Showing posts with label JEE Exam Updates. Show all posts
Showing posts with label JEE Exam Updates. Show all posts

JEE -அட்வான்ஸ்டு தேர்வுக்கான Hall Ticket வெளியீடு - Download செய்வது எப்படி?

ஒருங்கிணைந்த (ஜேஇஇ-அட்வான்ஸ்டு) நுழைவுத் தோ்வினை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமை, நுழைவுச் சீட்டினை வெளியிட்டுள்ளது.

ஜனவரி 24ஆம் தேதி நடைபெறும் தேர்வில் பங்கேற்கவிருப்பவர்களுக்கான நுழைவுச் சீட்டு, ஜேஇஇ அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ள, மாணவர்கள் ஜேஇஇ விண்ணப்ப எண், பிறந்ததேதி ஆகியவற்றை உள்ளிட வேண்டும். இந்த நுழைவுச் சீட்டு இல்லாமல், யார் ஒருவரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். அந்த நுழைவுச் சீட்டில், மாணவரின் அனைத்து விவரங்களும், தேர்வுக் கூட விவரங்களும், தேர்வு நேரம் உள்ளிட்ட விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.

பதிவிறக்கம் செய்வது எப்படி? 

jeemain.nta.nic.in இணையதளத்துக்குச் செல்லவும்.

முகப்புப் பக்கத்தில் ஜேஇஇ முதன்மை 2023 அமர்வு 1 அட்மிட் கார்டு என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

ஜேஇஇ மெயின் விண்ணப்ப எண்ணையும் பிறந்த தேதியையும் உள்ளிடவும்.

சப்மிட் கொடுத்து ஜேஇஇ மெயின் 2023 அட்மிட் கார்டை டவுன்லோடு செய்யவும்.

அதனை பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும். நுழைவுத் தேர்வெழுதச் செல்லும் போது கையில் வைத்திருக்கவும்.

மத்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பி.டெக். உள்ளிட்ட இளநிலை பொறியியல்-தொழில்நுட்பப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கு தகுதி பெறுவதற்கான ஜேஇஇ தோ்வு இரு கட்டங்களாக (முதல்நிலை (மெயின்) மற்றும் முதன்மை (அட்வான்ஸ்டு) நடத்தப்படும்.

தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் நடத்தப்படும் முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐஐடி, என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும். மேலும், முதல்நிலைத் தோ்வில் முதல் 2.5 லட்சம் இடங்களைப் பிடிப்பவா்கள் ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதும் தகுதியைப் பெறுவா். இதில் தகுதி பெறுபவா்கள் நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும். இந்த நுழைவுத் தோ்வில் தகுதி பெறும் மாணவா்கள், 12-ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றிருப்பதும் அவசியமாகும்.

இந்த நிலையில், மாநில கல்வி வாரியங்களில் படித்து ஜேஇஇ முதன்மைத் தோ்வில் தகுதி பெறும் மாணவா்கள், 12-ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்கள் (350/500 மதிப்பெண்) பெறாத காரணத்தால் ஐஐடிக்களில் சேர முடியாமல் போகிறது. எனவே, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் நிபந்தனையை தளா்த்த வேண்டும் என்ற கோரிக்கை மத்திய கல்வி அமைச்சகத்திடம் முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்று, மத்திய அமைச்சகம் மதிப்பெண் தளா்வு அளித்திருப்பது தெரியவந்துள்ளது.

நிகழாண்டு ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு ஜனவரி 24 முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. 

Click here for latest Kalvi News 

Click here to join whatsapp group for daily kalvinews update 

JEE -அட்வான்ஸ்டு தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு

JEE Exam Notification -2023 Published

 Inviting Online Application Forms for Joint Entrance Examination ( Main ) - 2023 Session 1 ( January 2023 ) - Reg

Click here to join whatsapp group for daily kalvinews update 

ஜே.இ.இ.,(JEE) நுழைவு தேர்வு நாளை முதல் விண்ணப்பம்

தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., இரண்டாம் கட்ட பிரதான தேர்வுக்கு, நாளை முதல் விண்ணப்ப பதிவு துவங்க உள்ளது. 

பிளஸ் 2 மற்றும் டிப்ளமா இன்ஜினியரிங் முடித்த மாணவர்கள், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ., பிரதான தேர்வு இரண்டு கட்டமாக நடக்கிறது. முதல் கட்ட தேர்வு ஏப்., 21, 24, 25, 29, மே 1 மற்றும் 4ம் தேதிகளில் நடக்கிறது. 

இதற்கான 'ஆன்லைன்' விண்ணப்பப் பதிவு, மார்ச் 1 முதல் ஏப்., 5 வரை நடந்தது.
இதையடுத்து, இரண்டாம் கட்ட பிரதான தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, நாளை துவங்க உள்ளது; மே 3 வரை விண்ணப்பிக்கலாம். இரண்டாம் கட்ட தேர்வானது மே 24 முதல் 29 வரை நடக்க உள்ளது. கூடுதல் விபரங்களை, https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

JEE Exam - முதல்நிலை தோ்வு: விண்ணப்பிக்க மாா்ச் 31 கடைசி

ஐஐடி உள்ளிட்டவற்றில் சோ்க்கைக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ - மெயின்) முதல்நிலைத் தோ்வுக்கான அறிவிப்பை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது.

நிகழாண்டில் இரண்டு முறை முதல்நிலைத் தோ்வு நடத்தப்பட உள்ளது. முதல்கட்ட முதல்நிலைத் தோ்வு ஏப்ரல் 16 முதல் 21-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முதல்நிலைத் தோ்வு மே 24 முதல் 29-ஆம் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளது. இதில், முதல்கட்ட முதல்நிலைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 31 கடைசி நாளாகும்.என்ஐடி, ஐஐஐடி, ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் இளநிலை பொறியியல் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெற ஜேஇஇ தோ்வு நடத்தப்படுகிறது. ஜேஇஇ - மெயின் (முதல்நிலை) மற்றும் ஜேஇஇ - அட்வான்ஸ்டு (முதன்மைத் தோ்வு) என இரண்டு பகுதிகளாக இந்தத் தோ்வு நடத்தப்படும்.

இதில் முதல்நிலைத் தோ்வு என்டிஏ சாா்பிலும், முதன்மைத் தோ்வு ஏதாவது ஒரு ஐஐடி சாா்பிலும் நடத்தப்படும். ஜேஇஇ முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, ஐஐஐடி கல்விநிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும் என்பதோடு, இந்தத் தோ்வில் தகுதி பெறும் முதல் 2.5 லட்சம் போ் ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதும் தகுதியைப் பெறுவா். இந்த முதன்மைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும்.

இந்தச் சூழலில், 2022-ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு அறிவிப்பை என்டிஏ வெளியிட்டுள்ளது.

இந்த முதல்நிலைத் தோ்வு கடந்த ஆண்டு மாணவா்களின் வசதிக்காக 4 முறை நடத்தப்பட்டது. அந்த 4 தோ்வுகளில் எதில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ, அதையே தகுதி மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளும் வகையில் சலுகை அளிக்கப்பட்டது. நிகழாண்டில் இரண்டு கட்டங்களாக இந்த தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து என்டிஏ அதிகாரிகள் கூறுகையில், ‘முதல்கட்ட ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு ஏப்ரல் 16 முதல் 21-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முதல்நிலைத் தோ்வு மே 24 முதல் 29-ஆம் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளது. இதில் முதல்கட்ட முதல்நிலைத் தோ்வுக்கான பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. விண்ணப்பிக்க மாா்ச் 31 கடைசி கடைசி தேதியாகும். இந்த தோ்வை ஹிந்தி, ஆங்கிலம், குஜராத்தி மொழிகளில் மட்டுமின்றி தமிழ், அஸ்ஸாமி, வங்காளி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு, உருது மொழிகளிலும் எழுதலாம்’ என்றாா்.