பள்ளிகளில் Internet Connection பெறும் போது செய்ய வேண்டியவை... Net connection

 

பள்ளிகளில் Internet Connection பெறும் போது செய்ய வேண்டியவை... Net connection


அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்  Broadband internet connection பெற்றவுடன் service provider (BSNL,railtel... & etc )ஐ தொடர்பு கொண்டு


1. Static IP address


2. Gateway IP


3. Network mask


பெற்று வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.


ICT Team Hi-tech lab configure செய்ய இம்மூன்றும் தேவை என்பதால்  இதனை உடன் பெற்று வைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது..

Click here for latest Kalvi News 

சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அண்ணா தலைமைத்துவ விருது வழங்குதல் - DSE & DEE இணைச் செயல்முறைகள் - இணைப்பு: அரசாணை, மதிப்பீட்டு நெறிமுறைகள் மற்றும் படிவம்!

 

IMG_20231229_173738

தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான அண்ணா தலைமைத்துவ விருது வழங்குதல் - DSE & DEE இணைச் செயல்முறைகள் - இணைப்பு: அரசாணை, மதிப்பீட்டு நெறிமுறைகள் மற்றும் படிவம்!

DSE - Anna Leadership Award - Proceedings - Download here

Click here for latest Kalvi News 

NMMS - SAT - Mathematics Important Notes

TRUST Examination - Dec 2023 - Answer Key Published

 IMG_20231229_153911

16.12.2023 அன்று நடைபெற்ற தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு ( TRUST ) சம்பந்தமான தற்காலிக விடைக்குறியீடு ( Tentative Key Answer ) அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 28.12.2023 அன்று வெளியிடப்பபட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்விடைக்குறியீடு சார்பாக மாற்றம் இருப்பின் அவற்றை 05.01.2024 - க்குள் dgedsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கலாம் என்ற விவரத்தினை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறதுm


TRUST Examination - Dec 2023 - Answer Key - DGE Proceedings - Download here


Click here for latest Kalvi News 

தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பணி முன்னுரிமை - தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணியில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு!

 

IMG_20231228_185749

School Education - Special Rules for the Tamil Nadu Elementary Education Subordinate Service - Amendment - Orders Issued .


1) 01.01.2024 முதல் மாநில அளவிலான சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு.

2) பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே இனிமேல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற இயலும்.

தகுதியான ஆசிரியர்கள் இல்லாவிட்டால் நேரடி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நியமனம் செய்து கொள்ளவும் அரசாணையில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

1. பள்ளிக் கல்வித் துறையில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் )State Seniority( என்ற நடைமுறை பின்பற்றி பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

 தொடக்கக் கல்வி நிருவாகத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் முன்னுரிமை (Seniority) இது நாள் வரை ஒன்றியளவில் கடைபிடிக்கப்பட்டது. இதனால் பதவி உயர்வு அந்த ஒன்றியளவில் மட்டுமே வழங்ககூடிய நிலையில் இருந்தது. இதனால் மூத்த ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையினை   தமிழ்நாடு முதலமைச்சர்   கவனத்திற்கு கொண்டு சென்று உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை (State Seniority) உள்ளது போலவே தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் இனி வரும் காலங்களில் மாநில முன்னுரிமை (State Seniority) அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்படவேண்டும் என   தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுபடி அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.

G.O.Ms.No.243 - Download here

Click here for latest Kalvi News 

2024 ஜனவரி மாதம் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்துதல் - SPD செயல்முறைகள்!!!

 IMG_20231228_123711


2024 ஜனவரி மாதம் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்துதல் - SPD செயல்முறைகள்!!!

Jan 2024 SMC Meeting Proceedings - Download here


Click here for latest Kalvi News 

NIOS (National Institute of Open Schooling) மூலம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி - இணைத்தன்மை இன்மை வழங்கி அரசாணை வெளியீடு!

 IMG_20231228_123018

NIOS (National Institute of Open Schooling) மூலம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி - இணைத்தன்மை இன்மை வழங்கி அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.242 - Download hete


Click here for latest Kalvi News 

எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான நேரடி பயிற்சி ரத்து - SCERT Proceedings

 

தொடர்மழையின் காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் விடுப்பு வழங்கப்பட்டதால் பள்ளி வேலை நாள்கள் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான நேரடி பயிற்சியினைத் தவிர்த்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு வடிவமைத்து வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் கையேடுகளின் வழிகாட்டுதலோடு மூன்றாம் பருவத்திற்கான கட்டகங்களை வகுப்பறையில் செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.


 மேலும் , ஆசிரியர் கையேட்டில் உள்ள விரைவுத் துலங்கல் குறியீட்டில் ( QR Code ) கட்டகத்திற்காகப் பதிவேற்றம் செய்யப்படும் வழிகாட்டுக் காணொலிகள் ( Videos scribes ) மற்றும் வகுப்பறைச் செயல்பாட்டுக் காணொலிகளைப் ( Classroom demo videos ) பயன்படுத்தியும் எண்ணும் எழுத்தும் வகுப்பறையைச் சிறப்பாகக் கையாள அறிவுறுத்துமாறும் , மூன்றாம் பருவப் பயிற்சி சார்ந்த பாடக்கருத்துகளை மின் பாடப்பொருளாக kalvi TV official Youtube channel- லில் பதிவேற்றம் செய்யப்படுவதையும் பயன்படுத்தி ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும் வகுப்பறையைச் சிறப்பாகச் செயல்படுத்திட அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து ஆசிரியர்க அறிவுறுத்துமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது .

எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான ஆசிரியர் கையேட்டினைப் பயன்படுத்தி வகுப்பறைச் செயல்பாடுகளை மேற்கொள்ளுதல் -சார்பு SCERT Proceedings 

EE Circular -SCERT Proceedings - Download here

Click here for latest Kalvi News 

எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ பயிற்சி சார்ந்த PPT மற்றும் காணொலிகள்

 


எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ பயிற்சி காணொலிகளை சார்ந்த PPT மற்றும் பார்த்து வகுப்பறைச் செயல்பாடுகளை சிறப்பாகச் செய்திட கீழே உள்ள Kalvi TV Official YouTube Channel link யை கிளிக் செய்யவும் .

 எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ பயிற்சி சார்ந்த PPT மற்றும் காணொலிகள்


* TERM III Training 2023 (1-3th ) - Download here


* TERM III Training 2023 (4 & 5th) - Download here

Click here for latest Kalvi News 

Ennum Ezhuthum - 1 To 5th Std - Term 3- January 1st Week Lesson Plan

 images%20(29)

மூன்றாம் பருவம்

வகுப்பு - 1 To 5


ஜனவரி - 1,2 வாரம்


அலகு -1


தமிழ் வழி


பாடக்குறிப்பை டவுன்லோடு செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்


Term III Lesson Plan

January - 2024

1st week ( 02.01.2024 - 07.01.2024 )

Ennum Ezhuthum - 1,2,3rd Std -  Term 3- January 1st Week Lesson Plan - Download here

Ennum Ezhuthum - 4 & 5th Std -  Term 3- January 1st Week Lesson Plan - Download here


Click here for latest Kalvi News 

Ennum Ezhuthum - Term 3 - Teachers Training Modules ( Tamil, English, Maths )

 Ennum Ezhuthum - Term 3 - Teachers Training Modules ( Tamil, English, Maths )

Ennum Ezhuthum - Term 3 - Teachers Training Modules 

Ennum Ezhuthum - Term 3 - Training PPTs

Tamil PPTs - Download here

English PPTs - Download here

Maths PPTs - Download here


Click here for latest Kalvi News 

தொடக்கக் கல்வி நியமனங்களில் முன்னுரிமை:பள்ளிக் கல்வித் துறைக்கு கோரிக்கை

 தொடக்கக் கல்வித்துறையில் அனைத்து நியமனங்களும் மாநில அளவில் நடைபெறுவதால் அனைத்து ஆசிரியா்களுக்கும் மாநில அளவிலான முன்னுரிமை நிா்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


இது குறித்து அந்த கூட்டமைப்பின் பொதுச் செயலா் பேட்ரிக் ரெய்மாண்ட் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தொடக்கக் கல்வி சாா்நிலைப் பணி விதிகள் 1983-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த விதிகள் அன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது.


