பள்ளி காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு - செப்.15 முதல் 27 வரை நடைபெறும்

 

தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் செப்.15 முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.


அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான (2023-24) நாட்காட்டியை பள்ளிக்கல்வித் துறை கடந்த ஏப்.28-ம் தேதி வெளியிட்டது. அதில் காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் செப்டம்பர் 3-வது வாரத்தில் தொடங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி காலாண்டுத் தேர்வுக்கால அட்டவணை தற்போது வெளியாகிஉள்ளது.


அதன்படி, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்,15 முதல் 27-ம் தேதி வரை நடத்தப்படும். பிளஸ் 1 வகுப்புக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும், பிளஸ் 2 வகுப்புக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும்.


6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு செப்.19-ல் தொடங்கி 27-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு காலை 10 முதல் மதியம் 2.30 மணி வரையும், 9, 10-ம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும். 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான உடற்கல்வி தேர்வு செப்.22-ம் தேதி நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து செப்.28 முதல் அக்.2-ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மாநில வாரியாக வினாத்தாள்கள்: இதற்கிடையே பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் மாநிலவாரியாக தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த காலாண்டு தேர்வு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


இந்நிலையில், பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு அட்டவணையில் கணிதம், வணிகவியல் போன்ற முக்கிய பாடங்களுக்குத் தயாராக போதிய காலஅவகாசம் இல்லை. எனவே, அந்த தேர்வுகளை ஒருநாள் தள்ளி செப்.23-ம் தேதி நடத்த வேண்டும் என மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



செப்.10-ல் நான் முதல்வன் மதிப்பீட்டுத் தேர்வு - நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வெளியீடு

 


1115642

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

2023-24-க்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையில், நான் முதல்வன் திட்டத்தின்கீழ், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் 1000 மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.7,500 பத்து மாதங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அந்த வகையில், மதிப்பீட்டுத் தேர்வு செப்.10-ம் தேதி நடைபெறும் நிலையில், இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. நான் முதல்வன் ஊக்கத்தொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Breaking : விநாயக சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம் !!!

 விநாயகர் சதுர்த்தி விடுமுறை 17.09.2023 க்கு மாற்றாக 18.09.2023 விடுமுறை அளித்து அரசாணை வெளியீடு.


Public Holidays - Holiday for Vinayakar Chathurthi on 18.09.2023 ( Monday ) - Change in the date of observance of the festival - Revised Orders - issued


GO NO, : 528 Date : 31.08.2023 - Download here



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

CRC - பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி - SCERT செயல்முறைகள்

 9 & 10-ஆம் வகுப்பு கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி மாவட்ட அளவில் (24.08.2023& 25.08.2023) ஆகிய இரு நாட்களிலும் வட்டார அளவில் (28.08.2023& 30.08.2023) நடத்துதல் - தொடர்பாக SCERT செயல்முறைகள்....


SCERT Proceedings - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

SMC - செப்டம்பர் மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் - 01.09.2023 நடைபெறும்- SPD Proceedings

 IMG_20230821_214751


SMC - செப்டம்பர் மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 01.09.2023 வெள்ளிக்கிழமை நடைபெறுதல் சார்ந்து அதற்கான வழிகாட்டுதல்களை வழங்கி மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (நாள் 21.08.2023) 

 SMC - Sep 2023 - Meeting Proceeding - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

TNSED Manarkeni APP ( மணற்கேணி ) NEW UPDATE- 0. 17

 IMG_20230822_064918


TNSED Manarkeni APP  ( மணற்கேணி ) NEW UPDATE

Version 0. 17Date : 22.8.23


What's New

Evolution of science videos. 

Bug Fixes & Performance Improvements.


App Update  செய்ய Direct link👇👇👇

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnsedstudent.tnemis


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

Then chittu Magazine ( Date : 16.08.2023 to 31.08.2023 ) -School Education Published.

 


IMG_20230821_152912

தேன்சிட்டு - 16-31 ஆகஸ்ட் 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Then Chittu - 16-31 August 2023 


 Then chittu Magazine ( Date : 16.08.2023 to 31.08.2023 ) -School Education  -  Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

Puthu Oonjal Magazine - August 2023 - School Education Published.

 


IMG_20230821_154334

புது ஊஞ்சல் - 16-31 ஆகஸ்ட் 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ் - படிக்கலாம்! பறக்கலாம்! - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு.


Puthu Oonjal Magazine - August 2023 ( 16.08.2023 To 31.08.2023 ) -Classes 4 & 5 - School Education - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: அனைத்துக் கட்சிகளுக்கு அழைப்பு

 முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ள நிலையில், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ள நிலையில், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவரவர் தொகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் சீர்மிகு இந்தத் திட்டத்தினைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.


இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:


முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தொடங்கப்பட்ட நாள்முதல், மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, நல்ல பயன் அளித்து வருகிறது. சிறப்பு வாய்ந்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டு மக்களிடையே மட்டுமின்றி, பிற மாநில மக்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தக் காலை உணவுத் திட்டம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படவிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வருகிற 25-8-2023 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கவிருக்கிறார்.


இந்த நிலையில், இந்தத் திட்டத்தினை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் உள்ள ஏதேனும் ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு கேட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (22-8-2023) கடிதம் எழுதியுள்ளார்.


முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து, அதற்கான அரசாணை கடந்த 27-7-2022 அன்று வெளியிடப்பட்டதாகவும், அதன்படி, முதற்கட்டமாக 1,545 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, தற்போது பயனடைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 


இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், நாட்டிற்கே முன்னோடியாய், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள 31,008 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை 15.75 லட்சம் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டில் விரிவுபடுத்தி கடந்த 7-6-2023 அன்று ஆணை வெளியிடப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பள்ளிகளில் காணப்பட்ட மிகச் சிறந்த பலன்களைக் கருத்தில் கொண்டு இந்தச் சீரிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


தமிழ்நாட்டின் வரலாற்றில் பொன்னேட்டில் பதிக்கப்பட இருக்கும் இத்திட்டத்தினை வருகிற 25-8-2023 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில், தான் தொடங்கி வைக்க உள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் இந்தத் திட்டத்தினைத் தொடங்கி வைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மக்கள் பிரதிநிதிகளாகிய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவரவர் தொகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் இந்தச் சீர்மிகு திட்டத்தினைத் தொடங்கி வைத்து சிறப்பித்திட தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

காலை உணவு திட்டம் - வழங்கப்படும் உணவுகள் விவரம், ஒவ்வொரு மாணவருக்கான உணவுப் பொருள்களின் அளவு, கைபேசி செயலில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய நேரம்...

 

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - வழங்கப்படும் உணவுகள் விவரம், ஒவ்வொரு மாணவருக்கான உணவுப் பொருள்களின் அளவு, கைபேசி செயலில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய நேரம்...

IMG_20230822_203007


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 


காலை உணவு திட்டம் - மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான குழுக்கள் அமைத்தல் - தெளிவுரை

School Morning Prayer Activities - 23.08.2023

 .com/

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.08.2023

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம்:அருளுடைமை

குறள் :244

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

விளக்கம்:

நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது.


பழமொழி :
Better an open enemy than a false friend

போலி நண்பனை விட நேரிடை எதிரி மேல்


இரண்டொழுக்க பண்புகள் :

1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.

2.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமான உபயோகிப்பேன்


பொன்மொழி :

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை. ___அப்துல் கலாம்


பொது அறிவு :

1. தமிழ்நாட்டின் இயற்கையின் சொர்க்கம் எது?


விடை: ஜவ்வாது மலை

2. தமிழ்நாட்டின் மிக பெரிய அணை எது?

விடை: மேட்டூர் அணை
English words & meanings :

 Predators - preying upon other living things வேட்டையாடுபவர்கள், வேட்டையாடுபவைகள்

Venomous - poisonus விஷம் நிறைந்த
ஆரோக்ய வாழ்வு : 

கடுகு - ஜீரண கோளாறுகளை சரிசெய்யும் தன்மை உடையது. கடுகை குறைந்த அளவுக்கே உபயோகப்படுத்த வேண்டும்.


ஆகஸ்ட்23 இன்று

அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள் (International Day for the Remembrance of the Slave Trade and its Abolition) ஆண்டு தோறும் ஆகத்து 23 ம் திகதி கொண்டாடப்படுகிறது. இத்தினம்  குறிப்பாக 1791 ஆகத்து 22ம் திகதி இரவும் ஆகத்து 23ம் திகதியும் தற்போதைய ஹெய்டி இல் (island of Saint Domingue) இடம் பெற்ற அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது


நீதிக்கதை

ஓர் ஊரில் ஒரு குருகுலம் நடந்து வந்தது.அங்கு பயின்று வந்த சீடர்கள்  அனைவருமே பெரும் திறமைசாலிகள் என்று அனைவராலும் பேசப்பட்டும் வந்தது.அந்த குருகுலத்தில் வருடாவருடம் சிறந்த சீடன் யார் என்று தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறந்த சீடன் என்ற பட்டமும் வழங்கப்படும்.இந்த வருடமும் யார் சிறந்த சீடன் என்பதை தேர்ந்தெடுப்பதற்கான நேரம் வந்தது.குருகுலத்தின் தலைமை குருவும் யார் சிறந்த சீடன் என்பதை தெரிந்து கொள்வதற்காக ஆலோசனையில் இறங்கினார்.குருகுலத்தில் உள்ள  அனைத்து குருக்களையும் அழைத்தார்.அவர்களிடம் ஆலோசனை நடத்தினார் யார் சிறந்த மாணவன் என்று. இறுதியாக எல்லோரிடமும் கலந்து பேசி ஒரு மூன்று சீடர்களை தேர்ந்தெடுத்தனர்.ஆனால் சிறந்த சீடன் என்ற பட்டம் ஏதேனும் ஒரு மாணவனுக்கு தான் சென்று சேர வேண்டும் என்பது குருகுலத்தில் விதிகளில் ஒன்று.ஆனால் இந்த மூன்று மாணவர்களும் ஒருவருக்கொருவர் எதிலும் விட்டுக்கொடுத்தவர்கள் இல்லை.கல்வி, வீரம் மற்ற கலைகள் என எல்லாவற்றிலும் சமமான மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.மிகுந்த யோசனைக்கு பிறகு ஒரு போட்டியின் மூலம் மூவரில் யார் சிறந்தவர் என்று கண்டுபிடிக்கலாம் என்ற முடிவிற்கு வந்தார்.இப்பொழுது என்ன போட்டி வைக்கலாம் என்று யோசித்தார்.

சரி வாருங்கள் சீடர்களே உங்களுக்கு ஒரு வேலை சொல்வதற்காக தான் உங்களை இங்கு அழைத்தேன்.அதை நீங்கள் மறுத்து விடக் கூடாது என்றார்.சீடர்களும் நாங்கள் நிச்சயம் நீங்கள் சொல்லும் வேலையை செய்து முடிப்போம் குருவே கூறுங்கள் என்றனர்.

நான் ஆசை ஆசையாக ஒரு கிளி ஒன்றை கூண்டில் வைத்து வளர்த்து வந்தேன்.அதற்கு உணவு அளிப்பதற்காக இன்று காலை கூண்டை திறந்தேன் அந்த நேரத்தில் அந்த கிளி கூண்டை விட்டு வெளியே வந்து பறந்து சென்றுவிட்டது.எனக்கு அந்த கிளியென்றால் மிகவும் பிரியம் எனக்காக அந்த கிளியை நீங்கள் கண்டுபிடித்து தர வேண்டும்‌ என்றார்.

குருவும் தன் சீடர்களை அந்த இடத்திற்கு அழைத்து சென்றார்.அங்கு நீண்ட மற்றும் அகலமான ஆறு ஒன்று தெரிந்தது.அதை தாண்டி ஒரு சிறு தீவு தெரிந்தது.என் கிளி இந்த ஆற்றை கடந்து அந்த தீவுக்கு தான் சென்றது என்றார் குரு.அப்பொழுது அங்கு பழுதடைந்த நீண்ட பாலம் ஒன்று இருந்தது.அதன் வழியாக அந்த ஆற்றை கடக்கலாம்.ஆனால் அந்த பாலத்தின் வழியாக ஒரு நேரத்தில் ஒரு சீடர் மட்டும் தான் செல்ல முடியும்.

முதலாவதாக இருந்த அந்த சீடர், தான் அந்த பாலத்தை கடந்து கிளியை கொண்டு வருவதாக கூறி பாலத்தில் ஏறி நடக்க ஆரம்பித்தார்.இந்த சீடர் நடக்க  நடக்க பாலம் ஆடிக்கொண்டே இருந்தது.எப்படியாவது கிளியை பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னேறி நடந்தான்.ஆனால் தீடீரென பாலத்தின் நடுவே சிறிது தூரம் எந்த ஒரு கட்டைகளும் இல்லாமல் பாலம் சிதைந்து இருந்தது.இந்த இடைவெளியை எப்படி கடப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த மாணவனுக்கு ஒரு யோசனை தோன்றியது பாலத்தின் ஒரு பக்கத்தை பிடித்து தொங்கிக் கொண்டே இந்த இடைவெளியை கடந்து விடலாம் என்று யோசித்தான்.அவ்வாறே பிடித்து தொங்கிக் கொண்டே நகர்ந்தான்.பாதி தூரம் சென்றதும் கை வலி பின்னியது.பாலத்திலிறுந்து கீழே உள்ள ஆற்றில் விழுந்தான்.ஆற்றில் முதலைகள் இருப்பதை அறிந்து உயிரை கையில் பிடித்து கொண்டு வேகமாக நீச்சல் அடித்து கரைக்கு திரும்பினான்.இவ்வாறு மூவரும் ஆற்றில் விழுந்து நம்மால் இந்த பாலத்தை கடக்கவே முடியது என்ற மனநிலையை தங்களுடைய முகத்தில் சுமந்து கொண்டு சோகமாக ஒரு மரத்தடியில் உட்கார்ந்தனர்.

குரு அவர்கள் மூவரையும் பார்த்தார்.சிறந்த சீடனுக்கான தகுதி இவர்களிடத்தில் இல்லை என்று அங்கிருந்து கிளம்ப முயற்சித்தார்.அப்பொழுது அங்கு இருந்த மூன்றாவது சீடன் எழுந்து வந்தான் குருவே எனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டான்.நான் மீண்டும் முயற்ச்சிக்க விரும்புகிறேன் என்று கூறினான்.

குரு இந்த மூன்றாவது சீடனை சிறந்த சீடன் என்று அங்கீகரித்து தேர்வு செய்தார்.

கதையின் நீதி :

அந்த குருவிற்கு தெரியும் இல்லாத பறவையை யாராலும் கொண்டு வர முடியாது என்று.எனினும் தன்னுடைய சீடர்களின் மனநிலையை தெரிந்து கொண்டு அவர்களில் யார் ஸ்திரத்தன்மை வாய்ந்தவர்கள்.மனதளவில் சக்திவாய்ந்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கவே இப்படி ஒரு போட்டியை வைத்தார்.அதில் மூன்றாவது சீடன் மற்ற இருவரை விட மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனாக இருந்ததால் அவனை சிறந்த சீடன் என்று அங்கீகரித்து தேர்வு செய்தார்.

முயற்சி செய்தால் மட்டும் அல்ல,முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கூட நீங்கள் மதிக்கப்படுவீர்கள்.


இன்றைய செய்திகள் - 23.08. 2023

*சந்திராயன்-3 விண்கலம் திட்டமிட்டபடி இன்று நிலவில் தரையிறங்கும். - இஸ்ரோ 

*இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக அறிவிக்கப்பட்டார்  சச்சின் டெண்டுல்கர். 

*சென்னையில் மேலும் 60 ஆயிரம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி.

*தமிழகத்தில் புதிய வகை கொரோனா பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு.

* சென்னை மாவட்ட பள்ளிகள் கைப்பந்து போட்டி 31ஆம் தேதி தொடக்கம்.

* செஸ் உலக்கோப்பை இறுதிப்  போட்டியில் பிரக்ஞானந்தா - கார்ல்சனுக்கு இடையேயான முதல் சுற்று டிராவில் முடிந்தது. நாளை நடைபெற உள்ள இரண்டாவது சுற்று சாம்பியனை நிர்ணயிக்கும்.

Today's Headlines

*Chandrayaan-3 spacecraft will land on the moon today as scheduled.  - ISRO

 * Sachin Tendulkar has been announced as the National Symbol by the Election Commission of India.

 *Breakfast for 60 thousand more students in Chennai.

 * Intensive surveillance to prevent the spread of new type of corona virus in Tamil Nadu.

 * Chennai District Schools Volleyball Tournament will start on 31st.

*. The game 1 of Chess World Cup final between Praggnanandhaa and Calrsen ended in a draw. Tomorrow the second round will be determined the champion.
 Prepared by

Covai women ICT_போதிமரம்



Click here for latest Kalvi News 

10th std - August Month - Unit Test Syllabus & Question Pattern

 பத்தாம் வகுப்பு ஆகஸ்ட் மாத அலகு தேர்வு  பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள் அமைப்பு விபரம் 


       தமிழ்   இயல்:4மட்டும்                           மதிப்பெண்:25 


1.உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.            :5×1=5

2.குறுவினா(3):2×2=4

3. ஓரிரு சொற்களில்    விடை தருக:2×2=4

சிறுவினா    :4×3=12

கவினுற வரைக.

மனப்பாடம்.


English

Unit 3 0nly

Memory poem.  5

Letter writing.     5

Notice writing.   5

Picture comprehension 5

Prose paragraph5

      Total.           25


Unit test 1

Maths  - std  X

Syllabus

1) Units 3.4 & 3.5

2) Units 4.3

3) Units 5.3


Question pattern :


Part l

1 x   2  = 2

1) Rational Expressions

Part ll

3  x   5  = 15

1) Theorem

2) square root of polynomial

3) Area of a Quadrilateral

Part III

1) Geometry 8 ( 4.3.2 )


Science unit test

X std

Portion Unit 3

Thermal physics

Question pattern

5×2=10

2×4=8

1×7=7

Total=25

Time 45 mints


Social science unit test 

STD X     mark - 25

Time: 45 minutes.


PORTION.

HISTORY Unit : 4

Geography unit 4 


QUESTION PATTERN.

  Short answer    12 x 2 = 24

Give reason.          1 x 1=     1.


Click here for latest Kalvi News