பல நோய்களை எளிதாக குணபடுத்தும் ஆற்றல் கொண்ட முருங்கைக்காய் !!

 முருங்கைக்காய்க்கு பல நோய்களை எளிதாக குணபடுத்தும் ஆற்றல் இருக்கிறது. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், உடலுக்கு ஆரோக்கியமும் உற்சாகம் கிடைக்கும்.










பித்தக்கோளறுகளால் பாதிக்கப்பட்டவர்கள், கண் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் முருங்கைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் நோய் குணமாகும்.

முருங்கைப் பூவை சுத்தம் செய்து, அதே அளவு பாசிப்பருப்பு அல்லது துவரம் பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் தேகத்திற்கு பலம் ஏற்படும்.

முருங்கைக்காயின் சாற்றை எடுத்து, அதனை பாலில் கலந்து குடித்து வந்தால், குழந்தைகளுக்கு எலும்புகள் வலிமை பெறும். உடலில் இருக்கும் ரத்தத்தை சுத்திகரிப்பதற்காக, முருங்கைக்காயை நாம் அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.

இருமல், தொண்டை வலி, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு அடிக்கடி ஆளாகுபவர்கள், முருங்கைக்காயை சூப் செய்து பருகலாம். இவ்வாறு செய்தால், நல்ல தீர்வு கிடைக்கும்.

ஆண்களை விட கர்ப்பிணிப் பெண்கள் தான் அதிக அளவில் முருங்கைக்காயை சாப்பிட வேண்டும். பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் சில பிரச்சனைகளை தீர்ப்பதற்கு, முருங்கைக்காய் நல்ல தீர்வை தரும்.

குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு..!

கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு-4ல் அடங்கிய பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


தமிழக அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அதிகாரிகள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர் உள்ளிட்ட 7 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான தேர்வை டிஎன்பிஎஸ்சி கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி நடத்தியது. இதன் முடிவுகள், அதே ஆண்டு நவம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது. பின்னர் இந்த பணியிடங்களின் எண்ணிக்கை 9,882 ஆக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து கிராம நிா்வாக அதிகாரி, இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 17ம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட்டது.

அதில், மொத்தமுள்ள 6,007 பணியிடங்களில் 5,798 இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், 209 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் மட்டும் நிரப்பப்படவில்லை. அதேபோல், கடந்த நவம்பர் 2 முதல் டிசம்பர் 9ம் தேதி வரை நடத்தப்பட்ட தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வில் மொத்தம் 221 இடங்கள் நிரப்பப்படவில்லை. இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் என காலியாக உள்ள 430 பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், மூன்றாம் கட்ட கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில், இளநிலை உதவியாளர், நில அளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 25-11-2021 அன்று சென்னை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தை தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்வு அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை – டிசம்பரில் முடிவு? புதிய தகவல்!

 மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகை குறித்த முடிவு டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது

கொரோனா பேரலை தொற்று காரணமாக கடந்த 18 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (DA) மற்றும் DR தொகை திருப்பி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 3 தவணைக்கான அகவிலைப்படி (DA) உயர்வுடன் சேர்த்து மொத்தம் 31% DA அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத DA நிலுவைத் தொகை குறித்த புதுப்பிப்பை அரசு வழங்கியுள்ளது.

இது தொடர்பான ஊடக அறிக்கையின்படி, டிசம்பர் மாதத்தில் மத்திய அரசாங்கம் 18 மாத DA நிலுவைத் தொகையை அளிப்பது குறித்து முடிவு செய்யலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது நிலுவையில் உள்ள 18 மாத DA தொகை குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதன் இறுதி முடிவு அடுத்த மாதம் டிசம்பரில், அதாவது புத்தாண்டுக்கு முன்னதாக எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து JCM தேசிய கவுன்சிலின் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா கூறுகையில், ‘நிலுவையில் உள்ள 18 மாத DA நிலுவைத் தொகையை தீர்ப்பதற்கு அரசுக்கு கவுன்சில் கோரிக்கை வைத்துள்ளது. அடுத்த மாதம் நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளார். இப்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (DA) மற்றும் DR நிலுவைத் தொகையை வழங்குமாறு இந்திய ஓய்வூதியர் மன்றம் பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கனமழை: இன்று 26 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!

கனமழை காரணமாக இன்று 26 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்குத் திசையில் நகர்ந்து இன்று தெற்கு ஆந்திரா - வட தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

மழை பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (18.11.2021) தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமில்லாது புதுச்சேரியிலும் தொடர்ந்து மழை பெய்துவருவதால் புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகப் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் அதி கனமழை பொழியும் என்பதால் நான்கு மாவட்டங்களுக்கும் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பள்ளிகளில் ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் காலிப்பணியிட விவரம் அனுப்ப ஆணையர் உத்தரவு.!

 ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்க 01.03.2021 அன்றைய நிலையில் இடைநிலை ஆசிரியர் / தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் இடைநிலை காப்பாளர்கள் நிலையில் தற்காலிக ஒருங்கிணைந்த பணிமூப்பு பட்டியல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி காப்பாளர்கள் காலிப்பணியிடம் விவரத்தினை அனுப்புமாறு அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் காலிப்பணியிட விவரம் 

1.01.03.2021 அன்றைய நிலையில் ஒருங்கிணைந்த பணிமூப்பு பட்டியலினை தயார் செய்து அனைத்து ஆசிரியர்கள் அறியும் வண்ணம் தகவல் பலகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.


01.03.2021 அன்றைய நிலையில் ஒருங்கிணைந்த பணிமூப்பு பட்டியலினை அனைத்து பள்ளிகளுக்கு சுற்றுக்கு அனுப்பட்டு சம்மந்தப்பட்ட ஆசிரியருக்கு சார்வு செய்து கையொப்பம்பெற்று அனுப்ப வேண்டும்.


மேற்கண்ட தற்காலிக ஒருங்கிணைந்த பணிமூப்பு பட்டியலில் ஆட்சேபனைகள் வரும் பட்சத்தில் உரிய ஆவணங்களின்படி திருத்தங்கள் மேற்கொண்டு இறுதி ஒருங்கிணைந்த பணிமூப்பு பட்டியல் தயார் செய்து 22.11.2021 - க்குள் இறுதி செய்யப்பட்டு இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும்.


மேற்கண்ட ஒருங்கிணைந்த இறுதி பணிமூப்பு பட்டியலில் ஏற்படும் தவறுதலுக்கு தாங்களே முழுபொறுப்பேற்க நேரிடும் எனவும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.


பட்டதாரி ஆசிரியர் நிலையில் காலிப்பணியிடம் இல்லை என்றாலும் 01.03.2021 அன்றைய நிலையில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் / காப்பாளர்கள் நிலையில் ஒருங்கிணைந்த இறுதி பணிமூப்பு பட்டியல் தயார் செய்து அனுப்பப்பட வேண்டும்.


31.10.2021 அன்றைய நிலையில் பட்டதாரி ஆசிரியர் காலிபணியிட விவரங்கள் / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் / பட்டதாரி காப்பாளர்கள் காலிப்பணியிட விவரங்கள் இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து உடன் அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் தொடக்கக் கல்வி இயக்ககம் சார்ந்து விவாதிக்கப்பட வேண்டிய கூட்டப் பொருள்.!

 23.11.2021 அன்று நடைபெறவுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் தொடக்கக் கல்வி இயக்ககம் சார்ந்து விவாதிக்கப்பட வேண்டிய கூட்டப் பொருள் :


 1. நீதிமன்ற வழக்கு சார்ந்த விவரங்கள் - Contempt Petitions , SLP ( படிவம் - 1 & 2 ) 


2. விலையில்லா கல்வி உபகரணப் பொருட்கள் புத்தகப்பை , கிரையான்ஸ் , வண்ணப் பென்சில்கள் , கணித உபகரண பெட்டி , காலணிகள் மற்றும் காலேந்திகள் , ( கம்பளிச் சட்டை , மழைக்கோட்டு , ஆங்கிள் பூட் - மலை பிரதேசங்களில் உள்ள 16 மாவட்டங்கள் ) 2021 - 22 ஆம் கல்வியாண்டிற்குரிய கல்வி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்ட விவரம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் கையொப்பத்துடன் அளிக்கப்பட வேண்டும் 


3.2020-21ஆம் கல்வி ஆண்டில் RTE 25 % இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் திரும்ப வழங்குவதற்கு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளிலிருந்து வங்கி கணக்கு விபரங்களைப் பெற்று சரிபார்த்து EMIS- ல் பதிவேற்றம் செய்யப்பட்டது குறித்த விவரம் 


4. 01.08.2021 தேதிய நிலவரப்படி அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நிர்ணயம் செய்த விவரம் 


5.ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி ( TPF ) விடுபட்ட வரவுகளை ( Missing Credits ) சரிசெய்து மாநில கணக்காயருக்கு அனுப்பிவிட்டு அதன் நகல் இவ்வியக்ககத்திற்கு அனுப்பப்பட வேண்டும் . ( அரியலூர் , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் , கிருஷ்ணகிரி , புதுக்கோட்டை . , ராணிப்பேட்டை , ராமநாதபுரம் , சிவகங்கை , திருச்சி , திருப்பூர் , தூத்துக்குடி , தென்காசி , திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் ஆக மாவட்டங்களில் இருந்து விவரங்கள் வழங்கப்பட வேண்டும்.


