கற்றல் அடைவுத் திறன் தேசிய சராசரியைக் காட்டிலும் தமிழக மாணவர்களின் கற்றல் திறன் சற்று குறைந்துள்ளது

தேசிய சராசரியைக் காட்டிலும் தமிழக மாணவர்களுடைய கற்றல் அடைவுத் திறன் சற்று   குறைந்துள்ளது. மத்திய அரசின் National assessment survey புள்ளிவிவரங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது.

கற்றல் அடைவுத் திறன் புள்ளிவிவரங்களில் தமிழக மாணவர்கள் சில பாடங்களில் தேசிய சராசரிக்கு  இணையாகவும், சிலவற்றில் தேசிய சராசரியைக் காட்டிலும்  அதிக சதவீதத்தையும் பெற்றுள்ளனர்.

கற்றல் அடைவு திறன் குறித்து தேசிய அளவில் மத்திய கல்வி அமைச்சகம் நாடு முழுவதும் கடந்த நவம்பர் மாதத்தில் ஆன்லைன் வாயிலாக நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம்  இந்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வகையில்
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கடந்த ஆண்டு இந்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டது.   தமிழகத்தில் 4145 பள்ளிகளில் 19100 ஆசிரியர்களிடம் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 253 மாணவர்களிடம் மொழிப்பாடம் கணிதம் சமூக அறிவியல் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பாடங்களில் மாணவர்களின் கற்றல் அடைவு திறன் குறித்த விபரங்கள் பெறப்பட்டது.

தமிழக மாணவர்கள் இவற்றில் முன்னிலை:
மூன்றாவது படிக்கும் மாணவர்களில்  46 சதவீத மாணவர்கள் கணித பாடத்தில் ஆயிரம் எண்கள் வரை எழுதவும் படிக்கவும் தெரிந்தனர். இது தேசிய சராசரியை காட்டிலும் அதிகமாகும்.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலத்தில் புரிந்து கொள்வதும் எழுதுவதிலும் சிக்கலான வார்த்தைகளை அறிந்து வைத்திருப்பதிலும் தேசிய சராசரி க்கு இணையாக உள்ளனர். அந்த வகையில் தேசிய சராசரி 43 சதவீதத்தை தமிழக மாணவர்கள் எட்டியுள்ளனர்

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் தமிழகத்தின் சராசரி தேசிய சராசரியைக் காட்டிலும் அதிகமாக உள்ளது வரலாற்று நிகழ்வுகள் மற்றும் வரலாற்றின் கால நிகழ்வுகளை வேறுபடுத்துவதில்  தமிழக மாணவர்கள் முன்னிலை பெற்றுள்ளனர் அந்த வகையில் தமிழகத்தின் சராசரி 38 சதவீதமாகவும் தேசிய சராசரி 37 சதவீதமாகவும் உள்ளது.
எதில் குறைவு:  
10ம் வகுப்பில் 16% மாணவர்கள் மட்டுமே தினசரி வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை எண்களைக் கொண்ட தீர்ப்பதில் முன்னிலை பெற்றுள்ளன.
10ம் வகுப்பு மாணவர்களுள் அறிவியல் பாடத்தில் 85% தமிழக மாணவர்கள் அடிப்படை அறிவியல் அறிவில்  குறைவாக உள்ளனர். 13 சதவிகிதத்தினர் மட்டுமே அடிப்படை அறிவியல் பாட அறிவை பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
3  சதவீத ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே மொழிப்பாடத்தில் எழுத படிக்கும் வகையில் திறன்  பெற்று உள்ளனர். 27 சதவீத மாணவர்கள் சுற்றுப்புறச்சூழல் அறிவியல் பாடத்திலும் 21சதவிகித மாணவர்கள் கணித பாடத்திலும்  திறன் பெற்றவர்களாக உள்ளனர்.

மாணவர்களுடைய கற்றல் அடைவுத் திறன் குறைந்ததற்கு கொரொனொ தாக்கம் காரணமாக அமைந்துள்ளது.




0 Comments:

Post a Comment