Showing posts with label General News. Show all posts
Showing posts with label General News. Show all posts

பயிலும் பள்ளிகளிலேயே ஆதார் பதிவு / புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி (SOP) அரசாணை வெளியீடு!

 

பள்ளிக் கல்வி - " பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு " - அனைத்து அரசு , அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அப்பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ( Standard Operating Procedure ) ஆணை வெளியிடப்படுகிறது.

G.O.Ms.No.72 Aadhar Through schools - Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தொடக்கக் கல்வி - ஒரு பாடத்துக்கு ஒரு ஆசிரியர் - அரசு உத்தரவு

 

dpi

தமிழகத்தில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அரசு தொடக்க பள்ளிகளிலும்; ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான நடுநிலை பள்ளிகளிலும், 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் தான் நியமிக்கப்படுகின்றனர். 


அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் அதிகபட்சம், 100 மாணவர்கள் மட்டுமே இருப்பதால், ஒன்று அல்லது இரண்டு பாடங்களுக்கு மட்டுமே ஆசிரியர் இருப்பார்.

மற்ற பாடங்களுக்கு ஆசிரியர் இல்லாததால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும் கற்றலில், தொடக்க, நடுநிலை பள்ளிகள் பின்தங்கும் நிலை தொடர்கிறது. 


இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இனி வரும் காலங்களில், 100 மாணவர்களுக்கு மேல், ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ஒரு ஆசிரியர் நியமித்து கொள்ளலாம் என, தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு பள்ளிக்கல்வி துறை அனுமதி அளித்துள்ளது.


அதனால், வரும் கல்வியாண்டில், பாட வாரியாக ஆசிரியர் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தேவையான பாடங்களுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க, தொடக்க கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பொதுத்தேர்வு 2024 - அறைக் கண்காணிப்பாளர் கனிவான கவனத்திற்கு.

 

மேல் நிலை பொதுத் தேர்வுகளில் வெற்றிகரமாக 5 தேர்வுகள் நிறைவு...


 அறைக் கண்காணிப்பாளர் கனிவான கவனத்திற்கு


இன்று 11/3/24

திங்கட்கிழமை


சிறு நினைவூட்டல் 👍🏼


நாளை முதல் A,B question papers ...


1) A,B சரியாக வழங்கி விடுவீர்கள்...


2) தேர்வர் desk  இல் எக்காரணம் கொண்டும் A,B எழுதிட கூடாது ...


3) 9.55 am வினாத்தாள் கட்டு பிரித்தவுடன்,

 A,B சரி பார்த்து கொள்ளுங்கள்...


4) 10.00 மணிக்கு

வினாத்தாள் வழங்கும் போது

 வருகை புரியாதவர்கள் இடத்தில் அவருக்குரிய வினாத்தாளை வைத்து விடுங்கள்...

(வழக்கமாக செய்வது தான்) A,B குழப்பம் வராது...


5) தேர்வர் விடைத்தாள்  Top sheet இல் அதற்குரிய இடத்தில் (part C) நீங்கள் ( அறைக் கண்காணிப்பாளர் ) தான் A அல்லது B என எழுதிட வேண்டும்... (Ref DGE hand book 2024 - page 71 , Hall supervisor instructions - point no 16 )


 விடைத்தாள் முதல் பக்கத்தில் உள்ள கட்டத்தில் 

 A

 B

அதற்கு நேராக... மாணவர்கள்

✅ செய்ய வேண்டும்...


6) student attendance sheet இல் மாணவர்கள் இதுவரை கையெழுத்து மட்டும் இடுவார்கள்...


கூடுதலாக

 *நாளை

அவர்களுக்கு எந்த வகை வினாத்தாள்

 A/B என்பதை எழுதுவார்கள் ...


இவைகள் வழக்கமான நடைமுறை 🙏

இந்தாண்டு புதிய/கூடுதல் நடைமுறை


7) CSD form இல் தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள் கட்டுகளை ஒப்படைக்கும் போது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் வருகைபுரிந்தோரில் ( present ) 

எத்தனை A

எத்தனை B

என்பதை பிரித்து எழுத வேண்டும்...