விதிகள் உருவாக்கப்பட்டு 40 ஆண்டுகள் கடந்ததால் இந்த விதிகள் இந்த காலத்துக்கு எவ்வகையிலும் பொருந்தவில்லை. இளையோா்- மூத்தோா் ஊதிய முரண்பாடு, பதவி உயா்வு இடமாறுதல் போன்றவற்றில் இந்த அரசாணைகளைப் பின்பற்றுவதால் ஆயிரக்கணக்கான நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.


மேலும் இளையோா்- முதியோா் ஊதிய முரண்பாடு தொடா்பாகத் தொடா்ந்து நீதிமன்ற உத்தரவுகள்


பிறப்பிக்கப்பட்டு வருவதால் ஊதிய நிா்ணயித்தினால் அரசுக்கு பெறும் நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது, தொடக்கக் கல்வித்துறையில் அனைத்து நியமனங்களும் மாநில அளவில் நடைபெறுவதால், அனைவருக்கும் மாநில முன்னுரிமை நிா்ணயம் செய்யப்பட வேண்டும்.


பதவி உயா்வு பெற்ற பட்டதாரி ஆசிரியா்களுக்கு அவா்கள் பதவி உயா்வு பெற்ற தேதியை அடிப்படையாகக் கொண்டு மாநில அளவில் முன்னுரிமை நிா்ணயம் செய்ய வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்கு தொடக்கக்கல்வித்துறையில் மாநில அளவிலான முன்னுரிமை என்பதே பொருத்தமாக இருக்கும்.


ஒரு ஒன்றியத்திலிருந்து மற்றொரு ஒன்றியத்திற்குப் பணி மாறுதல் செல்பவா்கள் அங்குக் குறைவான ஊதியம் பெறும் நிலை உள்ளது. அதனை மாற்றி அமைக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.


Click here for latest Kalvi News 

BT/BRTE Exam Postponed

 பட்டதாரி ஆசிரியர்கள் , வட்டார வளமைய ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜனவரி 7 ஆம் தேதி நடைபெற இருந்தது.


மழை வெள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேர்வர்களின் சிரமத்தை தவிர்க்கும் விதமாக தேர்வு தேதி மாற்றப்படுவதாக அறிவிப்பு

 2022 காலி பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிப் .4 ல் , போட்டித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.



Click here for latest Kalvi News 

எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான நேரடி பயிற்சி ரத்து - SCERT Proceedings

 தொடர்மழையின் காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் விடுப்பு வழங்கப்பட்டதால் பள்ளி வேலை நாள்கள் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான நேரடி பயிற்சியினைத் தவிர்த்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு வடிவமைத்து வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் கையேடுகளின் வழிகாட்டுதலோடு மூன்றாம் பருவத்திற்கான கட்டகங்களை வகுப்பறையில் செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.


 மேலும் , ஆசிரியர் கையேட்டில் உள்ள விரைவுத் துலங்கல் குறியீட்டில் ( QR Code ) கட்டகத்திற்காகப் பதிவேற்றம் செய்யப்படும் வழிகாட்டுக் காணொலிகள் ( Videos scribes ) மற்றும் வகுப்பறைச் செயல்பாட்டுக் காணொலிகளைப் ( Classroom demo videos ) பயன்படுத்தியும் எண்ணும் எழுத்தும் வகுப்பறையைச் சிறப்பாகக் கையாள அறிவுறுத்துமாறும் , மூன்றாம் பருவப் பயிற்சி சார்ந்த பாடக்கருத்துகளை மின் பாடப்பொருளாக kalvi TV official Youtube channel- லில் பதிவேற்றம் செய்யப்படுவதையும் பயன்படுத்தி ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும் வகுப்பறையைச் சிறப்பாகச் செயல்படுத்திட அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து ஆசிரியர்க அறிவுறுத்துமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது .

எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான ஆசிரியர் கையேட்டினைப் பயன்படுத்தி வகுப்பறைச் செயல்பாடுகளை மேற்கொள்ளுதல் -சார்பு SCERT Proceedings 

EE Circular -SCERT Proceedings - Download here



Click here for latest Kalvi News 

எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ பயிற்சி சார்ந்த PPT மற்றும் காணொலிகள்

 எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ பயிற்சி காணொலிகளை சார்ந்த PPT மற்றும் பார்த்து வகுப்பறைச் செயல்பாடுகளை சிறப்பாகச் செய்திட கீழே உள்ள Kalvi TV Official YouTube Channel link யை கிளிக் செய்யவும் .

 எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ பயிற்சி சார்ந்த PPT மற்றும் காணொலிகள்


* TERM III Training 2023 (1-3th ) - Download here


* TERM III Training 2023 (4 & 5th) - Download here

Click here for latest Kalvi News 

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித் தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

 தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு: நடப்பு கல்வியாண்டில் 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், டிச.27 (இன்று) முதல்‌ ஜன.10-ம் தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவைமையங்களுக்கு சென்று இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த நாட்களில் விண்ணப்பிக்க தவறுபவர்கள், ஜன. 11, 12-ம் தேதிகளில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக 11, 12-ம் வகுப்புக்கு ரூ.1000, பத்தாம்‌ வகுப்புக்கு ரூ.500 செலுத்த வேண்டும். கூடுதல் தகவல்களை www.dge.in.gov.in என்ற இணையதளத்தில்‌ அறிந்துகொள்ளலாம்.



Click here for latest Kalvi News 

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வருகிறது களஞ்சியம் செயலி

  தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு முதல் பே சிலிப் வரையான பணிப் பலன்களை எளிதாக்கும் வகையில் களஞ்சியம் செயலி ஜனவரி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.


மாநிலத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் என 12 லட்சம் பேர் உள்ளனர். அரசு பணிகள் திறம்பட நடப்பதற்கு தற்போது ஐ.எப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்., என்ற ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டம் என்ற சாப்ட்வேர் பயன்பாட்டில் உள்ளது.


அரசு சம்பளம் பெறுவோருக்கு இந்த சாப்ட்வேர் மூலம் தான் தற்போது வழங்கப்படுகிறது. இதுதவிர கல்வித்துறையில் மாணவர்கள், ஆசிரியர், பள்ளிகளின் முழு விவரங்கள் கொண்ட 'எமிஸ்' என்ற இணையதளம் பயன்பாட்டில் உள்ளது.


தற்போது ஒருங்கிணைந்த நிதி மனிதவள மேம்பாட்டு வலைத்தளம், எதிர்கால தேவை கருதி தொழில்நுட்ப ரீதியான மாற்றங்கள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு வருகிறது.


இதன் தொடர்ச்சியாக அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணிப் பலன்களை பெறுவதை எளிமையாக்கும் வகையில் 'களஞ்சியம்' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. விடுப்பு, சரண்டர் விடுப்பு, பே சிலிப் பதிவிறக்கம், பி.எப்., டிரான்ஸ்பர் ஜாயினிங் என்ட்ரி, இ- எஸ்.ஆர்., ஓய்வூதியத்திற்கு முந்தைய பரிந்துரை, இ சலான் உள்ளிட்ட பணப் பலன்கள் நிலரவம், மருத்துவ காப்பீடு விவரம் என அனைத்து விவரங்களும் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளன.


பணியில் உள்ள அலுவலர்கள், ஓய்வூதியர்களுக்கு என தனித்தனியே யூசர் நேம், பாஸ்வேர்டு வழங்கப்பட்டு, பணிசார்ந்த செயல்பாடுகளை அரசு ஊழியர்களே மேற்கொள்ளும் வகையிலும், அதற்கான அனுமதி அதிகாரிகள் வழங்கும் வகையிலும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.


இது இன்னும் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி செய்யப்படவில்லை.


அனைத்து பணிகளும் முடிந்த பின் ஜனவரி முதல் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்படுத்தும் வகையில் செயல் பாட்டிற்கு வரும்.


இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: தற்போது சம்பளம் பில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக அரசு அலுவலர்கள் ஐ.எப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்., சாப்ட்வேரில் பணியாற்றுவதற்குள் கடும் மனஉளைச்சலில் தவிக்கின்றனர்.


12 லட்சம் பேருக்கு பதிவேற்றம் செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டதாக அந்த சாப்ட்வேர் இல்லை என்பதால் அடிக்கடி சர்வர் பிரச்னை ஏற்பட்டு இரவில் பணியாற்றும் நிலை உள்ளது.


இதுபோல் பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் வருகையை எமிஸ்-ல் பதிவேற்றம் செய்வதற்குள் நெட் வொர்க் வசதி, சாப்ட்வேர் பிரச்னையால் ஆசிரியர்களும் படாதபாடு படுகின்றனர். இதுபோன்ற தொழில்நுட்ப சிரமங்கள் இல்லாமல் களஞ்சியம் செயலியை வடிவமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

IMG-20231224-WA0010


Click here for latest Kalvi News 

CBSE - 10-ம் வகுப்பு தேர்வு; கணிதம், இயற்பியல், வேதியியலில் முக்கிய தலைப்புகள் இங்கே

 uurs7NIXnmDE263HEI2d

 வாரியத் தேர்வுகள் பிப்ரவரியில் தொடங்கும் என்று சி.பி.எஸ்.இ (CBSE) அறிவித்துள்ள நிலையில், மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான தலைப்புகளின் முழுமையான பட்டியல் இங்கே.


பாடம் வாரியாக முக்கியமான தலைப்புகள்


கணிதம்


கணிதம் என்பது துல்லியமான மற்றும் பயிற்சியின் விளையாட்டாகும், அங்கு சில அத்தியாயங்கள் மதிப்பெண்களின் புதையலுக்கு திறவுகோலாக இருக்கும். இயல் எண்கள், பல்லுறுப்புக்கோவைகள் மற்றும் இருபடி சமன்பாடுகள் போன்ற அத்தியாயங்கள் முக்கியமானவை, ஏனெனில் அவை உயர் கணிதக் கருத்துகளின் முதுகெலும்பாக அமைகின்றன. இதேபோல், முக்கோணங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு வடிவவியலைப் புரிந்துகொள்வது அவற்றின் வெயிட்டேஜ் மற்றும் சிக்கலான கணக்குகளில் அவற்றின் பயன்பாடு காரணமாக கணிசமான வித்தியாசத்தை ஏற்படுத்தும். எண்கணித முன்னேற்றம் மற்றும் முக்கோணவியல் ஆகியவற்றின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வது ஒரு நல்ல மதிப்பெண்ணுக்கும் சிறந்த மதிப்பெண்ணுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கலாம். மாணவர்கள் மேற்பரப்பு பகுதிகள் மற்றும் தொகுதிகளின் முக்கியத்துவத்தை கவனிக்க மறக்கக்கூடாது, அதே போல் புள்ளியியல் மற்றும் நிகழ்தகவு, இவை பெரும்பாலும் எளிதாக மதிப்பெண் பெறும் பகுதிகளாகக் காணப்படுகின்றன.


வேதியியல்


வேதியியல் பெரும்பாலும் 'மத்திய அறிவியல்' என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது இயற்பியலை உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் போன்ற பிற இயற்கை அறிவியல்களுடன் இணைக்கிறது. சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில், வேதிவினைகள் மற்றும் சமன்பாடுகள் மற்றும் அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் ஆகியவை பெரும்பாலும் அதிக மதிப்பெண்களைக் கொண்ட அத்தியாயங்களாகும். உலோகங்கள் மற்றும் உலோகங்கள் அல்லாதவை, கார்பன் மற்றும் அதன் சேர்மங்கள், ஆகியவை நன்கு புரிந்து கொண்டு மதிப்பெண் பெறும் கருத்தியல் கேள்விகளால் நிரம்பியுள்ளன. தனிமங்களின் தனிம வரிசை அட்டவணை வாரியத் தேர்வுகளுக்கு ஒரு முக்கியமான அத்தியாயமாக நிற்கிறது, மேலும் எதிர்கால வேதியியல் படிப்புகளுக்கான களத்தையும் அமைக்கிறது.


இயற்பியல்


10 ஆம் வகுப்பில், இயற்பியல் என்பது பிரபஞ்சத்தின் தன்மையை நடைமுறை அணுகுமுறையுடன் புரிந்துகொள்வதாகும். ஒளி - பிரதிபலிப்பு மற்றும் ஒளிவிலகல், மற்றும் மனிதக் கண் மற்றும் வண்ணமயமான உலகம் ஆகியவை வரைபடங்கள் மற்றும் எண்ணியல் கேள்விகளால் நிரம்பிய அத்தியாயங்கள், அவை நன்கு பயிற்சி செய்தால், ஒருவரின் மதிப்பெண்களை கணிசமாக அதிகரிக்க முடியும். மின்சாரம் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் அதிக மதிப்பெண்களை அளிப்பது மட்டுமல்லாமல், அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் நிகழ்வுகளை விளக்குவதால் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. இவற்றில் தேர்ச்சி பெற்றால், மதிப்பீட்டின் போது ஒரு மாணவர் நல்ல நிலையில் இருப்பதை உறுதிசெய்ய முடியும்.


வாரியத் தேர்வு அழுத்தத்தை கையாள குறிப்புகள்


பாடப் புத்தகங்களின் வியூகம்


இந்த அத்தியாயங்களைப் பயன்படுத்திக் கொள்ள, மாணவர்கள் தங்கள் தயாரிப்பில் புத்தக உதவிகளை ஒருங்கிணைக்க வேண்டும். தேர்வு முறை மற்றும் பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகளின் வகையைப் புரிந்துகொள்ள மாதிரித் தாள்கள் மற்றும் முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களை விடாமுயற்சியுடன் பயிற்சி செய்ய வேண்டும். நேர நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், தேர்வுச் சூழலின் அழுத்தத்திற்குப் பழகுவதற்கும் மாதிரித் தேர்வுகள் முக்கியமானவை.


வழிகாட்டிகள் மற்றும் குறிப்புகள் நியாயமான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். வழிகாட்டிகள் பரந்த பாடத்திட்டத்தின் மூலம் ஒரு தீர்க்கமான பாதையை வழங்கும் அதே வேளையில், தனிப்பட்ட குறிப்புகள் விரைவான குறிப்புகளாக செயல்படலாம் மற்றும் கடைசி நிமிட திருப்புதல்களுக்கு உதவலாம். வீடியோ டுடோரியல்கள், குறிப்பாக இயற்பியல் மற்றும் வேதியியலில் உள்ள சிக்கலான கருத்துக்களுக்கு, வித்தியாசமான கண்ணோட்டத்தை வழங்குவதோடு சிறந்த புரிதலுக்கு உதவும்.


நிலைத்தன்மை மற்றும் புரிதலின் பங்கு


படிப்புப் பழக்கவழக்கங்களில் நிலைத்தன்மையும் கருத்துகளைப் பற்றிய ஆழமான புரிதலும் இன்றியமையாதது. மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை விரைவில் தெளிவுபடுத்துவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும் மற்றும் அவர்களின் புரிதலை உறுதிப்படுத்திக் கொள்ள சக விவாதங்களில் ஈடுபட வேண்டும். வழக்கமான திருப்புதல்கள் மற்றும் பல்வேறு கணக்குகளைப் பயிற்சி செய்வது கருத்துகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்படுவதற்கும் அவசியம்.


அழுத்தத்தை சமாளித்தல்


தேர்வு நெருக்கடி அடிக்கடி மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும், இது எதிர்விளைவாகும். மாணவர்கள் தங்கள் மனதை புத்துணர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் வைத்திருக்க போதுமான இடைவெளிகள் மற்றும் ஓய்வு நேர செயல்பாடுகளுடன், சீரான வழக்கத்தை வைத்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும். ஆரோக்கியமான உணவு, போதுமான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவையும் ஒரு மாணவரின் ஒட்டுமொத்த செயல்திறனுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும்.


மாணவர்கள் சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு  வாரியத் தேர்வுகளுக்குத் தயாராகும்போது, ​​இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் மதிப்பெண்களைப் பெறுவதில் கவனம் செலுத்துவது இறுதி முடிவில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தும். இருப்பினும், இது மூலோபாய திட்டமிடல், நிலையான நடைமுறை மற்றும் பாடப் புத்தகங்களின் திறம்பட பயன்பாடு ஆகியவற்றின் கலவையாகும், இது திறனை சிறந்ததாக மாற்றும்.


Click here for latest Kalvi News