6.நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2021-2022ஆம் ஆண்டு மாணாக்கர் எண்ணிக்கையின்படி ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்த விவரம் ( உரிய படிவங்களில் ) 


7. அக்டோபர் 2021 ல் பார்வையிடப்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்  பள்ளிகளின் விவரம் ( படிவம் -3 ) 


8. மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வகுப்பறைகள் தேவை விவரம் ( படிவம் 4 ) 


9. பள்ளி சுற்றுச் சுவர் தேவை சார்ந்த விவரம் ( படிவம் -5 ) 


10.இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் சார்ந்த விவரம் ( படிவம் -6 ) 


11.முதன்மைக் கல்வி அலுவலகம் , மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பராமரிக்கப்படும் வங்கி கணக்குகள் சார்பான விவரம் . ( விருதுநகர் , அரியலூர் , சிவகங்கை , காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்கள் தவிர்த்து )

அரசு வழங்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை.! வேலை இல்லாத நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.!

 தமிழக அரசின்‌ சார்பில்‌ படித்த வேலைவாய்ப்பு இல்லாத நபர்களுக்கு உதவித்தொகை வழங்கும்‌ திட்டம்‌ செயற்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதம்‌ ஒன்றுக்கு SSLC தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, SSLC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக்கல்வி (12ம்‌ வகுப்பு) படித்தவர்களுக்கு ரூ.400‌, பட்டதாரிகளுக்கு ரூ.600‌ வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு SSLC மற்றும்‌ அதற்கு கீழ்‌ படித்தவர்களுக்கு ரூ.600 ‌, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750 பட்டதாரிகளுக்கு ரூ.1000‌ வழங்கப்பட்டு வருகிறது. படித்த வேலைவாய்ப்பு இல்லாத உதவித்தொகை பெற விண்ணப்பங்கள்‌ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ இலவசமாக வழங்கப்படவுள்ளது.

கல்வித்‌ தகுதியினை வேலைவாய்ப்பகத்தில்‌ பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல்‌ பதிவினை தொடர்ந்து புதுப்பித்தல்‌ செய்திருத்தல்‌ வேண்டும்‌. மாற்றுத்திறனாளிகள்‌ பதிவுசெய்து ஒரு வருடம்‌ பூர்த்தி செய்திருத்தல்‌ வேண்டும்‌. SC/ST பிரிவினருக்கு 30.09.2021 அன்று 45 வயதும்‌. மற்றவர்களுக்கு 40 வயதும்‌ கடந்திருக்கக்‌ கூடாது. விண்ணப்பதாரரின்‌ குடும்ப வருமானம்‌ ஆண்டிற்கு ரூ.72,000 க்கு மிகையாமல்‌ இருக்க வேண்டும்‌. மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சசரம்பு இல்லை. பொறியியல்‌, மருத்துவம்‌, விவசாயம்‌, கால்நடை, அறிவியல்‌ இது போன்ற தொழில்நுட்பப்பட்டம்‌ பெற்றவர்கள்‌ இவ்வுதவித்தொகை பெறத்தகுதியற்றவர்கள்‌.

இவ்வுதவித்தொகை பெற முதல் முறையாக விண்ணப்பிக்க விரும்பும்‌ தகுதியுடையவர்கள்‌ விண்ணப்ப படிவங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில்‌ துவக்கப்பட்ட கணக்குப்புத்தகம்‌ மற்றும்‌ விண்ணப்பத்தில்‌ குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன்‌ 30.11.2021 வரை  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ நேரில்‌ அளிக்க வேண்டும்.

இன்று இங்கெல்லாம் விடுமுறை அறிவிப்பு!!

 கனமழைகாரணமாககன்னியாகுமரிமாவட்டத்தில்உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது அதே போல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தற்காலிக நிவாரண முகாம்களாக செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கிறன. தற்போது கன்னியாகுமரியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டள்ளது.

ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கன்னியாகுமரிக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர் கனமழை கரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நிவாரண மையங்களாக செயல்படும் 12 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்கப்பட்டுள்ள தற்காலிக அரசு நிவாரண முகாம் செயல்படும் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்துக்கு உட்பட்ட சிவன்தாங்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் குன்றத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட சீனிவாசபுரம் அரசு அரசினர் நடுநிலை பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அற்புதம் கரும்புச்சாறு.!


 

பழரசங்களையும் உட்கொள்வதால், உடலுக்கு நன்மை கிடைக்கும். கரும்புச்சாறு நம் உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கின்றது.

இது உடலுக்கு குளிர்ச்சியை அளிப்பது மட்டுமல்லாமல், குடிக்க சுவையாகவும் இருக்கிறது. உடலில் உஷ்ணத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தும் வெயில் காலத்தில் கரும்புச்சாறு அமிர்தத்தைப் போல நிவாரணம் அளிக்கின்றது என்று கூறினால் அது மிகையாகாது.

