Showing posts with label Election news. Show all posts
Showing posts with label Election news. Show all posts

தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கு Show Cause Notice - CEO Proceedings

 


22.03.2024 அன்று தேர்தல் பணி ஆணை பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள் / பணியாளர்கள் 24.03.2024 அன்று நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாமை - Show Cause Notice வழங்கப்பட்டுள்ளது - தொடர்பாக

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கு 22.03.2024 அன்று தேர்தல் பணி ஆணை வழங்கப்பட்டது.


மேற்காண் தேர்தல் பணிக்கான ஆணையினை பெற்றுக் கொண்ட ஆசிரியர்கள் / பணியாளர்கள் 24.03.2024 அன்று நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தமைக்கு சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் காரணம் கேட்கும் குறிப்பாணை பார்வையின்படி பெறப்பட்டுள்ளது.


கீழ்க்கண்டுள்ள அட்டவணையில் தெரிவித்துள்ளவாறு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் காரணம் கேட்கும் குறிப்பாணையினை இன்று பிற்பகல் 5.45 மணிக்குள் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இ.நி. / தொ.க.) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

வாக்களிப்பவர்களில் பிரச்னைக்குரிய 12 வகை பற்றி தெரிந்துகொள்வோம்...

 IMG_20240410_115248


12 Types of Voters

* 49 M
* 49 O
* 49 P ( Tendered vote)
* Challenge vote
* 49 N 
* 49 MA ( Test Vote)
* Proxy Vote
* 49 O
* EDC போன்ற வாக்களிப்பவர்களில் பிரச்னைக்குரிய 12 வகை பற்றி தெரிந்துகொள்வோம்...👇


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

07.04.2024 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் இரண்டாம் கட்ட மறு பயிற்சி - மாவட்ட ஆட்சியரின் கடிதம்!!!

 

தஞ்சாவூர் மாவட்டம் 30 தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி , பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 - ஐ முன்னிட்டு தேர்தல் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ( Polling Personnel ) இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பு ( Second Repeat Training Class ) ஏற்கனவே நடத்தப்பட்ட பயிற்சி மையங்களில் எதிர்வரும் 12.04.2024 அன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை நடத்திட மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளளது.


 கடந்த 07.04.2024 அன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் இரண்டாம் கட்ட மறு பயிற்சி வகுப்பில் ( Second Repeat Training Class ) கலந்து கொள்ள உள்ளனர் . எனவே , அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் பயிற்சி பெற ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். 


மேலும் , மேற்காணும் பயிற்சி வகுப்பிற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு , அதன் விபரத்தினை இவ்வலுவலகத்திற்கு உடன் தெரிவித்திடவும் கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்திடவும் கேட்டுக்கொள்கிறேன் 





. மின்னஞ்சல் முகவரி : election2024trgmnt@gmail.com


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு.

 


.com/

‘‘சில காரணங்களால் வாக்குப்பதிவு தாமதமாகத் தொடங்கினாலும் மாலையில் வாக்குப்பதிவு நேரத்தை எக்காரணம் கொண்டும் நீட்டிக்கக் கூடாது’’ என்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களாக நியமிக்கப்பட்டோருக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப் பித்துள்ளது. அதன் விவரம் வருமாறு: வாக்குச் சாவடியின் அனைத்து நிகழ்வுகளுக்கும் பொறுப்பு அதிகாரி, சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி தலைமை அலுவலரே ஆவார். அதனால், வாக்குச் சாவடியின் தலைவர் என்ற அடிப்படையில் அவர்கள் கடமைகளை மட்டும் தெரிந்து கொள்ளாமல், தனக்குக் கீழ் பணிபுரியும் மற்ற வாக்குப் பதிவு அலுவலர்களின் கடமைகளையும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்


வாக்குச் சாவடியில் மின் இணைப்பு உள்ளதா? குடிநீர் வசதிகள், மாற்றுத் திறனாளிகள் வர சாய்வு தளம் போடப்பட்டுள்ளதா? போன்றவற்றைப் பார்த்து தகவல் சொல்ல வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடி களில் வெப் கேமரா அமைக்கப் பட்டிருக்கும். அதனால், வாக்குச் சாவடியில் நிகழும் அனைத்தையும் தேர்தல் ஆணையத்தில் இருந்தே நேரடியாக கண்காணிப்பார்கள் என்பதால் தனிக் கவனத்துடன் செயல்பட வேண்டும் வாக்குப் பதிவு நாளன்று வாக்குப் பதிவு தொடங்குவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக மாதிரி அல்லது ஒத்திகை வாக்குப் பதிவை நடத்த வேண்டும்.

காலை 7 மணிக்கு வாக்குப் பதிவைத் தொடங்க வேண்டும். சிறுசிறு காரணங்களால் சற்று தாமதமானாலும் அதற்காக வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கக் கூடாது. வாக்குப் பதிவை மாலை 6 மணிக்கு முடிக்க வேண்டும். அதனால், 6 மணிக்கு வரிசையில் நிற்கும் கடைசி வாக்காளரிடம் இருந்து டோக்கன் வழங்குவதை ஆரம்பித்து முதலில் நிற்பவர் வரை வழங்கி அனைவரையும் வாக்களிக்கச் செய்ய வேண்டும். டோக்கன் வழங்கிய பிறகு வருவோரை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தேர்தல் பணி விலக்க அளிக்கக் கோரும் ஆசிரியர்கள் / அரசு ஊழியர்கள் கவனத்திற்கு...

 

தருமபுரி பாராளுமன்றத் பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக வாக்குச்சாவடி அலுவலர்கள் ( PO , PO1 , PO2 , PO3 , PO4 ) தேர்தல் பணியினை ரத்து செய்யவோ , அல்லது தொகுதி மாற்றம் செய்யகோரியோ அளிக்கப்படும் எந்தவொரு விண்ணப்பம் ஏற்று கொள்ளப்படமாட்டாது. 

மேற்கண்ட கோரிக்கைக்காக தேர்தல் பிரிவினை யாரும் அணுக வேண்டாம் என தெரிவித்துக்கொள்கிறேன்.





🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ( PO, P1, P2 ) தேர்தல் அன்று பயன்படும் முக்கிய படிவங்கள்

 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு  ( PO,  P1, P2 )  தேர்தல் அன்று பயன்படும் முக்கிய படிவங்கள்

 Useful Forms for Election Duty Officers 👇

Download here


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News