GO NO : 153 , Date : 28.06.2022 - Re Employment GO - Download here...
All Districts SG Teachers Vacant list | MSC SG Teachers Vacancy List
SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!
SMC - SGT, BT, PG Vacancy List - Cuddalore District - Download here
SMC - SGT, BT, PG Vacancy List - Dharmapuri District - Download here
SMC - SGT, BT, PG Vacancy List - Villupuram District - Download here
SMC - SGT, BT, PG Vacancy List - Trichy District - Download here
SMC - SGT, BT, PG Vacancy List - Karur District - Download here...
SMC - SGT, BT, PG Vacancy List - Vellore District - Download here...
SMC - SGT, BT, PG Vacancy List - Madurai District - Download here
2381 அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் LKG,UKG வகுப்புகளை யார் கையாள்வது? - தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
Click here to join WhatsApp group
ஜுலை 5, 6 - மண்டல வாரியான ஆய்வுக் கூட்டம் - ஆய்வு அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
School Calendar 2022 - 2023 (Single Page with Full Details)
School Working Days Calendar 2022 - 2023 ( Single Page ) - Download here
School Morning Prayer Activities 30.06.2022
திருக்குறள் :
- பால்:பொருட்பால்
- இயல்:குடியியல்
- அதிகாரம்: பெருமை
- குறள் : 972
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான்.
பொருள்:
பழமொழி :
- If all wish to command who is to obey?
- எல்லோரும் பல்லக்கில் உட்கார்ந்தால் பல்லக்குத் தூக்குவது யார்?
இரண்டொழுக்க பண்புகள் :
- 1. பிறகு என்று தள்ளிப் போடப்படும் செயல்கள் சில சமயங்களில் இயலாமலேயே போய்விடும். எனவே அன்றைய வேலை அன்றே செய்து விடுவேன்.
- 2. என் நண்பர்கள் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே நல்ல நண்பர்களோடு சேருவேன்.
பொன்மொழி :
வாழ்க்கையின் நோக்கம்பிறருக்கு உதவி செய்வதே ஆகும்.
பொது அறிவு :
- 1.மலட்டுத்தன்மையை நீக்க பயன்படும் வைட்டமின் எது? வைட்டமின் ஈ.
- 2. தக்காளியின் சிவப்பு நிறத்திற்கு காரணம் எது? குரோமேடோபேர்.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
NMMS Q 14:
- A என்பவர் B என்பவரின் சகோதரன். ஆனால் B என்பவர் A என்பவரின் சகோதரன் அல்ல எனில் A மற்றும் B ஆகியோரின் உறவுமுறை என்ன?
ஜூன் 30 - இன்று
- மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ் அவர்களின் பிறந்த நாள்
- மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ் II (மைக்கல் பிரெட் பெல்ப்சு II) (Michael Fred Phelps II, பி ஜூன் 30, 1985, பால்ட்டிமோர், மேரிலன்ட்) பல நீச்சல் வகைகளில் உலக சாதனைகளைப் படைத்த அமெரிக்க நீச்சல் வீரர் ஆவார். 28 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்ற ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக தங்கப் பதக்கம் பெற்றவர் ஆவார்.
நீதிக்கதை
இன்றைய செய்திகள் - 30.06.22
- பள்ளி வாகனங்களில் சிசிடிவி மற்றும் சென்சார் ஆகியவற்றை கட்டாயமாக்கும் வகையில் மேட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
- ரத்த சோகையைத் தடுக்க 19 மாவட்டங்களில் தீவிர விழிப்புணர்வு இயக்கத்தை நடத்த 4.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட 2021-ம் ஆண்டுக்கான இந்திய வனப்பணி தேர்வின் இறுதி முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இத்தேர்வில் நாடு முழுவதும் மொத்தம் 108 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- நீலத்தடி நீரை பயன்படுத்தும் அனைவரும் நாளைக்குள் (ஜூன் 30) பதிவு செய்யாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிவித்துள்ளது.
- பிஎஸ்எல்வி-சி53 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது - கவுன்ட்-டவுன் நேற்று தொடக்கம்.
- ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்போம் என்று அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் உறுதியேற்றன.
- மலேசியா ஓபன் பேட்மிண்டன் : இந்தியாவின் பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.
- தேசிய இளையோர் குத்துச்சண்டை போட்டி: ஜூலை 5-ந் தேதி சென்னையில் நடக்கிறது.
- அயர்லாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
Today's Headlines
- The Government of Tamil Nadu has decided to amend the Motor Vehicle Act to make CCTV and sensors mandatory in school vehicles.
- The Government of Tamil Nadu has allocated Rs. 4.75 crore for conducting intensive awareness campaigns in 19 districts to prevent anemia.
- The final results of the 2021 Indian Forest Service Examination conducted by the Central Civil Service Commission were released yesterday. A total of 108 students across the country have passed the exam.
- The Central Groundwater Authority has announced that stern action will be taken if all those who use underground water if not register by tomorrow (June 30).
- PSLV-C53 rocket launches today - Countdown begins yesterday.
- At the G7 summit in Germany, countries including the United States and India pledged to protect freedom of expression.
- Malaysia Open Badminton: India's PV Sindhu advances to the next round.
- National Youth Boxing Tournament will be held on 5th July in Chennai.
- India won the 2nd Twenty20 cricket match against Ireland by 4 runs.
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூலை 7 முதல் பணிமாறுதல் கலந்தாய்வு .. மிக முக்கிய அறிவிப்பு.!
தமிழகத்தில் கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தொடக்கக்கல்வித் துறையின் கீழுள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம்விட்டு மாவட்டம் பணி மாறுதல் வழங்கும் கலந்தாய்வு வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக தொடக்ககல்வி இயக்குனர் அறிவொளி அறிக்கை ஒன்றை வெளியிட்டுயிருக்கிறார். அவற்றில் தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி நிரவல், பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளதாக முன்பே அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
எனினும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்ததால் இதற்குரிய தேதி பின் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கலந்தாய்வு வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. இதனிடையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மாவட்டம்விட்டு மாவட்டம் கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் என்றும் பட்டதாரி ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் ஜூலை 8ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. நீதிமன்ற வழக்குகளில் புதியதாக காலிப் பணியிடங்கள் ஏற்பட்டால், அதனை நிரப்ப பதவி உயர்வு வழங்குவதற்கும், முன்பே பணி நிரவலில் ஒன்றியம்விட்டு ஒன்றியம் சென்றவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு 25/02/2022 ஆம் தேதிக்குள் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு மட்டும்தான் நடைபெறுகிறது.
2021-2022 பொதுமாறுதல் கவுன்சலிங்கில் ஒன்றியத்துக்குள் மற்றும் ஒன்றியம்விட்டு ஒன்றியம் விருப்ப மாறுதலில் சென்றவர்கள் பெயர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் பொதுமாறுதல் பட்டியலிலிருந்து அவர்கள் பெயர்களை நீக்கவேண்டும். ஆனால் உபரி ஆசிரியர் பணி நிரவல் மற்றும் எல்கேஜி, யுகேஜி பணி நிரவல் போன்றவற்றில் சென்ற ஆசிரியர்கள் பெயர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்து இருந்தால் அவர்களின் பெயர்களை நீக்கம் செய்ய வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வித்துறை சார்பாக 2021-22 ஆம் கல்வி ஆண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் பெயர் பட்டியல் 21/06/22 அன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இதனடிப்படையில் தான் முதன்மை பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் அப்பட்டியலில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதே படிவத்தில் திருத்தம் செய்து அனுப்பி வைக்க வேண்டும். இதற்கென முன்னுரிமை பட்டியல் எப்பதவியில் மாறுதலுக்கு விண்ணப்பித்தாரோ, அந்த பதவியில் முதன்முதலில் பணியில் சேர்ந்த நாளை வைத்து நிர்ணயம் செய்யப்படும் பணியில் சேர்ந்த நாள் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் பிறந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
6 முதல் 10-ஆம் வகுப்பு வரை சமூக அறிவியல் மாதாந்திர பாடத்திட்டம் pdf download
EMIS News - அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்"... பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!
தமிழகத்தில் 2022 - 23ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறக்கப்பட்ட மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
EMIS தளத்தில் உள்ளீடு செய்தால் மட்டுமே புதிதாக எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்ற விவரங்களை அறிய முடியும். எனவே உடனடியாக இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களில் உள்ள சிஇஓ-க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: சம்பளம், தேர்வு முறை என்ன?
தமிழக அரசுப் பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில், இதற்கான தேர்வு முறை மற்றும் அவர்களுக்கான சம்பளம் ஆகிய விவரங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 13,331 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தகுதிகள்
இந்தப் பணியிடங்களுக்கு ஆசிரியர் பட்டயப்படிப்பு, ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இவர்களில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்கும் நியமனங்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்வு முறை
இந்தப் பணியிடங்களை சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு இணைந்து நியமித்துக் கொள்ளலாம்.
ஊதிய விவரம்
இடைநிலை ஆசிரியர்கள் – ரூ. 7,500
பட்டதாரி ஆசிரியர்கள் – ரூ. 10,000
முதுநிலை ஆசிரியர்கள் – ரூ. 12,000
காலியிடங்களை தெரிந்துக் கொள்வது எப்படி?
இந்த காலியிடங்களைப் பற்றிய விவரங்கள் அறிய, இடைநிலை ஆசிரியர்களைப் பொறுத்தவரை, வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தை தொடர்புக் கொண்டு, எந்ததெந்தப் பகுதிகளில் காலியிடங்கள் உள்ளன என்பதைத் தெரிந்துக் கொள்ளலாம்.
அதேபோல், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை ஆசிரியர் காலியிடங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தைத் தொடர்புக் கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.
எனவே உங்களுக்கு அருகாமையில் உள்ளப் பள்ளியில் காலியிடங்கள் இருப்பது தெரிய வந்து, நீங்கள் அதற்கு தகுதியானவர் என்றால், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தை அணுகி விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு இணைந்து, வரபெற்ற விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, அதிலிருந்து தகுதியானவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இவ்வாறு நியமனம் செய்யப்படுபவர்கள், அடுத்த ஓராண்டிற்கு மேற்கூறிய ஊதிய அடிப்படையில் பணிபுரியலாம்.
எண்ணும் எழுத்தும் - பெற்றோர் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டிய தகவல்கள் - DEE & SCERT Dir Proceedings
புதிய மாணவர் சேர்க்கை - உடனுக்குடன் EMIS ல் பதிவு செய்ய உத்தரவு - Commissioner Proceedings
பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் ஏற்கனவே கல்வி மேலாண்மை தகவல் முறைமையில் ( EMIS ) பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது பள்ளிக்கல்வித் துறையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் புதிய மாணவர் சேர்க்கை அனைத்து மாவட்டங்களிலும் அரசு / அரசு உதவி பெறும் / பிறவகை பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் 1 ஆம் வகுப்பில் புதியதாக சேரும் மாணவர்கள் மற்றும் ஏற்கனவே பள்ளிக்கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் 6 , 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மற்றும் பிற வகுப்புகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் சேர்க்கப்பட்ட விவரங்கள் Common Pool- லிருந்து எடுத்து உரிய பள்ளியில் பதிவுகளை கல்வி மேலாண்மை தகவல் முறைமையில் ( EMIS ) செய்யப்பட வேண்டும்.
அனைத்துவகை பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் பதிவு விவரங்கள் கல்வி மேலாண்மை தகவல் முறைமையில் ( EMIS ) பதிவு செய்தால் மட்டுமே துல்லியமாக மாணவர்கள் எண்ணிக்கை விவரம் அறிய இயலும் என்பதால் அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களையும் தங்கள் பள்ளி சார்ந்த விவரங்களை EMIS- ல் பதிவு செய்ய அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.06.2022
ஒளிதொழுது ஏத்தும் உலகு.
பழமொழி :
Bare words buy no barely.
வெறும் கையால் முழம் போட முடியுமா?
இரண்டொழுக்க பண்புகள் :
1. பிறகு என்று தள்ளிப் போடப்படும் செயல்கள் சில சமயங்களில் இயலாமலேயே போய்விடும். எனவே அன்றைய வேலை அன்றே செய்து விடுவேன்.
2. என் நண்பர்கள் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே நல்ல நண்பர்களோடு சேருவேன்.
பொன்மொழி :
அமைதியை விட உயர்வான சந்தோசம்இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை.- புத்தர்
பொது அறிவு :
1. கரையான் நாள் ஒன்றுக்கு எத்தனை முட்டைகள் இடும்?
30,000
2. கப்பல் மிதக்கும் தத்துவம் என்ன?
ஆர்க்கிமிடிஸ் தத்துவம்
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
கோடைகாலங்களில் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சுலபமாக தொற்று நோய்களால் பாதிக்கப்படுவார்கள். வெள்ளரிக்காயில் வைரஸ், பாக்டீரியா மற்றும் இதர நுண்கிருமிகளை அழிக்கும் திறன் அதிகம் உள்ளன. தொற்று நோய்கள் ஏற்படாமல் நம்மை பாதுகாத்துகொள்ள தினமும் ஒரு வெள்ளரிக்காயாவாது சாப்பிடும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
NMMS Q 13 :
நீதிக்கதை
இன்றைய செய்திகள்