+1 & +2 விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் - அட்டவணை வெளியீடு!!!
DOWNLOAD PDF மதிப்பீட்டு முகாம் - அட்டவணை
Education and Information
+1 & +2 விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் - அட்டவணை வெளியீடு!!!
DOWNLOAD PDF மதிப்பீட்டு முகாம் - அட்டவணை
Click here for latest Kalvi News
மார்ச் / ஏப்ரல் 2023 , மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள முதன்மைவிடைத்தாட்கள் , முகப்புத்தாட்களை உதவி இயக்குநர்கள் 20.02.2023 முதல் 23.02.2023 வரையிலான நாட்களில் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களுக்கு வழங்கி தைக்கும் பணியினை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் , மார்ச் ஏப்ரல் 2023 , மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள முதன்மை விடைத்தாட்களின் வகைகள் மற்றும் முதன்மை விடைத்தாளுடன் வைத்து தைக்க வேண்டிய வரைகட்டத்தாள். வரைபடங்கள் விவரம் ஆகியவை தேர்வு மையங்களுக்கு வழங்கும் பொருட்டு இத்துடன் இணைத்தனுப்பி வைக்கப்படுகிறது.
+1 - 2023 TOP SHEET Stitching.pdf - Download here...
பொதுத்தேர்வு எழுதவுள்ள 11ம் வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி 10ம் தேதிக்குள் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்: தேர்வுத்துறை அறிவிப்பு
பொதுத்தேர்வு எழுதவுள்ள 11ம் வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி 10ம் தேதிக்குள் தங்களது விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு, 11ம்வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 2022 - 2023ம் கல்வியாண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 13.03.2023 தொடங்கி, 03.4.2023 வரை நடைபெறவுள்ளது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந்தேதி வரையில் நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 -ந்தேதி தொடங்கி ஏப்ரல் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் 11 வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்களது விவரங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், “ 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்சில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் தற்போது தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) வெளியிடப்பட்டது. அதில் மாணவர்களின் விவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை பிப்.10-க்குள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும். இதில், உரிய வழிமுறைகளை பின்பற்றி கூடுதல் கவனத்துடன் செய்து முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலை இன்று (24.01.2023) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு என தேர்வுத்துறை அறிவிப்பு.
சென்னையில் உள்ள பாரத சாரண, சாரணியர் இயக்க மாநிலத் தலைமை அலுவலகத்தில் சாரண, சாரணியர் இயக்க புரவலரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தேசியக் கொடி ஏற்றினார்.
இதனைத் தொடர்ந்து சாரண, சாரணியர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், " சிக்கனமாக, ஒழுக்கமாக, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கு சாரண, சாரணியர்கள் ஓர் உதாரணம். ராணுவக் கட்டுப்பாடுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சாரண, சாரணியருக்கு வாழ்த்துகள். நிலாவில் கால் வைத்தவர்களில் 11 பேர் சாரண, சாரணியர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்" என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்," கல்வித் தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரி ஆர்எஸ்எஸ் பின்புலத்தைச் சேர்ந்தவரா என்பதை விட, அவருடைய செயல்பாடுகள் சரியாக உள்ளதா என்பதே முக்கியம். ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் நுழைந்துவிடாதபடி அரசு எச்சரிக்கையாகவே உள்ளது.
11 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைமுறை தொடரும். அதில் குழப்பம் வேண்டாம். தனியார் பள்ளிகள் முறையாக நடத்தப்படவில்லை என்ற காரணத்தால்தான் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முறையே கொண்டு வரப்பட்டது" என்று கூறினார்.
Click here to Join WhatsApp group for Daily kalvi news
11th Std All Subjects Monthly Syllabus June to April 2022-2023
Click here to download pdf file
Click here to Join WhatsApp group for Daily kalvi news