ஆன்லைன் மூலம் ஆசிரியக் கல்விக்கு அங்கீகாரம்: தேசிய கவுன்சிலின் புதிய முயற்சி

உயர்க் கல்வி நிறுவனங்கள்/ ஆசிரியர் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் கல்விப் படிப்புகளை அங்கீகரிப்பது தொடர்பான ஒட்டுமொத்த செயல்முறையையும் ஒழுங்குமுறைபடுத்த ஆன்லைன் தளத்தை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (National Council for Teacher Education (NCTE)  தொடங்கியுள்ளது.



நாட்டில் ஆசிரியர் கல்வி வழிமுறையை ஒழுங்குபடுத்துவதற்காக 1993 வருட சட்டத்தின் கீழ் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் நிறுவப்பட்டது. மத்திய, மாநில உயர்க் கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி கல்வி நிறுவனங்களின் (DIETs) ஆசிரியர்ப் பாடங்களுக்கான அனுமதியை இந்த கவுன்சில் வழங்கி வந்தது.

இந்நிலையில், பாடங்களுக்கான விண்ணப்பக் கடிதம் பெறுவது  முதல் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது, ஆய்வு மற்றும் தணிக்கை செய்வது தொடர்பான அத்துணை செயல்முறைகளும் இந்த புதிய தளத்தில் செயலாக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

சமீபத்தில் தொடங்கப்பட்ட நான்காண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி ( 4 Year Integrated Teacher Education Program) படிப்புக்கான செயல்முறையும் இந்த தளத்தின் மூலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுளளது.

4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சி கல்வி அங்கீகாரம் பெறுவதற்கான அனைத்து நடைமுறைகளும் இந்த தளத்தில்  நடைபெறும். உயர்க்கல்வி நிறுவனங்கள்  https://ncte.gov.in/Website/admin_Panel.aspx). 'நிர்வாக உள்நுழைவு' மூலம் விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். ஆய்வு மற்றும் தணிக்கை செய்வது தொடர்பான விபரங்களை தளத்தில் உள்ள VT portal மூலம் பெற்றுக் கொள்ளலாம். 

இந்த தளம் என்சிடிஇ-யின் செயல்பாட்டில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டுவரும். இது தன்னியக்க வலுவான கட்டமைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தொழில் தொடங்குவது எளிதாக்கப்படும் என்றும் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் ஜூன் 13 முதல் மாணவா் சோ்க்கை

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை ஜூன் 13-ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு வருகிற ஜூன் 13-ஆம் தேதியும், பிளஸ் 2 வகுப்புக்கு ஜூன் 20-ஆம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு ஜூன் 27-ஆம் தேதியும் பள்ளிகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சில நாள்களுக்கு முன்பு தெரிவித்தாா்.


மேலும், மாணவா்கள் இணையதளம் வாயிலாக பள்ளித் திறப்பு, காலாண்டு, அரையாண்டுத் தோ்வுகள் எப்போது நடைபெறும் என்பதை பாா்த்துக்கொள்ள முடியும் என்றும், அதேபோல, விடுமுறை நாள்கள் எப்போது என்ற விவரங்களையும் அறிய முடியும் என்றும் அவா் தெரிவித்தாா்.


இந்த நிலையில், வரும் கல்வியாண்டில் 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை வரும் ஜூன் 13-ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.


கடந்த ஆண்டுகளில் கோடை விடுமுறையின்போதே அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடங்கிய நிலையில், வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகே புதிய மாணவா் சோ்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பெரும்பாலான தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தாமதமாகவே தொடங்கும் நிலை உருவாகியுள்ளது.

ITK - How to download and use Google Read Along Mobile App detailed explanation

ஜூன் 1 ஆம் தேதி முதல் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் அடுத்தக் கட்டமாக வாசிக்கும் திறனை மேம்படுத்தும் ரீடிங் மாரத்தான் நடைபெற உள்ளது. 

 இது Read Along செயலி மூலம் நடைபெறுகிறது. செயலி பதிவிறக்கம் மற்றும் பயன்பாடு குறித்து கீழே உள்ள லிங்கில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.



How to download and use Google Read Along Mobile App detailed explanation - Download here...

கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமைச் செயல் அதிகாரியை (சிஇஓ) நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு - விண்ணப்பிக்க அழைப்பு!

கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமைச் செயல் அதிகாரியை (சிஇஓ) நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கு அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை 5 முதல் 8 ஆண்டுகள் நடத்திய முன் அனுபவம் உள்ள நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் சிஇஓ பணிக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 


தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (எஸ்சிஇஆர்டி), கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு, பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு தொலைதூரக் கல்வி வாய்ப்புகளை வழங்கி, கல்வி தொலைக்காட்சியை நடத்தி வருகிறது. 


கரோனா நோய்த்தொற்றுகளின் போது தமிழ்நாட்டில் பள்ளிகள் இணையவழியில் செயல்பட்டு வந்த நேரத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கற்றல் குறைபாட்டை போக்கவும், கற்றல்-கற்பித்தல் பணிகளை வீடுகளுக்கே சென்று மேற்கொள்ளவும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு உதவிடும் வகையில், கடந்த 2019 ஆம் ஆண்டு கல்வித் தொலைக்காட்சி உருவாக்கப்பட்டது. 


இதில், நாள்தோறும் வகுப்பு வாரியாக ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தும் விடியோக்கள் ஒளிபரப்பப்பட தொடங்கி, இன்றுவரை அவரை ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.


இதனிடையே, கல்வித் தொலைகாட்சி தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், போட்டித்தேர்வர்களுக்கு ஏற்ற வகையில் மறுகட்டமைப்புக்கு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 


இந்நிலையில், கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமைச் செயல் அதிகாரியை (சிஇஓ) நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கு அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் தயாரிப்பு மற்றும் நிர்வாகத்தில் குறைந்தபட்சம் 5 முதல் 8 ஆண்டுகள் நடத்திய முன் அனுபவம் உள்ள நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் சிஇஓ பணிக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 


எலக்ட்ரானிக் மீடியா, விசுவல் கம்யூனிகேஷன், கல்வி தொழில்நுட்ப ஊடகத்தில் பட்டம் பெற்றிருப்பதுடன், எழுத்து மற்றும் பேச்சுத் தமிழ் பற்றிய அறிவு. சிறந்த தகவல் தொடர்பு திறன்,கணிகளை கையாளும் திறன், நடைமுறைக்கேற்ற அனைவரும் விரும்பும் வகையிலான நிகழ்ச்சிகளை வடிவமைக்கும் திறன், நிர்வாகத்திறன், ஊடக வணிக திறன். விளம்பர வணிக வளர்ச்சி போன்றவற்றில் கூடுதல் திறன் பெற்றிருக்க வேண்டும்.  


தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://forms.gle/KPvFRsK5JHwf9gd68  என்ற தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். 


தகுதியான விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் நேர்முகத் தேர்வு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


STEM-Training Activities-Handbook

The activity instructions and worksheets presented here were developed by Illinois Valley Community College faculty and are based upon work supported by the National Science Foundation under grant # 0802505 . Any opinions , findings , and conclusions or recommendations expressed in this material are those of the IVCC faculty and do not necessarily reflect the views of the National Science Foundation.

STEM-Training  Activities-Handbook- Science - Download here

இல்லம் தேடிக் கல்வி மையங்களில் வாசிக்கும் திறனை மேம்படுத்த ரீடிங் மாரத்தான் ( ஜூன் 1 - 22 )

இல்லம் தேடிக் கல்வியில் ஒரு மைல்கல். 


வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை இல்லம் தேடிக் கல்வி மையங்களில் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் ரீடிங் மாரத்தான் நடைபெற உள்ளது.


இதில் கலந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?



Step 2 :  ரீடிங் மாரத்தானில் கலந்து கொள்ள Read Along டவுன்லோட் செய்யுங்கள்:https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.seekh&referrer=inapp


Step 3: கூகுள் செயலி பயன்படுத்த அனுமதி அளியுங்கள்.

 தமிழ் +English மொழியைத் தேர்ந்தெடுக்கவும்


Step 4: தியா சொல்லும் சொற்றொடரைப் படிங்யுங்கள். 

