Showing posts with label TRANSFER. Show all posts
Showing posts with label TRANSFER. Show all posts

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு

 ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு


ஒரே பணியிடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து முன்னுரிமை கோருபவர்கள் தனியே  பணி அனுபவச் சான்றினை பதிவேற்றம் செய்யத் தேவையில்லை.


இப்பள்ளியில் பணியேற்ற நாள் என்பதில், எந்த தேதியைக் குறிப்பிட்டுள்ளீர்களோ, அதற்குரிய சான்றினை எதுவாயினும் (Appointment Order/ Transfer Order/ Joining Order) ஒன்றினை தாங்களே பதிவேற்றம் செய்துகொள்ள முடியும்.


அதற்கான வசதி உங்களுடைய EMIS Portal லில் வழங்கப்பட்டுள்ளது..


Click here for latest Kalvi News 

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

 ஆசிரியர்களால் EMIS தளத்தின் வழியே அளிக்கப்பட்டு, தலைமை ஆசிரியரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாறுதல் விண்ணப்பங்களைச் சம்மந்தப்பட்ட அலுவலரிடம் (BEO / DEO / CEO) ஒப்படைக்க திங்கட்கிழமை (01-May-2023) மாலை 5 மாலை வரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது. தொடர் விடுமுறை மற்றும் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருவதை கருத்தில் கொண்டு, இக்காலக்கெடு புதன்கிழமை (03-may-2023) மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

- Commissioner of School Education


Click here for latest Kalvi News 

Transfer Application print எடுப்பதற்கான வழிமுறை


🖨️Transfer Application print எடுப்பதற்கான வழிமுறை


▪️ஒரு ஆசிரியர் within block & district to district என transfer apply செய்திருந்தால்..


▪️ஒரே நேரத்தில் இரண்டிற்கும் apply செய்ய முடியும்.


▪️ஆனால் print எடுக்கும் போது கலந்தாய்வு என்ற இடத்தில் please select counseling என்பதில் within block select செய்து முதலில் print எடுக்கவும்.


▪️மீண்டும் அதே இடத்தில் district- district என select செய்து அதையும் print எடுத்து இரண்டு Application - னையும் HM யிடம் கொடுக்கவும்..


HM -Approval


▪️within block & district- district என இரண்டையும் approval செய்ய வேண்டும்..


▪️இரண்டையும் தனித்தனியாக print எடுக்க வேண்டும்..


HM Approval செய்த பின்பும்  transfer Application - யில் தவறு இருந்தால் view details click செய்து edit & reject செய்து கொள்ளலாம் என நினைக்கிறேன்...


முயற்சி செய்து பார்க்கவும்....

 Click here for latest Kalvi News 

பணிமாறுதல் செய்திகள்: மாறுதலில் முன்னுரிமை கோர தகுதி உடையவர்கள் - (இணைக்க வேண்டிய சான்று)

 பணிமாறுதல் செய்திகள்:

மாறுதலில் முன்னுரிமை கோர தகுதி உடையவர்கள் - (இணைக்க வேண்டிய சான்று)

1. முற்றிலும் கண் பார்வையற்றவர் (மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சான்று)


2. மாற்றுத்திறனாளிகள் (40%க்கும் மேல் உள்ளவர்கள்)- (மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சான்று)


3. மனவளர்ச்சி குன்றிய/ மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் - (மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சான்று)


4. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை/ டயாலிசிஸ் சிகிச்சை/ இருதய அறுவை சிகிச்சை/ புற்றுநோயாளிகள் / மூளை கட்டி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் - (அரசு/தனியார் சிவில் சர்ஜன் மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவ ஆவணம்)


5. இராணுவத்தில் பணிபுரியும் துணைவர் உடையவர்கள் (சான்று)


6. கணவன்/ மனைவியை இழந்தவர்கள் (வருவாய் கோட்டாட்சியர் சான்றிதழ்)


7. தற்போது பணிபுரியும் பள்ளியில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்கள் (பதவி உயர்வு/ மாறுதல் ஆணை)


8. கணவன் மனைவி பணி முன்னுரிமை (Spouse certificate) CLICK HERE 


Click here for latest Kalvi News 

மாற்றுப் பணியில் பணி அமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரையும் பணியிலிருந்து விடுவிக்க உத்தரவு.

 மாற்றுப் பணியில் பணி அமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரையும் பணியிலிருந்து விடுவிக்க இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்...


ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மே'23 : பருந்துப் பார்வை!

 தொடக்கக் கல்வித் துறையின் 2022-23-ம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. அதில் இருப்பதும் இல்லாததும் குறித்து பருந்துப் பார்வையாக. . .


Minimum 1Year Service-க்கு டாட்டா!


மாறுதலுக்கு விண்ணப்பிக்க தற்போது பணியாற்றும் பள்ளியில் குறைந்தது ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் கடந்த 4 மாதங்களாக நிருவாக மாறுதல் எனும் பெயரில் பல இலட்சங்கள் செலவு செய்து தென்மாவட்டங்களுக்குள் சென்ற ஆசிரியர்கள் இக்கலந்தாய்வில் கலந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்தமுறை இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதலுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் எவ்வித முறையான ஆணையுமின்றி சமூகநீதிக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட Appointment Seniority மூலம் மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் உட்பட சென்றமுறை மாறுதல் பெற்ற அனைவரும் ஒன்பதே மாதங்களில் மீண்டும் மாறுதல் கோரி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


BT PROMOTION இல்லை!


தொ.க.துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்குக் கலந்தாய்வு நடத்த தேதி அறிவிக்கப்படவில்லை. TET தொடர்பான வழக்கு காரணமாகத்தான் இம்முடிவு எடுக்கப்பட்டிருக்குமாயின் அதுகுறித்த தகவல் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எந்தவிதத் தகவலும் செயல்முறைகளில் இல்லை.


30.01.2020-ல் வெளியான ப.க.து அரசாணை 12-ல் BT பணியிடத்தை முதலில் Promotion மூலமும், பின்னர் Transfer மூலமும், இவ்விரண்டிலும் தகுதியான நபர்கள் இல்லை என்றால் மட்டுமே Direct Recruitment மூலமும் நிரப்ப வேண்டும் என்றுதான் தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை சார்நிலைப் பணி விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்பதால், நேரடியாக TET-ஐ இதில் புகுத்த இயலாது. மேலும் RTE 2009 சட்டமும் BT நேரடி நியமனத்திற்குத்தான் TET தேவை என்று வரையறுத்துள்ளது எனும் போது பதவி உயர்வுப் பணியிடங்களுக்குத் தகுதித் தேர்வுகளைக் கட்டாயமாக்க வேண்டிய அவசியமே இல்லை. இதை மீறி வழக்காடு மன்றம் தலையிடுகிறது என்றால் அரசின் நிலைப்பாட்டில் தெளிவு தேவை. ஆனால், BT PROMOTIONக்கு தேதி வழங்காதது குறித்தோ / BT PROMOTION குறித்தோ எவ்வித குறிப்புமே செயல்முறைகளில் இல்லை எனும்போதே அரசு எத்தகைய தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது.


இல்லை! இல்லை!!


❌ இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கான முன்னுரிமை Station Seniorityயா? / Appointment Seniorityயா? என்ற விபரம் வழக்கம்போல இம்முறையும் எழுத்தில் இல்லை.


❌ மலைப்பாங்கான, போக்குவரத்து வசதி குறைந்த, ஆசிரியர் பற்றாக்குறையுள்ள & கற்றலில் பின் தங்கிய ஒன்றியங்களாகக் கடந்தமுறை அடையாளமிடப்பட்ட சிறப்பு முன்னுரிமை ஒன்றியங்கள் (Priority Blocks) தொடர்பான குறிப்புகள் இல்லை.


❌ ஆசிரியர்களுக்கான சிறப்பு முன்னுரிமை (Special Priority) தொடர்பான வரிசை முறைப் பட்டியல் பற்றிய குறிப்புகள் இல்லை. கடந்த ஆண்டின் வரிசை முறையில் முன்னுரிமை வழங்கப்படுமா / மாற்றமிருக்குமா என்பது Seniority List வந்தால்தான் தெரியவரும்.


❌ பதவி உயர்வுக் கலந்தாய்வு நடத்தப்படப்போவது 1.1.22 தேர்ந்தோர் பட்டியல் படியா? 1.1.23 தேர்ந்தோர் பட்டியல் படியா? என்ற விபரம் இல்லை.


❌ நலத்துறைப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையில் இணைத்தது தொடர்பான குறிப்புகளோ, அப்பள்ளிகளுக்கான கலந்தாய்வு குறித்தோ, அதன் காலிப்பணியிடங்கள் காட்டப்படுமா என்றோ குறிப்பிடப்படவில்லை.


மாறுதலுக்கு விண்ணப்பித்தல் & கலந்தாய்வு நடைமுறை :


👉 EMIS Web page-ல் Individual ID வழியே ஏப்.27 முதல் மே.1 மாலை 6:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


👉 ஆசிரியர் பற்றிய விபரங்களில் தவறுகள் இருப்பின் EMIS Web page-ல் School ID வழியே திருத்தம் செய்தபின் விண்ணப்பிக்க வேண்டும்.


👉 இறுதியாக மாறுதல் பெற்றோர் மாறுதல் ஆணையையும், இதுவரை மாறுதலே பெறாதோர் பணி நியமன ஆணையையும் கட்டாயம் Upload செய்ய வேண்டும்.


👉 வழக்கம் போல சிறப்பு முன்னுரிமைக்கான ஆவணங்களைச் சார்ந்தோர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


👉 ஆசிரியரது விண்ணப்பங்களுக்கு HM தனது ID-ல் Approval அளித்து அதனை 3 பிரதிகளில் Print செய்து ஒன்றை ஆசிரியருக்கும் மற்ற 2-ஐ BEO-விற்கும் கூடுதல் ஆவண நகல்களுடன் அளிக்க வேண்டும். BEO தன்னிடம் வரப்பட்ட 2-ல் ஒரு பிரதியை DEO-விற்கு அளிக்க வேண்டும்.


👉 HM விண்ணப்பங்களுக்கு BEO Approval அளித்து அதனை 3 பிரதிகளில் Print செய்து ஒன்றை ஆசிரியருக்கும் மற்ற 1-ஐ DEO-விற்கும் கூடுதல் ஆவண நகல்களுடன் அளிக்க வேண்டும்.


👉 மாவட்ட மாறுதலில் பணியாற்றும் மாவட்டத்தைத் தவிர்த்து பிற மாவட்டங்களை மட்டுமே தேர்ந்தெடுக்க இயலும்.


👉 மாறுதலில் ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே வாய்ப்பு. Resultant Vacancy முறை கிடையாது.


👉 40% மாற்றுத்திறனாளிகளை பணி நிரவல் செய்யக்கூடாது. 


Click here for latest Kalvi News 

Teachers General Transfer counselling 2023 - 2024 - instruction and schedule

 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கலந்தாய்வு அட்டவணை!



தற்போது அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு செயல்முறைகளானது 2022-23ஆம் கல்வி ஆண்டிற்குரிய மாறுதல் கலந்தாய்வு (நடப்பு கல்வி ஆண்டு) ஆகும். பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரை மாறுதல் கலந்தாய்வு மட்டும் (No Promotion Counselling) அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடக்கக் கல்வித் துறைக்கு மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இரண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது!

Teachers General Transfer counselling 2023 - 2024 - instruction and schedule -Pdf - Download here


Click here for latest Kalvi News 

டிச .7 முதல் பகுதிநேர ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு

 பள்ளிக் கல்வித் துறையில் பகுதி நேர ஆசிரியா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு, முதல் கட்டமாக வரும் டிச.7-ஆம் தேதி தொடங்கவுள்ளது.


இதுகுறித்து, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத்திட்ட இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியா்களுக்கு சுயவிருப்பத்தின் அடிப்படையில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி பகுதிநேர பயிற்றுநா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு முதல் கட்டமாக டிச.7-ஆம் தேதி இணைய வழியில் நடைபெறவுள்ளது.


இதில் ஓவிய ஆசிரியா்கள் மட்டுமே பங்கேற்க முடியும். தொடா்ந்து உடற்கல்வி, தொழிற்கல்வி பிரிவுகளில் உள்ள பயிற்றுநா்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தனித்தனியாக நடத்தப்படும்.

முதலில் மாவட்டத்துக்குள்ளும், அதன்பின் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கும் இடமாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு நடைபெறும்.

இதில் விருப்பமுள்ள பகுதிநேர ஆசிரியா்கள் தங்கள் விண்ணப்பங்களை நவ.30-ஆம் தேதிக்குள் சாா்ந்த பள்ளி தலைமை ஆசிரியா்கள் வாயிலாக எமிஸ் தளத்தில் பதிவுசெய்ய வேண்டும்.

ஒரு பணியிடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தால், பணியில் சோ்ந்த நாள், நோய் பாதிப்பு உடையவா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியவற்றின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இதுகுறித்த வழிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வை எந்த புகாருக்கும் இடமளிக்காதபடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் நடத்தி முடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுதிநேர ஆசிரியா்கள் பணியில் சோ்ந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்ட சூழலில், முதல் முறையாக இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

CEOs Seniority List ( 04.10.2022)

 முதன்மைக் கல்வி அலுவலர் / அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் 48 அலுவலர்களின் பணிமூப்புப் பட்டியல் வெளியீடு!