(இது மட்டுமே புதிதாக இந்த ஆண்டு அறிமுகம்)


 கூடுதல் கவனம்


8) தாங்கள் lot எடுக்கும் அறைக்குரிய பையில் ஒன்றிற்கு மேற்பட்ட script cover இருக்கும் எனில் 


a) Tamil medium/ English medium split இருக்கலாம்....


அல்லது 


b) subject change

Chemistry/accountancy/geography இருக்கலாம்....


வினாத்தாள் சரியாக பார்த்து வழங்கவும்...


தேர்வு முடிந்த பிறகு இரண்டு CSD form இல் கையெழுத்து...

இரண்டிலும்

 A/B எண்ணிக்கை குறிப்பிட வேண்டும் ....


நீங்கள் வழக்கமாக செய்வது தான்....


சற்று கூடுதல் திட்டமிடல்

கூடுதல் விழிப்புணர்வு நோக்கில்  இந்த பதிவு .

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளிகளில் அறிவியல் ஆய்வகத்தில் இருக்க வேண்டிய உபகணங்கள்

 .com/

அனைத்து அறிவியல் உதவியாளர்களுக்கும் வணக்கம்.

 ஆசிரியர்கள் மற்றும் ஆய்வக 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான அறிவியல் ஆய்வகத்தில் செய்முறை கற்றல் , கற்பித்தலுக்காக இருக்க வேண்டிய உபகரணங்கள் கீழ்காணுமாறு பட்டியலிடப்பட்டு உள்ளது . தங்களது பள்ளியில் பயிலும் மாணவர்களின் உபகரணங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எண்ணிக்கையை இருப்பில் வைத்துக் கொள்ளலாம் . மேலும் தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தை பொறுத்தவரையில் செய்முறை கற்பித்தல் பாட வேளைகளின் போது சில பொருட்களை ( கேரட் , முள்ளங்கி , பீட்ரூட் , மிளகாய் செடி , மூலிகை தாவரங்கள் , ஹைட்ரில்லா தாவரம் , ஆணிவேர் , சல்லி வேர் கொண்ட தாவரங்கள் , etc ) பள்ளி அருகாமையில் உள்ள அங்காடிகளில் இருந்தோ அல்லது பள்ளி வளாக தோட்டத்தில் இருந்தோ பெற்று மாணவர்களுக்கு சுவைபட கற்பிக்கலாம் . 


6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் அறிவியல் ஆய்வகத்தில் இருக்க வேண்டிய உபகணங்கள்👇

6th to 10th Std SCIENCE LAB Need Details - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

SSLC Valuation Camp Schedule 2024

 

13.04.2024 Saturday To 22.04.2024 ( Monday ( 8 working days )

SSLC Valuation Camp Schedule 2024 



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

6 - 9th Hitech Lab March Quiz - DSE Proceedings

 IMG_20240310_064805

6-9 வகுப்புகளுக்கு மார்ச் மாதத்திற்கான மதிப்பீடு சார்ந்த வினாடி வினா - உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் நடத்துதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநர் & பள்ளிக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்!

DSE - Hitech Lab Quiz Proceedings

Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

இந்தியாவின் முதல் AI ஆசிரியர் ! கேரள பள்ளி வரலாற்று சாதனை

 


IMG_20240309_140243

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கேடிசிடி மேல்நிலைப்பள்ளி, 2021 நிதி ஆயோக் புத்தாக்க திட்டத்தின்கீழ் அடல் டிங்கரிங் சோதனை கூடத்தை பள்ளி வளாகத்தில் நிறுவியது. மேக்கர்லேப்ஸ் எஜுடெக் எனும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் திறனை பயன்படுத்தி ‘ஐரிஸ்’ என்ற பெயரில் மனித இயல்பு கொண்ட ரோபோ ஆசிரியரை இப்பள்ளி வடிவமைத்துள்ளது.


அச்சு அசலாக பெண் உருவில்காட்சியளிக்கும் ‘ஐரிஸ்’ ரோபோபன்மொழி புலமை கொண்டது. பல்வேறு பாடங்களிலிருந்து கேள்விகள் எழுப்பினாலும் சரளமாக பேசியபடி பதில் அளிக்கும். இதன் கீழ் பகுதியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருப்பதால் எளிதில்இடம்விட்டு இடம் நகர்ந்து செல்லும்.


இதுகுறித்து மேக்கர்லேப்ஸ் நிறுவனம் இஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட காணொலி பதிவில், ‘‘ ஐரிஸ் எனும் ஏஐ ஆசிரியர் ரோபோவை அறிமுகம் செய்வதில் மேக்கர்லேப்ஸ் எஜுடெக் பெருமை கொள்கிறது. இதன் மூலம் கற்றல் துறையில் புதிய போக்கை உண்டாக்கி புத்தாக்கத்தின் முன்னோடியாகத் திகழ்கிறோம்” என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.


தனிப்பட்ட முறையில் கற்று கொள்ளவும், பலவிதமான கற்றல்-கற்பிக்கும் முறைகளை பின்பற்றவும், மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் படிக்கவும் ஐரிஸ் ரோபோகைகொடுக்கும். இந்த கண்டுபிடிப்பு கேரள கல்வி பரப்பில் புதியவளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்தியாவின் முதல் AI ஆசிரியர் ! கேரள பள்ளி வரலாற்று சாதனை👇

Video News - Click here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. 0% ஆகும் அகவிலைப்படி.. கணக்கீட்டில் மாற்றம்!

 மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வாகும் என செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுவதால், அகவிலைப்படி 50% எட்டும். அதன்பின் மீண்டும் அகவிலைப்படி 0% ஆக மாற்றப்படும்.


மத்திய அரசு ஊழியர்களுக்கு சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டது.இதன் மூலம் ஒட்டுமொத்த அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்ந்தது. அந்த அகவிலைப்படி உயர்வானது அக்டோபர் மாதம் ஊதியத்தில் வழங்கப்படும் எனவும், இந்த உயர்வு ஜூலை 1, 2023 முதல் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதனைத்தொடர்ந்து மார்ச் மாதத்திற்கான அகவிலைப்படி மீண்டும் 4% உயர்த்தப்படும் எனக் கூறப்படும் நிலையில், அது 50% ஆக உயரும். மூன்று மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையாக மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும். நிலுவைத் தொகையானது, அறிவிக்கப்பட்ட சதவீத உயர்வின் அடிப்படையில் செயல்படுத்தப்படும். உதாரணமாக 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதால், மூன்று மாதத்திற்கு 4 சதவீதம் நிலுவைத் தொகை வழங்கப்படும்.


அகவிலைப்படி எப்படி கணக்கிடப்படுகிறது!


மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 7ஆவது ஊதியக்குழுவின் கீழ், லெவல் 1 முதல் லெவல் 18 வரை வெவ்வேறு தர ஊதியமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், அகவிலைப்படியானது தர ஊதியம் மற்றும் பயணப்படியின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இதில் லெவல் 1 இல், குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56900 ஆக உள்ளது. நிலை 2 முதல் 14 வரையிலான ஊழியர்களுக்கு சம்பளம் தர ஊதியத்தின் படி மாறுபடும். நிலை 15, 17, 18க்கு தர ஊதியம் இல்லை. மாறாக, அடிப்படை சம்பளம் முறையே, ரூ.1,82,200, ரூ.2,25,000, ரூ.2,50,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, நிலை 1 இல் உள்ள ஊழியர்களின் தர ஊதியம் ரூ 1800 ஆகும். இதில் அடிப்படை ஊதியம் ரூ.18000. இது தவிர, பயணக் கொடுப்பனவும் (TA) சேர்க்கப்பட்டுள்ளது. லெவல்-1 கிரேடு பே-1800ல் மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆக இருக்கும்.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

9 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மாவட்ட மாதிரி பள்ளிகளில் 10 ஆம் வகுப்பில் சேர்க்க உத்தரவு.

 அரசு உயர் நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மாவட்ட மாதிரி பள்ளிகளில் 10 ஆம் வகுப்பில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளல் சார்ந்து - மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலரின் கடிதம்...


 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து மாதிரிப் பள்ளியில் 10 - ஆம் வகுப்பில் சேர தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர் . இவர்கள் அனைவரும் அந்தந்த மாதிரிப் பள்ளிகளில் 15.03.2024 - க்குள் சேர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள முதன்மைக்கல்வி அறிவுறுத்த வேண்டப்படுகிறது.

மாணவர்களின் விவரப்பட்டியல் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும். 





🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசு ஊழியா் - ஓய்வூதியா் - மருத்துவக் காப்பீடு விவரங்கள் கைப்பேசி செயலி, இணையத்தில் அறிய ஏற்பாடு

 


NHIS_(National_Health_Insurance_Scheme)_logo

அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கான மருத்துவக் காப்பீட்டு விவரங்களை கைப்பேசி செயலியிலேயே அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள், கையிருப்பில் உள்ள காப்பீடுத் தொகை விவரங்கள் போன்ற தகவல்களை செயலி வழியே தெரிந்துகொள்ளலாம். இதை கருவூலம், கணக்குத் துறை ஆணையா் கே.விஜயேந்திர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, அனைத்து ஊதியம் வழங்கும் அலுவலா்கள், கருவூல அதிகாரிகளுக்கு அவா் அனுப்பியுள்ள கடிதம்: அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்காக புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் சாா்பில் இந்தத் திட்டம், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கென பிரத்யேக இணையதளம் மற்றும் கைப்பேசி செயலியை யுனைடெட் இந்தியா நிறுவனம் வடிவமைத்துள்ளது.


இதன்மூலம், காப்பீட்டுத் திட்டத்தை எளிதாகக் கண்காணிக்கவும், வெளிப்படைத் தன்மையை மேலும் உறுதிப்படுத்தவும் இயலும். மேலும், காப்பீட்டு திட்டத்திலுள்ள பயன்களைப் பெறவும், திட்டத்தின் பலன்கள் பயனாளிகளுக்கு எளிதாகச் சென்றடையவும் புதிய வசதிகள் கை கொடுக்கும். என்னென்ன வசதிகள்? காப்பீடு திட்டத்துக்கான பிரத்யேக கைப்பேசி செயலி மற்றும் இணையதளத்தில் இருந்து பல்வேறு வசதிகளைப் பெறலாம்.


குறிப்பாக, காப்பீட்டுத் திட்டத்துக்கான மின்னணு அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன் ஏற்கெனவே சிகிச்சைக்காக செலவிட்ட தொகை எவ்வளவு, மீதமுள்ள காப்பீட்டுத் தொகை எவ்வளவு போன்ற விவரங்களையும் அறியலாம். காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் பட்டியல், காப்பீடு தொடா்பான அரசு உத்தரவுகள், சுற்றறிக்கைகள், அறிவிக்கைகள் ஆகியனவும் பதிவேற்றம் செய்யப்படும்.


காப்பீடு குறித்த புகாா்கள், சந்தேகங்களுக்கு விளக்கம் பெற யாரைத் தொடா்புகொள்ள வேண்டும், அவா்களது தொலைபேசி எண்கள் உள்ளிட்ட விவரங்களும் கைப்பேசி செயலி (Tamil Nadu -NHIS), (https://tn-nhis.com)இணையதளம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன. புகாா்கள், சந்தேகங்கங்களுக்கு 044 - 4011 5088 என்ற தொலைபேசி எண்ணில் விளக்கம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்க திட்டம்

 IMG_20240306_202508

தொடக்கப் பள்ளிகள் மாணவர் எண்ணிக்கை 13, நடுநிலைப் பள்ளிகள் மாணவர்கள் எண்ணிக்கை 59 க்கு குறைவாக உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது

மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகள் எந்த பள்ளியுடன் இணைப்பு பள்ளி வாரியாக பட்டியல் வெளியீடு.


School Merging Proceedings👇

Download here


Erode district , to find possibilities of merging primary and middle schools with lower number of students admitted to nearby higher secondary schools , we block for study.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

11th & 12th - பொதுத்தேர்வுகளில் ஒழுங்கீனச் செயலில் ஈடுபடுவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த செய்திக் குறிப்பு

 


IMG_20240306_131934

இடைநிலை / மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளில் ஒழுங்கீனச் செயலில் ஈடுபடுவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த செய்திக் குறிப்பு

Disciplinary Action on Malpractice in Examination - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளிக் கல்வித் துறையில் உள்ள 57 வகையான திட்டங்கள் - இயக்ககங்கள்

 பள்ளிக் கல்வித் துறையில் உள்ள 57 வகையான திட்டங்கள் - இயக்ககங்கள்


பள்ளிக் கல்வித் தறையின் கீழ் செயல்படும் திட்டங்கள் மற்றும் அதை செயல்படுத்தும் இயக்ககங்கள் குறித்த முழுமையான பதிவு கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது அனைத்து வகை ஆசிரியர்களும் இதை அறிந்து வைத்துக் கொள்வது சிறந்ததாகும்


Click Here to Download - 57 Types of Schemes, Programs & Directorates in the School Education Department - Pdf



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே புதியதாக வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, நால்வகைச் சான்றிதழ்கள் வழங்கப்படும் - கல்வித்துறை அமைச்சர்தகவல்

 IMG_20240304_200304

தமிழ்நாட்டிலுள்ள அனைத்துவகைப் பள்ளிகளிலும் 2024-2025 ஆம் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே புதியதாக வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, நால்வகைச் சான்றிதழ்கள் வழங்கப்படுமென பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி  தகவல்

Press News - Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

NHIS App and Web Portal Guidelines

 New Health Insurance Scheme for Employees and Pensioners - Launching of Information Technology ( IT ) solution software and Mobile Application for Employees and Pensioners under New Health Insurance Scheme ( NHIS ) - Certain instructions Issued - Regarding...👇

NHIS App and Web Portal Guidelines - Download here

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

நீங்கள் நலமா ? - முதல்வரின் புதிய திட்டம்

 dinamani%2F2024-03%2Fcd0f9225-39e2-4289-b1a0-cb66192d6b4f%2Fstalin

நீங்கள் நலமா என்ற புதிய திட்டம் மார்ச் 6ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் 12,653 பயனாளிகளுக்கு ரூ.655.44 கோடி நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்களின் மனசாட்சியாக திராவிட மாடல் ஆட்சி செயல்படுகிறது.

மயிலாடுதுறையில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மக்களுக்கு சல்லிக்காசு கூட நிதியை பிரதமர் தரவில்லை. நிதி வழங்காத நிலையில் வாக்கு கேட்டு பிரதமர் மோடி தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறார். நீங்கள் நலமா என்ற புதிய திட்டம் மார்ச் 6ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. அரசு அறிவித்த திட்டங்கள் செயல்படுத்ப்படுகிறதா என்பதை நீங்கள் நலமா திட்டம் மூலம் கண்காணிக்கப்படும்.


திருவோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


கடலங்குடி கிராமத்தில் புதிய படுகை அணை அமைக்கப்படும். மீன் இறங்குதளம் புதுப்பிக்கப்படும். திருவோணம் வருவாய் வட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என்றார். முன்னதாக மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு - அரசாணை எண் 243 ஐ பின்பற்றி மாநில அளவில் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 

IMG_20240302_192241

தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு - அரசாணை எண்  243 ஐ பின்பற்றி மாநில அளவில் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!


DEE - PHM to BT Promotion - Download here


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

TN - MAWS - Sanitary Inspector Analytical Chemistry Study Material

 

  • TN - MAWS - Sanitary Inspector Analytical Chemistry Study Material | Trichy District | Srimaan Coaching Center - PDF Download Here



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்ற நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் விவரங்களை அனுப்ப DEE உத்தரவு.

 IMG_20240301_175819

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு மூலம் நியமனம் 2024 ஆம் ஆண்டு 01.01.2024 நிலவரப்படி மாநில அளவில் தகுதிவாய்ந்தோர் பட்டியல் (Panel List) தயார் செய்தல் வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2011 & முன்னர் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியராக பணியில் சேர்ந்து 31.12.2023 க்குள் முழுத்தகுதி பெற்ற ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / மாநகராட்சி நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் விவரங்களை அனுப்பக் கோருதல் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...

DEE Proceedings - Download here



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பள்ளிக் கல்வித்துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்களை 31.5.2024 அன்று பணிவிடுப்பு செய்திட உத்தரவு.

 IMG_20240229_123350

தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு பள்ளிக் கல்வித்துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்களை இக்கல்வி ஆண்டு முடியும் வரை பணிபுரிந்து பின்னர் மே மாதம் 31.5.2024 அன்று உரிய அலுவலர்களால் பணிவிடுப்பு செய்திடவும் , மாறுதல் பெற்ற உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி திறக்கும் நாளன்று பணியில் சேரும் வகையில் பணிவிடுவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதையும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது .

2022-23 - General Transfer Counseling reg - Download here



🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News