மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை – டிசம்பரில் முடிவு? புதிய தகவல்!

 மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகை குறித்த முடிவு டிசம்பர் மாதம் நடைபெற இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது

கொரோனா பேரலை தொற்று காரணமாக கடந்த 18 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (DA) மற்றும் DR தொகை திருப்பி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 3 தவணைக்கான அகவிலைப்படி (DA) உயர்வுடன் சேர்த்து மொத்தம் 31% DA அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத DA நிலுவைத் தொகை குறித்த புதுப்பிப்பை அரசு வழங்கியுள்ளது.

இது தொடர்பான ஊடக அறிக்கையின்படி, டிசம்பர் மாதத்தில் மத்திய அரசாங்கம் 18 மாத DA நிலுவைத் தொகையை அளிப்பது குறித்து முடிவு செய்யலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது நிலுவையில் உள்ள 18 மாத DA தொகை குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதன் இறுதி முடிவு அடுத்த மாதம் டிசம்பரில், அதாவது புத்தாண்டுக்கு முன்னதாக எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து JCM தேசிய கவுன்சிலின் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா கூறுகையில், ‘நிலுவையில் உள்ள 18 மாத DA நிலுவைத் தொகையை தீர்ப்பதற்கு அரசுக்கு கவுன்சில் கோரிக்கை வைத்துள்ளது. அடுத்த மாதம் நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளார். இப்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (DA) மற்றும் DR நிலுவைத் தொகையை வழங்குமாறு இந்திய ஓய்வூதியர் மன்றம் பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment