Showing posts with label INSPIRE AWARD. Show all posts
Showing posts with label INSPIRE AWARD. Show all posts

2023-2024ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளி காமராஜர் விருது - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் !

 IMG_20231217_090219

2023-2024ஆம் ஆண்டிற்கான காமராஜர் விருது - காமராசர் பிறந்தநாள் - கல்வி வளர்ச்சி நாள் - தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.25000, நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.50000 சிறப்பு பரிசளிப்புத் திட்டம் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 

ந.க.எண்: 021374/ ஜே4/ 2023, நாள்: 07-12-2023...👇

Download here


 🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மாணவர்களுக்கு இளம் கவிஞர் விருது - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 பள்ளிக்கல்வி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சட்டமன்ற கூட்டத் தொடர் அறிவிப்பு எண் .110 இன்படி 2023-24 ஆம் ஆண்டிற்கான " இளம் கவிஞர் விருது " - கவிதைப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல்- வருவாய் மாவட்ட அளவில் 23.11.2023 அன்று கவிதைப் போட்டிகள் நடத்தி , அதில் சிறந்த ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியை தெரிவு செய்து விவரம் அனுப்பி வைக்கக் கோருதல் - தொடர்பாக . பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

DSE - Young Poet Award Proceedings - Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

Best School Award 2022_23 - Selected School List - All Districts - Director Proceedings

 2022_23 கல்வி ஆண்டு சிறந்த பள்ளிகளுக்கான கேடயங்கள் வழங்குதல் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

Best School Award 2022_23 - Selected School List - All Districts - Director Proceedings 👇

Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது மாநில தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா 05.09.2023 - DSE Proceedings

 IMG_20230903_075709

டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது மாநில தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா 05.09.2023 நடைபெறுதல் தகவல் தெரிவிக்க கோருதல் சார்பு

State Award 2022-2023 Proceedings - Download here





Dr Radhakrishnan Award 2023 - Selected Teachers List School Education Published

 


images(8)

Dr Radhakrishnan Award 2023 - Selected Teachers List 

திருச்சி மாவட்டம் - Download here

கிருஷ்ணகிரி மாவட்டம் - Download here

இராணிப்பேட்டை மாவட்டம் - Download here

திண்டுக்கல் மாவட்டம் - Download here

Other District list will be soon...

அனைத்து மாவட்டங்களை சேர்ந்த விருது பெறும் ஆசிரியர்கள் பட்டியல் உரிய முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல். பட்டியல் கிடைத்தவுடன் பதிவிடப்படும்.



இனி Mobile App மூலம் Inspire Award க்கு விண்ணப்பிக்கலாம் - Mobile App direct link

 


Screenshot_2023-08-15-21-53-21-31_b5a5c5cb02ca09c784c5d88160e2ec24

இனி Mobile App மூலம் Inspire Award க்கு விண்ணப்பிக்கலாம்...


Mobile App direct link👇👇👇

https://play.google.com/store/apps/details?id=space.shortsqueeze.inspire.inspire_scholarship




Click here to join whatsapp group for daily kalvinews update 


 Click here for latest Kalvi News 

Inspire Award 2023 - விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கவனத்திற்கு...

IMG_20230810_112054

Inspire Award 2023 - விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கவனத்திற்கு...


▪️மேலே உள்ள PDF File -யில் ஒருசில Model Innovation Idea உள்ளது . 


வழிகாட்டி ஆசிரியர்கள் இவற்றில் உள்ளது போல் வேறுசில innovation idea- ஐ விண்ணப்பிக்கும் போது upload செய்யவும்....


விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-08-2023


Idea-Competition.pdf - Download here  



Click here for latest Kalvi News 

இந்து தமிழ் திசை - அன்பாசிரியர் 2022 விருது

 


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ராம்ராஜ் காட்டன் வழங்கும் இந்து தமிழ் திசை - அன்பாசிரியர் 2022 விருது நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.


லட்சுமி செராமிக்ஸ், இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் ஆகியன இந்த விருதுகளை இணைந்து வழங்குகின்றன. வர்த்தமானன் பதிப்பகம், அன்னை வேளாங்கண்ணி கல்வி குழுமம், பொன்வண்டு டிடர்ஜெண்ட் நிறுவனம் ஆகியன நிகழ்வின் பங்குதாரராக இணைந்துள்ளன. ரேடியோ பார்ட்னராக ரேடியோ சிட்டி பங்கேற்க, விழாவுக்கான அரங்கத்தை ரஷ்ய கலாச்சார மையம் வழங்குகிறது.


