🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
Education and Information
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கி பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை விவரம்:
தமிழகத்தில் கரோனா காலக்கட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையான மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்ய பள்ளிக்கல்வித் துறை சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதற்காக அப்போது ரூ.199 கோடியே 96 லட்சம் செலவிடப்பட்டது. அந்த திட்டத்தை திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் மாநில, மாவட்டம், தொகுதி அளவில் குழுக்கள் நியமிக்கப்பட்டன.
தற்போது இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 2021 நவம்பரில் ரூ.50 கோடியும், 2022 மார்ச் மாதம் ரூ.114.17 கோடியும், செப்டம்பர் மாதம் ரூ.173.31 கோடியும், 2023 மார்ச் மாதம் ரூ.52.85 கோடியும், செப்டம்பர் மாதம் ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் 2024-25-ம் ஆண்டுக்கான இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கான மையங்கள் 1.8 லட்சத்தில் இருந்து 1.25 லட்சமாக குறைக்கப்பட உள்ளது. அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக ரூ.191 கோடியே 90 லட்சம் ஒதுக்கப்பட வேண்டும் என்று இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அதிகாரி அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். அதை கவனமாக ஆராய்ந்து இல்லம் தேடி கல்வித் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கி ஆணையிடப்படுகிறது.
மேலும், கற்றல் இழப்புகளை சரிசெய்ய கொண்டுவரப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டத்தின் நோக்கம் வெற்றி அடைந்ததன் காரணமாக 2024-25-ல் இதற்கான மையங்கள் தேவைக்கேற்ப குறைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🔻🔻🔻🔻
Click here t o join whatsapp group for daily kalvinews update
இல்லம் தேடி கல்வி மையங்களுக்கான கற்றல் கற்பித்தல் பொருட்கள் மற்றும் தன்னார்வலர் கையேடு வழங்குதல் சார்ந்து இளம்பகவத் அவர்களின் செயல்முறைகள்....
Proceedings - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
இணைய வழி கூட்டத்தில் மதிப்புமிகு சிறப்பு பணி அலுவலர்(OSD) இல்லம் தேடி கல்வித் திட்ட சிறப்பு பணி அலுவலர் ஐயா அவர்கள் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்.
📌 TNeGA மூலம் இ-சேவை மையம் தொடங்க இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு ஏற்கனவே வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாம் பணியினை சிறப்பாக பணியாற்றியதற்காக தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
📌 தற்போது இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் *எந்தவித கட்டணமும் இன்றி* இ- சேவை மையத்தை தொடங்கலாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. (ஏற்கனவே இ சேவை மையம் தொடங்க கிராமப்புறங்களில் ₹3000, நகர்ப்புறங்களில் ₹6000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது)
📌இ-சேவை மையம் தொடங்க விரும்பும் தன்னார்வலர்கள் நம் இல்லம் தேடி கல்வி செயலிலேயே(App) விருப்பத்தை தெரிவிப்பதற்கான வசதி உள்ளது.
📌 அதன் பின்னர் இ-சேவை மையம் தொடங்க தேவையான வழிகாட்டுதல்கள்,பயிற்சிகள் ஆகியவற்றை TNeGA மூலம் பெற்று வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
📌 இ-சேவை மையம் மூலம் 200 க்கும் அதிகமான சேவைகளை பொது மக்களுக்கு வழங்குவதன் மூலம் ஒரு நிரந்தர வருமான வாய்ப்பாக தன்னார்வலர்கள் அமைத்துக் கொள்ள முடியும்.
📌 முக்கியமாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மகளிர்க்கான உரிமை தொகை இ-சேவை மையம் மூலமாக வழங்கப்பட இருப்பதால் தன்னார்வலர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அவர்கள் இருப்பிடத்திலேயே இ-சேவை மையங்களை தொடங்கி பயன் பெறலாம்.
இல்லம் தேடி கல்வி திட்ட தன்னாா்வலா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை திட்ட முகாம் பணி கட்டாயமில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உரிமைத் தொகை திட்ட சிறப்புப் பணி அலுவலா் க.இளம்பகவத் மாவட்ட ஆட்சியா்கள், பெருநகர சென்னை, மாநகராட்சி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள் ஆகியோருக்கு அனுப்பிய கடிதம்:
கலைஞா் மகளிா் உரிமைத் திட்ட விண்ணப்பப் பதிவு பணியில், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். தன்னாா்வலா்கள் எந்தெந்த நியாய விலைக் கடைப் பகுதியில் வசிக்கிறாா்கள் என்ற விவரங்கள் இணைக்கப்பட்ட தொகுப்பு மாநில அலுவலகத்தில் இருந்து விரைவில் மாவட்டங்களுக்கு பகிரப்படும். இப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடமிருந்து பெறப்படும் தகவல்களைக் கொண்டு தன்னாா்வலா்களுக்கு எந்தவித பணி ஒதுக்கீடுகளும் அளிக்க வேண்டாம்.
மாநில அலுவலகத்திலிருந்து பகிரப்படும் தகவல் தொகுப்பில், ஒவ்வொரு நியாயவிலைக் கடைப் பகுதியில் வசிக்கும் தன்னாா்வலா்களின் விவரங்கள் இடம்பெற்றிருக்கும். சில நியாயவிலை கடைப் பகுதிகளில் தேவைக்கு அதிகமான தன்னாா்வலா்கள் தங்களது விருப்பத்தை பதிவு செய்துள்ளனா்.
சில பகுதிகளில் போதிய தன்னாா்வலா்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை. அவா்களுக்கான பணி ஒதுக்கீடு அளிக்கும் போது, இயன்ற வரையில் 2 கி.மீ. தொலைவுக்கு மிகாமல் பணி ஒதுக்கீடு அளிக்க வேண்டும். ஒரு வேளை 2 கி.மீ.க்கு மேற்பட்ட தொலைவில் பயணிக்க தன்னாா்வலா் சம்மதம் தெரிவித்தால் அவா்களுக்கு 2 கி.மீ.க்கு அப்பால் பணி அளிக்கப்படும்.
தகவல் உள்ளீடு பணிகளுக்கும் கள ஆய்வுப் பணிகளுக்கும் விருப்பம் தெரிவித்த தன்னாா்வலா்களைத் தொலைபேசி வழியாக தொடா்பு கொள்ள வேண்டும். அவா்களுக்கு பணியின் முக்கியத்துவத்தை விளக்கி, சம்மதத்தைப் பெற்று பணியில் அமா்த்துதல் வேண்டும். சில தன்னாா்வலா்கள் பணி செய்ய விருப்பம் இல்லை என்று தெரிவித்தால் அவா்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது. ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்கள், ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் உள்ள வட்டாட்சியருடன் இணைந்து தன்னாா்வலா்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
சுய உதவிக் குழுவினா்: நகரப் பகுதிகளில் போதிய இல்லம் தேடி கல்வி திட்ட தன்னாா்வலா்கள் இல்லை. அதுபோன்ற இடங்களில் சுய உதவிக் குழு உறுப்பினா்களை அடையாளம் கண்டு நியமிக்கலாம். வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களை கலந்து ஆலோசிக்காமல் பணி ஒதுக்கீடுகள் செய்ய வேண்டாம்.
20 சதவீத தன்னாா்வலா்களை அடையாளம் கண்டு இருப்பில் வைத்திருக்க வேண்டும். அவா்களுக்கு உதவி மையத் தன்னாா்வலா்கள் பொறுப்பு அளிக்கலாம். மேலும், விண்ணப்பப் பதிவு பணிக்குத் தேவைப்படும் போது, அவா்களை தன்னாா்வலா்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Click here to join whatsapp group for daily kalvinews update
கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பினை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் " இல்லம் தேடிக் கல்வி " மையங்கள் 38 மாவட்டங்களிலும் செயல்பட்டுவருகிறது.
சிறப்பாக செயல்பட்டு வரும் இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் , மையத்தில் குறைதீர் கற்றலை கையாள வேண்டிய விதம் குறித்து ஒரு நாள் பயிற்சி மாவட்ட கருத்தாளர்களுக்கு மாநில அளவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது , இப்பறிற்சியானது தொடக்க நிலை மற்றும் உயர் தொடக்க நிலை என இரு பிரிவாக வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சிக்கான மாவட்ட கருத்தாளர்களுக்கு மாநில அளவில் கீழ்கண்டவாறு பயிற்சி நடைபெறவுள்ளது.
State Level Training date & Proceedings - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
இல்லம் தேடிக் கல்வி கோடை விடுமுறை!
மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் விருப்பத்திற்கு இணங்க இல்லம் தேடிக் கல்வி மையங்களில் கோடை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
கோடை விடுமுறை காலத்தில் விருப்பப்படும் குழந்தைகள் மற்றும் தன்னார்வலர்கள் மையங்களுக்கு வருகை புரிந்து படிக்கலாம்.
பொது நூலகங்களில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவும் மாணவர்களின் தனித்திறனை வளர்க்கவும் இந்த விடுமுறையைப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கான கோடைகால பயிற்சி முகாம்கள் அருகில் உள்ள பொது நூலகங்களில் நடைபெறுகின்றன. அங்கு குழந்தைகளை அழைத்துச் செல்லலாம். நூலகங்களில் குழந்தைகளை உறுப்பினர்களாக சேர்த்து நூலகங்களிலிருந்து நூல்களை எடுத்துச் செல்லும் பழக்கத்தை ஊக்கப்படுத்துங்கள்.
இக்கோடை விடுமுறை காலத்தில் தன்னார்வலர்கள் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! மாணவர் சேர்க்கை குறித்த பதிவை இல்லம் தேடிக் கல்வி மொபைல் செயலியில் தவறாது பதிவு செய்யவும். அதிக குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் தன்னார்வலர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்!
அனைவருக்கும் வாழ்த்துகள்!
Click here for latest Kalvi News
2023-2024ஆம் கல்வியாண்டில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கு ₹226.27 கோடி நிதி ஒதுக்கீடு.
அடுத்த கல்வியாண்டிலும் இல்லம் தேடிக் கல்வி திட்டம் தொடர்ந்து செயல்படும்.
Click here for latest Kalvi News
இல்லம் தேடிக் கல்வி - குறும்படக் கொண்டாட்டம் - மாநில அளவில் வெற்றி பெற்றவர்கள் விபரம் :
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் 3 நிமிடத்தில் தங்களது மையத்தில் உள்ள மாணவர்களை வைத்து மொபைல் போன் மூலமாக குறும்படம் எடுத்து ஒன்றிய அளவிலும், மாவட்ட அளவிலும் தேர்வு செய்து அனுப்பிய குறும்படங்களில் இருந்து மாநில அளவில் சிறந்த 6 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Click here for latest Kalvi News
தமிழக அரசின், 'இல்லம் தேடி கல்வி திட்டம்' விபரங்களை, தன்னார்வ நிறுவனங்கள் சேகரிக்க, பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு நேரத்தில், பள்ளிகள் செயல்படாமல் இருந்த போது, தனியார் பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக, மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தின.
அரசு பள்ளி மாணவர்களுக்கு, நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் கற்பித்தல் பணி நடக்கவில்லை.
இதனால், கற்றலில் பின்தங்கிய அரசு பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கும் வகையில், மாலை நேர வகுப்புகளை நடத்த, இல்லம் தேடி கல்வி திட்டம் அறிமுகமானது.
ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் செலவிலான திட்டம், இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
இதில், தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாணவர்களின் வீடுகளுக்கு அருகேயுள்ள பொது இடங்களில், செயல்முறை கற்பித்தல் மற்றும் மாலை நேர டியூஷன் வகுப்புகளை நடத்துகின்றனர்.
இத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர், குடியிருப்பு விபரம், பயிற்சி பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் விபரம், திட்டம் சார்ந்த கல்வி அலுவலர்கள், பெற்றோர், ஆசிரியர் மற்றும் அதிகாரிகளின் மொபைல் போன் எண்கள் உள்ளிட்ட தகவல்களை, தரவுகளாக சேகரிக்க தன்னார்வ நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
இதற்காக, அந்த நிறுவனங்கள் விண்ணப்பித்த நிலையில், சென்னையில் செயல்படும் தனியார் நிறுவனத்துக்கு, தகவல்களை சேகரித்து கொள்ள, பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.
இம்மாதம் முதல் ஏப்ரல் வரை தகவல்களை சேகரித்து கொள்ளலாம்.
தொடக்கநிலை (1-5 வகுப்புகள்) இல்லம் தேடிக் கல்வி மையங்களை OBSERVE செய்ய திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கரூர் மற்றும் விருதுநகர் உள்பட 5 மாவட்டங்களில் J-PAL நிறுவனங்களுக்கு அனுமதி.
ITK Centres Observation Letter - Download here...
தொடக்கநிலை (1-5 வகுப்புகள்) இல்லம் தேடிக் கல்வி மையங்களை OBSERVE செய்ய திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கரூர் மற்றும் விருதுநகர் உள்பட 5 மாவட்டங்களில் J-PAL நிறுவனங்களுக்கு அனுமதி.
