Showing posts with label TRANSFER COUNSELING. Show all posts
Showing posts with label TRANSFER COUNSELING. Show all posts

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 2023 - help line Number

 

IMPORTANT MESSAGE

 

இனி பள்ளி அளவில் EMIS சார்ந்து technical issues ஏதேனும் இருந்தால், தற்போது மாறுதல் விண்ணப்பத்தில் ஏற்படும் சந்தேகம் இருந்தால்  தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 14417 என்ற மாநில அளவிலான help line எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தெரிவிக்கப்படும் போது அழைப்பதற்கான  நோக்கத்துடன் 

School - udise number

Tracher - Tr 8 digit ID

Students - emis number 

உடன் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்துக் கொள்ளலாம்.


Here after, Please call 14417 for any kind of EMIS related issues


Thank you.


 Click here for latest Kalvi News 

உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் - திருத்தம் செய்த புதிய அரசாணை (G.O.Ms.No.12, Dated: 03-02-2022)

 உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை (G.O.Ms.No.12, Dated: 03-02-2022) வெளியீடு 


(School Education - Announcement for the year 2021-2022 General Transfer Counselling Policy for Teachers working in Government / Panchayat Union / Municipal / Primary and Middle schools and Government/Municipal High / Higher Secondary Schools - Orders issued.


G.O.(Ms) No. 12 Dated: 03.02.2022) - Download here


 Click here for latest Kalvi News 

அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங்

 அரசு உதவி பெறும் பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி, வேறு பள்ளிகளுக்கு கட்டாய இடமாற்றம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசின் சம்பளத்துடன் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். இந்தப் பள்ளிகள், தங்கள் பகுதியைச் சுற்றி வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு, இலவசமாக கல்வி சேவை வழங்குகின்றன.


சமீப காலமாக நர்சரி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அதிகரித்து விட்டதால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிந்து வருகிறது. அதனால், மாணவர் எண்ணிக்கை விகிதத்தின்படி, பல அரசு உதவி பெறும் பள்ளிகளில், கூடுதல் ஆசிரியர்கள் பணியாற்ற, பள்ளிக்கல்வித் துறை கணக்கெடுத்துள்ளது.


அதேநேரம், சில அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், கூடுதல் ஆசிரியர்கள் தேவை. இதை சமப்படுத்தும் வகையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதலாக உள்ள ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் அடிப்படையில், கட்டாய இடமாறுதல் வழங்கப்பட உள்ளது.


ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில், அதே குழுமத்தைச் சேர்ந்த மற்ற பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் இடமாறுதல் செய்யப்பட உள்ளனர். இந்த கவுன்சிலிங்கை மாவட்ட அளவில் நடத்த, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.


இதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளின் உபரி ஆசிரியர்களுக்கு, இன்று முதல், 25ம் தேதி வரை, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கட்டாய இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், தனித்தனி நாட்களில் இந்த கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.


இந்த கட்டாய இடமாறுதலுக்கு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது.


மாறுதல் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 21.07.2022 முற்பகல் புதிய பள்ளியில் பணியில் சேர உத்தரவு.

மாவட்ட மாறுதல் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் 20.07.2022 பிற்பகல் பழைய பள்ளியிலிருந்து விடுவிக்கப்பட்டு, 21.07.2022 முற்பகல் புதிய பள்ளியில் பணியில் சேர தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.


மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு தகவல் ( 18.07.2022 )

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு தகவல்

முன்னுரிமை வரிசை எண்

3251 முதல் 3850 வரை

இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு

இன்று 18.07.2022 திங்கள் கிழமை காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும்.

இந்த முன்னுரிமை வரிசையில் பெயர் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் 18.07.2022 இன்று  கலந்தாய்வில் கலந்து கொள்ள  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Click here to Join WhatsApp group for Daily kalvi news

DEE - BT District Transfer Final Seniority List 2022

தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் மாவட்ட மாறுதல் முன்னுரிமை பட்டியல்


DEE - BT District Transfer Final Seniority List 2022 - Download here

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூலை 7 முதல் பணிமாறுதல் கலந்தாய்வு .. மிக முக்கிய அறிவிப்பு.!

தமிழகத்தில் கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தொடக்கக்கல்வித் துறையின் கீழுள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம்விட்டு மாவட்டம் பணி மாறுதல் வழங்கும் கலந்தாய்வு வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக தொடக்ககல்வி இயக்குனர் அறிவொளி அறிக்கை ஒன்றை வெளியிட்டுயிருக்கிறார். அவற்றில் தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வித் துறையின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி நிரவல், பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளதாக முன்பே அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

எனினும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்ததால் இதற்குரிய தேதி பின் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கலந்தாய்வு வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. இதனிடையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மாவட்டம்விட்டு மாவட்டம் கலந்தாய்வு ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் என்றும் பட்டதாரி ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் ஜூலை 8ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. நீதிமன்ற வழக்குகளில் புதியதாக காலிப் பணியிடங்கள் ஏற்பட்டால், அதனை நிரப்ப பதவி உயர்வு வழங்குவதற்கும், முன்பே பணி நிரவலில் ஒன்றியம்விட்டு ஒன்றியம் சென்றவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு 25/02/2022 ஆம் தேதிக்குள் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு மட்டும்தான் நடைபெறுகிறது.

2021-2022 பொதுமாறுதல் கவுன்சலிங்கில் ஒன்றியத்துக்குள் மற்றும் ஒன்றியம்விட்டு ஒன்றியம் விருப்ப மாறுதலில் சென்றவர்கள் பெயர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் பொதுமாறுதல் பட்டியலிலிருந்து அவர்கள் பெயர்களை நீக்கவேண்டும். ஆனால் உபரி ஆசிரியர் பணி நிரவல் மற்றும் எல்கேஜி, யுகேஜி பணி நிரவல் போன்றவற்றில் சென்ற ஆசிரியர்கள் பெயர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்து இருந்தால் அவர்களின் பெயர்களை நீக்கம் செய்ய வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வித்துறை சார்பாக 2021-22 ஆம் கல்வி ஆண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் பெயர் பட்டியல் 21/06/22 அன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இதனடிப்படையில் தான் முதன்மை பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் அப்பட்டியலில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதே படிவத்தில் திருத்தம் செய்து அனுப்பி வைக்க வேண்டும். இதற்கென முன்னுரிமை பட்டியல் எப்பதவியில் மாறுதலுக்கு விண்ணப்பித்தாரோ, அந்த பதவியில் முதன்முதலில் பணியில் சேர்ந்த நாளை வைத்து நிர்ணயம் செய்யப்படும் பணியில் சேர்ந்த நாள் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் பிறந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடக்கக் கல்வி - ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை வெளியீடு.

தொடக்கக் கல்வி 2021 - 2022 ஆம் கல்வியாண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – பட்டதாரி ஆசிரியர் , இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் - சார்பு செயல்முறைகள் வெளியீடு.


இடைநிலை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு - 07.07.2022


 பட்டதாரி ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் -  08.07.2022


Click Here to Download - DEE  Transfer 2022 - Proceedings -  - Pdf

DSE- TRANSFER COUNSELLING SCHEDULE - 2022 IN SINGLE PAGE

DSE- TRANSFER COUNSELLING SCHEDULE - 2022 IN SINGLE PAGE









ஆசிரியர்களின் பணியிடமாறுதல் கோரும் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்கள் அங்கீகரிக்கும் முறை

(Approval of Headmasters for Teachers' Transfer Applications)...

Teachers' Transfer Counselling 2022 -  ஆசிரியர்கள் பணியிடமாறுதல் கோரும் விண்ணப்பத்தை EMIS Portal-லில் submit செய்த பின் தலைமை ஆசிரியர் தங்களுடைய User ID யைப் பயன்படுத்தி ஆசிரியர்களின் விண்ணப்பத்தை Approve செய்ய வேண்டும்.


1. Log In >> Transfer Application Approval








ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு : EMIS-ல் விண்ணப்பித்தல் & வன்நகல் எடுக்கும் வழிமுறை

பள்ளிக் கல்வி / தொடக்கக் கல்வித் துறைக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கான விண்ணப்பங்களை  Browser மூலமாக EMIS வலைதளத்திற்குச் சென்றே விண்ணப்பிக்க வேண்டும். EMIS APP-னைப் பயன்படுத்தக் கூடாது.

முதலில் ஆசிரியரின் EMIS ID & கடவுச் சொல்லைக் கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வழியே பதிவேற்றப்படும் விண்ணப்பம் இறுதியாக SUBMIT கொடுப்பதோடே முடிந்துவிடும்.

இதன் தொடர்ச்சியாக, சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர் பள்ளியின் EMIS ID (UDISE CODE) & கடவுச் சொல்லைக் கொடுத்து EMIS வலைதளத்திற்குச் சென்று தரவுகளைச் சரிபார்த்து Approval கொடுத்த பின்னரே Print எடுக்க இயலும்.


 Print எடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பள்ளிக் கல்வி / தொடக்கக் கல்வித் துறை சார்ந்த உடனடி உயர் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.


விண்ணப்பத்தில் ஏதேனும் பிழை இருப்பின் தலைமையாசிரியர் அதனை Reject செய்யலாம். அதன்பின் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பிழையின்றி மீண்டும் Online-ல் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


மாறுதல் கோரும் வகையில், *'ஒன்றியத்திற்குள் + மாவட்டத்திற்குள் + பிற மாவட்டத்திற்கு'* என்ற வசதியும் *'ஒன்றியத்திற்குள் + பிற மாவட்டத்திற்கு'* என்ற வசதியும் விடுபட்டுள்ளது. இது முன்னர் வழக்கத்தில் இருந்த நடைமுறையே. இது குறித்து மாநில EMIS குழுவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் இவ்வசதியும் சேர்க்கப்படலாம்.


பணிவரன்முறை தேதி, பள்ளியின் பெயர் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் குறித்து மாநில EMIS குழு கவனத்தில் எடுத்துக் கொண்டு சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.


 பள்ளித் தலைமையாசிரியர்கள் தமக்கான மாறுதல் விண்ணப்பத்தை அளித்தல் தொடர்பான சிக்கலும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் சரிசெய்யப்படும்.

 தற்போது சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருவதால் ஆசிரியர்கள் சற்றே தாமதித்து விண்ணப்பிப்பதே நல்லது.


 பள்ளித் தலைமையாசிரியர்கள் எப்பொழுது APPROVAL கொடுக்கலாம் என்பது குறித்து சார்ந்த துறை அலுவலகம் வாயிலாக முறையான அறிவிப்பு வெளியாகும். அதுவரை பொறுமை காக்கவும்.

Teachers Transfer Counselling 2022 - Application Forms, Norms GO , Schedule Published | ஆசிரியர்கள் இடமாற்ற ஆலோசனை 2022 - விண்ணப்பபடிவங்கள், விதிமுறைகள் GO , அட்டவணை வெளியிடப்பட்டது

அரசு / ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / தொடக்க நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் மூலம் இணையதளத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படவுள்ளதால் , ஆசிரியர்களின் பொது மாறுதல் தொடர்பான அரசாணை , கலந்தாய்வு அட்டவணை மற்றும் மாறுதல் கோரும் விண்ணப்பம் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது . மேலும் மாறுதல் கலந்தாய்வு அரசாணையில் வழங்கப்பட்ட வழிமுறைகள் மற்றும் அறிவுரைகளைப் பின்பற்றி ஆசிரியர்களிடமிருந்து மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




 இணைப்புகள்:

1. அரசாணை எண் 176 , பள்ளிக் கல்வி ( பக 5 ( 1 ) துறை நாள் 17.12.2021 

2. கலந்தாய்வு அட்டவணை 

3. மாறுதல் கோரும் விண்ணப்பங்கள்


Download - Teachers Transfer Counselling 2022 - Application Forms,  Norms GO ,Schedule 

ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அட்டவணை தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி-PDF

தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் பொது மாறுதல் , பணி நிரவல் மற்றும் பதவி உயர்வு கால அட்டவணை :


* 31.12.2021 முதல் 7.1.2022 வரை EMIS இணையதளத்தில் மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல்

 * 10.1.2022 மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியீடு


 * 11.1.2022 முன்னுரிமை பட்டியலில் திருத்தம் இருந்தால் முறையீடு செய்தல்

 * 13.1.2022 இறுதி முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு

 * 21.1.2022 முற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்

 * 21.1.2022 பிற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு.

 * 24.1.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)






 * 24.1.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)

 * 25.1.2022  பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)

 * 29.1.2022  பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)

 * 31.1.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு

 * 31.1.2022  பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)

 * 3.2.2022 முற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்

 * 3.2.2022 பிற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு

 * 8.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)

 * 8.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)







 * 9.2.2022  இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)

 * 11.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)

 * 11.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)

 * 14.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்

* 14.2.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்


தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறும் பொது மாறுதல் பற்றிய அனைத்தும் அடங்கிய ஒரே தொகுப்பு. ( pdf ) 






DEE & DSE - Teachers General Counselling 2021 - 22 | Schedule - Download here...


Teachers General Counselling 2022 - DSE & DEE - Transfer , Promotion Schedule And Norms

Teachers General Counselling 2022 - DSE & DEE - Transfer , Promotion , Surplus Schedule And Norms 

பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் பணி புரியும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அட்டவணை :




DSE & DEE - Teachers General Counselling 2022 - Transfer , Promotion Schedule - Download here




DSE & DEE - Teachers General Counselling 2022  Norms - Download here