஆங்கில வழி கற்பித்தலை அதிகரிக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.


இதற்கான முன்னேற்பாடாக, அரசு தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆங்கில மொழி கற்பித்தல் மற்றும் பேச்சு பயிற்சி தர முடிவு செய்யப்பட்டு உள்ளது.


இதற்காக, பெங்களூரில் உள்ள மண்டல ஆங்கில மொழி பயிற்சி நிறுவனம் வழியே, அரசு தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்பட உள்ளது.


இதுகுறித்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


அதில், முதற்கட்டமாக, சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, வேலுார், தஞ்சாவூர் உட்பட, 13 மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.


ஆசிரியர்களுக்கு 30 நாட்கள் ஆங்கில மொழியில் சான்றிதழ் படிப்பு பயிற்சி - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 

01.03.2023 முதல் 30.03.2023 வரை 30 நாட்கள் - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழியில் சான்றிதழ் படிப்பு பெங்களுரில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் . இப்பயிற்சியில் கலந்து கொள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் விவரங்களை உடன் அனுப்பக் கோருதல் - சார்பாக -  தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,நாள்22-2-2023


30 Days Certificate Course Training in English Language for Teachers – Proceedings - Download here


Click here for latest Kalvi News 

தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி மதுரையில் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

 

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்புப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

 இதனைத் தொடர்ந்து , தற்போது 06.02.2023 முதல் 25.02.2023 வரை Batch 67 முதல் 73 வரை அணிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் / பொறுப்பு தலைமை குறிப்பிடப்பட்டுள்ள மையத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.


 இப்பயிற்சியில் இணைப்பு -3 ல் குறிப்பிடப்பட்டுள்ள தலைமையாசிரியர்கள் முதன்மை கருத்தாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


CoSE - HM Training.pdf - Download here...


Click here for latest Kalvi News 

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

 

மத்திய கல்வி அமைச்சக திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதலின்படி , ' Rani Laxmibai Atma Raksha Prashikshan ' ( Elementary and Secondary ) - Salf - Defense Training ) தலைப்பின் கீழ் , 6744 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சியளிக்க மாதம் ஒன்றுக்கு ரூ .5000 / - ( பயிற்சியாளர்களுக்கான ஊதியம் + மாணவர்களுக்கான சிற்றுண்டி செலவினம் ) பள்ளி வீதம் 3 மாதங்களுக்கு ரூ .15,000 ஆக மொத்த ரூ.1011.6 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் 5519 உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவியர்களுக்கு பயிற்சியளிக்க மாதம் ஒன்றுக்கு ரூ .5000 / - ( பயிற்சியாளர்களுக்கான ஊதியம் + மாணவர்களுக்கான சிற்றுண்டி செலவினம் ) பள்ளி வீதம் 3 மாதங்களுக்கு 15,000 ஆக மொத்தம் ரூ.827.85 / - இலட்சம் என அனுமதித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


பள்ளி மாணவிகள் எந்த ஒரு சூழலையும் பக்குவமாக எதிர்கொள்ளும் ஆற்றல் மற்றும் திறனை வளர்க்கும் வகையிலும் , இடைநிற்றலை தவிர்த்து இடைநிலை மற்றும் மேல்நிலை கல்வியை தொடர்வதற்கு ஏற்ப Karate , Judo , Taekwondo , Silambam ஆகிய தற்காப்பு கலை பயிற்சிகள் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது. இப்பயிற்சி மாணவிகளுக்கு தன்னம்பிக்கை தருவதால் , பாதுகாப்பிற்கு ஏற்புடையதாக அமைகின்றது.


கல்வி மாவட்டங்களில் தற்காப்புக்கலை பயிற்சி வழங்கப்பட வேண்டிய பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக கீழ்க்காணுமாறு வழங்கப்பட்டுள்ளது.

 SPD - Self Defence Training.pdf - Download here...



 Click here for latest Kalvi News 


Click here to join whatsapp group for daily kalvinews update 

தலைமைப்பண்புப் பயிற்சி - அடுத்த கட்ட தலைமை ஆசிரியர்கள் பட்டியல் மற்றும் பயிற்சி தேதி அறிவிப்பு.

 

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்புப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து , தற்போது 06.02.2023 முதல் 25.02.2023 வரை Batch 67 முதல் 73 வரை அணிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் / பொறுப்பு தலைமை ஆசிரியர்களுக்கு இணைப்பு -1 இல் குறிப்பிடப்பட்டுள்ள மையத்தில் தலைமைப்பண்புப் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் இணைப்பு -3 ல் குறிப்பிடப்பட்டுள்ள தலைமையாசிரியர்கள் முதன்மை கருத்தாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


 CoSE - Mentor Training - pdf - Download here...

