1 முதல் 5 வகுப்புகளுக்கு ஜூன் 14 ஆம் தேதியும், 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜுன் 12ம் தேதியும், திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பின்படி
அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 வகுப்புகளுக்கு 14.06.2023 அன்று பள்ளிகள் திறக்கப்படும்.
எனவே, தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 5 வகுப்புகளைக் கையாளும் இடைநிலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை எனவும்,
ஆனால் வரும் 12.06.2023 அன்று 6 முதல் 10 ஆம் வகுப்பிற்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் நடுநிலைப்பள்ளியில் 6 முதல் 8 வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
நடுநிலைப்பள்ளி தலைமையாசியர்கள் வரும் 12.06.2023 மற்றும் 13.06.2023 ஆகிய இரு தினங்களுக்கு TNSED Attendance App இல் வருகைப்பதிவினை கீழ்க்கண்டவாறு குறிக்கப்பட வேண்டும்.
Today's status இல் Partially working என கொடுத்துவிட்டு working class இல் VI, VII, VIII மட்டும் தேர்வு செய்யவும்.
Teacher attendance App இல் 1 முதல் 5 வகுப்புகளைக் கையாளும் இடைநிலை ஆசிரியர்களுக்கு NA (Not Applicable ) என பதிவிடவும்.
மற்ற BT Assistant ஆசிரியர்களுக்கு வருகைப் பதிவினைக் குறிக்கவும்.
EMIS Team
Click here to join whatsapp group for daily kalvinews update