12ம் வகுப்புக்கான தேர்வு கட்டணம் செலுத்த தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான தேர்வு கட்டணத்தை நாளை முதல் 20ம் தேதிக்குள் மாணவர்கள் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.  


கொரோனா வைரஸ் பரவலால் மக்களின் இயல்பு வாழ்க்கையும், அன்றாட தொழில்களும் பாதிப்புக்குள்ளான நிலையில், மாணவர்களின் கல்வியும் பெரிதளவில் பாத்திற்கு உள்ளாகியுள்ளது.  இந்த பெருந்தொற்று பல மடங்கு பெருகி வருவதால், மாணவர்களை பாதுகாக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. 

பின்னர் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில்கொண்டு, அரசு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த தொடங்கியது.  இருப்பினும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தாமல் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டது.  தற்போது கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல ஆரம்பித்தனர்.


கல்வியாண்டில் இடையில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்று பரவலாக கேள்வி எழுந்தது, இதற்கு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்தப்படும் என்று கூறினார்.  இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.  இதனால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதனால் மீண்டும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்று குழப்பம் எழுந்ததையடுத்து, நேற்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத்தேர்வு நடத்துவதில் மாற்றம் இல்லை நிச்சயமாக நடத்தப்படும் என்று தெரிவித்தார்.


இதனையடுத்து  12ம் வகுப்புக்கான தேர்வு கட்டணத்தை நாளை முதல் 20-ம் தேதிக்குள் மாணவர்கள் செலுத்துமாறு அரசு தேர்வுகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.  செய்முறை தாள் கொண்ட பாடங்களுக்கு ரூ 225 கட்டணம் செலுத்துமாறும், செய்முறை தேர்வு அல்லாத பாடங்களுக்கு ரூ 175 கட்டணம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment