Showing posts with label TRB. Show all posts
Showing posts with label TRB. Show all posts

Final Subject Wise Name List - Direct PG Through TRB - Year 2003!

TRB - Direct PGs - Subject Wise Name List as on 06.07.2003

TRB - BEO Requirement Notification - 5.6.2023

 TRB இன்று ( 05/06/2023 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - வட்டாரக் கல்வி அலுவலர் 2023 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை - பத்திரிக்கைச் செய்தி 


Direct Recruitment for the Post of Block Educational Officer in the Directorate of Elementary Education under Tamil Nadu Elementary Education Subordinate Service for the year 2019 2020 to 2021 2022


NOTIFICATION / ADVERTISEMENT


Applications are invited for Direct Recruitment from eligible candidates for the post of Block Educational Officer in the Directorate of Elementary Education Under Tamil Nadu Elementary Education Subordinate Service for the year 2019 – 2020 to 2021 – 2022 only through online mode upto 5.00 p.m. on 05.07.2023.


Important Dates


TRB - BEO Requirement Notification - 5.6.2023 - pdf Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TRB Teachers - Proposed Posting in District Model Schools

 

TRB Teachers - Proposed Posting in District Model Schools


தமிழ்நாட்டில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளில், TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களை மாற்றுப்பணியில் பணிபுரிய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

Model Schools_Teachers Deputation-21.04.2023 - Download here


Click here for latest Kalvi News 

இனி வெயிட்டேஜ் முறை கிடையாது; ஆசிரியர் நியமனத்தில் அரசு அதிரடி முடிவு

 'பள்ளி, கல்லுாரிகளில் ஆசிரியர் நியமன தேர்வில், 'வெயிட்டேஜ்' எனப்படும் கூடுதல் மதிப்பெண் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டாம்' என, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


கடந்த காலங்களில், ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., நடத்திய சில தேர்வுகளில் சர்ச்சைகள்ஏற்பட்டன. டி.ஆர்.பி.,யை சீரமைக்க அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரைகள் அடிப்படையில், பள்ளிக்கல்வி துறை செயலர் காகர்லா உஷா அரசாணை பிறப்பித்துள்ளார்.

அதன் விபரம்:


விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு அல்லது கணினி வழி தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தப்படும். ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மூத்த ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி நியமிக்கப்படுவார்


மாவட்ட வருவாய் அதிகாரி, துணை கலெக்டர், இணை இயக்குனர், துணை இயக்குனர் அந்தஸ்து உட்பட, 71 புதிய பதவிகள் உருவாக்கப்படும்.

ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் தலைவர், பள்ளிக் கல்வி இயக்குனர் அந்தஸ்தில் இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.


நிதித்துறை செயலர் அல்லது அவரது பிரதிநிதி, பள்ளிக்கல்வி கமிஷனர், தொழில்நுட்ப கல்வி இயக்குனர், கல்லுாரி கல்வி இயக்குனர் ஆகியோர், நிர்வாக குழுவில் இடம் பெறுவர்


போட்டி தேர்வுக்கு பின், சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு பதவிக்கு, 1.25 என்ற விகிதத்தில் தேர்வர்கள் அழைக்கப்படுவர்.


பள்ளிகள், கலை, அறிவியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் மட்டுமின்றி, இன்ஜினியரிங், சட்ட கல்லுாரிகள் மற்றும் அரசு பல்கலைகளுக்கான பேராசிரியர்களும், டி.ஆர்.பி., வழியாக தேர்வு செய்யப்படுவர்


'வெயிட்டேஜ்' ரத்து


நீதிமன்ற வழக்குகளை கையாள சட்ட மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும். வழக்குகளை விரைந்து முடிக்க, நிபுணத்துவம்பெற்ற வக்கீல்கள் குழுவின் ஆலோசனை பெறப்படும்


அனைத்து வகை போட்டி தேர்வுக்கான புத்தகங்களுடன், 'டிஜிட்டல்' நுாலகம் ஏற்படுத்தப்படும். அனைத்து பணி நியமன அமைப்புகளையும் இணைக்கும் மொபைல் செயலி உருவாக்கப்படும்


அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.,யை போன்று, டி.ஆர்.பி.,யிலும் இனி வெயிட்டேஜ் முறை அமல்படுத்தப்படாது.


போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அவர்களின் உயர் கல்வி அல்லது வேறு தகுதிகள் அடிப்படையில், கூடுதல் மதிப்பெண் வழங்கப்படாது


டி.ஆர்.பி., அமைப்பு வெளிப்படையாகவும், அரசின் ரகசியங்களை பாதுகாத்தும் செயல்பட வேண்டியுள்ளதால், அதற்கென தனி கட்டடம் மற்றும்வளாகம் அமைக்கப்படும். இதை திட்டமிட கமிட்டி உருவாக்கப்படும்.


இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

42 வயதுக்கு மேல் ஆசிரியர் பணிக்கு வாய்ப்பில்லை: புத்தாண்டில் அமலானது கல்வித்துறை உத்தரவு

 தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பொதுப்பிரிவில், 42 வயது வரை உள்ளவர்கள் தான், நேரடி ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை, நேற்று முதல் அமலுக்கு வந்தது.


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சீனியாரிட்டி மற்றும் டி.ஆர்.பி., என்ற ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், 58 வயது நிரம்பாதவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் கல்விப்பணியை முழுமையாக செய்ய முடியாது என்பதாலும், கல்வித்துறையில் சீர்திருத்தங்களை கொண்டு வரும் வகையிலும், பொதுப்பிரிவில், ஆசிரியர் பணி நியமனத்துக்கு 40 வயதும், இதர பிரிவுகளில், 45 வயதும் என நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா பிரச்னையால், ஆசிரியர் நியமனங்கள் நடக்கவில்லை.


அந்த காலகட்டத்தில், ஆசிரியர் நியமனத்துக்கான வயதை கடந்தவர்களின் நலன் கருதி, கடந்த, 2021ம் ஆண்டு செப்டம்பரில், கல்வித்துறை புதிய உத்தரவு வெளியிட்டது. அதன்படி, 2022 டிசம்பர் வரை, சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டும் அமலாகும் வகையில், ஆசிரியர் நியமனத்துக்கு பொதுப்பிரிவுக்கு, 40ல் இருந்து, 45 வயதாகவும், இதர பிரிவினருக்கு, 45ல் இருந்து, 50 வயதாகவும் உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று முன்தினத்தோடு இந்த உத்தரவுக்கான காலக்கெடு முடிந்து விட்டது.


கடந்த, 2021 செப்டம்பரில் வெளியிடப்பட்ட அரசு உத்தரவுப்படி, 2023ம் ஆண்டு, 1ம் தேதியில் இருந்து, ஆசிரியர் நேரடி நியமனத்துக்கான வயது வரம்பு, பொதுப்பிரிவுக்கு 42 ஆகவும், இதர பிரிவினருக்கு, 47 ஆகவும் நிர்ணயம் செய்யப்படுகிறது.


எனவே, இனி தமிழகத்தில், பொதுப்பிரிவில், 42 வயது முடியாதவர்களும், இதர பிரிவில், 47 வயது முடியாதவர்கள் மட்டுமே ஆசிரியர் பணி நேரடி நியமனத்துக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.


இந்த வயதை கடந்தவர்கள் ஆசிரியர் பணிக்கான படிப்பு முடித்திருந்தாலும், அது பயனில்லை என்ற நிலையும் உருவாகி உள்ளது.


 Click here to join whatsapp group for daily kalvinews update

ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வு - அரசாணை

 


தமிழ்நாடு மாநில பொதுப் பள்ளி கல்வி வாரிய பரிந்துரைக்கிணங்க ஆசிரியர் தகுதித் தேர்வினை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தனித் தேர்வாகவும் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கு பணிநாடுநர்களுக்கு போட்டித் தேர்வினை (Competitive Exam) தனியாகவும் நடத்துதல் – அரசாணை வெளியீடு.


GO NO : 149 , 20.07.2018 - Download here

15,149 காலியிடங்கள் - TRB - 2023 ஆம் ஆண்டுக்கான Annual Planner வெளியீடு!

 


2023-ல் உதவி பேராசிரியர், பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் தகுதி தேர்வு உள்ளிட்ட 9 தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2023-ல் 15,146 பணியிடங்களை நிரப்ப முடிவ செய்யப்பட்டுள்ளது. கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான 4000 பணியிடங்களுக்கு 2023 ஏப்ரலில் தேர்வு நடைபெறும். இடைநிலை ஆசிரியர்களுக்கான 6553 காலிப் பணியிடங்களுக்கு மே மாதம் தேர்வு நடைபெறும். பட்டதாரி ஆசிரியர்களுக்கான 3587 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடைபெறும். ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் 2 தேர்வு 2024 ஜனவரி மாதம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது

Assistant Professors in
Government Arts and Science Colleges & Colleges of Education - 4000

Block Educational Officer
(BEO) - 23

Secondary Grade Teachers (SGT) - 6553

BT Assistants (Graduate Teachers) - 3587

Lecturers in Government
Polytechnic Colleges - 493

Assistant Government
Professors in Engineering
Colleges - 97

Assistant Professors in
Government Law Colleges - 129

Post Graduate Assistants - 267

TRB SCERT & DIET Lectures - English Study Material ( Unit 7 )

 


TNSCERT & DIET Lectures Study Materials 

English  Unit 7 ( Indian English Literature ) Study Material - Srimaan Coaching Centre 


TNSCERT & DIET Lectures Study Materials 


English  Unit 7 ( Indian English Literature ) Study Material - Srimaan Coaching Centre - Download here


English Unit 2 ( Jacobean to Augustan Age ) Full Study Material - Kaviya Coaching centre - Download here


Physics Unit 6 ( Automic Molecular Physics ) Study Material - Srimaan Coaching Centre - Download here

Chemistry Unit 1 ( Analytical Techniques) Study Material - Srimaan Coaching Centre - Download here


English Unit 1 Full Study Material - Kaviya Coaching centre - Download here


English Study Material - Download here


Education Study Material - Kavin's - Download here



Click here to join whatsapp group for daily kalvinews update 

சிறப்பு ஆசிரியர்: தேர்ச்சி விபரம் வெளியீடு

 

சிறப்பு ஆசிரியர் பணிக்கான தேர்ச்சி பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.


சென்னை மாநகராட்சி பள்ளிகள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் மற்றும் சமூக பாதுகாப்புத்துறைக்கு, சிறப்பு ஆசிரியர் பணிக்கு, தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2017ல் போட்டி தேர்வு நடத்தப்பட்டது.


இதன் முடிவுகள், 2018ல் வெளியிடப்பட்டு, 2020ல் தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டது.


இதைத் தொடர்ந்து, கூடுதல் இடங்களுக்கான தேர்ச்சி பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. விபரங்களை, http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Click here to join whatsapp group for daily kalvinews update 

ஆசிரியர் பணி: பாடத்திட்டம் விரைவில் மாற்றம்

 

முதுநிலை ஆசிரியர் பணி தேர்வுக்கான பாடத்திட்டம், விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் ஆசிரியர் பணிகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக நியமனங்கள் மேற்கொள்ளப் படுகின்றன.


பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு முடித்திருக்க வேண்டும். முதுநிலை ஆசிரியர் பணிக்கு பி.எட்., படிப்புடன் முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதும். அவர்களுக்கு போட்டி தேர்வு நடத்தி, அதில் அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, இட ஒதுக்கீடு அடிப்படையில், பணி நியமனம் மேற்கொள்ளப்படும்.


இந்த போட்டி தேர்வுக்கான பாடத்திட்டம் உருவாக்கி, 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போதைய தொழில்நுட்ப மற்றும் கல்வி வளர்ச்சிக்கு ஏற்ப, பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.


இதற்காக, பாடத்திட்ட மாற்றம் குறித்து, அடுத்த மாதம் தேர்வு வாரிய ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதில், புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவது குறித்து, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.


 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

PGTRB - Geography REVISED LIST TRB Published.

  

Direct recruitment for the Post Graduate Assistant / Physical Education Director Grade 1 / Computer Instructor Grade 1 for the year 2020-21

Geography REVISED LIST - Download here

PGTRB பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம்!!!

