Teachers Hand Book - Term III - Download

 


IMG_20231217_102235


Teachers Hand Book - Term III - Download 

4th , 5th - Teachers Hand Book

Tamil - Teachers Hand Book - Term III - Download here


English  - Teachers Hand Book - Term III - Download here


Maths - Teachers Hand Book - Term III - Download here


Science  - Teachers Hand Book - Term III - Download here


Social Science - Teachers Hand Book - Term III - Download here


மூன்றாம்  இன்னும் சிறப்பாக செயல்படுத்த 


எந்த வகுப்பிற்கான செயல்பாடுகள்

செயல்பாடுகளின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள வகுப்பிற்கு ஏற்ற வண்ணப் புள்ளிகளை கவனித்து எந்த வகுப்பிற்கான செயல்பாடு என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும்


தனி வகுப்பு


தனி வகுப்பு எனில் அந்த வகுப்புக்குரிய செயல்பாடுகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும்.


நான்காவது பயனில் வண்ணத்தில் உள்ள செயல்பாடுகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும்



ஐந்தாம் வகுப்பு எண்ணில் வண்ணத்தில் உள்ள செயல்பாடுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டும்


இரு வண்ண உள்ள செயல்பாடு இரண்டு வகுப்பும் பொதுவானவை எனவே வகுப்பு சூழலில் இருவருக்கும் மாணவர்கள் இணைத்து மேற்கொள்ள வேண்டும்

வகுப்பற்ற நிலையில் இல்லாத மாணவர்களுக்கு இதுவரை கற்றவை பகுதியில் கொடுத்துள்ள காணொளிகளை பயன்படுத்தி செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்



தொழில்நுட்பத் துணை விரைவு தொடங்கல் குறியீடு பின் இணைப்புகள் செயல்திட்டம் பாடக்குறிப்பு படிவம் மதிப்பீடு பயிற்சி நூல் ஆகியவற்றை கொண்டு சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும்



மூன்றாம் பருவத்தில் கணக்கில்

பொருளடக்கம் பகுதியில்


1) வடிவியல் 

2) எண்கள் 

3)பணம்

4)பின்னங்கள் 

5)காலம்

6)அளவைகள் 


பின்னிணைப்புகள்

THB download செய்ய கீழே உள்ள link ஐ கிளிக் செய்து கொள்ளவும்.

Click here for latest Kalvi News 

In a first , TN to have winter camp for students

 IMG-20231224-WA0008

For the first time, the government schools across the State will have winter camp this year, which will focus on the basics of theatre, coding without computers and foundational robotics. Organised by Tamil Nadu Samagra Shiksha, the key objective of the camp is to equip the students, studying from Class VI to Class IX, to improve their skill set.

Accordingly, Tamil Nadu Samagra Shiksha State project director M Aathi has informed all the Chief Educational Officers (CEOs) that the winter workshop, as a pilot initiative, will be held from December 26 to 29. The official said that the workshop will focus on equipping students with a diverse skill set and aims to ignite curiosity and unleash the full potential of each student in a fun and supportive setting

Students will also embark on a journey of self-discovery through acting, scriptwriting, and performance. “These sessions are designed not just to enhance public speaking and communication skills, but also to nurture creativity and self-expression,” the official added.

With regard to the coding without computers programme, the official said the programme is a distinctive initiative, which would enable the students to learn and build code by using physical blocks and demonstrating the output of the code from within a mobile app. “The robotics session will immerse the students in the world of automation and innovation, providing hands-on experiences in designing real-life socially benefiting devices,’’ the official said.

The official said that to select the interested students to participate in the winter cap, the CEOs of the respective districts were instructed to share the link of the assigned topic with the school teachers


Click here for latest Kalvi News 

மாணவர்கள் பங்கேற்கலாம்; டிசம்பர் 27-ம் தேதி மாவட்ட அறிவியல் கண்காட்சி: பள்ளிக்கல்வி இயக்குநர் தகவல்

 

1171695

தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பதற்கான முதல்கட்ட போட்டியான மாவட்ட அளவிலான கண்காட்சி வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் ஜி.அறிவொளி அனுப்பிய சுற்றறிக்கை: தென்னிந்திய அறிவியல் கண்காட்சி என்பது உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 8, 9, 10-ம்வகுப்பு மாணவர்களுக்கான வருடாந்திர நிகழ்வு ஆகும். இதில் அனைத்து தென் மாநிலங்களும் பல்வேறு அறிவியல் கருப்பொருட்களுடன் கூடிய அரங்குகளை அமைக்கும். அந்தந்த மாநில அரசுகளால் நடத்தப்படும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் வெற்றி பெறுபவர்கள் இதில் பங்கேற்பார்கள்.


அந்த வகையில், தமிழகத்தில் இருந்து இதில் பங்கேற்பதற்காக, மாநில அளவில் அதிகபட்சம் 35 அரங்குகள் தேர்வு செய்யப்படும். தனிப்பட்ட வகை (ஒரு மாணவர், ஒரு ஆசிரியர்) பிரிவில் 15 அரங்குகள், குழு வகை (2 மாணவர், ஒரு ஆசிரியர்) பிரிவில் 10 அரங்குகள், ஆசிரியர் வகை (ஒரு ஆசிரியர் மட்டும்) பிரிவில் 10 அரங்குகள் தேர்வு செய்யப்படும். இயற்பியல், வேதியியல், கணிதம், பூமி மற்றும் விண்வெளி அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், பொறியியல், உயிரியல், உயிரி வேதியியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் கண்காட்சி அரங்கு அமைந்திருக்க வேண்டும். மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி டிசம்பர் 27-ம் தேதி நடத்தப்படும். அதில் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள், 2024 ஜனவரி 6-ம் தேதி நடக்க உள்ள மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்கலாம்.

Click here for latest Kalvi News 

வேளாண் படிப்புகளும், வேலை வாய்ப்புகளும் - ஓர் அடிப்படை வழிகாட்டுதல்

1172422

பொறியியல் படிப்பதே நல்ல வேலையைப் பெற்றுத்தரும், வளமான வாழ்வுக்கு வழிவகுக்கும் என்பது போன்ற கற்பிதங்கள் எல்லாம் இன்று மதிப்பு இழந்துவிட்டன. வேலைவாய்ப்புக்கும் வளமான எதிர்காலத்துக்கும் உத்தரவாதம் அளிக்கும் பல படிப்புகள் இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு முன் வரிசைகட்டி நிற்கின்றன. அந்தப் படிப்புகளில் முக்கியமானவை வேளாண் படிப்புகள்.


யார் படிக்க முடியும்? - பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களை முதன்மையாகப் படித்தவர்கள் மட்டுமே வேளாண் படிப்பில் சேர முடியும். இருப்பினும், அக்ரிகல்ச்சர் டெக்னாலஜி, ஃபுட் டெக்னாலஜி போன்ற படிப்புகளில், கணிதம், கணினி அறிவியல் பாடங்களைப் படித்தவர்களும் சேர முடியும்.


எவ்வளவு மதிப்பெண்கள் தேவை? - வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினர் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் / விலங்கியல் பாடங்களில் 55 சதவீத மதிப்பெண்ணும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்ணும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 45 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். பட்டியல் வகுப்பினரும் பழங்குடிப் பிரிவைச் சேர்ந்தவர்களும் தேர்ச்சி பெற்றிருந்தாலே விண்ணப்பிக்கலாம்.


வேளாண் படிப்பில் சேரும் வழிகள்: வேளாண் படிப்பில் சேர்வதற்கு டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வை எழுதலாம் அல்லது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சலிங்கில் கலந்துகொள்ளலாம்.


இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வை எழுதுவதற்குப் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. நுழைவுத் தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண் பெற்றால், இந்தியாவில் உள்ள சிறந்த வேளாண் கல்லூரிகளில் உங்களுக்கு அனுமதி கிடைக்கும். இந்த நுழைவுத்தேர்வு குறித்த விவரங்களை https://icar.nta.nic.in என்கிற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.


தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சலிங் தவிர, சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம நிகர்நிலை பல்கலைக்கழகத்திலும் தனியே விண்ணப்பித்து, வேளாண்மைப் படிப்பில் சேரலாம்.


கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக 14 கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகள் அனைத்தும் அரசுக் கல்லூரிகளே. இவைதவிர, 29 சுயநிதிக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் சேரலாம்.


குறைவான கட்டணம்: அரசுக் கல்லூரியில் வேளாண் அறிவியல் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்தால் ஆண்டுக் கட்டணம் ரூ. 30,000-க்குக் குறைவாகவும், தொழில்நுட்ப பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்தால் ஆண்டுக் கட்டணம் ரூ. 70,000-க்கும் குறைவாகவும் பெறப்படுகிறது. ‘முதல் தலைமுறைப் பட்டதாரி’ என்றால் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வேளாண் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் படிப்புகள்:


பி.எஸ்சி. (ஹானர்ஸ்) வேளாண்மை

பி.எஸ்சி. (ஹானர்ஸ்) தோட்டக்கலை

பி.எஸ்சி. (ஹானர்ஸ்) வனவியல்

பி.எஸ்சி. (ஹானர்ஸ்) உணவு, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல் (ஃபுட் நியூட்ரிஷன் அண்டு டயட்டிக்ஸ்)

பி.டெக். - வேளாண் பொறியியல்

பி.எஸ்சி. (ஹானர்ஸ்) பட்டு வளர்ப்பு

பி.டெக். - உணவுத் தொழில்நுட்பம் (ஃபுட் டெக்னாலஜி)

பி.டெக். - உயிரித் தொழில்நுட்பம் (பயோடெக்னாலஜி)

பி.டெக். - ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்

பி.எஸ்சி. - வேளாண் வணிக மேலாண்மை


வேலை வாய்ப்பு: வேளாண் ஆராய்ச்சியாளர், வேளாண் தொழில்நுட்பவியலாளர், கள ஆய்வாளர், பண்ணை மேலாளர், வேளாண் விற்பனை பிரதிநிதி, வேளாண் உணவுப்பொருள் நுகர்பொருள் கிடங்கு அதிகாரி, வேளாண் கல்வியாளர், திட்ட வரைவாளர், மண்வள ஆய்வாளர், வேளாண் தொழில் வல்லுநர், வேளாண் நிர்வாக அதிகாரி எனப் பலவிதமான பொறுப்புகளுக்குச் செல்ல முடியும். அரசு மற்றும் தனியார் வேளாண் நிறுவனங்கள், வேளாண் கருவி தயாரிப்பு நிறுவனங்கள், உர நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.


மேன்மைக்குரிய படிப்பு: வேளாண் படிப்புகள் இன்று சிறந்த தேர்வாக மாறி இருக்கின்றன. வேளாண் படிப்புகள் தனியொருவரின் மேன்மைக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலகின் மேன்மைக்கும் உறுதியளிக்கும் வல்லமை கொண்டவை. மேலும், மனித இனம் இந்தப் பூமியில் வாழும்வரை, உணவு சார்ந்த படிப்பும் தொழிலும் நிலைத்திருக்கும் என்பதால், வேளாண் படிப்புகளைப் படிப்பதன் பயன் ஒருபோதும் நீர்த்துப் போகாது.




Click here for latest Kalvi News 

6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு Winter Workshops - SPD Proceedings

 

IMG_20231221_123932

6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு Winter Workshops - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

SPD - Winter Camp Proceedings - Download here

Click here for latest Kalvi News 

பள்ளிகளுக்கு 100 Mbps வேகம் கொண்ட இணைய சேவை இணைப்பு வழங்குதலை செயல்படுத்த மாவட்ட அளவிலான குழு அமைத்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

 IMG_20231223_223052

2023-24 Samagra Shiksha Lab 100 Mbps Broadband Connection in all Government Primary , Middle , High and Higher Secondary Schools Formation of District Level ICT Team for the successful implementation - Intimation - Reg .

அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 100 Mbps வேகம் கொண்ட இணைய சேவை இணைப்பு வழங்குதலை செயல்படுத்த மாவட்ட அளவிலான குழு அமைத்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

 SPD - ICT District Team Proceedings - Download here


Click here for latest Kalvi News 

முதல் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 3-ஆம் பருவ பயிற்சி எப்போது? - Proceedings

 

சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சியின் மூன்றாம் பருவத்திற்கான வட்டார அளவிலான பயிற்சியானது ஜனவரி முதல் வாரத்தில் நடைபெற இருப்பதால் இணைப்பில் காணும் பயிற்சி மையங்களுக்கு LCD , Projector , Speaker , Mic ஆகியவற்றை வட்டார வளமையத்திலிருந்தோ அல்லது உயர் / மேல்நிலைப் பள்ளிகளிலிருந்தோ பெற்று சம்பந்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பிவைக்க வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்குத் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .



Click here for latest Kalvi News 

6,7,8-th Std - Term II Exam - All Subject - Official answer key

SSC - 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு!

 


ssc.jpg?w=400&dpr=3

2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது.

ssc.jpg?w=400&dpr=3

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி)  தேர்வு செய்து வருகிறது.


அதன்படி, ஒருங்கிணைந்த மேல்நிலைப் பள்ளி அளவிலான தேர்வு (சிஎச்எஸ்எல்- CHSL Combined Higher Secondary (10+2) Level Examination, முதல் நிலைத் தேர்வு (Tier-1) அடுத்தாண்டு ஜூன் - ஜூலை மாதத்தில் நடைபெறும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு (சிஜிஎல்- CGL Combined Graduate Level - முதல் நிலைத் தேர்வு (Tier-1) அடுத்தாண்டு  செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இளநிலை பொறியாளர் (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts)  தேர்வு முதல் தாள் (CBE) அடுத்தாண்டு மே - ஜூன் மாதத்தில் நடைபெறும்.

Click here for latest Kalvi News 

மாணவர்களுக்கு வருடாந்திர தென்னிந்திய அறிவியல் கண்காட்சி ( SISF ) - 2024 மாவட்ட / மாநில அளவில் நடத்துதல் - சார்பு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 

பள்ளிக் கல்வி அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வருடாந்திர தென்னிந்திய அறிவியல் கண்காட்சி ( SISF ) - 2024 மாவட்ட / மாநில அளவில் நடத்துதல் - சார்பு .

science exhibition - Reg | Download here


Click here for latest Kalvi News 

IFHRMS - Kalanjiyam Mobile App - Download Link

ஆசிரியர்கள் மற்றும் அரசூழியர்களின் விடுப்பு முதல் Pay slip வரை அனைத்து பணி பலன்களையும் பெறுவதற்கான ஒரே App-களஞ்சியம் செயலி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐனவரி 1 முதல் நடைமுறைக்கு வர உள்ள இச்செயலி தற்போது Play Store -ல் கொடுக்கப்படவில்லை.

👉 அதனை Install செய்து பயன்படுத்தும் வழிமுறை


1. Leave entry

1.1 surrender leave

1.2 el and uel

2. ⁠pay slip download

3. ⁠pf initiation

4. ⁠advance initiation

5. ⁠Transfer joining entry

6. ⁠reports E ESR மற்றும் paydrawn 

7. ⁠pre retirement..pension proposal

8. ⁠others..

8.1 Relinguishment entry

8.2 Additional charge allowance

8.3 Nhis updation

8.4 Nhis initiation

9. E challan

10. ⁠contact us

11. ⁠feed back


போன்றவை இதில் இடம் பெற்றுள்ளன

கீழ் உள்ள இணைப்பை பதிவிறக்கம் செய்து உங்களது தற்போதைய Employee id மற்றும் Password கொடுத்து Submit கொடுக்கவும்

🔗IFHRMS - Kalanjiyam Mobile App - Download Link👇

Download here



Click here for latest Kalvi News 

Click here to join whatsapp group for daily kalvinews update  

UG TRB - English Unit 9 ( Literary Criticism And Theories ) Important Question With Keys

 UG TRB - English Unit 9 ( Literary Criticism And Theories ) Important Question With Keys - TET Coaching Centre - Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் மாதிரி வினாத்தாள் தொகுப்பு வெளியீடு.

 IMG_20231220_162522

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை தலைவராகக் கொண்டு பேராசிரியர் அன்பழகன் பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் மாதிரி வினாத்தாள் தொகுப்பு புத்தகங்கள் , கணித தீர்வுப்புத்தகம் மற்றும் கணித COME புத்தகம் ( தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் ) அச்சிடப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட விற்பனை மையங்களிலும் 20.12.2023 முதல் கீழ்க்கண்டவாறு விற்பனைக்கு கிடைக்கும் .

Press News 20.12.2023 - Download here



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பொதுமக்கள் / மாணவர்களுக்கான இணையவழி சேவைகள் - தேர்வுத்துறை

 IMG_20231220_163948

இதுவரை தபால்வழி விண்ணப்பங்களாக பெறப்பட்டு வந்த இத்துறை சேவைகளான மதிப்பெண் சான்றிதழ்களின் இரண்டாம்படி , மதிப்பெண் இடப்பெயர்வுச் சான்றிதழ் பிற சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் , மாநிலங்களில் உயர்கல்வி பயில ( Migration Certificate ) இணையவழி விண்ணப்பங்களாக பெறுவதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டு பொதுமக்கள் மாணவர்களின் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது . பொதுமக்கள் / மாணவர்கள் இவ்வியக்கக இணையதளத்தில் ( www.dge.tn.gov.in ) விண்ணப்பிக்கலாம் .

DGE online Service - Press News - Download here



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

திட்டமிட்டபடி அரையாண்டு விடுமுறை?

 

.com/


தொடர் விடுமுறை காரணமாக அரையாண்டு தேர்வுகளை ஜனவரியில் நடத்தி கொள்ள ஆலோசனை


திட்டமிட்டபடி அரையாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் ஜனவரியில் பள்ளிகள் திறப்பின் போது விடுபட்ட அரையாண்டு தேர்வுகளை நடத்த திட்டம்


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

நாளை (டிச. 21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (21.12.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.


முகாம்கள் ஏதும் நடைபெறாத கல்லூரிகள் செயல்படும்.


வெள்ளிக்கிழமை முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.


- மாவட்ட ஆட்சித்தலைவர்


தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச. 21) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

‘சைமா' அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள்:

 1170644


'சைமா' அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், விநாடி-வினா, செஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் ஜன.6, 7-ம் தேதிகளில் நடைபெற உள்ளன. பள்ளி மாணவர்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் 'சைமா' அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு இடையே போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் குழு பாடல், விநாடி-வினா, கேரம், செஸ், பேச்சு, கட்டுரை, கலை, ஓவியம், மாறுவேடம் என பலதரப்பட்ட போட்டிகள் இடம்பெறும்.

அந்த வகையில் 2024-ம் ஆண்டு 'கோல்டு வின்னர்-சைமா குழந்தைகள் விழா' போட்டிகள் ஜன.6, 7-ம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளன. ஓவியம் மற்றும்மாறுவேட போட்டிக்கு குறிப்பிட்டநாளில் நேரடியாக வந்து பங்கேற்கலாம். மற்ற போட்டிகளுக்கு பள்ளிகள் வழியாக மாணவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். எல்கேஜிமுதல் 12-ம் வகுப்பு வரை அனைத்துவகுப்பு மாணவர்களும் போட்டிகளில் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம்.

மாணவர்களுக்கு பரிசு: சென்னை திருவல்லிக்கேணி பெசன்ட் சாலையில் உள்ள என்கேடி தேசிய பயிற்சி கல்லூரிவளாகத்தில் போட்டிகள் நடைபெறும். வெற்றிபெறும் மாணவர் களுக்கு பரிசுகள் வழங்கப்படும். அதிக போட்டிகளில் வென்று அதிகபுள்ளிகள் எடுக்கும் பள்ளிக்கு ஒட்டுமொத்த கோப்பை வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் உண்டு.

ஜன.4-க்குள் முன்பதிவு: போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் பள்ளிகள், ஜன.4-க்குள் மாணவர்களின் பெயர் விவரங்களை முன்பதிவுசெய்ய வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 93611 19723என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என 'சைமா' அமைப்பின் செயலாளர் சஞ்சீவி ரகுநாதன் தெரிவித்துள்ளார்.
 🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News