பதவி உயர்வு பெறுவதற்கு TET கட்டாயமில்லை - தொடக்கக் கல்வி இயக்குநர்

 பதவி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமில்லை.


வழக்கம் போல் பழைய நடைமுறைப்படி பதவி உயர்வு பெற தேர்ந்தோர் பட்டியல் ( Panel list ) தயார் செய்யலாம்.

அலுவலர்களுக்கான  GOOGLE  MEET இல் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் அறிவிப்பு.



 மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் இன்று (18.04.2023),  மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்க கல்வி),  வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான இணையவழி   (Google meet) கூட்டத்தில் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் எப்போதும் தயாரிப்பது போல் அனைத்து நிலை ஆசிரியர்களையும் முறைப்படுத்தி விதிகளின்படி தயார் செய்யுங்கள்.  பட்டதாரி ஆசிரியர் பதவிஉயர்வு முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கிற போது பணிமூப்பு விதிகளின்படி தயாரிக்க  வேண்டும்.  ஆசிரியர் தகுதி தேர்வு (TET) எவராவது தேர்ச்சி பெற்றிருந்தால் அவர் இடம்பெறும் வரிசைக்கு நேராக ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)   தேர்ச்சி பெற்றவர், என்று குறிப்பு எழுதினால் போதுமானது.

 நீதிமன்றத்தினுடைய மேல்முறையீடு தீர்ப்பு எப்படி வருகிறதோ?.. அதற்குப் பிறகு நாம் என்ன செய்ய வேண்டுமோ?.. அப்படி முறைப்படுத்தி  செய்து கொள்ளலாம்.   ஆகையால் எப்போதும் போல முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

 கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் ஒருவர், பணி  நீட்டிப்பில் இருக்கும் ஆசிரியர்களை ஏப்ரல் 28ஆம் தேதி  விடுவித்திட வேண்டும் என்று  செயல்முறைகள் வந்து கொண்டுள்ளது. அவர்களை கல்வி ஆண்டு முடியும் வரை அனுமதிக்கலாமா?.. என்று இயக்குனர் அவர்களிடம் கேட்டதற்கு அனுமதிக்கலாம், என்று வாய்மொழியாக தெரிவித்துள்ளார்கள்.

24, 25, 26 ஆகிய தேதிகளில் ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு செல்கின்ற போது அந்த வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை.  27, 28 ஆகிய தேதிகளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும்பொழுது அந்த வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும்.  என்று கூட்டத்தில்  தெரிவித்துள்ளார்கள்.


 Click here for latest Kalvi News 

0 Comments:

Post a Comment