மாணவர்களின் திறன் வளர்த்தல்: மாணவர்களுக்கு வழக்கமான பாடம் கற்பிப்பதோடு நின்றுவிடாமல், மாறுபட்ட சிந்தனை, புதுமை உணர்வோடு, மாணவர்களின் திறன்களை வளர்த்து, சமூக அக்கறை ஊட்டி, நற்பண்புகளை போதித்து, பள்ளியையும் மேம்படுத்தும் அர்ப்பணிப்பு மிக்க சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து, 2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் ‘அன்பாசிரியர்’ விருதுகள் வழங்கப்பட்டன.


‘முன்மாதிரி ஆசிரியர்’ விருது: மூன்றாம் ஆண்டாக ‘அன்பாசிரியர் 2022’ விருதுகள் சென்னையிலுள்ள ரஷ்ய கலாச்சார மைய அரங்கில் நாளை (ஜூலை 28-ம் தேதி வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு வழங்கப்படவுள்ளன.


இவ்விருதுக்கு தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 600-க்கும்மேற்பட்ட ஆசிரியர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். அதில் 350 ஆசிரியர்கள் முதல்கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இதில் தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு இறுதிச்சுற்று தேர்வு நடத்தப்பட்டு, மூத்த கல்வியாளர்கள் அடங்கிய தேர்வுக் குழு மூலம் 35 ஆசிரியர்கள் ‘அன்பாசிரியர் 2022’ விருது பெறவும், 6 ஆசிரியர்கள் ‘முன்மாதிரி ஆசிரியர்’ விருது பெறவும் தேர்வாகினர்.


தேர்வு செய்யப்பட்ட 41 ஆசிரியர்களுக்கு இன்று (ஜூலை 28-ம் தேதி வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஸ் பொய்யாமொழி விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றவுள்ளார். இவ்விழாவில் அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்கலாம்.

 Click here for latest Kalvi News 

புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது: பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு

 

மத்திய அரசின் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கு அரசுப் பள்ளிகள் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை விவரம்: நடப்பு கல்வியாண்டில் புத்தாக்க அறிவியல் மானக் விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான பதிவுகளை இணையதளத்தில் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், இதுவரை எவ்வித விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படாதது வருத்தமான செயலாகும்.


எனவே அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் வகுப்புக்கு ஒருவர் வீதம் 5 பேர், நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் வகுப்புக்கு ஒருவர் வீதம் 3 பேர் என்ற விகிதத்தில் தயார்செய்து http://www.inspireawards.dstgov.in/ என்ற இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதில் எந்தவொரு பள்ளியும் விடுபடக் கூடாது.


எனவே, அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் இந்த விருதுக்காகத் தேர்வான மாணவர்கள் மற்றும் பொறுப்பு ஆசிரியர் விவரங்களை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது சார்ந்து தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 Click here for latest Kalvi News 

INSPIRE AWARD விண்ணப்பிக்க தேவையானவை :

 


INSPIRE AWARD விண்ணப்பிக்க தேவையானவை

.

1.முதலில் பள்ளியின் U- DISE NUMBER யை update செய்யவும்.                   


2. 6 முதல் 10 வகுப்பு வரை அதிகபட்சமாக 5 மாணவர்களை தேர்வு செய்யவும். 

தேர்வு செய்யும் போது ஒரே வகுப்பிலிருந்து 5 மாணவர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.


(5 க்கும் குறைவான மாணவர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்)                

3. மாணவர்கள் விவரங்கள்.

🔸பெயர்

🔸பெற்றோர் பெயர்

🔸வகுப்பு

🔸ஆதார் எண்(not mandatory)

🔸கைபேசி எண்

🔸இனம்

🔸புகைப்படம்

(JPG,PNG FORMAT FILE SIZE 2MB)

🔸வங்கி கணக்கு புத்தகம். 


4.PROJECT விவரங்கள்.

