School Morning Prayer Activities - 01.02.2023

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 01.02.2023


திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: நடுவுநிலைமை

குறள் : 115
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

பொருள்:
ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையுடன் இருந்து நீதி தவறாது உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்.

பழமொழி :
Hear more,but talk less.

அதிகம் கேள், குறைவாக பேச


இரண்டொழுக்க பண்புகள் :

1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் நாம் நமது கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். 

2. கல்லடி பட்டாலும் கனி தரும் மரங்கள் நாம் பலன் எதிர் பாராமல் பணி செய்ய ஒரு நல் உதாரணம்.


பொன்மொழி :

ஆரோக்கியத்தை பெற்றுள்ள ஒருவர் நம்பிக்கையை பெற்றுள்ளார்; நம்பிக்கையைப் பெற்றுள்ள ஒருவர் எல்லாவற்றையும் பெற்றுள்ளார்.


பொது அறிவு :

1. தமிழ் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு துவங்கப்பட்டது ? 

 1981 . 

 2.தேசிய விளையாட்டு தினம் எப்போது?

 ஆகஸ்ட் 29.


English words & meanings :

Ant and English. Ant that goes to school - Brilliant 


ஆரோக்ய வாழ்வு :

வெங்காயத்தில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது. இது சளி, காய்ச்சல் மற்றும் இருமல் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.
இதற்காக பருவ கால ஒவ்வாமை உடைய 16 பெரியவர்களிடம் 4 வாரங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 200mcg/mL அளவு கொடுத்த போது அதன் அறிகுறிகள் 62. 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது தொண்டை புண் போன்ற அறிகுறிகளை குறைக்கவும் பயன்படுகிறது.


NMMS Q

பருத்தித் தாவரங்களில் பூச்சிகளை கட்டுப்படுத்த உதவும் பாக்டீரியா எது?

 விடை: பேசில்லஸ் துரின்ஜியன்சிஸ். 


பிப்ரவரி 01 இன்று

கல்பனா சாவ்லா அவர்களின் நினைவுநாள் 



கல்பனா சாவ்லா அவர்கள் கரியானா மாநிலத்தில் “கர்மல்” என்ற ஊரில் 1961 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 03 ம் திகதி பானராஸ்லால் சாவ்லாவுக்கும் சன்நியோகிதா தேவிக்கும் மகளாக பிறந்தார். 

1988 ஆம் ஆண்டு நாசா ஆராய்ச்சி கூடத்தில் இணைந்து விண்வெளி ஓடங்கள் விமானங்களை ஓட்ட கற்றுகொண்டார்.

2003 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் கெனடி விண்வெளி நிலையத்தில் இருந்து STS 107 எனும் கொலம்பிய விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் பயணம் செய்தனர். 16 நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய அவ் விண்கலம் அமெரிக்காவின் ரெக்சாஸ் வான் பரப்பில் வெடித்து சிதறியது.

ஒரு பெரும் கனவை அடைய விடாமுயற்சியோடும் முழுமனதோடும் செயற்பட்டால் வெற்றிகிட்டும் என வாழ்ந்து காட்டிய இவரது வாழ்க்கை பலருக்கும் முன்னுதாரணமாகும்.


நீதிக்கதை

வளைந்த நாணல்

ஒரு நாள் தென்றல் காற்று வீசியது. தோட்டத்திலுள்ள மரங்கள், புற்களையும், நாணலையும் பார்த்து, சிறு தென்றல் காற்று வீசியதற்கே பலமற்றுப் போய் அசைந்து கொடுக்கிறாயே? என்று ஏளனமாகப் பேசி சிரித்தன. 

அடுத்தநாளே தோட்டத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. சூறைக்காற்று பலமாக வீசியதால் தோட்டத்தில் இருந்த மரங்கள் ஒவ்வொன்றாக முறிந்து விழுந்தன. அப்போது நாணல், மரங்களே! நீங்களும் என்னைப் போல் வளைந்து கொடுக்கப் பழகியிருந்தால் இப்படி வேரோடு சாய்ந்திருக்க மாட்டீர்கள்!

எங்களைப் பார்த்து ஏளனமாக கேலி பேசினீர்களே! நாங்களும் உபயோகமானவர்கள் தான். நாங்கள் ஆற்றுநீர் கரையை அரிக்காமல் தடுப்பதால்தான், நீங்களெல்லாம் கம்பீரமாக நிற்க முடிகிறது. இல்லையேல் கம்பீரமாக நிற்க முடியாது. அதேபோல் உருவத்தில் சிறியதாக இருக்கும் எறும்பு, தும்பிக்கைக்குள் நுழைந்து கடித்தால் உருவத்தில் பெரிய யானையாலும் வலியை தாங்கிக் கொள்ள முடியாது என்றது.

நாணல் பேசியதை கேட்டு மரங்களால் எதுவுமே பேச முடியவில்லை. அப்போதுதான் மரங்கள் உருவத்தில் சிறியதாக இருந்த நாணலைப் பார்த்து அலட்சியமாகப் பேசியது தவறு என்பதைப் புரிந்து கொண்டன.

நீதி :
ஒருவரையும் ஏளனமாகப் பேசக்கூடாது.


இன்றைய செய்திகள் - 01.02.2023

* ஆதார் எண் - மின் இணைப்பு எண்ணை இணைக்க வழங்கிய அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், மேலும் 15 நாட்கள் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

* ஐஐடி மெட்ராஸில் நடக்கும் ஜி-20 கருத்தரங்கு!
‘கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு’ என்ற தலைப்பில் நடக்கவிருக்கும் இந்த கருத்தரங்கு, ஜி-20 உறுப்பு நாடுகள் இடையே கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை எவ்வாறு திறம்படப் பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கவுள்ளது.

* இந்தியாவில் அதிக மாசு அடைந்த ஆறுகள் பட்டியலில் சென்னை கூவம் ஆறு இடம் பெற்றுள்ளது.

* தமிழ்நாட்டில் பல புகழ்பெற்ற கோயில்களும் அதற்கு பல வரலாறுகளும் உள்ளன. எனவே தமிழ்நாட்டில் கோவில்களின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

* பிப்ரவரி 3ம் தேதி அண்ணா நினைவு நாளில், வழக்கமாக நடத்தப்பட்டு வரும் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது . 

* ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மீண்டும் முதலிடம் பிடித்தார்.

* ஐசிசி மகளிர் டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசை: 2-வது இடத்தில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா . 


Today's Head lines

 * Aadhaar-EB connection linking deadline extended to Feb 15. Earlier the dead line was today.

* Chennai is all set to host the first G20 Education Working Group meeting on February 1 and 2 and as a precursor a seminar on the ‘Role of Digital Technology in Education'. This seminar will explain in detail to the members of G20 countries how to utilise the technology in education. 

* In the list of most polluted rivers of India, Chennai's Couvam also listed as most polluted one.

* In Tamil Nadu there are so many famous temples with ancient history. So the activities of all temple should be carried out as a open book. Verdict by Madurai court. 

* On February 3rd the memorial day of Anna, as usual there Will be a silent procession. 

* As the result of his championship in Australia open tennis Novak Djokovic hold first place again in the ranking list. 

* ICC women's T20 Bowler Rankings: Deepti Sharma of India is at No. 2
 Prepared by

Covai women ICT_போதிமரம்

மே 5ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; 10ம் வகுப்பு ரிசல்ட் 17ல் வெளியாகிறது

 ''பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், மே, 5ல் வெளியிடப்படும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அறிவித்துள்ளார். செய்முறை தேர்வுக்கான தேதியும் மாற்றப்பட்டு உள்ளது.


தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச்சில் நடக்க உள்ளது.

பத்தாம் வகுப்புக்கு, ஏப்ரல், 6 முதல், 20 வரையிலும்; பிளஸ் 1க்கு, மார்ச், 14 முதல், ஏப்ரல், 5 வரையிலும்; பிளஸ் 2வுக்கு, மார்ச், 13 முதல், ஏப்ரல், 3 வரையிலும், பொதுத் தேர்வுகள் நடக்கின்றன.


மார்ச், 13ல் துவங்கி, ஏப்ரல், 20ல் அனைத்து பொதுத் தேர்வுகளும் முடிவடைகின்றன.


இந்நிலையில், பொதுத் தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் குறித்து, சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில், நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தலைமை வகித்தார்.


பள்ளிக்கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா, கமிஷனர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா ஆகியோர் பங்கேற்று, பொதுத் தேர்வை நடத்துவதற்கான முன்னேற்பாடு குறித்து, முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, வழிகாட்டுதல் வழங்கினர்.


இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி: பொதுத் தேர்வை எந்த பிரச்னையுமின்றி சுமூகமாக நடத்தும் வகையில், முன்னேற்பாடு மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதியும் இறுதி செய்யப்பட்டு உள்ளது.


பிளஸ் 2வுக்கு, மே, 5ல் முடிவுகள் வெளியிடப்படும். பத்தாம் வகுப்புக்கு மே, 17; பிளஸ் 1க்கு, மே, 19ம் தேதி தேர்வு முடிவு வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.


பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, வினாத்தாளின் தன்மையை புரிய வைக்கும் வகையில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் தயாரிக்கப்படும் புத்தகங்களையும், பழைய வினாத் தாள்களையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


செய்முறை தேர்வு தேதியில் மாற்றம்

பிளஸ் 2 செய்முறை தேர்வுகளை பொறுத்தவரை, மார்ச், 7 முதல், 10 வரை நடத்தப்படும் என, அரசு தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், நேற்றைய ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின், செய்முறை தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராக வசதியாக, மார்ச், 1 முதல், 9க்குள், செய்முறை தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார். 


 Click here for latest Kalvi News 


Click here to join whatsapp group for daily kalvinews update 

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வெளிநாட்டு கல்விச் சுற்றுலா - பள்ளிக்கல்வித் துறை முடிவு.

 

கற்பித்தல் மற்றும் நிர்வாகப் பணிகளில் சிறந்து விளங்கும் அரசு பள்ளிஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளை வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளிக்கல்வித் துறை முடிவுசெய்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பல்வேறு செயல்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கற்றல் மற்றும் இதர கலைச் செயல்பாடுகளில் மாநில அளவில் சிறந்து விளங்கும் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளி நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதன்படி அரசு பள்ளிகளில் நடத்தப்பட்ட வினாடி வினா போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட 68 மாணவர்கள் கடந்த நவம்பரில் துபாய் நாட்டுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.


இதைத்தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டிலும் கலைத் திருவிழா போட்டிகள் மற்றும் கற்றலில் நன்றாக செயல்பட்ட மாணவர்களும் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா செல்ல இருக்கின்றனர். இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, மாணவர்களை போல் அரசு பள்ளி ஆசிரியர்கள், மற்றும்அதிகாரிகளையும் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: நிர்வாகப் பணிகள் மற்றும் அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துதலில் சிறந்து விளங்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளை, தேர்வு செய்து மாணவர்களுடன் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த பட்டியலில் கற்றல், கற்பித்தலில் சிறப்பாக இயங்கும் ஆசிரியர்களும் சேர்க்கப்பட உள்ளனர். ஏனெனில், வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா செல்லும் திட்டம் மாணவர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக படிப்பில் மட்டுமின்றி பல்வேறு கலைச் செயல்பாடுகளிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.


தற்போது இந்த திட்டத்தைதுறை அதிகாரிகள், ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அரசின் அனுமதி கிடைத்தவுடன் இதற்கான பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 Click here for latest Kalvi News 


Click here to join whatsapp group for daily kalvinews update 

School Calendar - February 2023

 

பிப்ரவரி மாத பள்ளி நாட்காட்டி அட்டவணை :

 Click here for latest Kalvi News 


Click here to join whatsapp group for daily kalvinews update 

IT FY 22-23 Mini Guide

 

தனிநபர் வருமான வரி - நிதியாண்டு ( FY ) 2022-23


 தனிநபர் வருமான வரி விதிமுறைகளில் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் பொதுவான தேவைகளை கருத்தில் கொண்டு இக்குறிப்பு தயாரிக்கப்பட்துள்ளது. முக்கியமான விவரங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன.


நிதிச் சட்டம் 2020 , தனிநபர்களுக்கு இரண்டு விதமான வருமான வரி விதிமுறைகளை வழங்கியுள்ளது. ஒன்று பழைய விதிமுறை ( Old Tax Regime ) . இதில் பொருந்தக்கூடிய அனைத்து விலக்குகளும் ( Exemptions ) , கழிவுகளும் ( Deductions ) உண்டு . இரண்டாவதாக பொதுவான விலக்குகளும் , கழிவுகளும் அற்ற , கணக்கிட எளிய , ஒரு புதிய விதிமுறை ( New Tax Regime ) ஆகும்.

 IT FY 22-23 Mini Guide.pdf - Download here...

Medical Leave ( ML) Form & Doctor Form

 Medical Leave ( ML)  Form new - Download here


Medical Leave ( ML ) - Doctors Form - Download here

TET - Duplicate Mark Sheet Application Form - Download here

New Medical certificate & Medical fitness Form - Download here

NHIS Claim Form - Download here

BEO's School Annual Inspection New Form - Download here

School Special Visit Format - Download here

School Morning Prayer Activities - 31.01.2023



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 31.01.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: நடுவுநிலைமை

குறள் : 114
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.

பொருள்:
ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்

பழமொழி :
Failures are stepping stones to success.

தோல்வியே வெற்றிக்கு முதல் படி. 


இரண்டொழுக்க பண்புகள் :

1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் நாம் நமது கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். 

2. கல்லடி பட்டாலும் கனி தரும் மரங்கள் நாம் பலன் எதிர் பாராமல் பணி செய்ய ஒரு நல் உதாரணம்.


பொன்மொழி :

உணர்ச்சியுள்ள மனிதன் பிறரைத் திருத்துவதில் நேரத்தைச் செலவு செய்கிறான். ஆனால், அறிவுள்ள மனிதனோ தன்னைத் திருத்திக் கொள்வதில் கவனத்தைச் செலுத்துகிறான்.


பொது அறிவு :

1. புனுகு என்னும் நறுமணம் எந்த விலங்கில் இருந்து எடுக்கப்படுகிறது ?

 புனுகுப் பூனை. 

 2. சங்கின் இரண்டு வகை தெரியுமா?

 வலம்புரி , இடம்புரி.


English words & meanings :

weather - climate. noun. வானிலை. பெயர்ச் சொல். whether - if. expressing a doubt . conjunction. இரண்டில் ஒன்று. இணைப்புச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :

சின்ன வெங்காயத்தில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது ஆக்ஸினேற்ற அழுத்தத்தில் இருந்து நம் செல்களை பாதுகாக்கிறது. உடலில் ஏற்படும் அழற்சி க்கு எதிராக செயல்படுகிறது.
இதில் குவர்செடின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டுள்ளது. இதனால் இதய நோய்கள், புற்றுநோய்கள் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது.



NMMS Q

பாக்டீரியாவில் புரதச்சேர்க்கை கீழ்கண்ட எந்த வகை ரிபோசோம்களால் நடைபெறும்? 

 a) 70s. b) 80s. c) 90s. d) 85s. 

 விடை: 70s


நீதிக்கதை

ஓநாயும் ஆடும்

ஒரு காட்டில் ஒரு ஓநாயும். ஒரு வெள்ளாடும் இருந்தது. கொழுத்த அந்த ஆட்டின் மீது ஓநாய்க்கு எப்போதும் ஒரு கண். அதை அடித்து சாப்பிடவேண்டும் என்று. அதற்காக பலமுறை ஓநாய் அந்த ஆட்டை சண்டைக்கு இழுத்தது. ஓநாயின் குணம் அறிந்த ஆடு ஓநாயிடம் இருந்து தன் புத்திசாலித்தனத்தால் தப்பிவந்தது.

ஒரு சமயம் ஒரு நதியின் நடுவில் குறுகலான ஒரு பாலத்தில் ஆடு சென்றது. அப்பாலம் ஒரு நபர் சென்றால் ஒருவர் எதிரே வர முடியாத அளவு குறுகலானது. பாலத்தில் ஆடு வருவதைக்கண்டு, பெரும்பகுதியை ஆடு கடந்ததும், ஓநாய் அந்த முனையிலிருந்து ஆட்டை நோக்கி வந்தது. இப்போது ஆடும், ஓநாயும் எதிரெதிரே வந்துவிட்டன.

ஆடு ஓநாயிடம் நான் கிட்டத்தட்ட பாலத்தைக் கடந்துவிட்டேன். சற்று நீங்கள் பின் சென்று எனக்கு இடம் கொடுத்தால் நான் சென்றுவிடுவேன் என்றது. இதுதான் சரியான தருணம் என எண்ணி ஓநாய் ஆட்டை வீண் சண்டைக்கு இழுத்தது. நான் முட்டாள்களுக்கு இடம் தர மாட்டேன். நீயே எனக்கு இடம் கொடுத்துப் பின்னால் போ என்றது.

ஓநாயின் நோக்கம் அறிந்த ஆடு, நான் முட்டாள்களுக்கு முதல் இடம் தருவேன் என தான் பின்னால் சென்று ஓநாய் பாலத்தை கடக்கச் செய்தது. ஓநாயும் தன் செயல் இம்முறையும் பலிக்கவில்லையே என சென்றுவிட்டது.

ஆடு தன் புத்திசாலித்தனத்தால் ஓநாயை முட்டாள் என மறைமுகமாக சொன்னதுடன், கெட்டவர்களுடன் வீண்வாதம் கூடாது என்று உணர்ந்ததால் உயிர் பிழைத்தது.ஜி20 கல்வி செயற்குழு மாநாடு: சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை.

இணையதளம் மூலமாக மின்கட்டணம் செலுத்தும்போது போலி ரசீது வழங்கப்படுவதைத் தடுக்கஒரே மாதிரியான ரசீது வழங்கும் முறையை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு: பிப்ரவரி 1-ல் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

பனிப்பொழிவு காரணமாக சுவிட்சர்லாந்து போல் காட்சியளிக்கும் அருணாச்சலப் பிரதேசம்.

சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க லடாக் எல்லையில் 135 கி.மீ.தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.

ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை ஹாக்கி போட்டி: பெல்ஜியத்தை வீழ்த்தி 3-வது முறையாக ஜெர்மனி அணி கோப்பையை வென்றது.


இன்றைய செய்திகள் - 31.01.2023

* ஜி20 கல்வி செயற்குழு மாநாடு: சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை.

* இணையதளம் மூலமாக மின்கட்டணம் செலுத்தும்போது போலி ரசீது வழங்கப்படுவதைத் தடுக்கஒரே மாதிரியான ரசீது வழங்கும் முறையை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

* வானிலை முன்னறிவிப்பு: பிப்ரவரி 1-ல் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

* பனிப்பொழிவு காரணமாக சுவிட்சர்லாந்து போல் காட்சியளிக்கும் அருணாச்சலப் பிரதேசம்.

* சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க லடாக் எல்லையில் 135 கி.மீ.தொலைவுக்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.

* ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

* உலக கோப்பை ஹாக்கி போட்டி: பெல்ஜியத்தை வீழ்த்தி 3-வது முறையாக ஜெர்மனி அணி கோப்பையை வென்றது.


Today's Headlines

* Due to G20 Executive committee Conference , Drones were banned for 3 days in Chennai

 * The Electricity Board has introduced a uniform receipt system to prevent fake receipts from being issued while paying electricity bill online.

 * Weather forecast: Heavy rain likely in 11 districts of Tamil Nadu on February 1.

*  Arunachal Pradesh looks like Switzerland due to snowfall.

 * To overcome the threat of China, construction of a New High Way of length 135 Km has been started in the Ladakh border

* A prize money of Rs 5 crore has been announced for the Indian women's team who won the title of champion in the Junior 20 Over Cricket World Cup.

* Hockey World Cup: Germany win the  World Cup for the 3Rd time after defeating Belgium.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

School Morning Prayer Activities - 30.01.2023

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 30.01.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: நடுவுநிலைமை

குறள் : 113
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.

பொருள்:
நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்

பழமொழி :
இன்றை என்பதும் நாளை என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்.

To say today; tomorrow, indicates refusal.


இரண்டொழுக்க பண்புகள் :

1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் நாம் நமது கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். 

2. கல்லடி பட்டாலும் கனி தரும் மரங்கள் நாம் பலன் எதிர் பாராமல் பணி செய்ய ஒரு நல் உதாரணம்.


பொன்மொழி :

மனிதன் செல்வம் ஈட்டும் இயந்திரமாக அன்றி, சமுதாய முன்னேற்றத்தின் கருவியாகவும் இருக்க வேண்டும்.


பொது அறிவு :

1. எலக்ட்ரானை கண்டுபிடித்தவர் யார்? 

 தாம்சன்

 2. ஆசியாவில் உரத் தயாரிப்பில் இரண்டாம் இடம் வகிக்கும் நாடு எது ?

 இந்தியா.


English words & meanings :

stair – step. noun. படிக்கட்டு. stare - to look at steadily. verb. உற்று நோக்கு. வினைச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :

100 கிராம் நறுக்கிய வெங்காயத்தில்
கலோரிகள் - 75
புரதம் - 2.5 கிராம்
கொழுப்பு - 0கிராம்
கார்போஹைட்ரேட்டுகள் - 17 கிராம்
நார்ச்சத்துக்கள் - 3 கிராம்
கால்சியம் - 3%DV
இரும்புச் சத்து - 7%DV
மக்னீசியம் - 5%
பாஸ்பரஸ் - 5% DV
பொட்டாசியம் - 7% Dv
துத்தநாகம் - 4% DV
ஃபோலேட் - 9% DV
இதில் புரோட்டீன், நார்ச்சத்துக்கள், கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஜிங்க், காப்பர், போலேட், வைட்டமின் பி, வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.


NMMS Q

6 இன் வர்க்கத்துடன் எந்த எண்ணின் கனத்தைக் கூட்டினால் 10,000 இன் வர்க்கமூலம் கிடைக்கும்?

 விடை : 4


ஜனவரி 30 இன்று

மோகன்தாசு கரம்சந்த் காந்தி  அவர்களின் நினைவுநாள் 



மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" [1] என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. (ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" [1] என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.


நீதிக்கதை

ராமன் மற்றும் பேசும் கிளி

யார் எது சொன்னாலும் உடனே நம்பி விடுவான் ராமன். ஒரு நாள் சந்தைக்கு அவன் போன போது ஒரு வியாபாரி ஒரு கூண்டுக்குள். கிளி ஒன்றை வைத்து விற்றுக் கொண்டிருந்தான். இந்தக் கிளி பேசும் கிளி என்றான்.

ராமனும் நூறு ரூபாய் கொடுத்து அந்தக் கிளியை வாங்கினான். வீட்டில் அதற்கு பேசப் பழக்கினான். ஒரு மாதம் ஆகியும் அந்தக் கிளி பேசவில்லை. அதை அவன் எடுத்துக்கொண்டு. தான் அதை வாங்கிய வியாபாரியிடம் சென்றான்.

அந்த வியாபாரியோ, அந்தக் கிளியை வாங்கி பரிசோதிப்பது போல பாசங்கு செய்து இந்த கிளிக்கு காது கேட்காது. அதனால் நீங்கள் சொல்வதைக் கேட்டும் அந்த கிளியால் பேச இயலவில்லை என்று சொல்லி வேறு ஒரு கிளியைக் காட்டி இதை வாங்கிக் கொள்ளுங்கள் இது பேசும் என்றான்.

ராமன் மீண்டும் ஒரு நூறு ரூபாய் கொடுத்து அந்தக் கிளியை வாங்கினான். அதற்கும் பேசக் கற்றுக்கொடுத்தான். அதுவும் பேசவில்லை. அப்போது ராமனின் நண்பர் ஒருவர் வந்தார். அவரிடம் ராமன் நடந்ததைக் கூறினான்.

உடனே அந்த நண்பர் அடடா! என்னை முதலிலேயே கேட்டிருக்கலாமே! அந்த வியாபாரி ஒரு பொய்யன். பொய் சொல்லி வியாபாரம் செய்வதே அவன் பிழைப்பு என்றான்.

ராமன் தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி மனம் வருந்தினான். யார் என்ன சொன்னாலும் அதைக் கேட்காமல் நமது அறிவை உபயோகித்து அது சாத்தியமா. என யோசித்து செயல்படவேண்டும்.


இன்றைய செய்திகள் - 30.01.2023

* பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பின் போது 14 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் வரித்தலை வாத்து தென்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் பிப்ரவரி 1-ம் தேதி வருவதை முன்னிட்டு மாமல்லபுரத்தில் அதிகாரிகள் குழு ஆய்வு.

* பிப்ரவரி 1ம் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

* நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.4 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் செல்லும், உள்நாட்டு ஹைபர்சோனிக் ஏவுகணையை இந்தியா  சோதனை செய்துள்ளது.

* நியூசிலாந்தில் வெள்ளம்: 3 பேர் பலி; ஆக்லாந்து நகரில் அவசரநிலை பிரகடனம்.

* உலக கோப்பை ஹாக்கி: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி 9-வது இடம் பிடித்தது இந்தியா.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.

Today's Headlines

* According to the officials, during the bird survey conducted in Pallikaranai marshland, a flying Mallard duck was seen at a height of 14 thousand feet.

 * A team of officials inspected Mamallapuram ahead of the arrival of G20 conference delegates on February 1.

 * Chance of heavy rain in delta districts on February 1: Chennai Meteorological Department information.

* According to the Union Ministry of Health and Family Welfare, a total of 220.4 crore corona vaccine doses have been administered so far under the nationwide vaccination drive.

* India has test-fired an indigenous hypersonic missile that can travel 5 times the speed of sound.

* Floods in New Zealand: 3 dead;  Emergency declared in Auckland city.

* Hockey World Cup: India beat South Africa to finish 9th

 * Australian Open Tennis: Djokovic wins the title.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்