சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? - முழு விவரம் இதோ !

 CBSE Class 10, 12 results 2024 Updates: 2024ம் கல்வியாண்டிற்கான 10, 12ம் வகுப்பு  தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) விரைவில் வெளியிட இருக்கிறது.

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புக்கான  பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி தொடங்கியாது. 10ம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 13ம் தேதி வரையிலும், 12ம் வகுப்புக்கான தேர்வு ஏப்ரல் 2ம் தேதி வரையிலும் நடைபெற்று முடிந்தது. லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஎஸ்இ வாரியத்தின், cbse.nic.in , cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளண்களின் வாயிலாக சிரமமின்றி தேர்வு முடிவுகளை காணலாம். கூடுதலாக, பள்ளி மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது. கூடுதலாக, cbseresults.nic.in ,  results.cbse.nic.in
cbse.nic.in ,  digilocker.gov.in , results.gov.in ஆகிய இணையத்தளங்களில் தங்களது பதிவெண்  மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மேலும், 2016ம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ வாரியம் தேர்வு மதிப்பெண் சான்றிதழை டிஜி லாக்கரில் பதிவேற்றம் செய்து வருகிறது. டிஜிட்டல் லாக்கர் என்பது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முன்னோடித் திட்டமாகும். டிஜி லாக்கர் அசல் ஆவணங்களின் பாதுகாப்பான டிஜிட்டல் பதிவை கிளவுட்டில் வைத்திருக்க உதவுகிறது.


டிஜிலாக்கர் இணையதளத்திற்கு சென்று, பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணையும், கடவுச் சொல்லையும் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில், தேர்வு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், UMANG என்ற செயலியின் மூலமும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தச் செயலி, கூகுள் பிளே ( ஆன்ட்ராய்டு போன்களுக்கு) ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் ( ஐ போன்களுக்கு) ஆகியவற்றில் கிடைக்கும்

இதுதவிர, ஐவிஆர்எஸ் சேவைகள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். டெல்லியில் உள்ள மாணவர்கள் 24300699 என்ற எண்ணுக்கும், டெல்லிக்கு வெளிப்புறம் உள்ள மாணவர்கள் 011 – 24300699 என்ற எண்ணுக்கும் அழைத்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment