Showing posts with label leave. Show all posts
Showing posts with label leave. Show all posts

மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?

 



தமிழகத்தில் கோடை விடுமுறை இன்று முதல் தொடங்குகிறது. இரண்டு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டதால் இவ்வளவு நாட்கள் தாமதமானது. தேர்வு அட்டவணையின் படி நடந்திருந்தால் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு (ஏப்ரல் 19) முன்பாகவே அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருக்கும். ரமலான் பண்டிகை விடுமுறை காரணமாக 4 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 22 - அறிவியல், ஏப்ரல் 23 - சமூக அறிவியல் என்று மாற்றப்பட்டது.


கோடை விடுமுறை தொடக்கம்


இதில் ஒரு தேர்வு முடிவடைந்து விட்டது. இன்றைய தினம் கடைசி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை (ஏப்ரல் 24) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதேசமயம் வரும் 26ஆம் தேதி வரை ஆசிரியர்களுக்கு பணி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய கல்வியாண்டு


இவர்கள் அனைவருக்கும் முன்கூட்டியே கோடை விடுமுறை தொடங்கியது கவனிக்கத்தக்கது. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை ஏப்ரல் முதல் வாரத்திலேயே ஆண்டு இறுதித் தேர்வுகளை நிறைவு செய்து விடுமுறை அறிவித்துவிட்டன. தற்போது புதிய கல்வியாண்டிற்கான திட்டமிடல்கள் தொடங்கியுள்ளன.


முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை


பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணிகள், பள்ளி ஆய்வகங்களுக்கு தேவையான பொருட்கள், வகுப்பறைகள் பராமரிப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி பலரிடமும் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி பள்ளிக் கல்வித்துறை தரப்பினர் கூறுகையில், கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 6ஆம் தேதி வியாழன் அன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.


மீண்டும் பள்ளிகள் திறப்பு


இதற்கேற்ப வெளியூர் பயணங்களை பலரும் திட்டமிட்டு வருகின்றனர். அதேசமயம் கடந்த ஆண்டை போல கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகவும் வாய்ப்பிருக்கிறது. தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதேநிலை தொடர்ந்தால் ஜூன் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்திற்கு பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என்கின்றனர்.


வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும்.

இந்நிலையில், இந்த ஆண்டு வெயில் மிகவும் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறப்பில் காலதாமதம் ஏற்படலாம் எனத் தெரிகிறது.



மேலும், மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறுவதால், அதற்கு பின்னரே பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளது.


அதேநேரம், தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 6 ஆம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க அறிவுறுத்தல்

 


1234750

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வு ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், ஆண்டு இறுதி தேர்வும் இன்றுடன் (ஏப்.23) நிறைவு பெற உள்ளது. இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது.


இந்த சூழலில், கோடைகால விடுமுறை நாட்களில் சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், தொடர்ந்து நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கல்வித் துறைக்கு புகார்கள் வந்துள்ளன.


இதையடுத்து, அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித் துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், அது மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் புகார்கள் பெறப்பட்டுள்ளன.


எனவே, அனைத்து பள்ளிகளும் கோடைகால விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும். அந்த நாட்களில் சிறப்பு வகுப்புகளுக்கு வருமாறு மாணவர்களுக்கு அழுத்தம் தரக்கூடாது. இந்த உத்தரவை பள்ளிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தவறினால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளிகளுக்கு எச்சரிக்கை!!!

 கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...



மாண்புமிகு முதல்வர் தனிப்பிரிவில் 14417 - ல் பெறப்பட்ட புகார் மனுவில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகவும் , இதனால் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் புகார் பெறப்பட்டுள்ளது. 


இப்புகார் சார்பாக அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்குமாறும் , மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வரவழைக்க அழுத்தம் தரக் கூடாது என்றும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.


மேற்கூறப்பட்ட ஆணையை தவறாது கடைபிடிக்க வேண்டும் என்றும் , தவறினால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் அனைத்து வகைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

இந்த வாரம் - பள்ளி வேலை நாள்கள்

 இந்த வாரம் பள்ளி வேலை நாள்கள்


*22-04-2024 - திங்கள் - அறிவியல்


*23-04-2024-செவ்வாய்- சமூக அறிவியல் தேர்வு.


*வருகைப் பதிவு -- PARTIALLY WORKING.

 

*23-04-2024 - செவ்வாய் - மதுரை, தேனி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை... பிற மாவட்டங்களுக்கு அன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெறும்.


*மதுரை, தேனி மாவட்டங்களுக்கு 25-04-2024,

*26-04-2024.... இரு நாட்களும் ( பிற மாவட்டங்களுக்கு 24,25,26 தேதி )-- FULLY NOT WORKING...


*26-04-2024- வெள்ளி -- கல்வி ஆண்டின்  பள்ளி இறுதி வேலை நாள்..



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?

 




தமிழகத்தில் பல்வேறு வகுப்புகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் இவர்களுக்கான பள்ளிகள் திறப்பு எப்போது என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. 


இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழக அரசு இன்னும் வெளிவிடாத நிலையில் சில தனியார் பள்ளிகள் அடுத்த கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு எப்போது என்பது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு:


தமிழகத்தில் தற்போது 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்துள்ளது. அதற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ரமலான் பண்டிகை மற்றும் தேர்தல் நடைபெறும் காரணங்களுக்காக தற்போது ஒன்பது நாட்கள் தொடர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. 


இவர்களுக்கு மிஞ்சியுள்ள பாடங்களுக்கான பொது தேர்வுகள் ஏப்ரல் 23,24 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. அதன் பின் அவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட உள்ளது. 


மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இந்நிலையில் அனைவர் மத்தியிலும் ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் சில தனியார் பள்ளிகள் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், எல்.கே.ஜி யு.கே.ஜி வகுப்புகளுக்கு ஜூன் 17ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. 


மேலும் இவ்வாண்டு கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகளின் திறப்பு மேலும் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.


தமிழகத்தில் அரசு பள்ளிகள் திறப்பு அறிவிப்புகள் தேர்தல் முடிந்த பின்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அதன் பின் பள்ளிகள் திறப்பதற்கான தேதி, அப்போது உள்ள வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கோடை விடுமுறை - குழந்தைகளை மகிழ்ச்சியாக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது?

 


கோடை விடுமுறை வந்தாலே குழந்தைகளுக்குக் குதூகலம் தான். அதே சமயம் பெற்றோர்களுக்கு வழக்கத்தை விட வேலைப்பளு மிகவும் அதிகமாக இருக்கும். இதோடு  குழந்தைகளை அதிக நேரம் சமாளிப்பது என்பது ஒவ்வொரு பெண்களுக்கும் பெரும் சவாலாக அமையும். 


இதனால் சில நேரங்களில் மிகவும் கடுப்பாகி பெற்றோர்கள் குழந்தைகளைத் திட்டிவிடுவார்கள். இந்த சூழலை மாற்றவும், குழந்தைகளை கோடை விடுமுறை நாட்களில் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.


தெளிவான எதிர்பார்ப்புகளை அமைக்கவும்:

குழந்தைகளின் விடுமுறை நாட்களில் கூட என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் அழைப்பில் இருக்கும்போது அல்லது பிஸியாக வேலை செய்யும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை பெற்றோர்கள் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இது போன்ற விஷயங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் போது எந்த சூழலிலும் அவர்கள் பிஸியாக இருப்பார்கள். இதுவே அவர்களை மகிழ்ச்சியாக்க உதவியாக இருக்கும்.


விளையாட்டு அறையை அமைக்கவும்:

குழந்தைகள் விளையாடுவதற்கு பிரத்யேக இடத்தைக் கொண்டிருக்கும் போது கோடை விடுமுறைகள் பெற்றோருக்கு மிகவும் சுலபமாக அமையும் .குழந்தைகள் தங்கள் பொம்மைகளுடன் எந்தவித குறுக்கீடுகள் இல்லாமல் விளையாடக்கூடிய பாதுகாப்பான இடத்தைத் தேர்வு செய்யுங்கள். வீட்டிற்குள்ளே விளையாடுவதற்கு ஏற்ற இடங்களை அமைக்கும் போது எல்லையற்ற சந்தோஷத்தை நிச்சயம் குழந்தைகள் அடைவார்கள்.


கோடைகால இலக்குகளை அமைக்கவும்:

கோடையில் தங்கள் குழந்தைகளுடன் அடைய விரும்பும் குறிப்பிட்ட இலக்குகளை பெற்றோர்கள் சிந்திக்கலாம். எதிர்கால நலன்களைக் கருதி குழந்தைகளுக்கு ஓவியம், கராத்தே, சிலம்பம், தட்டச்சு, கணினி பயிற்சி போன்ற விஷயங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கவும். இது குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்துவதோடு எதிர்காலத்திற்கு ஏதாவது ஒரு வகையில் பயனுள்ளதாக அமையும். 


குழந்தைகள் கவனிப்பு:

நம் நாட்டில் நடக்கும்  விஷயங்களைப் பற்றி சிறு வயதில் இருந்தே குழந்தைகள் தெரிந்துக் கொள்ள வேண்டும். எனவே அதற்கு ஏற்றார் போல் விளையாட்டின் மூலமாக குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க மறந்து விடாதீர்கள்.


சுற்றுலா அழைத்துச் செல்லுதல்:

குழந்தைகள் என்ன தான் வீட்டில் இருந்தப்படியே சில மகிழ்ச்சித் தரக்கூடிய விஷயங்களை மேற்கொண்டாலும் சுற்றுலா என்றால் நிச்சயம் குழந்தைகளுக்கு பெரும் மகிழ்ச்சி தான். எனவே குழந்தைகளுக்குப் பிடித்த அல்லது குளுமையான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் போது பெரும் சந்தோஷத்தை அடைவார்கள். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.


இது போன்ற விஷயங்களை நீங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டாலே நிச்சயம் கோடை விடுமுறையை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஏப்.20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

 


ஏப்.20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

Local%20holiday

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை


தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவிப்பு


தஞ்சாவூர் மாவட்ட அரசு அலுவலகங்களுக்கும் ஏப்.20ல் விடுமுறை அறிவிப்பு



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

 


திருச்சியில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் திருச்சி மாவட்ட மக்கள் பங்கேற்கும் வகையில், ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாகவும், அந்த விடுமுறை நாளை ஈடு செய்ய ஜூன் 8ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.


திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்குகிறது. வேறு எந்த தலத்திலும் காணப்பெறாதபடி இத்திருத்தலத்தில் அஷ்ட புஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக, சிவபதத்தில் விக்ரமசிம்மாசனத்தில் எழுந்தருளியிருக்கிறார்.


இத்தகைய சிறப்புக்குரிய இத்தலத்தில் சித்திரைப் பெருந்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஏப்.15 ம் தேதி வெள்ளிக் குதிரை வாகனத்திலும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்.16ம் தேதி நடைபெற உள்ளது


ஏப்.17ம் தேதி வெள்ளிக் காமதேனு வாகனத்திலும், ஏப்.18ம் தேதி முத்துப்பல்லக்கும், ஏப்.19ம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறும். மேலும் ஏப்.23ம் தேதி தங்க கமலவாகனத்தில் திருவீதி உலா நடைபெறும்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு ஏப்.21 வரை விடுமுறை

 


1230061

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பள்ளிகளில் 4 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று (ஏப்.13) முதல் 21-ம் தேதி வரை தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. தொடர்ந்து 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு மற்றும் பருவத் தேர்வுகள் ஏப்.2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.


தேர்வுகள் தள்ளிவைப்பு: இதில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையான குழந்தைகளுக்கு ஏப்.5-ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைந்து, 6-ம் தேதி முதல் கோடை விடுமுறை வழங் கப்பட்டுள்ளது.

அதேநேரம் ரம்ஜான் பண்டிகைகாரணமாக 4 முதல் 9-ம் வகுப்புமாணவர்களுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தேர்வுகள் ஏப்.22, 23-ம் தேதி களுக்கு தள்ளிவைக்கப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு நேற்றுடன் முடிவடைய இருந்த முழு ஆண்டுத் தேர்வுகள் சற்று தள்ளிப்போனது.


இதற்கிடையே மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பெரும்பாலான பள்ளிகள் தேர்தல் முகாம்களாக செயல்பட இருக்கின்றன. மேலும், ஆசிரியர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதையடுத்து 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (ஏப்.13) முதல் 21-ம் தேதி வரை 9 நாட்கள் தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 2 மாதம் கோடை விடுமுறை

 

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்ததை தொடர்ந்து 10-ம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் 8-ந் தேதி பொதுத்தேர்வு முடிந்தது.  இதையடுத்து சுமார் 24 லட்சம் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப் பட்டுள்ளது.


மேலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கடந்த 2-ந்தேதி ஆண்டு இறுதி தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-ந்தேதியுடன் பெரும்பாலான மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிந்து விடுகிறது.

அதனால் 9-ந்தேதி முதல் அவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. 10 மற்றும் 12-ந் தேதிகளில் 8, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து தேர்வுகள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ரம்ஜான் பண்டிகை இடையில் வருவதால், தொடர்ந்து விடுமுறை விடப்படுகிறது. 10 மற்றும் 12-ந்தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் 22, 23 தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.


யுகாதி மற்றும் ரம்ஜான் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து பிற நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருவதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டியிருப்பதால் முன்கூட்டியே தேர்தலை நடத்தி முடிக்கின்றனர்.


அதனால் பள்ளி மாணவர்களுக்கு 2 மாதம் கோடை விடுமுறை கிடைக்கிறது. ஏப்ரல் 9-ந்தேதி முதல் பெரும்பாலான பள்ளிகள் மூடப்படுகிறது.


தனியார் மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதனால் யுகாதி, ரம்ஜான் அரசு விடுமுறையுடன் சேர்த்து கோடை விடுமுறை விடப்படுகிறது. அரசு பள்ளிகளும் ஏப்ரல் 12-ந்தேதி வரை மட்டுமே செயல்படும். அதன் பின்னர் 2 நாட்கள் தேர்வுக்கு மட்டும் மாணவர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். இந்த வருடம் பள்ளி மாணவர்களுக்கு 2 மாதம் கோடை விடுமுறை கிடைத்து இருப்பதால் உற்சாகமாக உள்ளனர். சொந்த ஊர்களுக்கும், உறவினர் இல்லத்திற்கும் செல்ல இப்போதே பயணத்தை திட்டமிட்டு உள்ளனர்.

ஏப்ரல் 19-ந்தேதி தேர்தல் முடிந்தவுடன் கோடை ஸ்தலங்களுக்கும், மலை பிரதேசங்களுக்கும் மற்றும் கோவில்களுக்கும் பயணத்தை தொடங்குகின்றனர்.


கோடை விடுமுறை விடப்பட்ட போதிலும் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று அறிவிக்கவில்லை. வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளி திறப்பது பின்னர் முடிவு செய்யப்படுகிறது.



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கோடை விடுமுறையில் மீண்டும் திருத்தம்

 

4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் ஏப்.12 வரை பள்ளிக்கு வரவேண்டும்: கோடை விடுமுறையில் மீண்டும் திருத்தம்

1226737

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 13 முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வி துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டன. அதன்படி ஏப்ரல் 10, 12-ல் நடக்க இருந்த தேர்வுகள் ஏப்ரல் 22, 23-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டன.


இதையடுத்து, ‘ரம்ஜான் பண்டிகை மற்றும் தேர்தல் பணிகள் காரணமாக மாணவர்களுக்கு ஏப்ரல் 6 (இன்று) முதல் 21-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. அவர்கள் மீண்டும் ஏப்ரல் 22, 23-ம் தேதிகளில் தேர்வு எழுத பள்ளிக்கு வந்தால் போதும்’ என்று அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 8-ம் தேதிவிருப்பமொழி பாடத் தேர்வு நடத்தப்பட வேண்டும். மேலும், நீண்ட விடுமுறையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதால் கோடை விடுமுறையிலும் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.



இதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. அதன் விவரம்:


:தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்.5-ம் தேதியுடன் (நேற்று) பருவதேர்வு முடிந்துவிட்டது. அவர்களுக்கு 6-ம் தேதி (இன்று) முதல் கோடை விடுமுறை. 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஏப்.8, 10, 12-ம் தேதிகளில் பள்ளிக்குவந்து தேர்வுக்கு தயாராக வேண்டும். இடைப்பட்ட தினங்கள் அரசு மற்றும் வார விடுமுறை நாட்கள்.


அதன்பிறகு, தேர்தல் பணிகள் காரணமாக ஏப்,15 முதல் 21-ம் தேதிவரை மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை. இந்த மாணவர்களுக்கு மீண்டும் ஏப். 22, 23-ம்தேதிகளில் அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும். ஏப். 24 முதல் கோடை விடுமுறை விடப்படும்.


ஆசிரியர்கள் அனைவரும் இறுதி வேலை நாளான ஏப். 26வரை பள்ளிக்கு வருவது அவசியம்.அந்த நாட்களில் மாணவர் சேர்க்கை, விடைத்தாள் மதிப்பீடு மற்றும் இதர அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கோடை விடுமுறை எப்போது? - பள்ளிக்கல்வித் துறை விளக்கம்

 1226272

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வுகள் ஏப்.2 முதல் 12-ம் தேதிக்குள் நடத்தப்படும். தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்.13-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.


இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டன. அதன்படி ஏப்.10, 12-ம் தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஏப்.22, 23-ம் தேதிகளுக்கு தள்ளிவைக்கப்பட்டன. அதேநேரம் கோடை விடுமுறை தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்களிடம் குழப்பம் நிலவி வருகிறது.


இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ஏப்.5-ம் தேதியுடன் பருவத் தேர்வுகள் முடிவடைகிறது. அவர்களுக்கு ஏப்.6-ம்தேதி முதல் கோடை விடுமுறையாகும். அதேபோல், 4 முதல் 9-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஏப்.6 முதல் 21-ம் தேதிவரை ரம்ஜான் பண்டிகை மற்றும்தேர்தல் பணிகள் நிமித்தம் காரணமாக விடுமுறை அளிக்கப்படுகிறது.


இந்த மாணவர்களுக்கு மீண்டும்ஏப்.22, 23-ம் தேதிகளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும். தொடர்ந்து ஏப்.24-ல்தொடங்கி கோடை விடுமுறை தரப்படும். பள்ளி திறப்பு நாள் பின்னர் அறிவிக்கப்படும்.


அதேநேரம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இறுதி வேலை நாளான ஏப்.26-ம் தேதி வரை அரசு விடுமுறை இல்லாத தினங்களில் பள்ளிக்கு வருகை புரிவது அவசியம். அந்த நாட்களில் மாணவர் சேர்க்கை, விடைத்தாள் மதிப்பீடு மற்றும் இதர அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News