யார் இந்த தியா ? 


Step 5: நூலகத்தை பார்வையிடுங்கள். 

உங்கள் குழந்தைகளுக்கான ஆச்சரியமூட்டும் கதைகள் காத்திருக்கின்றன.


Step 6: உங்களது வட்டாரத்திற்கான யூனிக் கோட் ஐ இங்கு பதிவு செய்ய வேண்டும். 

இது கட்டாயம். 

உங்கள் வட்டாரத்திற்கான யூனிக் கோட் தெரியுமா ? 

 🙄 Ex : TN332115

Step 8: Copy your block code from your district list.

Step 9: கூட்டாளர் குறியீடுகள் என்ற மெனுவை டைப் செய்யவும்.

Step 10: கூட்டாளர் சேர்த்தல் என்ற பட்டனை தட்டவும்.


Block Level Ennum Ezhuthum Training - Time Schedule - வட்டார அளவில் எண்ணும் எழுத்து பயிற்சி - கால அட்டவணை

வட்டார அளவில் எண்ணும் எழுத்து பயிற்சி – கால அட்டவணை





ஆதரவற்ற மாணவர்களுக்கு படிப்பு, தங்குமிடம் அனைத்தும் இலவசம் - இராமகிருஷ்ண மிஷன் அறிவிப்பு

பெற்றோரை இழந்த ஆதரவற்ற மாணவர்களுக்கு படிப்பு, தங்குமிடம், உணவு, உடை உள்ளிட்ட அனைத்தும் இலவசம் என இராமகிருஷ்ண மிஷன் அறிவித்துள்ளது.

தாய், தந்தையை இழந்த ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்கு சென்னை மயிலாப்பூர் இராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் தங்குமிடத்துடன் இலவசக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக கல்வி சேவையில் ஈடுபட்டு வரும் மாணவர் இல்லத்தில் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 6ம் வகுப்பிலும்,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு டிப்ளமோ படிப்பில் சேரவும் , 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 2 ஆம் ஆண்டிலும் கல்வி கற்க தகுதிபெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இங்கு உணவு, தங்குமிடம், கல்வி ஆகிய அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என சென்னை மயிலாப்பூரில் உள்ள இராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் அறிவித்துள்ளது.

விருப்பமுள்ளவர்கள் www.rkmshome.org.in/admissions என்ற இணையதளத்தை அணுகலாம் அல்லது 044 - 24990264, 044 - 42107550 என்ற எண்களுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BC Head - Pay order Month of May

மேல்நிலைத் தேர்வு முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மைய மதிப்பீட்டுப் பணிகளுக்கான கையேடு மே 2022




மேல்நிலைத் தேர்வு முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மைய மதிப்பீட்டுப் பணிகளுக்கான கையேடு மே 2022

Paper Valuation Camp Guide May 2022 Pdf - Download here

கற்றல் அடைவுத் திறன் தேசிய சராசரியைக் காட்டிலும் தமிழக மாணவர்களின் கற்றல் திறன் சற்று குறைந்துள்ளது

தேசிய சராசரியைக் காட்டிலும் தமிழக மாணவர்களுடைய கற்றல் அடைவுத் திறன் சற்று   குறைந்துள்ளது. மத்திய அரசின் National assessment survey புள்ளிவிவரங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது.

கற்றல் அடைவுத் திறன் புள்ளிவிவரங்களில் தமிழக மாணவர்கள் சில பாடங்களில் தேசிய சராசரிக்கு  இணையாகவும், சிலவற்றில் தேசிய சராசரியைக் காட்டிலும்  அதிக சதவீதத்தையும் பெற்றுள்ளனர்.

கற்றல் அடைவு திறன் குறித்து தேசிய அளவில் மத்திய கல்வி அமைச்சகம் நாடு முழுவதும் கடந்த நவம்பர் மாதத்தில் ஆன்லைன் வாயிலாக நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம்  இந்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வகையில்
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கடந்த ஆண்டு இந்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டது.   தமிழகத்தில் 4145 பள்ளிகளில் 19100 ஆசிரியர்களிடம் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 253 மாணவர்களிடம் மொழிப்பாடம் கணிதம் சமூக அறிவியல் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பாடங்களில் மாணவர்களின் கற்றல் அடைவு திறன் குறித்த விபரங்கள் பெறப்பட்டது.