Project topic (ஒவ்வொரு மாணவர்களுக்கும்)

JPG,PNG ,WORD ,PDF FORMAT FILE SIZE 2MB A4 SHEET கையால் எழுதியும் upload செய்து கொள்ளலாம்.

தமிழ் மொழி உட்பல பல மொழிகளில் project upload செய்து கொள்ளலாம்.

project photo copy upload additional( not mandatory.)

project audio, video upload FILE SIZE 5MB (not mandatory)

5.Guide teacher name and phone number  

6.HM name and phone number


7. இந்த 5 மாணவர்களை தேர்வு செய்ய காரணம் இதுபோன்ற தகவல்களை தயார்  நிலையில் வைத்துக்கொண்டு விண்ணப்பிக்கவும்.


8.Acknowledgement download செய்தபின் மாணவர்களின்  விவரங்களை திருத்தம் & மாற்றம் செய்ய இயலாது.ஆனால் உங்களது application rejected என நீங்கள் பதிவு செய்த பள்ளியின் e-mail முகவரிக்கு தகவல் வந்தால் அதன்பின் திருத்தம் & மாற்றம் & கூடுதலாக மாணவர்களை add செய்து கொள்ளலாம்.

அதன் பின் district forward செய்து மீண்டும் acknowledgement download செய்து கொள்ளலாம்.



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Inspire Award 2023 -2024 | புத்தாக்க அறிவியல் மானக் விருது விண்ணப்பித்தலுக்கான வழிமுறைகள் - CEO Proceedings

 


தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநரின் செயல்முறைக் கடிதம் மற்றும் இவ்வலுவலக கடிதத்தின்படி , 2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான புத்தாக்க அறிவியல் மானக் விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான பதிவுகளை இணைய தளத்தில் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளது தேதிவரை எவரும் பதிவேற்றம் செய்யப்படவில்லை இது மிகவும் வருந்தத்தக்கதாகும்.


 அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களில் வகுப்பிற்கு ஒருவர் வீதம் ( 5 ) ஐந்து மாணவர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்ப முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ , மாணவியர்களில் வகுப்பிற்கு ஒருவர் வீதம் ( 3 ) மூன்று மாணவர்கள் என விண்ணப்பங்கள் 31.08.2023 ஆம் தேதிக்குள் www.inspireawards.dstgov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்திடவும் மற்றும் இணைப்பில் உள்ள குறிப்புகளை தவறாது பின்பற்றிட வேண்டும்.


 தொடர்நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , எந்தவொரு பள்ளியும் விடுபடாமல் , அனைத்து நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உரிய எண்ணிக்கையிலான புதிய பதிவுகளை தவறாது மேற்கொள்வதை உறுதி செய்யவும் , பதிவுகள் சார்ந்த முன்னேற்ற அறிக்கையினை வாராந்திர அறிக்கையாக 24.07.2023 முதல் 28.08.2023 வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைத்து முழுமைப்படுத்திடவும்.


 தேனி மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக்கல்வி இடைநிலை தனியார் பள்ளி ) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்....


இணைப்பு

inspire award manaak - Ceo Proceedings - Download here

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் விபரம் சேகரிப்பு

 

தேசிய விருது பெற்ற ஆசிரியர்களின் ஒன்பது ஆண்டு பட்டியலை சேகரிக்குமாறு, கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழக பள்ளிக்கல்வியின் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, ஒருங்கிணைந்த கல்வி திட்ட மாநில இயக்குனர் ஆர்த்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அனைத்து மாவட்டங்களிலும், கடந்த, 2014ம் ஆண்டு முதல், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களின் பெயர் மற்றும் விபரங்களை சேகரித்து, பட்டியலாக அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:


மத்திய அரசின் கல்வித்துறை சார்பில், அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஒவ்வொரு மாநிலத்திலும், 2014ம் ஆண்டு முதல் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களின் விபரங்களை, தரவுகளாக சேகரிப்பதாக கூறப்பட்டுள்ளது.


நல்லாசிரியர் விருது பெற்றவர்களின் வழியே, பாடத்திட்டம், கற்பித்தல் முறை போன்றவற்றில் தரம் உயர்த்தும் பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


இவ்வாறு அவர்கள் கூறினர்.



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

இந்து நாளிதழ் - அன்பாசிரியர் 2022 விருது - விண்ணப்பிக்க அறிவிப்பு.

 

மாணவர்களுக்கு பாடங் களைக் கற்பிப் பதோடு நில்லாமல், மாறுபட்ட புதிய சிந்தனை யோடு, மாண வர்களின் திறன்களை வளர்த்து, சமூக அக் கறையை ஊட்டி, நற்பண்புகளைப் போதித்து, பள்ளியையும் மேம்படுத்தும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ராம்ராஜ் காட்டன்ஸ் சார்பில் ‘இந்து தமிழ் திசை - அன்பாசிரியர் 2022’ விருது வழங்கப்படவுள்ளது. 


இந்நிகழ்வை லெட்சுமி செராமிக்ஸ் மற்றும் இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் ஆகியன இணைந்து வழங்குகிறது. இந்த விருதினைப் பெற விரும்பும் ஆசிரியர்கள் வரும் ஜூன் 2-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


இவ்விருதினைப் பெற தகுதியுடைய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம். முன்னரே அன்பாசிரியர் விருது, மாநில, மத்திய அரசு வழங்கும் நல்லாசிரியர் விருது பெற்றவர்கள், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் விண்ணப்பிக்க வேண்டாம்.


இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தில் பதிவுசெய்து,சுய விவரக் குறிப்பு, சாதனைகள் அடங்கிய புகைப்படங்கள், வீடியோக்கள், ஊடக அங்கீகாரங்கள், ஆசிரியரின் நன்முயற்சிகளுக்குப் பிறகு மாணவர்களின் செயல்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவற்றுக்கான ஆதாரங்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 


பதிவான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ‘இந்து தமிழ் திசை’ அலுவலகத்தில் முதல் கட்ட நேர்காணல் விரைவில் நடைபெறவுள்ளது.


நேர்காணலுக்கு அழைக்கப்படும் ஆசிரியர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற விவரங்களையும் நேரில் கொண்டுவர வேண்டும். மண்டல அளவில் தேர்வாகும் ஆசிரியர்கள், மூத்த கல்வியாளர்கள் மூலம் இறுதிகட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 39 பேருக்கு ‘அன்பாசிரியர் 2022’ விருது வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 9843225389 என்ற கைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மாவட்ட வாரியாக சிறந்த 3 அரசு பள்ளிகளை தேர்வு செய்ய உத்தரவு

 தொடக்க கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை கல்வி பணியில் முன்னேற்றம் அடையச் செய்யும் விதமாக ஆண்டுதோறும் மாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து, மாவட்ட வாரியாக சுழற்கேடயங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், 2021-22-ம் கல்வி ஆண்டில் 114 பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.


அதன் தொடர்ச்சியாக, 2022-23-ம் கல்வி ஆண்டில் சிறந்தபள்ளிகளை தேர்வு செய்ய அந்தந்த மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் தலைமையில் 5 பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியில் இக்குழுவினர் ஆய்வு செய்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மேற்கொண்ட முயற்சி, உள்கட்டமைப்பு வசதி உள்ளிட்ட 15 பிரிவுகளில் தலா 10 மதிப்பெண் என 150 மதிப்பெண் அடிப்படையில் கணக்கிட வேண்டும்.


இதில் 135 முதல் 150 வரை, 112 முதல் 135 வரை, 112-க்கு கீழ் என 3 பிரிவுகளில் தர மதிப்பீடு வழங்கி, சிறந்த 3 அரசுப் பள்ளிகளை தேர்வு செய்ய வேண்டும். இப்பணிகளை துரிதமாக முடித்து, பரிந்துரை பட்டியலை வரும் ஏப்.26-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News 

கனவு ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு

 கனவு ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு


மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,


வாழ்த்துகள்! கனவு ஆசிரியர் 2023 இன் நிலை 2 இல் கலந்துகொள்ள நீங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள்.