 PGTRB பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 22 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நிலையில் பள்ளி மாணவர்களின் எதிர்கால கல்வி நலனை கருத்தில் கொண்டு அடுத்து வரக்கூடிய தேர்விற்கு Syllabus மாற்றம் குறித்த கலந்தாலோசனை கூட்டம் 14.11.2022 ல் நடைபெற உள்ளது. இதில் பாடத்திட்டத்தை முற்றிலும் புதிய வடிவில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அதிகப்படியான அலகுகளின் எண்ணிக்கையை குறைப்பது குறித்தும் பழைய கருத்துக்கள் நீக்கம் செய்யப்பட்டு  நடைமுறையில் உள்ள புதிய கருத்துக்களை இணைப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை செயலர் தெரிவித்துள்ளார்.

PGTRB - பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் பாட வாரியாக பணிநியமன ஆணை பெறுபவர்களின் எண்ணிக்கை!

 

பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் பாட வாரியாக பணிநியமன ஆணை பெறும் முதுகலை ஆசிரியர்களின் எண்ணிக்கை!


தமிழ் : 360

ஆங்கிலம் : 354

கணிதம் : 242

இயற்பியல் : 182

வேதியியல் : 262

தாவரவியல் : 165

விலங்கியல் : 184

வணிகவியல் : 584

பொருளியல் : 428

கணினி அறிவியல் : 55

புவியியல் : 21

வரலாறு : 138

மனையியல் : 3

அரசியல் அறிவியல் : 3

உடற்கல்வி இயக்குநர் : 63

மொத்தம் : 3044 (Backlog Vacancies : 195 + Current Vacancies : 2849)

 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

TRB 26.09.22 வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

 Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I - 2020 - 2021 - Revised provisional selection list-Mathematics (Sl.No 212 to 269)


TRB இன்று( 26.09.22) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு 


 Important notification issued by TRB today 26.09.22 - Download here


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

PGTRB - Botany & Computer Science - Provisionally Selection List published

 


PGTRB - Additional CV List Published

  Direct Recruitment for the post of Post GraduateAssistants for the year 2020-2021


ADDITIONAL CV LIST - Download here

ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு - TRB அறிவிப்பு.

 

முதுநிலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, வரும் 2ம் தேதி துவங்குகிறது.


இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:


அரசு பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுனர் பதவிகளுக்கு தேர்வுகள் முடிக்கப்பட்டுள்ளன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 2ம் தேதி முதல், 4ம் தேதி வரை நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கான அழைப்பு கடிதம், 48 மணி நேரத்துக்கு முன், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றப்படும்.


சம்பந்தப்பட்டவர் குறிப்பிட்ட நேரத்தில், தங்களின் அனைத்து அசல் சான்றிதழ்களுடன், சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு வர வேண்டும். அவற்றின் நகல்களும் வைத்திருக்க வேண்டும்.மொபைல் போன், கைப்பை அனுமதி கிடையாது. பெற்றோர், சிறார், உறவினர்களை அழைத்து வரக்கூடாது. வளாகத்தில் கூட்டம் சேரக்கூடாது. கூடுதல் விபரங்களை http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials

ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு - TRB அறிவிப்பு.

 

முதுநிலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, வரும் 2ம் தேதி துவங்குகிறது.


இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:


அரசு பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுனர் பதவிகளுக்கு தேர்வுகள் முடிக்கப்பட்டுள்ளன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 2ம் தேதி முதல், 4ம் தேதி வரை நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கான அழைப்பு கடிதம், 48 மணி நேரத்துக்கு முன், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றப்படும்.


சம்பந்தப்பட்டவர் குறிப்பிட்ட நேரத்தில், தங்களின் அனைத்து அசல் சான்றிதழ்களுடன், சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு வர வேண்டும். அவற்றின் நகல்களும் வைத்திருக்க வேண்டும்.மொபைல் போன், கைப்பை அனுமதி கிடையாது. பெற்றோர், சிறார், உறவினர்களை அழைத்து வரக்கூடாது. வளாகத்தில் கூட்டம் சேரக்கூடாது. கூடுதல் விபரங்களை http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

TRB- Direct Recruitment Senior Lecturer, Lecturer, Junior lecturer @ Diet & SCERT -Notification Released

 Screenshot_2022-08-20-20-28-48-77_e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f

  TRB- Direct Recruitment Senior Lecturer, Notification - Download here

Click here to join whatsapp group for TRB,TET Daily updates & studymaterials