Showing posts with label TET. Show all posts
Showing posts with label TET. Show all posts

அரசுப் பள்ளிகளில் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் விவரம் கோருதல் - Proceedings

  2012 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET முதல் தாள் மற்றும் TET இரண்டாம் தாள்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று வழிவகுக்கப்பட்டுள்ளது.

எனவே 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று இடைநிலை ஆசிரியராகவும் மற்றும் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரங்களை கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் எவரும் விடுபடாமல் பணிப்பதிவேட்டினை ஒப்பிட்டு சரிபார்த்தும், மற்றும் 2012 ஆம் ஆண்டிற்கு முன்பாக நியமனம் பெற்று தற்பொழுது பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் எவரேனும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருப்பின் 

அவ்வாசிரியர்களின் பெயர்களையும் பணிப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு சரிபார்த்து கொடுக்கப்பட்ட படிவத்தில் முறையாக பூர்த்தி செய்து காலதாமதத்தை தவிர்த்து, சுனக்கமின்றி செயல்பட்டு. 15,03.2024 -க்குள் தனிநபர் மூலம் உடன் அனுப்பி வைத்திடவும் மேலும் காலதாமதம் ஏற்படின் சம்மந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலரே முழு பொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.




Click Here to Download - TET Passed SG/BT Teachers List - Forms &  Proceedings - Pdf





🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TET குறைந்தபட்ச மதிப்பெண் எவ்வளவு?

 பள்ளிகளில் ஏற்படும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களைத் தெரிவு செய்வதற்கு உரிய கல்வித் தகுதியுடன் , ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பணிநாடுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று போட்டித் தேர்வினை ( Competitive : Examination ) தனியாக ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்தி பணிநியமனம் குறித்த உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தெரிவு செய்யும் முறையினை பின்பற்றலாம் என ஆணையிடப்பட்டுள்ளது.

 4.இதனையடுத்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் , மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் , பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரிடமிருந்து மேற்கண்ட போட்டித் தேர்விற்கு பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து பெறப்பட்ட கருத்துருவினை பரிசீலனை செய்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணித் தெரிவிற்கான போட்டித் தேர்விற்கு பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளுக்கு அனுமதியும் , மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட போட்டித் தேர்விற்கான பாடத்திட்டத்திற்கு ஒப்புதல் மற்றும் அதனை அரசிதழில் வெளியிட உரிய ஆணை வழங்குமாறு அரசை கோரியுள்ளார்.

5. ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரின் கருத்துருவினை நன்கு பரிசீலனை செய்த அரசு , அதனை ஏற்று , அரசுப் பள்ளிகளில் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு பணிநாடுநர்களை தெரிவு செய்திட போட்டித் தேர்விற்கு பின்பற்றப்பட வேண்டிய பின்வரும் நடைமுறைகளுக்கு அனுமதியும் இவ்வாணையின் இணைப்பு 1 மற்றும் 2 ல் காணும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட போட்டித் தேர்விற்கான பாடத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தும் அதனை அரசிதழில் வெளியிடவும் ஆணையிடுகிறது : - 

1705155749842_wm

ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு TET தேவையில்லை - பள்ளி கல்வி பணி விதி ரத்து - ஐகோர்ட்

 

கடந்த 2011 ஜூலை 29க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், பணியில் நீடிக்கவோ, ஊக்க ஊதியம் பெறவோ தடையில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.


இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம், 2009ல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்கப்படுபவர், அதற்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டது.


அதுகுறித்த அறிவிப்பாணையை, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், 2011ல் பிறப்பித்தது.

காலவரம்பு


இந்நிலையில், 2011க்கு முன் பணியில் நியமிக்கப்பட்டு, தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதியம் நிறுத்தப்பட்டது. தகுதி தேர்வு தேர்ச்சியை வலியுறுத்தாமல், ஊக்க ஊதியம் வழங்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில், ஆசிரியர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.


இம்மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், 'தகுதி தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள், பணியில் தொடர்வதற்கும், ஊக்க ஊதியம் பெறவும் உரிமை இல்லை' என உத்தரவிட்டது.


இடைநிலை ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிப்பதற்கான கவுன்சிலிங் தள்ளி வைத்ததை எதிர்த்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற உரிமையில்லை' என உத்தரவிட்டது.


தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மேல்முறையீடு செய்தனர். '2011 ஜூலைக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, தகுதி தேர்வை வலியுறுத்தக் கூடாது' என்று, வேறொரு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பள்ளி கல்வித் துறை சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.


இம்மனுக்களை விசாரித்த, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:


கடந்த 2012 முதல் 2019 வரை, 33.20 லட்சம் பேர் தகுதி தேர்வில் பங்கேற்றுள்ளனர். இவர்களில், 1.31 லட்சம் பேர் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


ஆசிரியர் பணியில் நீடிப்பதற்கு, தகுதி தேர்வு தேர்ச்சியை கட்டாயமாக்கினால், ஒரு லட்சத்துக்கும் மேல் ஆசிரியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும்; மாணவர்களின் படிப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.


