Showing posts with label INSPIRE AWARD. Show all posts
Showing posts with label INSPIRE AWARD. Show all posts

தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2022ஆம் ஆண்டுக்கான 24 வகையான விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

 தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2022ஆம் ஆண்டுக்கான 24 வகையான விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு அரசின் 2023ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


24 விருதுகளுக்கு வகையான  திருவள்ளுவர் விருது 2023 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருது (3 விருதுகள்). பேரறிஞர் அண்ணா விருது. பெருந்தலைவர் காமராசர் விருது. பாரதியார் விருது. பாவேந்தர் பாரதிதாசன் விருது, வி.க விருது, கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது.


உமறுப்புலவர் விருது, ஜி.யு.போப் விருது, இளங்கோவடிகள் விருது. அம்மா இலக்கிய விருது. சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (10 விருதுகள்). சிங்காரவேலர் விருது. அயோத்திதாசப் பண்டிதர் விருது. மறைமலையடிகளார் விருது. அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது. காரைக்கால் அம்மையார் விருது, சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது, தமிழ்ச் செம்மல் விருதுகள் (38 விருதுகள் மாவட்டத்திற்கு ஒன்று வீதம்).

விண்ணப்பங்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் https://awards.tn.gov.in என்ற இணைய வழி வாயிலாகவோ அல்லது இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை அவர்களுக்கு 23.12.2022-க்கு முன்பாக விண்ணப்பம் வாயிலாகவோ அனுப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறது. உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 


விருதுக்கு தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு முதலமைச்சரால் விருது வழங்கப்படும். (தொ.பே.எண். 044-28190412, 044-28190413.


Click here to join whatsapp group for daily kalvinews update 

2021 மற்றும் 22-ம் ஆண்டுகளுக்கான முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

 


தமிழில் சிறந்த மென்பொருள் தயாரிப்புக்கு வழங்கப்படும் முதல்வரின் கணினித் தமிழ் விருதுகளுக்கு டிச.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினிவழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில், சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிப்பதற்காக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முதல்வர் கணினித் தமிழ் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு ரூ.2 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்படுகிறது.


அந்த வகையில், 2021-ம் ஆண்டுக்குரிய முதல்வர் கணினித் தமிழ்விருதுக்கு மென்பொருள்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளது. மேலும், 2021-ம் ஆண்டுக்கு கூடுதல் விண்ணப்பங்களும், 2022-ம்ஆண்டுக்கு தனி நபர், நிறுவனத்திடம் இருந்து தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன.


விருதுக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருள்கள், 2018,2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்தில் (www.tamilvalarchithurai.com) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


விருதுக்கான விண்ணப்பங்கள், ‘தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 600 008’ என்ற முகவரிக்கு வரும்டிச.31-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 044 – 28190412, 28190413ஆகிய தொலைபேசி எண்கள், tvt.budget@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Click here to Join WhatsApp group for Daily kalvi news 

மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது - தமிழகத்தில் 6 பேர் பரிந்துரை

 தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 6 ஆசிரியர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.


மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். அதன்படி நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வுசெய்யும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களில் தகுதிபெற்ற நபர்களை விதிகளின்படி அந்தந்த மாநில அரசுகள் பரிந்துரைக்க வேண்டும்.


அதன்படி தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 6 ஆசிரியர்களை பள்ளிகல்வித்துறையின் மாநில தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்விவரம் வருமாறு:


ஏ.ஸ்டெல்லா அமலோற்பவ மேரி (தலைமை ஆசிரியை, திருப்பூர் ஜெய்வாய்பாய் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி), ராஜலட்சுமி ராமசந்திரன் (தலைமை ஆசிரியை, குண்டூர் சுப்பையா பிள்ளைதி.நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி), ஏ.முருகன் (பட்டதாரி ஆசிரியர், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி-அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி), ஆர்.ஜெரால்ட் ஆரோக்கியராஜ் (பட்டதாரி ஆசிரியர், கரூர் மாவட்டம், பில்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி), கே.பிரதீப் (பட்டதாரி ஆசிரியர், திருப்பத்தூர் மாவட்டம், பெருமாப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி, கே.ராமச்சந்திரன் (இடைநிலை ஆசிரியர், ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம், கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி) ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.


இவர்களுக்கான மதிப்பீடு நேர்காணல் தேசிய அளவில் தனி நடுவரின் முன்னிலையில் காணொலி காட்சி மூலம் ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெற உள்ளது.


Click here to Join WhatsApp group for Daily kalvi news

தேசிய நல்லாசிரியர் விருது 2022 - பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் - Commissioner Proceedings

 தேசிய நல்லாசிரியர் விருது-2022க்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் பட்டியல் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (List of Teachers Nominated for National Best Teacher Award-2022 - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 38318/ ஐ/ 2022, நாள்: 03-08-2022...




National Teachers Award 2022 - Direct Link

ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்கள் மத்திய அரசு இணையதளத்தில் பதிவு செய்யலாம்....


இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


கீழே உள்ள இணைப்பில் தாங்கள் விவரங்கள் பதிவேற்றவும்.


Teachers can apply for national best teacher award Direct link - View here...

கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமைச் செயல் அதிகாரியை (சிஇஓ) நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு - விண்ணப்பிக்க அழைப்பு!

கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமைச் செயல் அதிகாரியை (சிஇஓ) நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கு அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை 5 முதல் 8 ஆண்டுகள் நடத்திய முன் அனுபவம் உள்ள நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் சிஇஓ பணிக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 


தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (எஸ்சிஇஆர்டி), கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு, பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு தொலைதூரக் கல்வி வாய்ப்புகளை வழங்கி, கல்வி தொலைக்காட்சியை நடத்தி வருகிறது. 


கரோனா நோய்த்தொற்றுகளின் போது தமிழ்நாட்டில் பள்ளிகள் இணையவழியில் செயல்பட்டு வந்த நேரத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கற்றல் குறைபாட்டை போக்கவும், கற்றல்-கற்பித்தல் பணிகளை வீடுகளுக்கே சென்று மேற்கொள்ளவும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு உதவிடும் வகையில், கடந்த 2019 ஆம் ஆண்டு கல்வித் தொலைக்காட்சி உருவாக்கப்பட்டது. 


இதில், நாள்தோறும் வகுப்பு வாரியாக ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தும் விடியோக்கள் ஒளிபரப்பப்பட தொடங்கி, இன்றுவரை அவரை ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.


இதனிடையே, கல்வித் தொலைகாட்சி தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், போட்டித்தேர்வர்களுக்கு ஏற்ற வகையில் மறுகட்டமைப்புக்கு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 


இந்நிலையில், கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமைச் செயல் அதிகாரியை (சிஇஓ) நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கு அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் தயாரிப்பு மற்றும் நிர்வாகத்தில் குறைந்தபட்சம் 5 முதல் 8 ஆண்டுகள் நடத்திய முன் அனுபவம் உள்ள நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் சிஇஓ பணிக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 


எலக்ட்ரானிக் மீடியா, விசுவல் கம்யூனிகேஷன், கல்வி தொழில்நுட்ப ஊடகத்தில் பட்டம் பெற்றிருப்பதுடன், எழுத்து மற்றும் பேச்சுத் தமிழ் பற்றிய அறிவு. சிறந்த தகவல் தொடர்பு திறன்,கணிகளை கையாளும் திறன், நடைமுறைக்கேற்ற அனைவரும் விரும்பும் வகையிலான நிகழ்ச்சிகளை வடிவமைக்கும் திறன், நிர்வாகத்திறன், ஊடக வணிக திறன். விளம்பர வணிக வளர்ச்சி போன்றவற்றில் கூடுதல் திறன் பெற்றிருக்க வேண்டும்.  


தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://forms.gle/KPvFRsK5JHwf9gd68  என்ற தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். 


தகுதியான விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் நேர்முகத் தேர்வு அழைக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Teachers and teacher educators can apply for the National ICT Award 2020 & 2021

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் National ICT Award 2020 & 2021க்கு விண்ணப்பிக்கலாம். கடைசி நாள்: 30-06-2022 

(Teachers and teacher educators can apply for the National ICT Award 2020 & 2021. Last day: 30-06-2022)...

>>> National ICT Award - Application Registration Instruction Manual for School Teacher...

>>> National ICT Award - Application Registration Instruction Manual for Teacher Educator...

English_20_21

Dear all, 

CIET, NCERT has announced the nomination for National ICT Award 2020 & 2021. Click on this link to apply : https://ictaward.ncert.gov.in/

>>> Login Website Link...

Inspire Award 2021- 22 | Selected Students List Published

2021-22 ஆம் ஆண்டிற்கான INSPIRE விருது திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் வெளியீடு.