Showing posts with label Illam Thei Kalvi. Show all posts
Showing posts with label Illam Thei Kalvi. Show all posts

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இவ்வளவு பிரச்சனையா? கல்விப் பாதுகாப்பு கமிட்டியின் பரபரப்பு அறிக்கை.!

 இது குறித்து அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டியின் தமிழ்நாடு குழு வெளியிட்ட அறிக்கையில், ‘‘அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையிலே லட்சக்கணக்கான மாணவர்கள் அங்கு பயின்று வருகின்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஆசிரியர்கள் கற்பித்தல் அல்லாத பல்வேறு பணிகளில் ஆண்டு முழுவதும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.


ஏற்கனவே தமிழகம் முழுவதும் ஆசிரியர் பற்றாக்குறையால் பல்வேறு பள்ளிகள் தத்தளித்து வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை செய்ய முடியாத அளவிற்கு, வேறுபணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு ஏற்கனவே இருந்து வரும் கற்றல் இடைவெளி கூடுதலாகி பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது.


உதாரணமாக, வருவாய்த்துறைக்குக் கீழே வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) பணி, வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து அவர்களது ஆதார் எண் விவரங்கள் சேகரித்து வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைத்தல் பணி, ஆண்டு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டை பெறுவோருக்கான புதிய சேர்க்கை, நீக்கல், இடம் மாறியவர்களுக்கு மாற்றிக் கொடுத்தல் போன்ற பல பணிகளை, கற்பித்தல் பணிகளை மட்டுமே செய்ய வேண்டிய ஆசிரியர்களுக்குத் தருகின்றனர்.


பள்ளிக்குள்ளேயே 'எமிஸ்' (Education Management Information System - EMIS) என்று அழைக்கப்படும் கல்வி தகவல் அளிக்கும் முறையினால் மாணவர்கள் கல்வி குறித்த 32 விதமான தகவல்களை சேகரித்து அவற்றை கணினியில் ஏற்றும் பணியும் ஆசிரியர்கள் மீதே சுமத்தப்படுகிறது.


ஆண்டு முழுவதும் பல காலங்களில் கல்விப் பயிற்சிக்கு செல்லுதல், இலவச பொருட்களை குறிப்பிட்ட இடத்திலிருந்து பள்ளிக்கு எடுத்து வரும் பணி, முதன்மைக்கல்வி அலுவலகம் செல்லும் பணி, அலுவலகத் தபால்கள் குறித்து கணினியில் பதில் தருதல், விபரங்கள் தரும் பணி, பள்ளிகள் குறித்து பல்வேறு பணி என ஏராளமான கற்பித்தல் அல்லாத பணிகளை ஆசிரியர்கள் அன்றாடம் செய்து வருகின்றனர்.


இன்றைக்கு உள்ள காலச்சூழலில் பள்ளிகளில் குழந்தைகளை உடனிருந்து கவனிக்க வேண்டிய ஆசிரியர்களின் பொன்னான நேரத்தை அதற்கு செலவிட விடாமல், கற்பித்தல் அல்லாத பணிகளைத் தொடர்ந்து கல்வித்துறை ஆசிரியர்கள் மீது திணித்து வருகிறது. இது ஆசிரியர்கள் மீது கடுமையான பணிச்சுமையை ஏற்றுவதோடு அவர்களிடம் மன உளைச்சலையும் ஏற்படுத்தி, கற்பித்தல் பணியையே பாழாக்கி வருகிறது. மேலும் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத சூழலில், பல தவறான பாதையில் மாணவர்கள் பிறழ்ந்து போகும் நிலை அதிகரித்துள்ளது.


இது மட்டுமன்றி இல்லம் தேடி கல்வி என்ற பெயரில் முறை சாரா கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி, முறை சார்ந்த கற்பித்தல் கற்றல் செயல்முறையின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு வருகிறது. இல்லம் தேடி கல்விப் பணிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்துவது, மேலும் அவர்கள் மீது பணிச் சுமையை ஏற்றுகிறது. இது மட்டுமின்றி எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தின் கீழ் மூன்றாம் வகுப்பில் இருக்கும் மாணவர்களுக்கு எண்களையும் எழுத்துக்களையும் கற்பிக்கிறோம் என்ற பெயரில், கற்றல் செயல்முறை மிகவும் காலம் தாழ்த்தப்படுகிறது. இது மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் சலிப்பையே ஏற்படுத்தி வருகிறது.


இவ்வாறு அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் கற்றல் செயல்முறை போக்கு பெரிதும் பாதிப்படைந்துவிட்டது. மேலும் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் போன்றவற்றால் அரசுப் பள்ளிகளில் முறைசார்ந்த கல்வி அமைப்பு செயல்பாடு கேள்விக்குறியாகி உள்ளது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மீது சுமையை ஏற்றுவதும் இல்லம் தேடி கல்வி, ‌எண்ணும் எழுத்தும் திட்டம் போன்றவை அரசுப் பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்களை விரட்டும் திட்டம் ஆகும். இது தேசிய கல்விக் கொள்கை 1986, தேசியக் கல்விக் கொள்கையை 2020 பின்பற்றியே கொண்டுவரப்பட்டுள்ளது.


அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் கற்றல் செயல்முறை போக்கை மீண்டும் உயிர்பிக்க, கற்பித்தல் கற்றல் செயல்முறையை தவிர வேறு எந்தப் பணிக்கும் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது. கோடானு கோடி இளைஞர்கள் வேலையின்மை பிரச்சனையில் தவித்து வருகையில் அவர்களுக்கு அந்தப் பணியை வழங்குவதே சரியான தீர்வாகும். மேலும் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் போன்ற முறைசாரா கல்வித் திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும்’’ என அதில் கூறப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

ITK - ILLAM THEDI KALVI - Remedial Teaching - Training Videos

 ITK - illam Thedi Kalvi - Remedial Teaching - Training Videos 


இல்லம் தேடிக் கல்வி தன்னார்வர்களுக்கு நடைபெறவுள்ள குறைதீர் கற்றல் பயிற்சிக்கான வீடியோ பாடப்பொருள்.

Tamil

1. Tamil_Chapter_01 - Download here

2. Tamil_Chapter_02 - Download here

3. Tamil_Chapter_03 - Download here

4. Tamil_Chapter_04 - Download here

5. Tamil_Chapter_05 - Download here

English


English Full Video Link - Click here

1. English_Chapter_01 - Download here

2. English_Chapter_02 - Download here

3. English_Chapter_03 - Download here

4. English_Chapter_04 - Download here

5. English_Chapter_05 - Download here

Maths


1. Maths_Chapter_01 - Download here

2. Maths_Chapter_02 - Download here

3. Maths_Chapter_03 - Download here

4. Maths_Chapter_04 - Download here

5. Maths_Chapter_05 - Download here


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

இல்லம் தேடி கல்வி - தன்னார்வலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி - வழிகாட்டுதல்கள் சார்ந்து சிறப்புப் பணி அலுவலரின் கடிதம்!

 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி குறித்த வழிகாட்டுதல்கள் :

சிறப்பாக செயல்பட்டு வரும் இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களை குழந்தைகளை கையாள வேண்டிய விதம் மற்றும் கற்றல் ஊக்கப்படுத்தும் விதமாக கற்பித்தல் குறித்தும் இரு நாட்கள் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 இப்பயிற்சியானது குறுவளமைய பயிற்சியாக 15 வகுப்புகளை கையாளும் தன்னார்வலர்களுக்கு ஒரு பிரிவாகவும் . 6 8 வகுப்புகளை கையாளும் தன்னார்வலர்களுக்கு மற்றொரு பிரிவாகவும் வழங்கப்படவுள்ளது . இப்பயிற்சிக்கான கருத்தாளர்களுக்கு மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் கீழ்காணுமாறு பயிற்சி நடைபெறவுள்ளது . .



ITK - 3rd Phase Training Proceedings - Download here...


Click here to Join WhatsApp group for Daily kalvi news

இல்லம் தேடி கல்வித் திட்டம்: பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

 இல்லம் தேடி கல்விக்கான மாவட்ட மற்றும் வட்டார அளவிலான ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களை தமிழக பள்ளிக்கல்வித் துறை மறுசீரமைத்துள்ளது.

கொரோனா பொது முடக்க காலங்களில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவர்களின் கற்றல் இடைவெளி / இழப்புகளைக் குறைத்திடும் வகையில் "இல்லம் தேடிக் கல்வி"திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளி வளாகங்களுக்கு வெளியே உள்ள இல்லம் தேடி மையங்களில் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தும் விதமாக,  மாநில, மாவட்ட, ஒன்றிய, பள்ளி அளவிலான நான்கு  அடுக்கு குழுக்கள் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு குழுக்களுக்கும் தலைவர், உறுப்பினர் செயலர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுக்களும் தங்கள் அளவில் கொடுக்கப்பட்ட பிரத்தியோக பணிகளை செயல்படுத்தி வருகின்றன.

வட்டார அளவிலான குழுவில் இரண்டு ஆசிரியர்கள் இல்லம் தேடிக் கல்வி தொடர்பான வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு செயல்பாடுகளை கவனித்து வந்தனர். இந்த ஒருங்கிணைப்பு பணிகளை முழு நேரப் பணியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது . அதேபோன்று, மாவட்ட அளவிலும் ஆசிரியர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இல்லம் தேடி கல்விக்கான மாவட்ட மற்றும் வட்டார அளவிலான ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களை தமிழக பள்ளிக்கல்வித் துறை மறு சீரமைத்துள்ளது. அதன்படி, மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் , ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்பட வேண்டும்  என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக, தூத்துக்குடி, கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அனைத்து மாவட்ட மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு எழுதிய கடிதத்தில், "  தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் வாயிலாக மாதந்தோறும் பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறும். இம்முறை சென்னை மண்டலத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் ( 15.07.2022 ) இல்லம் தேடி கல்விக்கான மாவட்ட மற்றும் வட்டார அளவில் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டு செயல்படவேண்டும் என்று முடிவெடிக்கப்பட்டது.

அதன்படி மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் , ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் இல்லம் தேடி கல்வி மையங்களில் சிறப்பாக செயல்படவும் , ஏனைய மீதமுள்ள ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் மீளவும் பள்ளி பணியில் ஈடுபடவும்" என்று தெரிவிக்கப்பட்டது.

Click here to Join WhatsApp group for Daily kalvi news

இல்லம் தேடி கல்வி App New Update 0.41- Direct link

இல்லம் தேடி கல்வி App New Update-0.41 direct link


Update செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk 



Click here to Join WhatsApp group for Daily kalvi news

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் பணி அனுபவச் சான்றிதழ்

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் பணி அனுபவச் சான்றிதழ்



👉DOWNLOAD ITK பணி அனுபவச் சான்றிதழ்



👉தற்காலிக ஆசிரியர் பணி விண்ணப்பதாரர் விவரப் படிவம்


Click here to Join WhatsApp group for Daily kalvi news


இல்லம் தேடி கல்வி.. கூகுள் செயலி உதவியுடன் 263கோடி சொற்கள் வாசித்து அசத்திய மாணவர்கள்

Reading Marathon: கூகுள் செயலி உதவியுடன் மாணவர்கள் வாசித்த 263 கோடி சொற்கள் வாசிக்கும் திறன் மேம்பட உதவியிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இல்லம் தேடி கல்வி திட்டம் தன்னார்வலர்கள் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் 1.81 லட்சம் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் கோடை விடுமுறை காலத்தில் வாசிப்பு பழக்கத்தை மாணவர்களிடம் ஊக்குவிக்கும் விதமாக 12 நாட்கள் ரீடிங் மாரத்தான் என்ற தொடர் வாசிப்புப் போட்டி நடைபெற்றது.

 




சமீபத்தில் கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் ' கூகுள் ரீட் அலாங்க் ' ( Google read along ) என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் கைபேசி செயலி வழியாக குழந்தைகளுக்கான கதைகளை மாணவர்கள் வாசித்து உள்ளனர் .

வாசிப்புப் பழக்கத்தைத் மாணவர்களிடையே ஏற்படுத்திடும் வகையில் இந்த நிகழ்வில் 18.36 லட்சம் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் . மாணவர்கள் 12 நாட்களில் 263.17 கோடி சொற்களை சரியாக வாசித்துச் சாதனை படைத்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் மொத்தம் 9.82 லட்சம் மணி நேரம் பல நூறு கதைகளை வாசித்து உள்ளனர்.

இதுகுறித்து, நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியிடம் பேசிய இல்லம் தேடி கல்வித்திட்ட சிறப்பு அலுவலர் இளம்பகவத்,  தமிழ்நாட்டு மாணவர்கள் இந்த சாதனையை செய்வதற்கு இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் , ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் மிகப்பெரிய ஊக்க சக்தியாக திகழ்ந்துள்ளதாக தெரிவித்தார் .


413 வட்டாரங்களுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி வட்டாரம் 62.82 லட்சம் சொற்களைச் சரியாக வாசித்து முதலிடம் பெற்றது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரம் 49.19 லட்சம் மற்றும் மேலூர் வட்டாரம் 41.72 லட்சம் ஆகியவை இரண்டாவது, மூன்றாவது இடங்களை பெற்றுள்ளதாக கூறிய அவர்,
நுண்ணறிவு செயற்கை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்காக நிகழ்த்தப்பட்ட இந்நிகழ்வு மாணவர்கள் வாசகங்களை வாசிக்கு திறனை மேம்படுத்தியிருப்பதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக கூறினார்.

முதலில் சொற்களை வாசிப்பதில் தடுமாற்றமாக இருந்த மாணவர்கள் தற்பொழுது தடையின்றி வாசித்து, பாராட்டுகளை பெற்று வருவதகவும் அவர் தெரிவித்தார்.

இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்ந்து 6 மாதங்களுக்கு செயல்படுத்தப்படும் -பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

பள்ளிகளில் சேர மாற்று சான்றிதழை கட்டாயப்படுத்தக் கூடாது: மாற்று சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தவும் கூடாது - பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அறிவுறுத்தல்

இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்ந்து 6 மாதங்களுக்கு செயல்படுத்தப்படும்: படிப்படியாக இத்திட்டம் நிறுத்தப்படும் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் 

ITK - Reading Marathon வாசித்தல் பயிற்சியினை சிறப்பாக செயல்படுத்த சில ஆலோசனைகள்!

 இல்லம் தேடிக் கல்வி மையங்களில் இன்று முதல் ஜூன் 12 வரை Reading Marathon  ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


அதற்காக நீங்கள் Read Along செயலியை டவுன்லோட் செய்து உங்களது ஒன்றியத்தினை பதிவு செய்து( *ஒருமுறை block code கொடுத்து பதிவு செய்து விட்டால் அதை எக்காரணம் கொண்டும் ரீடிங் மாரத்தான் முடியும் வரை delete செய்து விடக்கூடாது* ), மாணவர்களைக் கொண்டு வாசிக்கும் பயிற்சியை வெற்றிகரமாக ஆரம்பித்து இருப்பீர்கள் என நம்புகிறோம்.


🔴ஒருவேளை மாணவர்கள் விடுமுறையில் வெளியூர்களுக்குச் சென்றிருந்தால் தற்போது மையங்களுக்கு வரக்கூடிய மாணவர்களுக்கு மட்டும் வாசிப்புப் பயிற்சி அளிக்கவும். மேலும் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேசி மையங்களுக்கு வருவதற்கு அறிவுறுத்தவும்..


இல்லம் தேடி கல்வி மொபைல் app-ல் தேதி வாரியாக தமிழ் மற்றும் ஆங்கிலக் கதைகள் வாசித்தலுக்கு புத்தகங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


🔴மாணவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள புத்தகங்களைப் படித்து முடித்த பிறகு கூடுதலாக நமது Read Along  செயலியில் உள்ள புத்தகங்களை பதிவிறக்கம் செய்தும் வாசிக்கலாம்.


அந்த தேதியில் குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்களை மட்டுமே வாசிக்க வேண்டும் என்ற அவசியமில்லை அதை முடித்த பிறகு கூடுதலாக எவ்வளவு புத்தகங்கள் வேண்டுமானாலும் வாசிக்கலாம்.


🔴 மாணவர்கள் வாசிக்கும்போது கூடுமானவரையில் சரியான உச்சரிப்பினை தெளிவாக உச்சரிக்க செய்து அதன்படி வாசிக்க பழக்குங்கள் அப்பொழுதுதான் மாணவர்கள் நிறைய ஸ்டார்களை போனசாக பெற இயலும். அதேபோன்று எவ்வளவு விரைவாக வாசிக்கிறார்கள் அதன் வேகத்தைப் பொருத்து ஸ்டார்கள் கூடுதலாக கிடைக்கும்.


ஒரு புத்தகத்தை ஓபன் செய்தால் அதனை முழுமையாக வாசித்து முடிக்கவும். 


🔴குழந்தைகள் ஆங்கிலக் கதைகள் வாசித்தலில் சிரமப்பட்டால் அவர்களுக்கு பிடித்த தமிழ்க் கதைகளையே நிறைய வாசிக்க சொல்லுங்கள் அவர்கள் விருப்பப் பட்டால் ஆங்கில கதைகளையும் வாசிக்கட்டும்.


மாணவர்கள் விரும்பினால் அவர்கள் வீடுகளிலும் வாசிப்பதற்கு ஏதுவாக அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் Read Along செயலியை இன்ஸ்டால் செய்து Block code பதிவு செய்து அதை எவ்வாறு கையாள்வது என்பது  குறித்து மாணவர்களுக்கு  தன்னார்வலர்கள் வழிகாட்டலாம்..

ITK - How to download and use Google Read Along Mobile App detailed explanation

ஜூன் 1 ஆம் தேதி முதல் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் அடுத்தக் கட்டமாக வாசிக்கும் திறனை மேம்படுத்தும் ரீடிங் மாரத்தான் நடைபெற உள்ளது. 

 இது Read Along செயலி மூலம் நடைபெறுகிறது. செயலி பதிவிறக்கம் மற்றும் பயன்பாடு குறித்து கீழே உள்ள லிங்கில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.



How to download and use Google Read Along Mobile App detailed explanation - Download here...

இல்லம் தேடிக் கல்வி மையங்களில் வாசிக்கும் திறனை மேம்படுத்த ரீடிங் மாரத்தான் ( ஜூன் 1 - 22 )

இல்லம் தேடிக் கல்வியில் ஒரு மைல்கல். 


வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை இல்லம் தேடிக் கல்வி மையங்களில் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் ரீடிங் மாரத்தான் நடைபெற உள்ளது.


இதில் கலந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?



Step 2 :  ரீடிங் மாரத்தானில் கலந்து கொள்ள Read Along டவுன்லோட் செய்யுங்கள்:https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.seekh&referrer=inapp


Step 3: கூகுள் செயலி பயன்படுத்த அனுமதி அளியுங்கள்.

 தமிழ் +English மொழியைத் தேர்ந்தெடுக்கவும்


Step 4: தியா சொல்லும் சொற்றொடரைப் படிங்யுங்கள். 

யார் இந்த தியா ? 


Step 5: நூலகத்தை பார்வையிடுங்கள். 

உங்கள் குழந்தைகளுக்கான ஆச்சரியமூட்டும் கதைகள் காத்திருக்கின்றன.


Step 6: உங்களது வட்டாரத்திற்கான யூனிக் கோட் ஐ இங்கு பதிவு செய்ய வேண்டும். 

இது கட்டாயம். 

உங்கள் வட்டாரத்திற்கான யூனிக் கோட் தெரியுமா ? 

 🙄 Ex : TN332115

Step 8: Copy your block code from your district list.

Step 9: கூட்டாளர் குறியீடுகள் என்ற மெனுவை டைப் செய்யவும்.

Step 10: கூட்டாளர் சேர்த்தல் என்ற பட்டனை தட்டவும்.


இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு மூன்றாவது கையேடு . சுவரொட்டிகள் , அட்டைகள் வழங்க சிறப்பு பணி அலுவலர் உத்தரவு

இல்லம் தேடிக் கல்வி மையங்களில் ஜுன் ஒன்று முதல் மூன்றாவது கையேடு . சுவரொட்டிகள் , அட்டைகளை பெற்று தன்னார்வலர்கள் மையங்களை நடத்திட சிறப்பு பணி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.




இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கான வழங்கப்பட்டுள்ள கட்டகங்கள் , சுவரொட்டிகள் , அட்டைகள் மற்றும் கதை புத்தகங்கள் மையங்களுக்கு வழங்குவதற்கான வழிக்காட்டுதல் :


கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி / இழப்பினை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் " இல்லம் தேடிக் கல்வி " அனைத்து மாவட்டங்களிலும் நன்முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளிலும் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் தொடங்கப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு தற்பொழுது கற்றல் கற்பித்தலுக்கான மூன்றாவது கையேடு , சுவரொட்டிகள் ( Posters ) , அட்டைகள் தொடக்க நிலை / உயர் தொடக்க நிலை என பிரிவு வாரியாக மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மாவட்டவாரியாக வழங்கப்பட்டுள்ள கையேடு . சுவரொட்டிகள் ( Posters ) , அட்டைகளின் எண்ணிக்கை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.


 தன்னார்வலர்களுக்கு பிரிவு வாரியாக வழங்கப்பட்டுள்ள மூன்றாவது கையேடு . சுவரொட்டிகள் , அட்டைகளின் விவரம் பின் வருமாறு



Click Here to Download - Illam Thedi Kalvi - 3rd Module - Pdf