Showing posts with label general. Show all posts
Showing posts with label general. Show all posts

பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் ஆரம்பக் கல்வி பதிவேடு புதுப்பித்தல் வழிகாட்டு நெறிமுறைகள் - சார்பு SPD & DEE செயல்முறைகள்.

 


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2023 -24ஆம் ஆண்டில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகள் ( மாற்றுத்திறனுடைய குழந்தைகள் மற்றும் இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட ) கண்டறிதல் , வகுப்பு மாற்ற செயல்பாடுகள் ( Transition of students from current class to next class ) மற்றும் ஆரம்பக் கல்வி பதிவேடு புதுப்பித்தல் வழிகாட்டு நெறிமுறைகள் - சார்பு  SPD & DEE செயல்முறைகள். 

கனவு ஆசிரியர் போட்டியில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு நாளை (01.04.2023) On Duty வழங்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

 மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சி நிறுவனம் , கனவு ஆசிரியர் 2023 - க்கான போட்டிகளை 01.04.2023 ( சனிக்கிழமை ) அன்று முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 12.45 மணி வரை இணைய வழியே நடத்த உள்ளது 01.04.23 பள்ளி வேலைநாள் உள்ள மாவட்டங்களில் இருந்து இப்போட்டியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு 01.04.23 அன்று மட்டும் பள்ளிக்கு வருவதிலிருந்து விலக்களிக்க ( on duty ) சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .




Click here for latest Kalvi News 

தமிழகத்தில் புதிதாக ஐந்து மாவட்டங்கள் உருவாக்கம்?

 பழநியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக உள்ளது. இதற்கான அறிவிப்பு, நடப்பு பட்ஜெட் கூட்ட தொடரிலேயே வெளியாக வாய்ப்புள்ளது.


தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. இதில், நிலப்பரப்பில் பெரிய மாவட்டமாக திண்டுக்கல் உள்ளது. அதற்கடுத்து, திருவண்ணாமலை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்கள் உள்ளன.


திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரம், பழநி; திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம், உடுமலை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளை பிரித்து, பழநியை தலைமையிடமாக வைத்து, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என அமைச்சர் சக்கரபாணி தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் முதல்வரிடம் வலியுறுத்தினர்.


திருவண்ணாமலை, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், திருச்சி, திருவள்ளூர், கடலுார் மாவட்டங்களையும் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


கும்பகோணத்தை தலைமையிடமாக்கி புதிய மாவட்டம் உருவாக்கும்படி பா.ம.க., வலியுறுத்தி வருகிறது.


புதிதாக ஐந்து மாவட்டங்களை உருவாக்க, முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளதாகவும், நடப்பு பட்ஜெட் கூட்டத்தில், ஒன்று அல்லது இரண்டு புதிய மாவட்டங் களுக்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்


Click here for latest Kalvi News 

2024-25 கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம்

 புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் 2024-25 கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த என்சிஇஆர்டி திட்டமிட்டு வருகிறது.


தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி), பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பாடத்திட்டங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின்

புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த என்சிஇஆர்டி திட்டமிட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


2024-25 கல்வி ஆண்டு முதல் இந்த புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படலாம் என தெரிகிறது. புதிய கல்விக்கொள்கை படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click here for latest Kalvi News 

கல்வி மானியக் கோரிக்கை நாளன்று 110 விதி மூலமாக TET நிபந்தனைகள் நீக்கப்படும் - AIDED பள்ளி ஆசிரியர்கள் நம்பிக்கை.

 தமிழக அரசின் அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளி நிரந்தர பணியிடத்தில் முறையாக ஒப்புதல் பெற்று, (அப்போதைய பள்ளிக்கல்வி இயக்கக செயல்முறைகள் 16/11/2012. க்கு முன்பு) பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் TET லிருந்து முழுவதும் விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த அதிமுக அரசிடம் பலமுறை எடுத்துச் சென்றோம். ஆனால் பயன் ஏதுமில்லை.


முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் ஆட்சிக் காலத்திய அரசாணைகளின் அடிப்படையில் பணி நியமனம் பெற்ற ஒரே காரணத்தினால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக TET லிருந்து விலக்கு அளிக்காமல் விட்டுவிட்டனர். மிகுந்த இன்னலுக்கு ஆளாகிய பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரம் AIDED பள்ளி ஆசிரியர்கள் ஆட்சி விரைவில் மாற்றம் ஏற்படும், அப்போது நமக்கு விடியல் பிறக்கும் என்ற நம்பிக்கையில் திமுக ஆட்சிக்காக இவ்வளவு வருடங்கள் காத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் இன்று வரை தற்போதைய திமுக அரசும் எந்தவொரு தீர்வும் கொடுக்காமல் இருப்பது வேதனை தருகிறது.

இது தொடர்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர்   ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று, இந்த சிக்கலுக்கு தீர்வு காண பல்வேறு கோரிக்கை மனுக்கள் தற்போது வரை பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் கொடுத்து உள்ளனர்.

 எதிர்வரும் சட்டமன்றக் கூட்ட, கல்வி மானிய கோரிக்கை நாளன்று ஒரு நல்ல முடிவு வரும் என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் காத்துக் கொண்டு உள்ளனர். மேலும் 23/8/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட நிரந்தர பணியிட அரசு , அரசு உதவிபெறும்  சிறுபான்மையற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் குடும்பங்களின் 11 வருட கால வேண்டுகோளை ஏற்று விடியல் ஏற்படுத்தித் தர திமுக அரசால் மட்டுமே இயலும் என்று பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Click here for latest Kalvi News 

1 முதல் 9 -ம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை -பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

 

பிளஸ் 2 ஆங்கிலப் பாடத்தேர்வில் 50 ஆயிரம் மாணவ, மாணவியர் நேற்று தேர்வு எழுத வரவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வு பயம், மற்றும் உடல்நிலை சரியின்மை காரணமாக பல மாணவர்கள் பள்ளிக்கு வருவதை குறைத்துள்ளதுடன் தேர்வுக்கும் வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது தமிழ்நாட்டில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பின் காரணமாகவும் தேர்வு எழுத வரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ள கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையல், +2 பொதுத் தேர்வு மொழித்தாளை எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.


அதே போல் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் புதுவிதமான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது, தமிழகத்தில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை, கட்டுப்படுத்த மாநில அரசுகள் கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பரவி வரும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பில்  இருந்து பள்ளி மாணவர்கள் பாதுகாக்கும் வகையில் முன்கூட்டியே ஆண்டுத் தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக நேற்று செய்தி வெளியானது. ஆனால் வைரஸ் காய்ச்சல் காரணமாக 1 முதல் 9 -ம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என்றும் வழக்கமான கல்வி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது போலவே தேர்வுகள் நடைபெறும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Click here for latest Kalvi News