ITK Centres Observation Letter - Download here...
இல்லம் தேடி கல்வி மையங்களில், மாணவர்கள் வழியே குறும்படம் தயாரிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வியின் இல்லம் தேடி கல்வி திட்ட மாநில அலுவலகத்தில் இருந்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ள சுற்றறிக்கை:
பள்ளி கல்வித்துறை சார்பில், இல்லம் தேடி கல்வி மையங்கள், ஓராண்டுக்கு மேல் செயல்படுகின்றன.
இந்த மையங்களில் படிக்கும் மாணவர்களின் படைப்பாற்றல், சிந்திக்கும் திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில், குறும்பட கொண்டாட்டம் நடத்தப்படுகிறது.
இந்த மாதம், 'சிட்டுக்களின் குறும்படம்' என்ற நிகழ்வு நடக்க உள்ளது. மாணவர்கள் வழியே, 3 நிமிட குறும்படம் தயாரிக்கப்பட உள்ளது. சுற்றுச்சூழல், எனது ஊர், குழந்தைகள் பாதுகாப்பு, தன் சுத்தம் உள்ளிட்ட தலைப்புகளில், குறும்படம் தயாரிக்க வேண்டும்.
குறும்படத்துக்கான கதைக்களத்தை குழந்தைகளே தயார் செய்ய வேண்டும். அதை படம் பிடிக்க, தன்னார்வலர்களின் மொபைல் போனை பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு மையம், ஒரு குறும்படத்தை மட்டுமே தயாரிக்க வேண்டும்.
கதையமைப்பின் புதுமை, கதை சொல்வதில் சுவாரஸ்யம், கதாபாத்திர அமைப்பு, வசனங்களின் நேர்த்தி, படமாக்கப்பட்ட முறை, படத்தொகுப்பு முறை மற்றும் இசை, ஒளிப்பதிவு ஆகியவற்றுக்கு ஏற்ப, அதிகபட்சம் தலா, 2 மதிப்பெண் வழங்க வேண்டும்.
வட்டார அளவில், ஐந்து சிறந்த குறும்படங்கள்; அவற்றில் இருந்து மாவட்டத்தில், ஐந்து சிறந்த குறும்படங்கள் தேர்வு செய்யப்படும்.
இந்த நடவடிக்கைகளை விரைந்து முடித்து, மாவட்ட அளவில் தேர்வான படங்களை, மார்ச், 3க்குள் இல்லம் தேடி கல்வி திட்ட மாநில அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இல்லம் தேடிக் கல்வி மையங்கள் கடந்த ஓராண்டாக நன்முறையில் செயல்பட்டு வருகிறது. குழந்தைகளின் கற்றலை மேம்படுத்துவதற்கென சிறப்பான. எளிமையான மற்றும் புதுமையான கற்றல் உபகரணங்களை தன்னார்வலர்கள் உருவாக்கி கற்றல் கற்பித்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாரட்டுக்கள் . தற்போது மாணவர்களின் கற்பனைத்திறன் , படைப்பாற்றல் திறன் , சிந்திக்கும் திறன்களை வெளிக்கொணரும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நிகழ்வாக இம்மாதம் நம் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் “ சிட்டுக்களின் குறும்படம் " என்ற நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் மூன்று நிமிடக் குறும்படம் மாணவர்களால் உருவாக்கப்படவுள்ளது.
ITK குறும்படக் கொண்டாட்டம் guidelines.pdf - Download here
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இல்லம் தேடிக் கல்வி - தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு ஒருந பயிற்சி அளித்தல் - இதற்காக தேவைப்படும் நிதியினை 38 மாவட்டங்களுக்கும் விடுவித்தல் தொடர்பாக SPD அவர்களின் செயல்முறைகள்...
Lr to CEOs - ITK Training.pdf - Download here...
இல்லம் தேடி கல்வி மைய திட்டம் மாணவா்களின் கல்வித் திறனை மேம்படச் செய்திருப்பதால், அந்தத் திட்டத்தை தொடர பெரும்பாலான தன்னாா்வலா்கள், ஆசிரியா்கள், பெற்றோா் விரும்புகின்றனா் என திட்டம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவலால் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்வதற்காக பள்ளிக் கல்வித் துறையால் அனைத்து மாவட்டங்களிலும் சுமாா் 2 லட்சம் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன
இவை தன்னாா்வலா்கள் உள்பட பல்வேறு தரப்பின் கூட்டிணைப்பில் சிறப்பாக செயல்படுகின்றன. இதன்மூலம் தற்போது 33 லட்சம் மாணவா்கள் பயன்பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை மாநில திட்டக் குழு துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் சனிக்கிழமை வழங்கினாா்.
அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து அரியலூா், கடலூா், நாகை, சேலம், திருவாரூா், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் 362 பள்ளிகள், 679 தன்னாா்வலா்கள், 362 தலைமை ஆசிரியா்கள், 362 ஆசிரியா்கள், 724 பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
திட்டம் தொடா்பாக பெற்றோா்களிடம் மேற்கொண்ட ஆய்வில் 98 சதவீதத்துக்கும் மேற்பட்டோா், மையங்களுக்கு சென்றபின் மாணவா்கள் கற்றலில் ஆா்வம் அதிகரித்துள்ளது.
இல்லம் தேடி மையங்களின் எளிய கற்றல் வழிமுறைகள் மாணவா்களிடம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சில பகுதிகளில் மாணவா் வருகைப்பதிவு குறைவாக இருப்பதாக தன்னாா்வலா்கள் தெரிவித்தனா். இவற்றில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.
அதேநேரம் சிறப்பான இந்த இல்லம் தேடி கல்வி மைய திட்டத்தை தொடர வேண்டும் என்பதே பெரும்பாலான தன்னாா்வலா்கள், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்களின் விருப்பமாக உள்ளது.
இல்லம் தேடி கல்வி மையம் மாணவா்களுக்கான கற்றல் இழப்பை சரிசெய்வதற்கான பாலமாக செயல்பட்டுள்ளது. நீண்ட காலத்துக்கு பலன்தரக்கூடிய இதை ஒரு சமூக இயக்கமாக மாற்ற வேண்டியது அவசியம். கடந்த ஓராண்டில் இந்த திட்டம் உருவாக்கிய மாற்றம் மிகப்பெரியது. அது தொடா்வதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல்லம் தேடி கல்வி திட்டத்தின் செயல்பாடு மற்றும் மதிப்பீட்டு அறிக்கை இன்று முதல்வர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது
கொரோனா காலத்தில் பள்ளிகள் சரிவர இயங்காத காரணத்தால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையிலும், அவர்கள் எளிதில் பாடத்தை கற்கும் வகையிலும் இல்லம் தேடி கல்வி எனும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு கொண்டு வந்தது.
இதன் மூலம் தன்னார்வலர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் மூலம் இல்லம் தேடி கல்வி மையத்தின் மூலம் மாணவர்களுக்கு (ஒன்று முதல் எட்டாம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு) அடிப்படை கல்வியை கற்பித்து வந்தனர். இந்த திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்பாட்டில் இருக்கிறது
இந்த இல்லம் தேடி தள்ளி திட்டம் குறித்த இதுவரையிலான செயல்பாடுகள் குறித்து மதிப்பீட்டு அறிக்கையை மாநில திட்ட குழு துணை தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்கள் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்.
இந்த அறிக்கையில் இல்லம் தேடி கல்வி மூலம் எத்தகைய செயல்பாடு தமிழகத்தில் நடைபெற்று உள்ளது. அதன் மதிப்பீடு குறித்த முழு விவரம் அடங்கியிருக்கும். இதனை பொறுத்து இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது
இல்லம் தேடிக் கல்வி உயர் தொடக்க நிலை பயிற்சி கட்டகம் - 5 (ITK Upper Primary Training - Volunteers Module 5 & PPT)
ITK Upper Primary Training - Volunteers Module 5 - Download Here
ITK Upper Primary Training - PPT - Download Here
Click here to join whatsapp group for daily kalvinews update
இல்லம் தேடிக் கல்வி உயர் தொடக்க நிலை பயிற்சி கட்டகம் - 5 ( ITK TRAINING VOLUNTEERS MODULE & PPT)
Module 5 - Download here
PPT - Download here
Click here to join whatsapp group for daily kalvinews update
ITK Volunteers Training 17.12.2022
இல்லம் தேடிக் கல்வி தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு 17.12.2022 இன்று நடைபெறவுள்ள குறைதீர் கற்றல் பயிற்சிக்கான கையேடு
ITK Volunteers Training 17.12.2022 - Module 6 - Download here