Click here to join whatsapp group for daily kalvinews update 

ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம்

 அரசு பள்ளி ஆசிரியர்க ளுக்கு தேர்வு நிலை வழங்கு வது குறித்து , சிறப்பு முகாம் உத்தரவிடப்பட்டு உள்ளது . அரசு பள்ளிகளில் பணி யாற்றும் ஆசிரியர்களுக்கு , அவர்களின் அனுபவம் , கல்வி தகுதி , பணி நியமன காலம் ஆகியவை கருதி , தேர்வு நிலை உயர்வு வழங்கப்படும். இதற் காக ஏராளமான ஆசிரியர்கள் விண்ணப்பித்து , நீண்ட நாட்க ளாக காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் , ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை வழங்குவது தொடர்பாக , கால தாமதத்தை தவிர்க்கும் வகையில் , மூன்று நாட்கள் சிறப்பு முகாம் நடத்தி , உரிய தீர்வு காணுமாறு , கல்வி அலுவலர்களுக்கு , பள்ளிக்கல்வி கமிஷனரகம் உத்தரவிட்டுள்ளது.

திறனறி தேர்வுகள் - வட்டார அளவிலான ஆசிரியர் கருத்தாளர்களுக்கான பயிற்சி - ( NMMS / TRUST / NTSE ) - தொடர்பாக CEO செயல்முறைகள்

 மதுரை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் :

2022-2023 ஆம் கல்வியாண்டில் நடைபெறும் NMMS / TRUST / NTSE தேர்வுகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் அதிகரிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான வட்டார அளவிலான கணித மற்றும் உளவியல் பாட கருத்தாளர்களுக்கான பயிற்சி அந்தந்த வட்டார வளமையத்தில் மாவட்டம் முழுவதும் 23.11.2022 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.


 இப்பயிற்சி வகுப்பில் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணித பட்டதாரி ஆசிரியர் ஒருவர் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இப்பயிற்சியினை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர் ( பொ ) ஆகியோர் இணைந்து சிறப்பாக நடத்திட தெரிவிக்கப்படுகிறது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டுப் புலம் சார்ந்து மாவட்ட அளவிலான பயிற்சி அளித்தல் சார்பாக SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

 

ஈரோடு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திண்டுக்கல், கரூர் மற்றும் நீலகிரி மாவட்ட ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டுப் புலம் சார்ந்து மாவட்ட அளவிலான பயிற்சி அளித்தல் சார்பாக SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

புதிதாக நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி - SCERT Proceedings

 



மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , பல்வேறு திட்டங்களை மாணவர்களின் கல்வித் தா மேம்பாட்டிற்காக செயற்படுத்தி வருகின்றது . கற்றலில் மாணவர்களின் அடைவை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு பாடத்திற்கும் வகுப்பறை நிகழ்வை செயல்பாடுகளுடன் விளக்கத் திட்டமிடப்பட்டுள்ளது . பாடத்திட்டம் , பாட புத்தகம் உருவாக்கம் , கற்பித்தல் அணுகு முறைகள் , வகுப்பறை மேலாண்மை , புதிய கற்பித்தல் உத்திகள் , வினாத்தாள் தயாரித்தல் மற்றும் கல்வி துறை அமைப்பு ஆகியவை சார்ந்து முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பதற்கான வளங்களைத் தயாரித்து பயிற்சி அளிக்க இணைப்பு 1 இல் கண்ட மாநில வளக் குழுவும் , இணைப்பு 2 இல் உள்ள ஒருங்கிணைப்பு குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது .

1,460 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி: ஆர்வமுள்ளவர்களை தேர்வு செய்ய உத்தரவு

 தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தொன்மைகளின் சிறப்புகளை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக 1,460 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி அளிக்க இருப்பது தொல்லியல் ஆர்வலர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் கட்டிடக்கலை, கல்வெட்டுகள், பாசன கட்டுமானங்கள், கலைகள் மூலம் தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரங்கள், தொன்மைகளை அறிய முடிகிறது. இவற்றைப் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் வகையிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 1,000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் குறித்து உண்டு உறைவிடப் பயிற்சி அளிக்கப்படும் என கடந்த ஏப்ரலில் தமிழக அரசு அறிவித்தது.


அதன் தொடர்ச்சியாக, தொல்லியல் ஆர்வமுள்ள பட்டதாரி ஆசிரியர்களை பயிற்சிக்கு தேர்வு செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் அளிக்கப்பட உள்ளதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு அறிவித்திருப்பது தொல்லியல் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் ஆ.மணிகண்டன், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: தமிழர்களின் தொன்மைகளை பாதுகாக்கும் வகையிலும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் வகையிலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொல்லியல் பயிற்சியளிக்க வேண்டும் என மாநில தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.


அவரது பரிந்துரையின்பேரில், 1,000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. தற்போது, முதல்கட்டமாக தொல்லியல் ஆர்வமும், அனுபவமும் கொண்ட பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 1,460 ஆசிரியர்கள் பயிற்சி பெற உள்ளனர்.


