Showing posts with label General News. Show all posts
Showing posts with label General News. Show all posts

பிப்ரவரி 2023ஆம் மாதத்திற்கான ஊதிய பட்டியலில் மேற்கொள்ள வேண்டியவை - கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையாளரின் அறிவுரைகள்

 கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையாளர் அவர்களால் நடத்தப்பட்ட காணொளி கூட்டத்தில் கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.....


பிப்ரவரி 2023 ஆம் மாதத்திற்கான  Payroll Run 12.02.2023 அன்று செய்யப்படும்.


பிப்ரவரி 2023ஆம் மாதத்திற்கான ஊதிய பட்டியலில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து மாற்றங்களையும் (Income Tax... ect..) 10.02.2023 ற்கு முன்னதாக செய்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.*


20.02.2023 ற்கு பிறகு Mark For Recalculation Icon  Remove செய்யப்படும்.


எனவே, பிப்ரவரி 2023 ஆம் மாதத்திற்கான ஊதிய பட்டியல் தயாரிப்பதில் சுணக்கம் ஏற்படாமல் இருக்க மேலே குறிப்பிட்டுள்ள தேதிகளுக்குள்  உரிய மாற்றங்களை செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.



Click here for latest Kalvi News 

6 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணித உபகரணப் பெட்டிகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

2022-23 ஆம் கல்வியாண்டுக்கான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகளுக்கு விலையில்லா கணித உபகரணப் பெட்டிகள் பாடநூல் கழகம் மூலமாக அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

CoSE - Geometry Box Distribution.pdf - Download here...

  Click here for latest Kalvi News 


Click here to join whatsapp group for daily kalvinews update 

Budget Speech 2023 - Full Details ( pdf )

மே 5ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; 10ம் வகுப்பு ரிசல்ட் 17ல் வெளியாகிறது

 ''பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், மே, 5ல் வெளியிடப்படும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அறிவித்துள்ளார். செய்முறை தேர்வுக்கான தேதியும் மாற்றப்பட்டு உள்ளது.


தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச்சில் நடக்க உள்ளது.

பத்தாம் வகுப்புக்கு, ஏப்ரல், 6 முதல், 20 வரையிலும்; பிளஸ் 1க்கு, மார்ச், 14 முதல், ஏப்ரல், 5 வரையிலும்; பிளஸ் 2வுக்கு, மார்ச், 13 முதல், ஏப்ரல், 3 வரையிலும், பொதுத் தேர்வுகள் நடக்கின்றன.


மார்ச், 13ல் துவங்கி, ஏப்ரல், 20ல் அனைத்து பொதுத் தேர்வுகளும் முடிவடைகின்றன.


இந்நிலையில், பொதுத் தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் குறித்து, சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில், நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தலைமை வகித்தார்.


பள்ளிக்கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா, கமிஷனர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா ஆகியோர் பங்கேற்று, பொதுத் தேர்வை நடத்துவதற்கான முன்னேற்பாடு குறித்து, முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, வழிகாட்டுதல் வழங்கினர்.


இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி: பொதுத் தேர்வை எந்த பிரச்னையுமின்றி சுமூகமாக நடத்தும் வகையில், முன்னேற்பாடு மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதியும் இறுதி செய்யப்பட்டு உள்ளது.


பிளஸ் 2வுக்கு, மே, 5ல் முடிவுகள் வெளியிடப்படும். பத்தாம் வகுப்புக்கு மே, 17; பிளஸ் 1க்கு, மே, 19ம் தேதி தேர்வு முடிவு வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.


பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, வினாத்தாளின் தன்மையை புரிய வைக்கும் வகையில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் தயாரிக்கப்படும் புத்தகங்களையும், பழைய வினாத் தாள்களையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


செய்முறை தேர்வு தேதியில் மாற்றம்

பிளஸ் 2 செய்முறை தேர்வுகளை பொறுத்தவரை, மார்ச், 7 முதல், 10 வரை நடத்தப்படும் என, அரசு தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், நேற்றைய ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின், செய்முறை தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராக வசதியாக, மார்ச், 1 முதல், 9க்குள், செய்முறை தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார். 


 Click here for latest Kalvi News 


Click here to join whatsapp group for daily kalvinews update 

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வெளிநாட்டு கல்விச் சுற்றுலா - பள்ளிக்கல்வித் துறை முடிவு.

 

கற்பித்தல் மற்றும் நிர்வாகப் பணிகளில் சிறந்து விளங்கும் அரசு பள்ளிஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளை வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளிக்கல்வித் துறை முடிவுசெய்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பல்வேறு செயல்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கற்றல் மற்றும் இதர கலைச் செயல்பாடுகளில் மாநில அளவில் சிறந்து விளங்கும் அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளி நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதன்படி அரசு பள்ளிகளில் நடத்தப்பட்ட வினாடி வினா போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட 68 மாணவர்கள் கடந்த நவம்பரில் துபாய் நாட்டுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.


இதைத்தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டிலும் கலைத் திருவிழா போட்டிகள் மற்றும் கற்றலில் நன்றாக செயல்பட்ட மாணவர்களும் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா செல்ல இருக்கின்றனர். இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, மாணவர்களை போல் அரசு பள்ளி ஆசிரியர்கள், மற்றும்அதிகாரிகளையும் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: நிர்வாகப் பணிகள் மற்றும் அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துதலில் சிறந்து விளங்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளை, தேர்வு செய்து மாணவர்களுடன் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த பட்டியலில் கற்றல், கற்பித்தலில் சிறப்பாக இயங்கும் ஆசிரியர்களும் சேர்க்கப்பட உள்ளனர். ஏனெனில், வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா செல்லும் திட்டம் மாணவர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக படிப்பில் மட்டுமின்றி பல்வேறு கலைச் செயல்பாடுகளிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.


தற்போது இந்த திட்டத்தைதுறை அதிகாரிகள், ஆசிரியர்களுக்கும் விரிவுப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அரசின் அனுமதி கிடைத்தவுடன் இதற்கான பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 Click here for latest Kalvi News 


Click here to join whatsapp group for daily kalvinews update 

School Calendar - February 2023

 

பிப்ரவரி மாத பள்ளி நாட்காட்டி அட்டவணை :

 Click here for latest Kalvi News 


Click here to join whatsapp group for daily kalvinews update 

“ கள ஆய்வில் முதலமைச்சர் ” என்ற புதிய திட்டம் தொடக்கம்.

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க. ஸ்டாலின் அவர்கள் “ கள ஆய்வில் முதலமைச்சர் ” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து , முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் வேலூர் மண்டலத்தில் சுற்றுப் பயணம் 



" மக்களுக்காகத்தான் அரசு ! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு ! அரசு அலுவலகங்கள். மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை . அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும் " என ஏற்கெனவே தெரிவித்திருந்தார்கள்.


மேலும் கள ஆய்வுகளின் முக்கியத்துவத்தை பல்வேறு அரசுத் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டங்களிலும் வலியுறுத்தி வந்துள்ளார்கள்.

INCOME TAX - Challan/ITNS 280

ITI பயின்று தேர்ச்சி பெற்றவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

 

அரசாணை ( நிலை ) எண் .34 , தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு ( எஸ் .1 ) துறை நாள் . 30.03.2022 - ன்படி 8 ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC / NAC பெற்றவர்கள் 10 ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10 ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் 10 வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று NTC / NAC பெற்றவர்கள் 11 மற்றும் 12 ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12 ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என ஆணையிடப்பட்டதை தொடர்ந்து , அரசு தேர்வுகள் இயக்ககத்தால் ஆகஸ்ட் 2022- ல் நடத்தபெற்ற மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 விண்ணப்ப படிவம் , முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ( SOP ) ஆகியவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன . அதனை பின்பற்றி விண்ணப்பதாரரின் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ 28.02.2023 தேதிக்குள் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் .

Equivalence Certificate - Download here


Click here for latest Kalvi News 


600 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை தொடர்ந்து நீட்டிப்பதற்கான தேவை குறித்த விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

 


2008-2009-2010 மற்றும் 2010 2011 ஆம் கல்வியாண்டுகளில் தரமுயர்த்தப்பட்ட அரசு / நகராட்சி மற்றும் / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளிலிருந்து மகளிரை பிரித்து துவக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளிகளுக்கு 1512 தற்காலிக பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டது.

 இப்பணியிடங்களில் 600 தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ள நிலையில் இப்பணியிடங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் காலியாகயுள்ள பணியிடங்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு வரும் தற்காலிக பணியிடங்களை தொடர்ந்து நீட்டிப்பதற்கான தேவையை பரிசீலனை செய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அது குறித்த விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!


CoSE - 600 Temporary Posts Proceedings - Download here


Click here for latest Kalvi News 


தமிழ்நாட்டு சுதந்திர போராட்ட தியாகிகளின் முழு விவரம் - தமிழில்..

  தாய் திருநாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து தியாகிகளின் முழு விவரம் - தமிழில்...

 freedom fighters - Download here...


Click here for latest Kalvi News 


குடியரசு தின சிறப்பு வாழ்த்துக்கவிதை - ஆசிரியர் திரு. சீனி.தனஞ்செழியன்

 

குடியரசில் குதூகலிப்போம்

எங்கள் நாடு
பூமியின் பூக்காடு
எங்கள் ரத்தநாளங்களில் புடைத்து நிற்கிறது தாயகப்பற்று
முன்னோர்களின் தியாகத்தில்
அளப்பறிய வீரத்தில்
அவர்களின் உதிரத்தில்
உயரக்கண்டோம் தேசியக்கொடி

இங்குதான்
திருநீறும் சிலுவையும் கைக்கோர்க்கும்
பசுமையும் காவியும்
பகைமை துறக்கும்
சம்மதமாய் எம்மதமும் 
ஏற்கும் எந்நாடு 
பொன்விளையும் புகழோடு

குண்டு வெடிக்குமோ என 
குமுறல் இல்லை
துப்பாக்கி தாக்கிடும் 
துயரங்கள் இல்லை
பதுங்கு குழி வாழ்க்கையில்லை
பயமே வாழ்வாய் ஆனதில்லை

யாவரும் பேசலாம்
தவறென்றால் யாவரையும் பேசலாம்
அனைவர்க்கும் உண்டிங்கு உரிமை
அதுவே எம் தாயகத்துப் பெருமை

நாங்கள் வெள்ளையையே வெறுத்தொதுக்கிய கறுப்பழகர்கள்
நிறபேதங்களால் மட்டுமல்ல
பிறபேதங்களாலும்
எங்களைப் பிளவுபடுத்த முடியாது
எங்கள் ஒற்றுமைச்சங்கிலி நீசபுத்திக்கயவர்களால் ஒருபோதும் உடையாது

இன மொழி மதம் கடந்த 
மகத்துவ மனிதர்கள் நாங்கள்
இந்தியா தானெங்கள் சுவாசம்
உலகே எங்கள் பெருமை பேசும்

தாயினும் மேலாய்
உணர்விலும் உளத்திலும் நிறைந்திருக்கிறது எங்களுக்கு தேசப்பற்று
உலகம் உய்யட்டும் எங்களைக் கற்று

கயமைகள் விலக 
நன்மைகள் பெருக
அமையட்டும் இக்குடியரசு
வறுமை நீங்கி வளமை நிரம்பக் கொட்டட்டும் வெற்றிமுரசு


சீனி.தனஞ்செழியன்,
முதுகலைத்தமிழாசிரியர்,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
திருவலம்-632515,
வேலூர் மாவட்டம்.

Click here for latest Kalvi News 


பள்ளிகளில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் தலைமையாசிரியர்கள் மட்டுமே தேசியக்கொடியை ஏற்ற வேண்டும்

 பள்ளிகளில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் தலைமையாசிரியர்கள்  தேசியக்கொடியேற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குடியரசு தினவிழா கொண் டாட்டம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவு : 


ஜனவரி 26 - ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை உறுப்பினர்கள் , பெற்றோர் பொறுப்பாளர்கள் , ஆசிரியர் கழக உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மட்டுமே தேசியக்கொடியை ஏற்ற வேண்டும். வேறு யாரையும் வைத்து கொடி ஏற்றக்கூடாது. தலைமையாசிரியர் இல்லாத இடத் தில் பொறுப்பு தலைமை ஆசிரியர் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.


அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறையின் பதிவு!

 


அரசுப் பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி் மாணவர்களுக்கு   வழங்கப்படும் சலுகைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறையின் பதிவு!


Concession to Disabled - Download here



 Click here for latest Kalvi News 


மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் எண்ணிக்கை விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவு!

 பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு / நகராட்சி / அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் வரவு செலவு கணக்குகளை துறை ரீதியாக அகத்தணிக்கை மேற்கொள்ளும் பொருட்டு பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை மற்றும் அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் / ஆசிரியரல்லா பணியாளர்களின் எண்ணிக்கை விவரங்களை பணியிட வாரியாக கீழ்கண்ட படிவத்தில் ( Excel Sheet ) - ல் பூர்த்தி செய்து உடன் இவ்வாணையரக மின்னஞ்சல் ( coseaudit.sec@gmail.com ) முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




அரசு பள்ளியில் ட்ரோன், செயற்கைக்கோள் ஆய்வகம்: தமிழகத்தில் முதல் முறையாக துவக்கம்

 

தமிழக அரசு பள்ளிகளில் முதல் முறையாக, ஆளில்லா விமானம் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்ப பயிற்சி மற்றும் ஆய்வகம், சென்னையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் துவங்கப்பட்டுள்ளது.


மத்திய அரசு உத்தரவை அடுத்து, தமிழக பள்ளிக்கல்வித் துறையில், 'வானவில் மன்றம்' என்ற அறிவியல் தொழில்நுட்ப பயிற்சி திட்டத்தை, கடந்த நவம்பரில் முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

இளம் விஞ்ஞானி


இதன் ஒரு பகுதியாக, சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனி அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில், ஆளில்லா விமானம் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்ப பயிற்சி ஆய்வகம், நேற்று திறக்கப்பட்டது.


சென்னை முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தலைமையில் நடந்த விழாவில், ஆய்வகங்களை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் துணை தலைவரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாத்துரை திறந்து வைத்தார்.


விழாவில், பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ், காணொலி காட்சி வாயிலாக பேசியதாவது:


நம் நாட்டின் வளர்ச்சிக்கு, இளம் விஞ்ஞானிகள் அதிகம் தேவை. இதுபோன்ற ஆய்வகங்களால், பள்ளிகளில் இருந்தே இளம் விஞ்ஞானிகளை உருவாக்க வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.


இந்த பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தில், ட்ரோன் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்ப பயிற்சியில், சென்னையில், 12 பள்ளிகளை சேர்ந்த, 200 மாணவ - மாணவியர் பங்கேற்று, ட்ரோன்களை இயக்கி உள்ளனர்.


இவ்வாறு அவர் பேசினார்.


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் முதல் முறையாக, அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளையின், 20 லட்சம் ரூபாய் நன்கொடை யில், இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டு உள்ளது.


அவற்றில், மாணவர்கள் அறிவியல் காட்சிகளை பார்க்க ஸ்மார்ட் திரை வகுப்பறையும், வீடியோக்கள் உருவாக்க, ஸ்டூடியோ ஒன்றும் திறக்கப்பட்டுஉள்ளது.


விழாவின்போது, அரசு பள்ளி மாணவர்கள், ட்ரோன்களை இயக்கி, செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும், நான்கு அரசு பள்ளிகளில், ட்ரோன் தொழில்நுட்ப ஆய்வகங்கள் துவங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


பயிற்சிகள்


இந்த ஆய்வகங்களில், அரசு பள்ளிகளில், 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு, டிரோன் தொழில்நுட்பம், சிறிய ரக செயற்கைக்கோள் உருவாக்குதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.


இதற்காக, தன்னார்வ பயிற்சியாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர் என, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்த நிகழ்ச்சியில், அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளை நிர்வாகிகள் மேத்யூ ஜோசப், பாஸ்கரன், பள்ளி தலைமை ஆசிரியர் பிரபுதாஸ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Click here to join whatsapp group for daily kalvinews update 

பள்ளிக்கல்வி - உதவியாளர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கான தற்காலிக முன்னுரிமைப் பெயர்ப் பட்டியல் வெளியீடு

 பள்ளிக்கல்வி - உதவியாளர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கான தற்காலிக முன்னுரிமைப் பெயர்ப் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு அமைச்சுப் பணி இளநிலை உதவியாளர் / தட்டச்சர்கள் நிலை -3 ஆகியோர்களுக்கு / சுருக்கெழுத்து தட்டச்சர் உதவியாளராகப் பதவி உயர்வு / பணிமாறுதல் வழங்குவது - 15.03.2022 நிலவரப்படி தகுதி பெற்றவர்கள்  தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் - தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 


15.03.2022 ன் படியான உதவியாளர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கான தற்காலிக முன்னுரிமைப் பெயர்ப் பட்டியல் இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை- III


15.03.2022 Assistant Panel - Download here...


Click here to join whatsapp group for daily kalvinews update 

பசுமை பள்ளி திட்டத்தில் 9,000 ஆசிரியர்கள் தேவை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

 தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியிடங்களில் நியமிக்க 9,000 ஆசிரியர்கள் தேவை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக திருவாரூரில் பசுமை பள்ளித் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியிடங்களில் நியமிக்க 9,000 ஆசிரியர்கள் தேவை. பெற்றோர் - ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்கள் தற்போது பணியில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.


கொரோனா காலத்தில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய, மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து அவர்களின் கல்வி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் காலை உணவு திட்டம் படிப்படியாக மற்ற பள்ளிக்கூடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். பசுமை பள்ளி திட்டம் முதற்கட்டமாக 500 பள்ளிகளில் கொண்டுவரப்பட உள்ளது. மேல்நிலை, உயர்நிலை பள்ளிகள் மட்டுமின்றி நடுநிலைப் பள்ளிகளிலும் பசுமை பள்ளி திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.