செரிமானத்திற்கு நல்லது

கரும்புச்சாறு செரிமானத்திற்கும் (Digestion) மிகவும் நல்லதாகக் கருதப்படுகின்றது. இந்த சாற்றில் இயற்கை பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது வயிற்றை லேசாக வைத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்புச்சாற்றையும் எடுத்துக் கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

கரும்புச்சாறு வயிற்றுக்கு நல்லது

கரும்புச்சாறில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது வயிற்றுக்கு இதமான குளிர்ச்சியையும் மென்மையையும் அளிக்கிறது.

பம்பர் ஆற்றலை அளிக்கிறது

கரும்புகளில் (Sugarcane) இயற்கையாகவே சுக்ரோஸ் நிறைந்துள்ளது. இது உடலில் ஆற்றலை நிரப்புகிறது. பெரும்பாலும், சூடு அதிகமாக இருக்கும் நாளில், வெப்பநிலை அதிகமாக இருப்பதன் காரணமாக, வியர்வை வெகுவாக வெளியேறி அது நீரிழப்பை உண்டாக்குகிறது. இந்த நேரத்தில், கரும்புச்சாற்றை உட்கொள்வது உங்களுக்கு அதிகப்படியான ஆற்றலை அளிப்பதோடு, உடலுக்குத் தேவையான உற்சாகத்தையும் சக்தியையும் தருகிறது.

சிறுநீர் எரிச்சல் சரியாகும்

சிறுநீர் கழிக்கும்போது சிலருக்கு எரிச்சலும் வலியும் ஏற்படுவதுண்டு. கரும்புச்சாறு இந்த பிரச்சனைகளை தீர்க்க உதவும். மேலும், சிறுநீரக கல் (Kidney stones) உள்ளவர்களுக்கும் கரும்புச்சாறு நல்ல பயன்களை அளிக்கும்.


குறிப்பு: இந்த கட்டுரை பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. எதையும் உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவர்கள் அல்லது நிபுணர்களை அணுக அறிவுறுத்தப்படுகிறது.

அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள வாழை !!

 வாழையின் காய், பூ, இலை மற்றும் தண்டு என அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் உள்ளது.

மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து காணப்படுகிறது.


மெலிந்தவர்கள் இதை அதிகமாக சாப்பிட்டால் உடல் பருக்கும். உடலுக்கும் நல்ல வளர்ச்சி ஏற்படும். அதிக பசியாக இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் உடனேயே பசி அடங்கும்.

வாழைக்காயில் எலும்புகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் தேவையான வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவைகள் எலும்பிற்கு போதிய பலம் தந்து எதிர்காலத்தில் மூட்டு வலி, ஆஸ்டியோ போரோஸிஸ் ஆகிய எலும்பு தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது.

மொந்தன் வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. நீரிழிவு, ரத்த வாந்தி எடுப்பவர்கள் இதை பத்திய உணவாக சாப்பிடலாம். நாம் வாழைக்காயை சமைக்கும்போது அதை, முழுவதுமாக உரித்து விடுகிறோம். அப்படி செய்யாமல் வாழைக்காயின் மேல் தோலை மட்டும் அழுத்தி சீவாமல், மேலாக மெல்லியதாக சீவினால் போதும். உள்தோலுடன் சமைத்து சாப்பிடுவது நல்லது.

வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது.

வாழைக்காயை அதிகம் சாப்பிட்டால் வாய்வு மிகும் என்பதால் அளவோடு சாப்பிடுவது நல்லது. வாழைப்பிஞ்சுகளை பத்தியத்திற்கு சாப்பிடலாம் என்றாலும் மலத்தை இறுக்கி விடும். மேலும் பச்சை வாழைக்காயை சின்னசின்ன ஸ்லைஸ்களாக நறுக்கி வெயிலில் காயவைத்து மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.

மலச்சிக்கல் இருப்பவர்கள் வாழைக்காய் சாப்பிடுவது நல்லது. வாழைக்காய் அதிக நார்சத்து மற்றும் ஸ்டார்ச் சத்து இருக்கிறது. இது குடல்களை சுத்தப்படுத்தி,அதன் இயக்கத்தை அதிகப்படுத்துகிறது.மேலும் மலத்தை இலகுவாக்கி, எளிதில் வெளியேற்றி மலச்சிக்கலை போக்குகிறது.

உங்க இதயத்தை ஆரோக்கியமாவும் சர்க்கரை அளவை சரியாக நிர்வகிக்கவும் 'இந்த' ஒரு பொருள் போதுமாம்!


உணவு சமைத்தப்பின் இறுதியில், கொத்தமல்லி இலையை கொஞ்சம் தூவி அலங்கரித்தால், ஒவ்வொரு உணவும் மிகவும் சுவையாகத் தோன்றும்.

ஹரா தானியா என்றும் அழைக்கப்படும் கொத்தமல்லி, மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. கொத்தமல்லி இலை மற்றும் விதைகள் இரண்டும் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவம் இரண்டிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

தானிய தூள் பெரும்பாலான பருப்புகள் மற்றும் கறிகள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் புதிய கொத்தமல்லி இலைகள் பொதுவாக சட்னி செய்வதற்கும் உணவை அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இது உணவின் சுவையை மேலும் கூட்டுகிறது. இது உங்கள் உணவிற்கு நறுமணத்தையும் அழகையும் சேர்ப்பது மட்டுமல்லாமல் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.


இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது

கொத்தமல்லி ஒரு டையூரிடிக் ஆக செயல்படுகிறது. இது உங்கள் உடலிலிருந்து கூடுதல் சோடியத்தை வெளியேற்ற உதவுகிறது மற்றும் உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். சில ஆரம்பகால ஆராய்ச்சிகள், கொத்தமல்லி கெட்ட கொலஸ்ட்ராலான எல்.டி.எல்லைக் குறைக்க உதவும் என்றும், இது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்றும் தெரிவிக்கிறது.

வீக்கத்தைக் குறைக்கிறது

புற்றுநோய் முதல் இதய நோய் வரை பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய வீக்கத்தைக் குறைக்க கொத்தமல்லி உதவும். கொத்தமல்லியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஆய்வகத்தில் புற்றுநோய் செல்களின் மெதுவான வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

கொத்தமல்லி பல்வேறு ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல்லுலார் சேதத்தைத் தடுக்கிறது. இந்த சேர்மங்களில் டெர்பினைன், குவெர்செடின் மற்றும் டோகோபெரோல்கள் ஆகியவை அடங்கும். இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நரம்பியல் விளைவுகளைக் கொண்டுள்ளன.

இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது

கொத்தமல்லி உங்கள் உடல் இரத்த குளுக்கோஸை திறம்பட செயலாக்க உதவும் என்சைம்களை செயல்படுத்த உதவும் என்று தற்போதைய சோதனைகள் காட்டுகின்றன. இரத்த குளுக்கோஸ் அளவுகளில் கொத்தமல்லியின் நன்மைகளை உறுதிப்படுத்த அதிக இரத்த சர்க்கரை உள்ளவர்கள் மீது கூடுதல் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும்

பார்கின்சன், அல்சைமர் மற்றும் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் போன்ற மூளை நோய்கள் வீக்கத்துடன் கொத்தமல்லி தொடர்புடையவை. கொத்தமல்லியை உட்கொள்வதன் மூலம் இந்த மூன்று நோய்களிலிருந்தும் பாதுகாக்கலாம். கொத்தமல்லி சாறு நரம்பு செல் சேதத்திலிருந்து பாதுகாக்கும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. கொத்தமல்லி இலைகள் நினைவாற்றலை மேம்படுத்துவதோடு, கவலையையும் சமாளிக்கும்.

செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

கொத்தமல்லி விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆரோக்கியமான செரிமானத்தை துரிதப்படுத்தி ஊக்குவிக்கும். கொத்தமல்லி கொண்ட மூலிகை மருந்தின் 30 சொட்டுகள் IBS நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டால், வயிற்று வலி, வீக்கம், அசௌகரியம் மற்றும் வலி ஆகியவை கணிசமாகக் குறையும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. பாரம்பரிய ஈரானிய மருத்துவத்தில் இது பசியைத் தூண்டும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

பார்வைத்திறனை மேம்படுத்துகிறது

கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் ஏ மற்றும் கண்பார்வையை மேம்படுத்தும் கரோட்டினாய்டு வகை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அடர்த்தியாக நிறைந்துள்ளன. அவை கான்ஜுன்க்டிவிடிஸ் மற்றும் மாகுலர் மற்றும் வயது தொடர்பான பார்வைக் குறைபாடுகளைக் குணப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்.

கல்லீரல் செயலிழப்பு சிகிச்சைக்கு உதவலாம்

கொத்தமல்லி இலைகளில் உள்ள அதிகளவு ஆல்கலாய்டுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் பித்த கோளாறுகள் மற்றும் மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் நோய்களைக் குணப்படுத்த உதவும்.

தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது

கொத்தமல்லியில் ஆண்டிமைக்ரோபியல் கலவைகள் உள்ளன. அவை தொற்று மற்றும் உணவு மூலம் பரவும் நோய்களை எதிர்த்துப் போராட உதவும். கொத்தமல்லியில் உள்ள டோடெசெனல் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

உங்கள் சருமத்தைப் பாதுகாக்கிறது

கொத்தமல்லி உங்கள் சருமத்தை லேசான தடிப்புகள் மற்றும் தோல் அழற்சியிலிருந்து பாதுகாக்கும். சொறி போன்ற தோல் நோய்களுக்கு மாற்று சிகிச்சையாக இதைப் பயன்படுத்தலாம். இது செல்லுலார் சேதத்தைத் தடுக்கலாம். இது வயதான தோல் மற்றும் புற ஊதா B கதிர்வீச்சிலிருந்து தோல் சேதத்திற்கு வழிவகுக்கும்.

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் !!

 வாழையின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை. வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும்.

இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.


 மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

மலச்சிக்கலைப் போக்கும் . சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.


பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும்.


வாழைப்பூ கஷாயம் செய்ய: வாழைப்பூ (இரண்டு அல்லது மூன்று இதழ்களை நீக்கி விட்டு பூவை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு) அதனுடன் இஞ்சி 5 கிராம், பூண்டு பல் 5, நல்ல மிளகு 1 ஸ்பூன், சீரகம் 1 ஸ்பூன், சோம்பு 1 ஸ்பூன், கொத்தமல்லி விதை 1 ஸ்பூன், கறிவேப்பிலை 5 இணுக்கு எடுத்து இடித்து கஷாயம் செய்து காலை, மாலை என இருவேளையும் மாதவிலக்கு தோன்றும் காலத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பும், மாதவிலக்கு காலங்களிலும், மாதவிலக்கு முடிந்து இரண்டு நாட்கள் என மூன்று அல்லது நான்கு மாதங்கள் அருந்தி வந்தால் கருப்பைப்புண், கர்ப்பப்பைக் கட்டி, வெள்ளைபடுதல், மாதவிலக்கு சீரற்ற தன்மை போன்றவை மாறும். இது கை கண்ட மருந்தாகும். அடிவயிறு கனம் குறையும். புண்புரை நீங்கும், சீராக இரத்த ஓட்டம் பெறும். உடல் வலுவடையும்.


பெண்களுக்கு உண்டாகும் சூடு மற்றும் வெள்ளை படுதலை போக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும் குணமுண்டு. மலட்டுத் தன்மையைப் போக்கும். ஈறு வீக்கம், புண் இவற்றிற்கு சிறந்த மருந்தாகும். வியர்வை நாற்றத்தைப் போக்கி, வியர்வையை நன்கு வெளியேற்றும்.

கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவும் உணவுகள்.!

 உடலின் அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இருந்தால் தான் வாழ்க்கை வசந்தமாக இருக்கும். இல்லையென்றால் நோயற்ற வாழ்வு வாழ முடியாது.


உடல் உறுப்புகளில் கல்லீரல் மிக முக்கியமான ஒன்றாகும்.

சாப்பிடுவதை செரிமாணம் செய்ய உதவும் கல்லீரல், ஊட்டச்சத்து உட்கொள்ளலை சமநிலைப்படுத்தவும், குளுக்கோஸை ஆற்றலாக மாற்றவும், ரத்தத்தில் இருந்து நச்சுப் பொருட்களை அகற்றவும் செயல்படுகிறது.

கல்லீரல் செயலிழந்தால் பல நோய்கள் நம்மைத் தாக்கும். அதனால்தான் கல்லீரலின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கல்லீரலின்ஆரோக்கியத்திற்கு உதவும் உணவுகளில் சில இவைதான். 

எளிதில் கிடைக்கும் விலை மலிவான இந்த உணவு பொருட்கள் உங்கள் கல்லீரலின் தரத்தை சிறப்பாக பராமரிக்க உதவும்.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். விட்டமின் சி கல்லீரலை சுத்தமாக வைத்திருக்கும். எலுமிச்சையில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. எலுமிச்சையில் உள்ள கூறுகள் கல்லீரல் செல்களின் ஆற்றலை அதிகரிக்கின்றன. செரிமானத்தை ஆதரிக்கும் நொதிகளை கல்லீரலில் உற்பத்தி செய்ய உதவும்எலுமிச்சை, தாதுக்களை உறிஞ்சுவதையும் ஊக்குவிக்கிறது. எலுமிச்சை சாறு குடிப்பது பலவிதங்களில் நன்மை பயக்கும்.


அதேபோல, வைட்டமின் சி அதிகம் உள்ள பீட்ரூட் பிட்டாவைத் தூண்டுகிறது மற்றும் நொதி செயல்பாட்டை ஊக்குவிக்கிறது பீட்ரூட் ஒரு இயற்கையான ரத்த சுத்திகரிப்பு காய் என்பதால், அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பெர்ரி பழத்தில் உள்ள பாலிபினால்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பெர்ரி பழங்களில் சரியான அளவில் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை கல்லீரலை மட்டுமல்ல,ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கின்றன.


திராட்சைப் பழம் கல்லீரலுக்கு மிகவும் நல்லது., கருப்பு மற்றும் சிவப்பு திராட்சைகளை உட்கொள்வது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. கல்லீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் தொற்றுநோயைக் குறைக்க திராட்சை உதவுகிறது. எனவே, திராட்சையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.


வயிறு சம்பந்தமான செரிமாணக் கோளாறுகளை தீர்க்கும் வாழைப்பழம், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டால், உணவு எளிதில் செரிக்காது. அத்தகைய சூழ்நிலையில், வாழைப்பழத்தை மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்ளலாம்.


கல்லீரல் கோளாறுகளை நீக்குவதில் ஆப்பிள் சாப்பிட்டால் முக்கியமான பங்கு வகிக்கிறது. பெக்டின் சத்தைக் கொண்டுள்ள ஆப்பிள், செரிமான அமைப்பு மற்றும் கொலஸ்ட்ராலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது. இதனால் கல்லீரலின் வேலை சுலபமாகிறது. ஆப்பிளில் மாலிக் அமிலம் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதோடு, ரத்தத்தில் உள்ள நச்சுகளை அகற்ற உதவுகிறது.


பசும் இலைகளை கொண்ட காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் ரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. கீரை, பச்சை பட்டாணி, ப்ரோக்கோலி, காலிஃபிளவர், போன்ற காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வாழைக்கு ஏன் வாழை என்று பெயர் வந்தது தெரியுமா?

 உடல் ஆரோக்கியத்திற்கு பழங்கள் மிகவும் முக்கியமானது. உரிய நேரத்தில் உணவு உட்கொள்ள முடியவில்லை என்றால் ஒரு வாழைப்பழம் இருந்தால் நன்று என தோன்றும்.

முக்கனிகளில் ஒன்றான வாழை உலகில் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது.


வாழைக்கு ஏன் வாழை என்று பெயர் வந்தது தெரியுமா? பெயர் என்பது ஒரு மனிதரையோ, பொருளையே அடையாளம் காண உதவும் ஒன்று. பொருட்களுக்கும், காய் கனிகளுக்கும் ஏதாவது ஒரு விஷயத்தின் அடிப்படையில் பெயரிடுவார்கள். இந்தப் பழத்திற்கு வாழை என்று பெயர் சூட்ட சொல்லப்படும் காரணங்களில் ஒன்று சுவராசியமானது.

குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை தற்போது இன்குபேட்டரில் வைத்து பாதுகாத்து உயிர் பிழைக்க வைப்பது அனைவரும் அறிந்ததே. தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்தில், குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையை, வாழையிலையில் வைத்து பாதுகாப்பார்களாம். ஒரு வாழையில் பிறந்த சிசுவை வைத்து, மற்றொரு வாழையிலையை மேற்புறமாக போர்த்தி வைத்தால் குழந்தை பிழைத்துவிடும்.

அதேபோல, வாழையிலையில் உள்ள மருத்துவ பண்புகள், நோய்களை விரைவில் குணமாக்கும். குளிர்ச்சியான தன்மை கொண்ட வாழையிலை, தீக்காயம் பட்டவர்களை படுக்க வைக்கவும் பயன்படுத்தப்படும். இப்படி உயிரை காத்து வாழ வைக்கும் தன்மையைக் கொண்டதால் இந்த தாவரத்திற்கு வாழை என்று பெயர் வந்ததாம்.


வாழை, காட்டு வாழையாக இருந்தாலும் சரி, வீட்டு வாழையாக இருந்தாலும் சரி, அது உண்பதற்கு உகந்தது. உலக வாழை உற்பத்தியில் இந்தியா 24% பங்களிக்கிறது. வாழை விவசாயம் செய்ய தண்ணீர் மிகவும் முக்கியமானது. வாழை சாகுபடிக்கு தண்ணீர் அதிகம் தேவை என்றாலும், மிகவும் இயல்பாக எல்லா இடங்களிலும் வாழ்வது வாழை.

வாழைப்பழத்தில் மாக்னீசியம் சத்து அதிகமாக உள்ளது.வாழைப்பழத்தை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்றாலும், காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், ரத்தத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகரித்து, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

வாழையடி வாழை என்பது வாழ்த்துச் சொல்லாக இருந்தாலும், வாழையைப் போல் சுலபமாக எளிதாக வாழ்க என்பதை வாழ்த்துவதற்கு அடிப்படையாக இருப்பது வாழை. பழங்களுக்காகவே வாழை முதன்மையாக பயிரிடப்பட்டாலும், வாழையின் ஒவ்வொரு பாகமும் நமது தினசரி பயன்பாட்டுக்கு உகந்தவை. டுகிறது எனினும் சிலவேளைகளில் அலங்காரச்செடியாகவும் நார் பெறுவதற்காகவும் வேறு தேவைகளுக்காவும் வாழை பயிரிடப்படுகிறது.


வாழை குலை தள்ளிவதும், அது மடமடவென்று வளர்ந்து தாராக காய்த்து நிற்பதும் பார்க்கவே பரவசம் தரக்கூடியது. வாழையின் இலைகள், தண்டு, பூ, காய், கனி என அனைத்துமே நமக்கு பயன்படுகிறது என்றால், மறுபுறம் விரைவில் மக்கி, சுற்றுச்சூழலுக்கும் நன்மை பயக்கும்.

முருங்கைக்கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா...!!

 முருங்கை இலைச்சாற்றுடன் சம அளவு எலுமிச்சை சாறு சேர்த்து தினமும் காலை வேளையில் குடித்து வருவதால் சத்துக்குறைபாடு, ரத்தசோகை, இருமல், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி மற்றும் தோலின் வறட்சி குணமடையும்.

 முருங்கை இலைச்சாற்றுடன் தேன் மற்றும் இளநீர் சேர்த்துக் குடிப்பதால் உடலுக்கு பலம் கிடைக்கும். முருங்கைப்பூ பிஞ்சான உடன் தோலோடு சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.சிலருக்கு உடலில் நீர் வற்றி, உடல் உஷ்ணமடைந்து மலச்சிக்கல் ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் நீங்கும்.


முருங்கைப் பட்டையை இடித்து சாறெடுத்து அதனுடன் குப்பைமேனி சாறு சேர்த்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி சொறி, சிரங்கு, கரப்பான் ஆகிய தோல் நோய்களின் மீது பூசிவர விரைவில் குணமாகும்.

கண் நரம்புகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தூங்கச் செல்லும் முன் முருங்கைக் கீரைச்சாறும் மற்றும் தேன் கலந்து கொடுத்தால் பார்வை தெளிவாக தெரியும்.

முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். உடல் பலம் பெறும்.

முருங்கைக்காயுடன் மிளகு, ஓமம் மற்றும் பெருங்காயம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகளான மலச்சிக்கல், வயிற்று வலி மற்றும் வயிற்றுப்புண் நீங்கும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும்.

முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு பற்கள் உறுதியாகும். ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். உடல் வெப்பத்தால் ஏற்படும் வாய் புண்கள் போன்றவை நீங்கும்.

அதிக அளவிலான இரும்புச்சத்துக்கள் நிறைந்து காணப்படும் பேரீச்சை !!

 பேரீச்சையில் நிறைந்துள்ள அதிக அளவிலான இரும்புச்சத்து, ரத்தச்சோகையை சரிசெய்கிறது.

உடலுக்குத் தேவையான எனர்ஜி மற்றும் ஆரோக்கியத்தைத் தருகிறது.



ரத்த உற்பத்திக்கு வழிவகுக்கிறது. ரத்தம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது.

பேரீச்சையில் இயற்கையாகவே இனிப்பு அதிகம். சுக்ரோஸ், ஃப்ரெக்டோஸ் மற்றும் குளூக்கோஸ் நிறைந்துள்ளன. மதிய நேரங்களில் ஏற்படும் மந்தநிலையை சீர்செய்து உடலுக்குத் தேவையான உடனடி எனர்ஜியைத் தரும். மேலும், இதில் நிறைந்துள்ள மாவுச்சத்து உடல் ஆரோக்கியத்துக்கு உதவும்.

பேரீச்சையில் நிறைந்துள்ள பொட்டாசியம், இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது. பலவீனமான இதயத்துக்கு பலம் தரும். கெட்ட கொழுப்பை குறைக்கப் பெரிதும் உதவுகிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள், தினமும் 3 பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

பெண்கள் பேரீச்சையை உணவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு ஏற்படும் எலும்புறுக்கி நோயைக் குணப்படுத்தும். வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது.

ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பைத் தடுக்கிறது. யார் ஒருவர் தினமும் 3 பேரீச்சம் பழத்தை உட்கொண்டு வருகிறாரோ, அவரது மூளையின் செயல்பாடு மேம்படும். அதாவது ஞாபக சக்தி, ஒருமுகப்படுத்தும் தன்மை, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் திறன் போன்றவை அதிகரிக்கும்.

தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமடையும். பேரீச்சையில் உள்ள கரிம சல்ஃபர், உடலில் ஏற்படும் அலர்ஜிகள் மற்றும் ஒவ்வாமையைச் சரிசெய்யும். பெண்களுக்குச் சீரான மாதவிடாய்ச் சுழற்சியை ஏற்படுத்தும்.