இவர்களுக்கு 6 நாட்கள் உண்டு உறைவிடப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், களப்பயணமும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். மேலும், இந்த பயிற்சியில், பட்டதாரி ஆசிரியர்கள் என்று சுருக்காமல் ஆர்வமுள்ள அனைத்து வகை அரசுப் பள்ளி ஆசிரியர்களையும் சேர்க்க வேண்டும். பயிற்சிக்குப் பிறகு அந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றங்களை அமைக்குமாறு அரசு அறிவுறுத்த வேண்டும் என்றார். இவர்களுக்கு 6 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. களப்பயணமும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி

 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி

IMG-20221112-WA0002

அரசு பள்ளி ஆசிரியருக்கு 6 நாள் உண்டு உறைவிடப்பயிற்சி

 தமிழர் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம், தொன்மையின் சிறப்பு மற்றும் தமிழகமெங்கும் பரவி இருக்கும் தொல்லியல் தலங்கள் குறித்த தகவல்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சோக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உண்டு உறைவிடப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.

6 நாட்கள் நடைபெற உள்ள இப்பயிற்சிக்கு ஒரு குழுவிற்கு 40 ஆசிரியர்கள் வீதம் 25 குழுவாக மொத்தம் 1.000 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.


இதையடுத்து அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


ஒரு மாவட்டத்திற்கு சராசரியாக 40 ஆசிரியர்கள் வீதம் இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். உண்டு உறைவிட பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்கள் மன்ற செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டிருக்க வேண்டும்,

தமிழர் நாகரீகம், பண்பாடு, தொன்மை, கலாச்சாரம் உள்ளிட்டவைகளை வெளிக்கொணர்வதில் பங்காற்றிய அனுபவம் இருக்க வேண்டும். தொல்லியல் மற்றும் வரலாறு பாடங்களில் ஆர்வமும், விருப்பமும் உள்ளவராக இருக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

Carrier Guidance - ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

 

உயர் கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் சார்ந்து முதுகலை ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

 SCERT - Carrier Guidance.pdf - Download here...


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

பண்பாடு, கலாசாரம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி

 அரசு பள்ளிகளில் பணியாற்றும், 1,460 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தமிழர் பண்பாடு குறித்து, தொல்லியல் துறை வழியே பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து, மாதந் தோறும் பல்வேறு வகை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.


இந்த வரிசையில், ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தொல்லியல் துறை வழியே, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.


இதற்கு, வருவாய் மாவட்ட வாரியாக, தலா, 40 பேர் அடங்கிய குழு உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுதும், 1,460 பேருக்கு, தொல்லியல் துறையின் நிபுணர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். இந்த பயிற்சிக்கு, 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.


பண்டைய தமிழர் நாகரிகம், கலாசாரம், வாழ்வு முறை, தொன்மை மற்றும் அதன் சிறப்புகளை, மாணவர்களுக்கு எடுத்துரைப்பது, வரலாறு பாடங்களில் தொல்லியல் சார்ந்த கருத்துகள் இந்த பயிற்சியில் இடம்பெறும்.


மேலும், எளிதில் புரியும் வகையில் பாடம் நடத்துவது குறித்தும், இந்த பயிற்சியில் விளக்கப்படும் என, ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துஉள்ளது.


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

இஸ்ரோவின் கல்வி திட்டத்தில் அரியலூர் அரசு பள்ளி மாணவர்

 இஸ்ரோவின் விண்வெளிக் கல்வித் திட்டத்தில் பங்கு பெற அரியலூர், கவரப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் சஞ்சய் வேலா உட்பட 75 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இன்றுமுதல் செயற்கைக்கோள் தயாரிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது.


இஸ்ரோவின் விண்வெளி கல்வி திட்டத்தில் பங்கு பெற தமிழகத்தில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள் 75 பேர் கடந்த ஆகஸ்டு மாதம் தேர்வுசெய்யப்பட்டனர். நாட்டின் 75-வதுசுதந்திர தினத்தை ஆண்டு முழுவதும்கொண்டாடும் விதமாக, இஸ்ரோ 75 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு ஏவும் மெகா திட்டத்தைசெயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தில் தமிழகம் சார்பில், ‘அகஸ்தியர்’ செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் 26 மாவட்டங்களில் இருந்து 5,000 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் இருந்து 75 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இதில், அரியலூர் மாவட்டம், கவரப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர் சஞ்சய் வேலா தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி டாக்டர். சிவதாணு, செயற்கைக்கோள் விஞ்ஞானிகள் ஆர்.எம். வாசகம், இளங்கோவன், வெங்கடேசன் ஆகியோர் செயற்கைக்கோள் தயாரிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த வகுப்புகளை ஆன்லைன் மூலம் எடுத்தனர். தேர்வு செய்யப்பட்ட 75 மாணவர்கள் இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ. நிலையங்களில் நேரடியாக நடைபெற உள்ள பயிற்சி வகுப்பில் இன்று (நவ.2) பங்கேற்க உள்ளனர்.


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் துறையுடன் இணைந்து பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

 


1460 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் துறையுடன் இணைந்து பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

SCERT - Carrier Guidance Training

 




உயர்கல்வி & வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் உண்டு, உறைவிடப் பயிற்சி சென்னையில் நடைபெறுகிறது - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!


Click Here to Download - SCERT - Carrier Guidance Training - Proceedings - Pdf



Click here to Join WhatsApp group for Daily kalvi news