ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் க.இளம்பகவத், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசுப் பள்ளி பிளஸ்-2 மாணவர்கள் தேசிய நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு: கல்வி அதிகாரிகளுக்கு அறிவுரை.
பல்வேறு உயர்கல்வி சேர்க்கைக்கு நடத்தப் பெறும் நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களை விண்ணப்பிக்க செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!
பல்வேறு உயர்கல்வி சேர்க்கைக்கு நடத்தப் பெறும் நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களை விண்ணப்பிக்க செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!
Entrance Exams March 2023 - SPD Proceedings - Download here...
Click here for latest Kalvi News
கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
இளநிலை பட்டப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான கியூட் நுழைவுத் தேர்வு மே மாதம் 21 முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தினம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக் கழக மானியக் குழு தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Click here for latest Kalvi News
UGC NET Exam - அட்மிட் கார்டு வெளியீடு! பதிவிறக்கம் செய்வது எப்படி?
யுஜிசி நெட் தகுதித் தேர்வுக்கான, தேர்வு அனுமதிச் சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆண்டுதோறும் யுஜிசி நெட் தேர்வு நடைபெறுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான யுஜிசி நெட் முதற்கட்ட தேர்வு வரும் 21ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறவுள்ளது.இதை முன்னிட்டு நெட் தகுதித்தேர்வுக்கான தேர்வு அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவிட்டு தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை யுஜிசி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
தேர்வு அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் செய்வது தொடர்பாக சவாலை எதிர் கொள்ளும் மாணவர்கள் 011-40759000 என்ற தொலைபேசி எண், ugcnet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம். பல்கலைக்கழக மானியக் குழுவின் https://ugcnet.nta.nic.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்தை விண்ணப்பதாரர்கள் அவ்வப்போது தவறாமல் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மத்திய பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகளில் சேர பொது நுழைவுத்தேர்வு - மார்ச் 12 - ந் தேதி கடைசிநாள்
மத்திய பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகளில் சேர பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் மார்ச் 12 - ந் தேதி கடைசிநாள்...
JEE -அட்வான்ஸ்டு தேர்வுக்கான Hall Ticket வெளியீடு - Download செய்வது எப்படி?
ஜனவரி 24ஆம் தேதி நடைபெறும் தேர்வில் பங்கேற்கவிருப்பவர்களுக்கான நுழைவுச் சீட்டு, ஜேஇஇ அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ள, மாணவர்கள் ஜேஇஇ விண்ணப்ப எண், பிறந்ததேதி ஆகியவற்றை உள்ளிட வேண்டும். இந்த நுழைவுச் சீட்டு இல்லாமல், யார் ஒருவரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். அந்த நுழைவுச் சீட்டில், மாணவரின் அனைத்து விவரங்களும், தேர்வுக் கூட விவரங்களும், தேர்வு நேரம் உள்ளிட்ட விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.
பதிவிறக்கம் செய்வது எப்படி?
jeemain.nta.nic.in இணையதளத்துக்குச் செல்லவும்.
முகப்புப் பக்கத்தில் ஜேஇஇ முதன்மை 2023 அமர்வு 1 அட்மிட் கார்டு என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
ஜேஇஇ மெயின் விண்ணப்ப எண்ணையும் பிறந்த தேதியையும் உள்ளிடவும்.
சப்மிட் கொடுத்து ஜேஇஇ மெயின் 2023 அட்மிட் கார்டை டவுன்லோடு செய்யவும்.
அதனை பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும். நுழைவுத் தேர்வெழுதச் செல்லும் போது கையில் வைத்திருக்கவும்.
மத்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பி.டெக். உள்ளிட்ட இளநிலை பொறியியல்-தொழில்நுட்பப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கு தகுதி பெறுவதற்கான ஜேஇஇ தோ்வு இரு கட்டங்களாக (முதல்நிலை (மெயின்) மற்றும் முதன்மை (அட்வான்ஸ்டு) நடத்தப்படும்.
தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் நடத்தப்படும் முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐஐடி, என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும். மேலும், முதல்நிலைத் தோ்வில் முதல் 2.5 லட்சம் இடங்களைப் பிடிப்பவா்கள் ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதும் தகுதியைப் பெறுவா். இதில் தகுதி பெறுபவா்கள் நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும். இந்த நுழைவுத் தோ்வில் தகுதி பெறும் மாணவா்கள், 12-ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றிருப்பதும் அவசியமாகும்.
இந்த நிலையில், மாநில கல்வி வாரியங்களில் படித்து ஜேஇஇ முதன்மைத் தோ்வில் தகுதி பெறும் மாணவா்கள், 12-ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்கள் (350/500 மதிப்பெண்) பெறாத காரணத்தால் ஐஐடிக்களில் சேர முடியாமல் போகிறது. எனவே, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் நிபந்தனையை தளா்த்த வேண்டும் என்ற கோரிக்கை மத்திய கல்வி அமைச்சகத்திடம் முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்று, மத்திய அமைச்சகம் மதிப்பெண் தளா்வு அளித்திருப்பது தெரியவந்துள்ளது.
நிகழாண்டு ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு ஜனவரி 24 முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
Click here for latest Kalvi News
Click here to join whatsapp group for daily kalvinews update
தமிழ் மொழி திறனறித் தேர்வு உதவித்தொகை பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளின் பெயர் பட்டியல்
தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் வெற்றி பெற்று ரூ.36000/- ஊக்கத் தொகை பெறும் 1500 மாணவர்களின் விவரங்கள் வெளியீடு!
Tamil Mozhi Illakiya Thiranari thervu Scholarship Students List 2022 - Download here...
Click here to join whatsapp group for daily kalvinews update
தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அக்டோபர் 2022 - அரசுத் தேர்வுகள் இயக்ககம் இறுதி விடைக் குறிப்பு வெளியீடு!
தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அக்டோபர் 2022 - அரசுத் தேர்வுகள் இயக்ககம் இறுதி விடைக் குறிப்பு வெளியீடு!
தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அக்டோபர் 2022 - அரசுத் தேர்வுகள் இயக்ககம் இறுதி விடைக் குறிப்பு வெளியீடு!
TTSE - Final Key - Download here
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்பை துவக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்பை நவம்பர் 3வது வாரத்தில் துவக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
TTSE Exam Tentaive Answer Key 15th October 2022 | தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு விடை குறிப்பு !
TTSE Exam Tentaive Answer Key 15th October 2022 | தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு விடை குறிப்பு !
தமிழ் திறனறித் தேர்வு மாதிரி தேர்வு - வினாத்தாள்
தமிழ் திறனறித் தேர்வு மாதிரி தேர்வு - வினாத்தாள்
தமிழ் திறனறித் தேர்வு மாதிரி தேர்வு - Download here
அக்டோபர் 1-ம் தேதி: தமிழ் மொழிதிறனறி தேர்வு
பள்ளி மாணவ, மாணவிகள், அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாட் தேர்வுகளுக்கு தயாராகி பங்கு பெறுவதுபோல, தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் ‘திறனறித் தேர்வு’ நடைபெற உள்ளது.
அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்புமாணவ, மாணவிகள் இத்தேர்வு எழுத, வரும் 9-ம் தேதி வரைwww.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தமிழ்ப் பாடம் இதற்கான பாடத் திட்டமாகும்.
அக்.1-ம் தேதி கொள்குறிவகையில் தேர்வு நடைபெறும்.இதில் வெற்றி பெறும் 1,500 பேரில்750 அரசுப் பள்ளி மாணவர்களும், 750 இதர பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டு, மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் 1 - 11 வரை முதுகலை க்யூட் தேர்வுகள்
நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, க்யூட் எனப்படும் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டது. 'மத்திய பல்கலைகள் மட்டுமின்றி விருப்பமுள்ள மாநிலங்கள் மற்றும் தனியார் பல்கலைகளும், இந்த க்யூட் தேர்வு மதிப்பெண்களை தங்கள் மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்' என, மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், நடப்பாண்டு இளங்கலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு, இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட தேர்வு ஜூலை 15 - 20 வரை நடந்து முடிந்தது. மீதமுள்ள மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வு ஆக., 4, 5 மற்றும் 6ம் தேதிகளில் நடக்கிறது. இதற்கான, தேர்வு அனுமதி சீட்டுகளை என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டது.
இதற்கிடையே, முதுகலை பட்டப்படிப்புகளுக்கான க்யூட் தேர்வுகள் செப்., 1 - 11 வரை நடக்க இருப்பதாக, பல்கலை மானிய குழுவின் தலைவர் மமிடலா ஜெகதீஷ் குமார் நேற்று அறிவித்தார்.உள்நாட்டில் உள்ள 500 நகரங்களில் இருந்தும், வெளிநாடுகளில் உள்ள 13 நகரங்களில் இருந்தும், மொத்தம் 3.57 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுத உள்ளனர்.
CBSE Exam முதல் NEET Exam வரை - ஏப்ரல் மாதத்தில் முக்கியமான கல்வி நிகழ்வுகள்.!
இந்த ஏப்ரல் மாதத்தில், கல்வி சார்ந்த மிக முக்கியமான அறிவிப்புகள் வெளியாக இருக்கின்றன. குறிப்பாக, முதல் முறையாக நடத்தப்பட உள்ள ஒற்றை கல்லூரி நுழைவுத் தேர்வு, 30 லட்சம் மாணவர்களுக்கு தொடங்க உள்ள சிபிஎஸ்இ தேர்வுகள், தேசிய அளவிலான பொறியியல் நுழைவுத் தேர்வு - ஜேஇஇ மெயின்ஸ் ஆகியவை இதில் அடங்கும். ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட உள்ள முக்கிய தேர்வுகள் குறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சியூஇடி மாணவர் சேர்க்கை :
நாட்டிலேயே முதல் முறையாக மத்திய பல்கலைக்கழகங்களுக்கான ஒரே நுழைவுத் தேர்வு (சியூஇடி) நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்பதற்கான பதிவு நடவடிக்கைகளை தேசிய திறனாய்வு முகமை (என்டிஏ) கடந்த 6ஆம் தேதி தொடங்கியது .
ஜேஇஇ மெயின்ஸ் அனுமதிச்சீட்டு :
ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு முதல் செஷனுக்கான அனுமதிச்சீட்டுகள் ஏப்ரல் 3ஆவது வாரத்தில் வெளியிடப்பட உள்ளது. பொறியியல் நுழைவுத் தேர்வின் முதல் அமர்வு என்பது ஏப்ரல் 21, 24, 25, 29 மற்றும் மே 1, 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு இரண்டு அமர்வுகளாக நடைபெற உள்ளது. முதல் அமர்வு தேர்வுக்கான பதிவு என்பது ஏப்ரல் 5ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. அதற்குப் பிறகு இரண்டாம் அமர்வுக்கான விண்ணப்ப நடவடிக்கை தொடங்கும். இரண்டாம் அமர்வு தேர்வு என்பது மே 24, 25, 26, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
சிஐஎஸ்சிஇ வாரிய தேர்வுகள் :
சிஐஎஸ்சிஇ கல்வி வாரியத்தில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி ஜூன் 13ஆம் தேதியுடன் நிறைவுபெற உள்ளது.
இரண்டாம் பருவத் தேர்வுகள் 1.5 மணி நேர கால அளவில் நடைபெற உள்ளன. கேள்வித் தாள்களைப் படித்துப் பார்ப்பதற்காக மாணவர்களுக்கு 10 நிமிடங்கள் வழங்கப்படும். தேர்வு நடைபெறும் நாளில் நண்பகல் 1.50 மணியளவில் மாணவர்களுக்கு கேள்வித் தாள்கள் வழங்கப்படும்.
சிபிஎஸ்இ வாரிய தேர்வுகள் :
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்க உள்ளன.
இரண்டு வகுப்புகளுக்குமே தேர்வு என்பது காலை 10.15 மணிக்கு தொடங்கும். கேள்வித் தாள்களை படிப்பதற்காக 15 நிமிடங்கள் வழங்கப்படும்.
நீட் தேர்வு அறிவிக்கை :
நீட் தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 6 தேதி முதல் தொடங்கியது. ஏப்ரல் 6 தேதி முதல் மாணாக்கர்கள் விண்ணப்பங்களை neet.nta.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 06-5-2022.