 CEOs Seniority List 4th Oct.pdf



Click here to Join WhatsApp group for Daily kalvi news

DEOs Seniority List ( 04.10.2022 )

 146 மாவட்டக் கல்வி அலுவலர்களின் அக்டோபர் - 2022 நிலவரப்படி உத்தேச பணிமூப்புப் பட்டியல் (Seniority List) வெளியீடு!

DEOs Seniority List.pdf - Download here





Click here to Join WhatsApp group for Daily kalvi news

Transfer Gov Women Employees - Maternity Leave Clarification - RTI Letter

 மகப்பேறு விடுப்பில் இருக்கும் பெண் அரசு ஊழியர் சொந்த விருப்பத்தின் பேரில் பணிமாறுதல் பெற்றால் புதிய பணியிடத்தில் மகப்பேறு விடுப்பை தொடர்ந்து துய்க்க வழிவகை இல்லை - RTI REPLY!



3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் / பள்ளியில் பணிபுரிபவர்களுக்கு கட்டாய மாறுதல் மற்றும் விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் - தொடர்பாக அறிவிப்பு.

 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் / பள்ளியில் பணிபுரிபவர்களுக்கு கட்டாய மாறுதல் மற்றும் விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் - தொடர்பாக அறிவிப்பு.

பள்ளிக்கல்வி - தமிழ்நாடு பொதுப்பணி / அமைச்சுப்பணி பணியாளர்கள் ( உதவியாளர் , இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் ) 3 ஆண்டுகளுக்கு அலுவலகத்தில் / பள்ளியில் மேல் ஒரே பணிபுரிபவர்களுக்கு கட்டாய மாறுதல் மற்றும் விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் - தொடர்பாக செயல்முறைகள். 

 இணைப்பு :-


1 முன்னுரிமைப் பட்டியல்


2. காலிப் பணியிட விவரம்


Proceedings - Download here


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

தமிழ்நாடு முழுவதும் மாறுதலுக்கு உட்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலக... விபரம்

 தமிழ்நாடு முழுவதும் மாறுதலுக்கு உட்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலக... விபரம்


DEO OFFICES AND NEW CONVERSION.pdf - Download here...



Click here to Join WhatsApp group for Daily kalvi news 

அலகு விட்டு அலகு மாறுதல்‌ கலந்தாய்வு 29.08.2022 அன்று நடைபெறும் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 அலகு விட்டு அலகு மாறுதல்‌ கலந்தாய்வு 29.08.2022 (பிற்பகல்‌) நடைபெறுதல் - 24.08.2022 மற்றும்‌ 25.08.2022 இல்‌ கல்வி மேலாண்மைத்‌ தகவல்‌ (EMIS Online) இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்தல் - மாவட்டக் கல்வி அலுவலர்கள் தடையின்மைச்‌ சான்றை Upload செய்தல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

Click here to Join WhatsApp group for Daily kalvi news

மனமொத்த மாறுதல் கலந்தாய்வு- கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

  தமிழ்நாடு - தொடக்கக் கல்வி - சார்நிலைப் பணி - 2021-2022 கல்வியாண்டிற்கான பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் கலந்தாய்வு- கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.


IMG_20220725_171107

IMG_20220725_171126

IMG_20220725_171117



Click here to Join WhatsApp group for Daily kalvi news

இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு செய்தி: 15.07.2022

 முன்னுரிமை வரிசை எண் 2602 முதல் 3250 வரை இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 15.07.2022 காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும். 

இந்த முன்னுரிமை வரிசையில் பெயர் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் 15.07.2022 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய அறிவுரைகள் வழங்க  வேண்டுமாய் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.


Click here to Join WhatsApp group for Daily kalvi news

DEE - District Transfer - SGT, BT Seniority List 2022 - 2023 Published

தொடக்கக் கல்வித்துறையில் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான முன்னுரிமைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


DEE - District Transfer - SGT,  BT Seniority List - Download here


Click here to Join WhatsApp group for Daily kalvi news

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு தேதி அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு தேதி அறிவிப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்





தொடக்கக்கல்வித்துறை மலை சுழற்சி பொது மாறுதல் அரசாணை வெளியீடு

பள்ளிக்கல்வி தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் மலைப் பகுதிகளில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மலைச் சுழற்சி மாறுதலின் போது பின்பற்றப்பட வேண்டிய பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.




IMG-20220617-WA0009

IMG-20220617-WA0010

IMG-20220617-WA0010

IMG-20220617-WA0007


All district unit transfer list



All district unit transfer list


Click here to download