கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு தமிழக AIDED பள்ளி TET நிபந்தனை ஆசிரியர்களின் சார்பில் ஆயிரம் புத்தகங்கள் வழங்கல்!

 டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு தமிழக AIDED பள்ளி TET நிபந்தனை ஆசிரியர்களின் சார்பில் ஆயிரம் புத்தகங்கள் வழங்கும்  திருச்சியில் நடைபெற்றது*


மதுரையில் விரைவில் திறக்கப்பட இருக்கும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பின்சார்பில் ஆயிரம் புத்தகம் வழங்கும் விழா திருச்சியில் இன்று ( 05 - 05-2023) மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மன்றம் நா. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் வரவேற்புரை ஆற்றிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தஞ்சை சுந்தரவேலு பேசுகையில், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதில் இருந்து ஏற்கனவே விலக்கு அளித்துள்ளது போல கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 16 க்கு முன்பு வரை அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் நிரந்தரப் பணியிடத்தில் பணியாற்றி வரும் சுமார் 1500 ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அவர்களது வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

விழாவில் தலைமை உரையாற்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றப் பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் பேசுகையில் கடந்த 10 ஆண்டுகளாக கடந்த ஆட்சியில் கண்டு கொள்ளப்படாமல் இருந்த தகுதி தேர்வு நிபந்தனை ஆசிரியர்களின் பணிக்காலத்தைக் கருத்தில் கொண்டு  இவர்களுக்குஇந்தக் கோடை விடுமுறை காலத்தில் புத்தாக்கப் பயிற்சி மட்டும் அளித்து ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதில் இருந்து இவர்களுக்கும் விலக்கு அளித்திட வேண்டும் என வலியுறுத்தினார்.

இவ்விழாவில் ஆயிரம் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டு சிறப்புரை ஆற்றிய மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்,மதுரையில் விரைவில் திறக்கப்பட உள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூலகத்திற்கு ஆயிரம் புத்தகங்களை வழங்கியதோடு தங்களது நீண்ட நாள் கோரிக்கையையும் இங்கு முன் வைத்துள்ளனர். ஏற்கனவே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழக அரசிடம் வைத்துள்ள  கோரிக்கைகளில் எளிதாக தீர்க்கப்படக்கூடிய கோரிக்கைகளை பட்டியலிட்டுள்ளோம்.
அந்த வகையில் இவர்களது இந்தக் கோரிக்கையும் அதில் இடம்பெற்றுள்ளதோடு இவை அனைத்தும் ஏற்கனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்கிறோம் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அமைச்சர்.

இவ்விழாவில்   தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொருளாளர் முருக செல்வராஜ் சொத்துப் பாதுகாப்பு குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஆ. சந்திரன், பூபதி, சிவஞானம் ஆகியோர் செய்திருந்தனர்.

நிறைவாக 
இக் கூட்டமைப்பின் பொருளாளர் காளிதாசன் நன்றி கூறினார்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment