Showing posts with label STD 2. Show all posts
Showing posts with label STD 2. Show all posts

1 முதல் 3ம் வகுப்பு வரை வரை... தமிழக அரசு பள்ளி மாணவர்கள் ரெடியா?

 தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இறுதித் தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வரும் ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்து வரும் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய உத்தரவு ஒன்று வந்துள்ளது. 

மதிப்பீட்டு தேர்வுகள்

அதாவது சுருக்க மதிப்பீட்டு தேர்வுகள் (Summative Assessment Test) ஆன்லைனில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் வரும் ஏப்ரல் 17 முதல் 21ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 60 மதிப்பெண்கள் கொண்ட தேர்வாக நடைபெறும். இதற்காக ஆசிரியர்களின் மொபைல் போன்களை பயன்படுத்தி கொள்ளலாம். அதேசமயம் ஆஃப்லைனில் தேர்வுகளை நடத்தவும் ஆசிரியர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

க்யூ-ஆர் கோடு முறை

அதாவது, ஒர்க் புக்கில் மதிப்பீட்டு கேள்வித் தாள்களில் இருக்கும் க்யூ-ஆர் (QR Code) கோடுகளை ஸ்கேன் செய்து மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தலாம். மேற்குறிப்பிட்ட தேர்வுகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கவனிக்கும் திறன், எழுத்தாற்றல், பேசும் திறன், படிக்கும் திறன் ஆகியவை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பரிசோதனை செய்யப்படும்.

என்னென்ன பாடங்கள்

கணக்கு பாடத்தை பொறுத்தவரை எண்களை அடையாளம் காணுதல், பொருத்துதல், புரிந்து கொள்ளும் திறன் ஆகியவை பரிசோதிக்கப்படும். சுற்றுச்சூழல் அறிவியல் பாடத்திற்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகியவற்றுடன் சேர்த்து கேள்விகள் கேட்கப்படும். எஞ்சிய பாடங்களில் இருந்து செயல் திட்டங்கள் அளிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எண்ணும் எழுத்தும் திட்டம்

ஆன்லைன் மதிப்பீட்டு தேர்வில் கொள்குறி எனப்படும் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகளாக கேட்கப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் கடந்த ஆண்டு ’எண்ணும் எழுத்தும்’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, 8 வயது வரையுள்ள அனைத்து மாணவர்களும் எழுத, படிக்க, அடிப்படை கணக்கு போட தெரிந்திருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு வசதி

அதுமட்டுமின்றி மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு நடனம், பாடல்கள், கதை சொல்லுதல், பொம்மலாட்டம் ஆகியவற்றின் மூலம் எழுத மற்றும் படிக்கும் திறன்கள் கற்று தரப்படும். இந்த திட்டம் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஆஃப்லைன் முறை

இந்நிலையில் ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் தேர்வுகளால் நேரம் வீணாவதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே ஆஃப்லைனில் தேர்வுகளை நடத்துவதே சரியாக இருக்கும் எனக் கருதி, அதற்கான ஏற்பாடுகளை செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது



 Click here for latest Kalvi News 

2ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அறிமுகம்: சிபிஎஸ்இ முக்கிய அறிவிப்பு

 National Curriculum Framework for the Foundational Stage: நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆரம்ப கல்வி நிலைக்கான பாடத்திட்ட கட்டமைப்பை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை அறிவித்தது. இந்த புதிய கல்விக் கொள்கை, தற்போதுள்ள, 10+2 பாடத்திட்ட முறைக்கு பதிலாக,முறையே 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுக்கேற்ற 5 + 3 + 3 + 4 ஆண்டு பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தியது. 3-8 வயதுக்கு இடையே உள்ளது. அடிப்படை கல்வி நிலையாகும். இதில் 3 ஆண்டுகள் பள்ளிக்கு முந்தைய கல்வியும் (அங்கன்வாடி மையங்கள் மூலமாக கற்றல் நடைபெறும்) 2 ஆண்டுகள் அடிப்படை நிலை I மற்றும் நிலை II கல்வியும் அடங்கும்.

இந்த 8 வயது வரையிலான குழந்தைகளுக்கான தேசியப் பாடத்திட்ட கற்பித்தல் கட்டமைப்பை (National Curriculum Framework for Foundational Stage) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) உருவாக்கியது. கடந்தாண்டு அக்டோபர் மாதம், நாட்டிலுள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்த கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான முதற்கட்டமாக அறிமுகம் செய்தார்.

இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டில், நர்சரி வகுப்பு முதல், இரண்டாம் வகுப்பு வரையில் ஐந்து வகுப்புகளுக்கு இந்த புதிய பாடத்திட்ட கட்டமைப்பை அமல்படுத்தப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது . நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகள் இந்த புதிய கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

புதிய பாடத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட வேண்டிய பாடங்கள் தொடர்பாக NCERT இணையதளத்தில் பாடத்திட்டங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பாடதிட்டங்களை தனியார் பதிப்பகங்கள், பாடபுத்தகங்களாக அச்சிடலாம். இதை பின்பற்றி தனியார் பதிப்பகங்கள், பாட புத்தகங்களை தயாரித்து வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில வாரியாக அந்தந்த மாநில மொழி பாடம், இந்தி , ஆங்கிலம் மற்றும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என 5 பாடங்கள் இடம்பெற்றிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Click here for latest Kalvi News 

2nd STD All Subject Lesson Plan Term 3 Tamil Medium / English Medium

  2nd All Subject Lesson Plan Term 3 Tamil Medium 

 2nd All Subject Lesson Plan Term 3 English Medium


Click here to join whatsapp group for daily kalvinews update 

2nd Std- Term - 2- 4 in 1 Ganga Guide - tamil medium

 2nd Std- Term - 2-  4 in 1 Ganga Guide  - tamil medium


Click here to download pdf file


 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

2nd STD C AND D GRADE ACTIVITIES

 2nd STD C AND D GRADE ACTIVITIES


Click here to download pdf file


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

1, 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது... தமிழக பள்ளிக்கல்வித் துறை

 1,2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே வீட்டுப்பாடம் தர தடை விதித்துள்ள நிலையில், அதை முறையாக அமல்படுத்த வேண்டும் எனவும் பள்ளிகளில் பறக்கும் படையைக் கொண்டு ஆய்வு செய்து 1,2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தராமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் எனவும் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

மேலும் ஆய்வுக்குப் பின் வீட்டுப்பாடம் தரப்பட்டதா? இல்லையா? என்ற அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

2nd STD TO 5th Std C & D GRADE ACTIVITIES

2nd Std C & D GRADE ACTIVITIES Click here to download

3rd Std C & D GRADE ACTIVITIES Click here to download

4th Std C & D GRADE ACTIVITIES Click here to download
 
5th Std C & D GRADE ACTIVITIES Click here to download


Click here to Join WhatsApp group for Daily kalvi news

1 To 5th Std - Time Table ( New )

 



NEW TIME TABLE -CLASS-1st TO 5th - Download here...


Std 2 to Std 5 - FIRST TERM GUIDE COLLECTIONS (PDF) - Tamil & English Medium

2nd STANDARD GUIDE  All Subject - Tamil Medium  - CLICK HERE


2nd STANDARD GUIDE  All Subject - English Medium - CLICK HERE



3rd STANDARD GUIDE  All Subject - Tamil Medium - CLICK HERE


3rd STANDARD GUIDE  All Subject - English Medium - CLICK HERE



4th STANDARD GUIDE All Subject - Tamil Medium  - CLICK HERE


4th STANDARD GUIDE  All Subject - English Medium - CLICK HERE



5th STANDARD GUIDE All Subject - Tamil Medium  - CLICK HERE


5th STANDARD GUIDE  All Subject - English Medium - CLICK HERE


Click here to Join WhatsApp group for Daily kalvi news

வகுப்பு 1 TO 5 SYLLABUS : TERM 1