இங்கிலாந்தில் உள்ள 19 பல்கலைக்கழகங்களில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM - ‘ஸ்டெம்’) ஆகிய துறைகளில் முதுநிலை பட்டப் படிப்பை மேற்கொள்ள ஏதுவாக உதவித் தொகை தரப்படுகிறது.
நடப்பு கல்வி ஆண்டில் (2022-23) ‘ஸ்டெம்’ திட்டத்தின்கீழ் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இதற்கான அவகாசம் இன்று (மார்ச் 31) முடிகிறது. இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்க விரும்புவோர் https://www.britishcouncil.org/study-work-abroad/in-uk/scholarship-women-stem என்ற இணையதள லிங்க் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். பிரிட்டிஷ் கவுன்சில் நிர்வாகி விஷு சர்மாவை vishu.sharma @britishcouncil.org என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.