இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைகான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (NEET UG 2024) ஹால் டிக்கெட்டை இன்று (மே 1ஆம் தேதி) தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீட் தேர்வு மே 5, ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஹால் டிக்கெட் இன்று வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்ய இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
நீட் தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?
படி 1: தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்: https://nta.ac.in/
படி 2: "NEET UG 2024 அட்மிட் கார்டு"க்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.
படி 3: உங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு பின்னை உள்ளிடவும்.
படி 4: உங்கள் உள்நுழைவுச் சான்றுகளைச் சமர்ப்பித்து அட்மிட் கார்டைப் பதிவிறக்கவும்.
படி 5: எதிர்கால குறிப்புக்காக அட்மிட் கார்டின் நகலை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தேர்வு மையத்திற்கு செல்லுபடியாகும் புகைப்பட அடையாளச் சான்றிதழுடன் உங்கள் ஹால் டிக்கெட்டின் பிரிண்ட் அவுட்டை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.
ஹால் டிக்கெட்டில், தேர்வரின் பெயர், தேர்வு எண், தேர்வு தேதி மற்றும் நேரம், தேர்வு மைய முகவரி, தேர்வு நாளுக்கான முக்கிய வழிமுறைகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
ஹால் டிக்கெட் வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு தேசிய தேர்வு முகமை இணையதளத்தைப் பார்க்கவும். ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டதும் மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி டவுன்லோட் செய்துக் கொள்ளவும்.
🔻🔻🔻🔻
Click here to join whatsapp group for daily kalvinews update
0 Comments:
Post a Comment