உங்க இதயத்தை ஆரோக்கியமாவும் சர்க்கரை அளவை சரியாக நிர்வகிக்கவும் 'இந்த' ஒரு பொருள் போதுமாம்!


உணவு சமைத்தப்பின் இறுதியில், கொத்தமல்லி இலையை கொஞ்சம் தூவி அலங்கரித்தால், ஒவ்வொரு உணவும் மிகவும் சுவையாகத் தோன்றும்.

ஹரா தானியா என்றும் அழைக்கப்படும் கொத்தமல்லி, மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் ஏ, பி, சி மற்றும் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. கொத்தமல்லி இலை மற்றும் விதைகள் இரண்டும் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவம் இரண்டிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.

தானிய தூள் பெரும்பாலான பருப்புகள் மற்றும் கறிகள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் புதிய கொத்தமல்லி இலைகள் பொதுவாக சட்னி செய்வதற்கும் உணவை அலங்கரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இது உணவின் சுவையை மேலும் கூட்டுகிறது. இது உங்கள் உணவிற்கு நறுமணத்தையும் அழகையும் சேர்ப்பது மட்டுமல்லாமல் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.


இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது

கொத்தமல்லி ஒரு டையூரிடிக் ஆக செயல்படுகிறது. இது உங்கள் உடலிலிருந்து கூடுதல் சோடியத்தை வெளியேற்ற உதவுகிறது மற்றும் உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். சில ஆரம்பகால ஆராய்ச்சிகள், கொத்தமல்லி கெட்ட கொலஸ்ட்ராலான எல்.டி.எல்லைக் குறைக்க உதவும் என்றும், இது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்றும் தெரிவிக்கிறது.

வீக்கத்தைக் குறைக்கிறது

புற்றுநோய் முதல் இதய நோய் வரை பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய வீக்கத்தைக் குறைக்க கொத்தமல்லி உதவும். கொத்தமல்லியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஆய்வகத்தில் புற்றுநோய் செல்களின் மெதுவான வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

கொத்தமல்லி பல்வேறு ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல்லுலார் சேதத்தைத் தடுக்கிறது. இந்த சேர்மங்களில் டெர்பினைன், குவெர்செடின் மற்றும் டோகோபெரோல்கள் ஆகியவை அடங்கும். இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நரம்பியல் விளைவுகளைக் கொண்டுள்ளன.

இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது

கொத்தமல்லி உங்கள் உடல் இரத்த குளுக்கோஸை திறம்பட செயலாக்க உதவும் என்சைம்களை செயல்படுத்த உதவும் என்று தற்போதைய சோதனைகள் காட்டுகின்றன. இரத்த குளுக்கோஸ் அளவுகளில் கொத்தமல்லியின் நன்மைகளை உறுதிப்படுத்த அதிக இரத்த சர்க்கரை உள்ளவர்கள் மீது கூடுதல் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும்

பார்கின்சன், அல்சைமர் மற்றும் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் போன்ற மூளை நோய்கள் வீக்கத்துடன் கொத்தமல்லி தொடர்புடையவை. கொத்தமல்லியை உட்கொள்வதன் மூலம் இந்த மூன்று நோய்களிலிருந்தும் பாதுகாக்கலாம். கொத்தமல்லி சாறு நரம்பு செல் சேதத்திலிருந்து பாதுகாக்கும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. கொத்தமல்லி இலைகள் நினைவாற்றலை மேம்படுத்துவதோடு, கவலையையும் சமாளிக்கும்.

செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

கொத்தமல்லி விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆரோக்கியமான செரிமானத்தை துரிதப்படுத்தி ஊக்குவிக்கும். கொத்தமல்லி கொண்ட மூலிகை மருந்தின் 30 சொட்டுகள் IBS நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டால், வயிற்று வலி, வீக்கம், அசௌகரியம் மற்றும் வலி ஆகியவை கணிசமாகக் குறையும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. பாரம்பரிய ஈரானிய மருத்துவத்தில் இது பசியைத் தூண்டும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

பார்வைத்திறனை மேம்படுத்துகிறது

கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் ஏ மற்றும் கண்பார்வையை மேம்படுத்தும் கரோட்டினாய்டு வகை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அடர்த்தியாக நிறைந்துள்ளன. அவை கான்ஜுன்க்டிவிடிஸ் மற்றும் மாகுலர் மற்றும் வயது தொடர்பான பார்வைக் குறைபாடுகளைக் குணப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்.

கல்லீரல் செயலிழப்பு சிகிச்சைக்கு உதவலாம்

கொத்தமல்லி இலைகளில் உள்ள அதிகளவு ஆல்கலாய்டுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் பித்த கோளாறுகள் மற்றும் மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் நோய்களைக் குணப்படுத்த உதவும்.

தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது

கொத்தமல்லியில் ஆண்டிமைக்ரோபியல் கலவைகள் உள்ளன. அவை தொற்று மற்றும் உணவு மூலம் பரவும் நோய்களை எதிர்த்துப் போராட உதவும். கொத்தமல்லியில் உள்ள டோடெசெனல் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

உங்கள் சருமத்தைப் பாதுகாக்கிறது

கொத்தமல்லி உங்கள் சருமத்தை லேசான தடிப்புகள் மற்றும் தோல் அழற்சியிலிருந்து பாதுகாக்கும். சொறி போன்ற தோல் நோய்களுக்கு மாற்று சிகிச்சையாக இதைப் பயன்படுத்தலாம். இது செல்லுலார் சேதத்தைத் தடுக்கலாம். இது வயதான தோல் மற்றும் புற ஊதா B கதிர்வீச்சிலிருந்து தோல் சேதத்திற்கு வழிவகுக்கும்.

0 Comments:

Post a Comment