கட்டாயக் கல்வி உரிமை சட்டத்துடன், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் பிறப்பித்த அறிவிப்பையும் பார்த்தால், 2011 ஜூலை 29க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், தகுதி தேர்வு தேர்ச்சியை பெற்றிருக்கவில்லை என்றாலும் பணியில் தொடரலாம் என்பதை தெளிவாக்குகிறது.


அவர்களுக்கு ஊக்க ஊதியம், இதர சலுகைகளும் வழங்க வேண்டும்.


சட்டம் அமலுக்கு வந்த பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தான், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற கால வரம்பு அளிக்கப்பட்டு உள்ளது.


ரத்து


எனவே, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவில்லை என்றாலும், 2011 ஜூலை 29க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியில் நீடிக்க முடியும்; ஊக்க ஊதியம் பெற முடியும்.


அதே நேரத்தில், இடைநிலை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியராக, தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


இல்லையென்றால், பதவி உயர்வு பெற தகுதி இல்லை. கடந்த 2011 ஜூலை 29க்கு பின், இடைநிலை ஆசிரியர்களாக, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களும், இடைநிலை ஆசிரியராக இருந்து பதவி உயர்வில் பட்டதாரி ஆசிரியராக வந்தவர்களும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பட்டதாரி ஆசிரியராக நேரடியாக தேர்வு பெற, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், பதவி உயர்வில் வர தகுதி தேர்வு தேவையில்லை என்றும் போடப்பட்ட, பள்ளி கல்வி பணி விதி ரத்து செய்யப்படுகிறது.


அதனால், இடைநிலை ஆசிரியரில் இருந்து பதவி உயர்வு வாயிலாக, பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட, தகுதி தேர்வு தேர்ச்சி கட்டாயமாகிறது.


இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு தமிழக AIDED பள்ளி TET நிபந்தனை ஆசிரியர்களின் சார்பில் ஆயிரம் புத்தகங்கள் வழங்கல்!

 டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு தமிழக AIDED பள்ளி TET நிபந்தனை ஆசிரியர்களின் சார்பில் ஆயிரம் புத்தகங்கள் வழங்கும்  திருச்சியில் நடைபெற்றது*


மதுரையில் விரைவில் திறக்கப்பட இருக்கும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பின்சார்பில் ஆயிரம் புத்தகம் வழங்கும் விழா திருச்சியில் இன்று ( 05 - 05-2023) மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மன்றம் நா. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் வரவேற்புரை ஆற்றிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தஞ்சை சுந்தரவேலு பேசுகையில், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதில் இருந்து ஏற்கனவே விலக்கு அளித்துள்ளது போல கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 16 க்கு முன்பு வரை அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் நிரந்தரப் பணியிடத்தில் பணியாற்றி வரும் சுமார் 1500 ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அவர்களது வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

விழாவில் தலைமை உரையாற்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றப் பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் பேசுகையில் கடந்த 10 ஆண்டுகளாக கடந்த ஆட்சியில் கண்டு கொள்ளப்படாமல் இருந்த தகுதி தேர்வு நிபந்தனை ஆசிரியர்களின் பணிக்காலத்தைக் கருத்தில் கொண்டு  இவர்களுக்குஇந்தக் கோடை விடுமுறை காலத்தில் புத்தாக்கப் பயிற்சி மட்டும் அளித்து ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதில் இருந்து இவர்களுக்கும் விலக்கு அளித்திட வேண்டும் என வலியுறுத்தினார்.

இவ்விழாவில் ஆயிரம் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்றிய மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்,மதுரையில் விரைவில் திறக்கப்பட உள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூலகத்திற்கு ஆயிரம் புத்தகங்களை வழங்கியதோடு தங்களது நீண்ட நாள் கோரிக்கையையும் இங்கு முன் வைத்துள்ளனர். ஏற்கனவே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழக அரசிடம் வைத்துள்ள  கோரிக்கைகளில் எளிதாக தீர்க்கப்படக்கூடிய கோரிக்கைகளை பட்டியலிட்டுள்ளோம்.
அந்த வகையில் இவர்களது இந்தக் கோரிக்கையும் அதில் இடம்பெற்றுள்ளதோடு இவை அனைத்தும் ஏற்கனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்கிறோம் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அமைச்சர்.

இவ்விழாவில்   தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொருளாளர் முருக செல்வராஜ் சொத்துப் பாதுகாப்பு குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஆ. சந்திரன், பூபதி, சிவஞானம் ஆகியோர் செய்திருந்தனர்.

நிறைவாக 
இக் கூட்டமைப்பின் பொருளாளர் காளிதாசன் நன்றி கூறினார்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பதவி உயர்வு பெறுவதற்கு TET கட்டாயமில்லை - தொடக்கக் கல்வி இயக்குநர்

 பதவி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமில்லை.


வழக்கம் போல் பழைய நடைமுறைப்படி பதவி உயர்வு பெற தேர்ந்தோர் பட்டியல் ( Panel list ) தயார் செய்யலாம்.

அலுவலர்களுக்கான  GOOGLE  MEET இல் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் அறிவிப்பு.



 மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் இன்று (18.04.2023),  மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க கல்வி),  வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான இணையவழி   (Google meet) கூட்டத்தில் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் எப்போதும் தயாரிப்பது போல் அனைத்து நிலை ஆசிரியர்களையும் முறைப்படுத்தி விதிகளின்படி தயார் செய்யுங்கள்.  பட்டதாரி ஆசிரியர் பதவிஉயர்வு முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கிற போது பணிமூப்பு விதிகளின்படி தயாரிக்க  வேண்டும்.  ஆசிரியர் தகுதி தேர்வு (TET) எவராவது தேர்ச்சி பெற்றிருந்தால் அவர் இடம்பெறும் வரிசைக்கு நேராக ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)   தேர்ச்சி பெற்றவர், என்று குறிப்பு எழுதினால் போதுமானது.

 நீதிமன்றத்தினுடைய மேல்முறையீடு தீர்ப்பு எப்படி வருகிறதோ?.. அதற்குப் பிறகு நாம் என்ன செய்ய வேண்டுமோ?.. அப்படி முறைப்படுத்தி  செய்து கொள்ளலாம்.   ஆகையால் எப்போதும் போல முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

 கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் ஒருவர், பணி  நீட்டிப்பில் இருக்கும் ஆசிரியர்களை ஏப்ரல் 28ஆம் தேதி  விடுவித்திட வேண்டும் என்று  செயல்முறைகள் வந்து கொண்டுள்ளது. அவர்களை கல்வி ஆண்டு முடியும் வரை அனுமதிக்கலாமா?.. என்று இயக்குனர் அவர்களிடம் கேட்டதற்கு அனுமதிக்கலாம், என்று வாய்மொழியாக தெரிவித்துள்ளார்கள்.

24, 25, 26 ஆகிய தேதிகளில் ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு செல்கின்ற போது அந்த வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை.  27, 28 ஆகிய தேதிகளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும்பொழுது அந்த வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்.  என்று கூட்டத்தில்  தெரிவித்துள்ளார்கள்.


 Click here for latest Kalvi News 

கல்வி மானியக் கோரிக்கை நாளன்று 110 விதி மூலமாக TET நிபந்தனைகள் நீக்கப்படும் - AIDED பள்ளி ஆசிரியர்கள் நம்பிக்கை.

 தமிழக அரசின் அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளி நிரந்தர பணியிடத்தில் முறையாக ஒப்புதல் பெற்று, (அப்போதைய பள்ளிக்கல்வி இயக்கக செயல்முறைகள் 16/11/2012. க்கு முன்பு) பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் TET லிருந்து முழுவதும் விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த அதிமுக அரசிடம் பலமுறை எடுத்துச் சென்றோம். ஆனால் பயன் ஏதுமில்லை.


முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் ஆட்சிக் காலத்திய அரசாணைகளின் அடிப்படையில் பணி நியமனம் பெற்ற ஒரே காரணத்தினால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக TET லிருந்து விலக்கு அளிக்காமல் விட்டுவிட்டனர். மிகுந்த இன்னலுக்கு ஆளாகிய பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரம் AIDED பள்ளி ஆசிரியர்கள் ஆட்சி விரைவில் மாற்றம் ஏற்படும், அப்போது நமக்கு விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையில் திமுக ஆட்சிக்காக இவ்வளவு வருடங்கள் காத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் இன்று வரை தற்போதைய திமுக அரசும் எந்தவொரு தீர்வும் கொடுக்காமல் இருப்பது வேதனை தருகிறது.

இது தொடர்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர்   ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று, இந்த சிக்கலுக்கு தீர்வு காண பல்வேறு கோரிக்கை மனுக்கள் தற்போது வரை பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் கொடுத்து உள்ளனர்.

 எதிர்வரும் சட்டமன்றக் கூட்ட, கல்வி மானிய கோரிக்கை நாளன்று ஒரு நல்ல முடிவு வரும் என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் காத்துக் கொண்டு உள்ளனர். மேலும் 23/8/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட நிரந்தர பணியிட அரசு , அரசு உதவிபெறும்  சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் குடும்பங்களின் 11 வருட கால வேண்டுகோளை ஏற்று விடியல் ஏற்படுத்தித் தர திமுக அரசால் மட்டுமே இயலும் என்று பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Click here for latest Kalvi News