தமிழக மாணவர்கள் இவற்றில் முன்னிலை:
மூன்றாவது படிக்கும் மாணவர்களில்  46 சதவீத மாணவர்கள் கணித பாடத்தில் ஆயிரம் எண்கள் வரை எழுதவும் படிக்கவும் தெரிந்தனர். இது தேசிய சராசரியை காட்டிலும் அதிகமாகும்.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலத்தில் புரிந்து கொள்வதும் எழுதுவதிலும் சிக்கலான வார்த்தைகளை அறிந்து வைத்திருப்பதிலும் தேசிய சராசரி க்கு இணையாக உள்ளனர். அந்த வகையில் தேசிய சராசரி 43 சதவீதத்தை தமிழக மாணவர்கள் எட்டியுள்ளனர்

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் தமிழகத்தின் சராசரி தேசிய சராசரியைக் காட்டிலும் அதிகமாக உள்ளது வரலாற்று நிகழ்வுகள் மற்றும் வரலாற்றின் கால நிகழ்வுகளை வேறுபடுத்துவதில்  தமிழக மாணவர்கள் முன்னிலை பெற்றுள்ளனர் அந்த வகையில் தமிழகத்தின் சராசரி 38 சதவீதமாகவும் தேசிய சராசரி 37 சதவீதமாகவும் உள்ளது.
எதில் குறைவு:  
10ம் வகுப்பில் 16% மாணவர்கள் மட்டுமே தினசரி வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை எண்களைக் கொண்ட தீர்ப்பதில் முன்னிலை பெற்றுள்ளன.
10ம் வகுப்பு மாணவர்களுள் அறிவியல் பாடத்தில் 85% தமிழக மாணவர்கள் அடிப்படை அறிவியல் அறிவில்  குறைவாக உள்ளனர். 13 சதவிகிதத்தினர் மட்டுமே அடிப்படை அறிவியல் பாட அறிவை பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
3  சதவீத ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே மொழிப்பாடத்தில் எழுத படிக்கும் வகையில் திறன்  பெற்று உள்ளனர். 27 சதவீத மாணவர்கள் சுற்றுப்புறச்சூழல் அறிவியல் பாடத்திலும் 21சதவிகித மாணவர்கள் கணித பாடத்திலும்  திறன் பெற்றவர்களாக உள்ளனர்.

மாணவர்களுடைய கற்றல் அடைவுத் திறன் குறைந்ததற்கு கொரொனொ தாக்கம் காரணமாக அமைந்துள்ளது.




CAPACITY-BUILDING- COURSE- Tentative KEY ANSWERS

CLICK HERE TO VIEW -CAPACITY BUILDING COURSE-2- KEY 👇


CLICK HERE TO VIEW -CAPACITY BUILDING COURSE-3- KEY 👇


CLICK HERE TO VIEW- Capacity Building course -4 key   👇



CLICK HERE-To view capacity Building training key -5 👇



Click here to view capacity building training key-6  👇



பள்ளிப் பதிவேடுகளை கணினிமயமாக்குதல் , தேவையற்ற பதிவேடுகள் நீக்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்


பள்ளிப் பதிவேடுகள் அனைத்தும் கணினிமயமாக்குதல் (முதற்கட்டமாக 30 பதிவேடுகள்) மற்றும் தேவையற்ற பதிவேடுகள் நீக்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

30 பதிவேடுகள் பட்டியல் : 



 (Proceedings of the School Education Commissioner for computerization of all school records (initially 30 records) and deletion of unwanted records) - Download here

Calendar for teachers professional development -2022-23

 

Calendar for teachers professional development -2022-23

2022-23 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி மாத நாட்காட்டி - ஜூன் முதல் ஏப்ரல் மாதம் வரை - அனைத்து மாதங்களுக்கும்- pdf file


2022-23 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி மாத நாட்காட்டி - ஜூன் முதல் ஏப்ரல் மாதம் வரை - அனைத்து மாதங்களுக்கும்- pdf file