மேலும் தகவலுக்கு 26/04/2023 அன்று இந்தப் பக்கத்தைப் பார்க்கவும்


வழக்கம் போல https://emis.tnschools.gov.in/auth/login என்ற இணையதளத்தில் தங்களின் user name password உள்ளீடு செய்து 3 lines click செய்து பிறகு kanavu aasiriyar contest click செய்து பார்த்து கொள்ளலாம்



Click here for latest Kalvi News 

கனவு ஆசிரியர் - 2023 முதல் நிலை தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் 22ம் தேதி வெளியிடப்படும் - TN EMIS

 கனவு ஆசிரியர் - 2023 முதல் நிலை தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் 22ம் தேதி அன்று வெளியிடப்படும் என EMIS இணையத்தில் கனவு ஆசிரியர் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது


Kanavu Aasiriyar - 2023 contest level-1 results will be published on April 22nd

 Click here for latest Kalvi News 

Inspire Award 2022 - 2023 | Selected Students List Published

Inspire Award Selected Students List 2022 - 2023


Government of India Ministry of Science & Technology, Department of Science & Technology


List of Selected Students under the INSPIRE Award Scheme for the Year 2022-23


Name of the State: Tamil Nadu


No. of Sanctioned: 733


Inspire Award 2022 - 2023 | Selected Students List PDF - Download here 


Click here to join whatsapp group for daily kalvinews update 

சிறந்த பள்ளிகளுக்கு விருது: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 முன்னாள் அமைச்சா் க.அன்பழகனின் பெயரில் சிறந்த பள்ளிகளுக்கு விருது அளிக்கப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.


Best School List 2020 - 2021 Published ( District wise...) - Download here...


இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டின் கல்வி வளா்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான முன்னாள் அமைச்சா் க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக அரசு சில அறிவிப்புகளை ஏற்கெனவே வெளியிட்டது. அதன்படி, பள்ளிக் கல்வித் துறையின் வளா்ச்சிக்கென ரூ.7,500 கோடியில் பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற மாபெரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, பள்ளிக் கல்வித் துறையில் ஐந்தாண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.


நிகழாண்டில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு எடுத்து வரும் பல்வேறு ஆசிரியா் மாணவா் நலன் சாா்ந்த செயல்பாடுகளால் அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வித் துறையின் வளா்ச்சிக்கும், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் கூடுதலாக சுமாா் ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


க.அன்பழகன் சிலை: முன்னாள் அமைச்சா் க.அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை ஆணையரக வளாகத்தில் (டிபிஐ) அன்பழகன் சிலை நிறுவப்படும். மேலும், அந்த வளாகம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகம் என அழைக்கப்படும். கற்றல் கற்பித்தல், ஆசிரியா் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவா் வளா்ச்சி என பன்முக வளா்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு முன்னாள் அமைச்சா் க.அன்பழகன் பெயரில் விருது அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.


டிசம்பா் 19-இல் பிறந்த தினம்: முன்னாள் அமைச்சா் க.அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த தின கொண்டாட்டம் கடந்த ஆண்டு டிசம்பா் 19-இல் தொடங்கியது. அப்போது, சென்னை நந்தனத்தில் உள்ள நிதித் துறை வளாகத்தில் மாா்பளவு சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். நிதித் துறை வளாகத்துக்கு பேராசிரியா் க.அன்பழகன் மாளிகை என பெயரையும் சூட்டினாா். க.அன்பழகன் எழுதிய 42 நூல்களை நாட்டுடைமையாக்கி அதன் மூலமாக உரிமத் தொகையை குடும்பத்தினரிடம் வழங்கினாா்.


பிறந்த தின நூற்றாண்டு கொண்டாட்டம் நிறைவடையவுள்ள நிலையில், பள்ளிக் கல்வி ஆணையரக வளாகத்துக்கு க.அன்பழகன் பெயா் சூட்டப்பட்டுள்ளதுடன், சிலை அமைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Best School List 2020 - 2021 Published ( District wise...)

 



2020-21 ஆம் ஆண்டுக்கான சிறந்த பள்ளிகள் பெயர் பட்டியல் வெளியீடு மாவட்ட வாரியாக

Best School List 2020 - 2021 Published ( District wise...) - Download here...


Dear BEOs the above ☝️list is the schools selected for best school awards under Elementary Education. The function will be on coming Saturday at Anna centenary library auditorium. I.e. on 3rd December. For each school one HM, one teacher and concerned BEO can attend the function. Please instruct concerned school Hms and BEO.


Click here to join whatsapp group for daily kalvinews update