CRC மைய பள்ளிகள் இணைப்பிற்கான அறிவுரைகள் - SPD Proceedings





மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வள மையங்களிலும் அரசு மற்றம் அரசு உதவிப் பெறும் அனைத்து வகை பள்ளிகளை உள்ளடக்கிய குறு வள் மையங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே வரையறுக்கப்பட்ட குறு வள மையங்களின் எண்ணிக்கை மற்றும் அதில் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகள் பொதுவாக அனைத்து வட்டார வள் மையங்களிலும் ஒரே அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டது


1. CRC wise Schools allotment details...


2. CLUSTER - SCHOOL MAPPING User Manual



Click Here to Download - CRC Merge Proceedings - Pdf



Click here to Join WhatsApp group for Daily kalvi news


பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!





2021-2022 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான மாணவர்களுக்கு அரசு பொது தேர்வு கடந்த மே 2022 மாதத்தில் நடைபெற்றது . மேற்கண்ட 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.07.2022 முதல் 08.08.2022 முடிய துணைத்தேர்வுகள் நடைபெற உள்ளது.


இத்துணைத்தேர்வில் தேர்ச்சி அடையும் பொருட்டு சார்ந்த பாட ஆசிரியர்கள் தேர்வு முடியும் வரை தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பயின்ற பள்ளியில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்வில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திடுமாறு அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.07.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.07.2022





தமிழகத்தில் உள்ள 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-23-ம் கல்வியாண்டில் 1.6.2022 நிலவரப்படி காலியாகவுள்ள 13 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த தற்கால ஆசிரியர் பணியிடங்களுக்கு இன்று முதல் நாளை மறுநாள் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 இந்த தற்கால ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களிடம் உரிய சான்றிதழ்களுடன் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ சமர்பிக்கலாம் என்றும் அரசு தெரிவித்து உள்ளது.


MORNING PRAYER ACTIVITIES (4.7.22)

பள்ளி வழிபாட்டுச் செயல்பாடு - (4.7.22) Morning prayer...


Click here to download pdf 

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் பணி அனுபவச் சான்றிதழ்

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் பணி அனுபவச் சான்றிதழ்



👉DOWNLOAD ITK பணி அனுபவச் சான்றிதழ்



👉தற்காலிக ஆசிரியர் பணி விண்ணப்பதாரர் விவரப் படிவம்


Click here to Join WhatsApp group for Daily kalvi news


எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்துவது குறித்து சில வழிகாட்டு யோசனைகள் ஆசிரியர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம்

எண்ணும் எழுத்தும் திட்டமானது அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள 1,2,3 வகுப்பு மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட வேண்டும்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக பள்ளிகளுக்கு பாட வாரியாக ஆசிரியர் கையேடு மாணவர் பயிற்சி புத்தகம் எண்ணும் எழுத்தும் கற்றல் கற்பித்தல் பெட்டி (FLN kit) வழங்கப்பட்டுள்ளது.


முதல் வகுப்பு மாணவர்களுக்கு அரும்பு பயிற்சி நூலும், இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மொட்டு பயிற்சி நூல், மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மலர்பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும்.


மொட்டு பயிற்சி புத்தகத்தில் அரும்பு நிலை மாணவர்களுக்கான பயிற்சியும் இணைக்கப்பட்டு இருக்கும்.


எனவே இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மொட்டு மட்டுமே பயன்படுத்த வேண்டும் . 


மலர் பயிற்சி புத்தகத்தில் அரும்பு, மொட்டு நிலை மாணவர்களுக்கான பயிற்சிகள் இணைக்கப்பட்டுள்ளது..

எனவே மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு  மலர் பயிற்சி புத்தகம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 


ஒவ்வொரு வாரத்திற்கான செயல்பாடு முடிந்தவுடன் இறுதியில் "சிறகை விரிப்போம்" என்ற பகுதியில் மூன்று நிலை மாணவர்களுக்கும் பயிற்சி புத்தகம் மற்றும் பாட புத்தகத்தில் எந்த செயல்பாடு வழங்கப்பட வேண்டும் என ஆசிரியர் கையேட்டில் தெளிவாக உள்ளது.



ஒன்றாம் வகுப்பு அரும்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இரண்டாம் வகுப்பு மாணவருக்கு மொட்டு பயிற்சி புத்தகம் (அரும்பு அதில் இணைந்தே இருக்கும்) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மலர் பயிற்சி புத்தகம்  (அரும்பு மற்றும் மொட்டு இரண்டும் அதில் உள்ளது) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


பாடப் புத்தகம் முதல் வகுப்பு மாணவர்களுக்கு முதல் வகுப்பு  பாட புத்தகம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பு பாட புத்தகம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்


மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் வகுப்பு பாட புத்தகம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


இப்பயிற்சி புத்தகங்கள் 

அரும்பு - நீலம் 

மொட்டு - மஞ்சள் 

மலர் - பச்சை 


வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


அனைத்து 1,2,3 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள் பாடக்குறிப்பு படிவம் (lesson plan format)  பாடவாரியாக  தமிழ் ,ஆங்கிலம் , கணிதம் ஒவ்வொரு வாரமும் எழுத வேண்டும்.


பாடக்குறிப்பு படிவம்  எவ்வாறு எழுதுவது என்பதற்கான மாதிரி படிவம் கொடுக்கப்பட்டுள்ளது.


அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களும் நடத்தப்படவேண்டும் 


பாடங்கள் எப்பொழுது நடத்த வேண்டும்?

எந்தெந்த பாடவேளைகளில் எந்தெந்த பாடங்களை கையாள வேண்டும் என்பதற்கான கால அட்டவணையும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு வகுப்பிலும் கற்றல் கற்பித்தல் செயல்பாட்டிற்காக செய்யப்படும் துணைக்கருவிகள் வகுப்பறையில் காட்சிப்படுத்த வேண்டும்.


ஒவ்வொரு பாடத்திற்கும்  களங்கள் வழங்கப்பட்டுள்ளது.


 தமிழ் 


🌷 பாடல் களம்

 🌷 கதைக்களம்

🌷 படித்தல் களம்  

🌷 படைத்தல் களம் 

🌷 செயல்பாட்டு களம்


 English 


🌷 Song corner

🌷 Story corner

🌷 Reading corner 

🌷 Creativity corner 

🌷 Activity corner


 கணிதம் 


🌷 பாடல் களம்   

🌷 பொம்மலாட்டம் 

🌷 தனிநடிப்பு பேச்சு 

🌷 செயல்பாடு களம்

🌷 கலையும் கைவண்ணமும் 

🌷 வினாடி வினா.


மேற்கண்டவாறு வகுப்பறையில் கற்பித்தல் துணைக்கருவிகள் காட்சிப்படுத்த வேண்டும்.


அனைத்து ஆசிரியர்களும்  TN-SED app download செய்து அதை update செய்து  கொள்ளவேண்டும் . எண்ணும் எழுத்தும் மதிப்பீட்டிற்கான (Evaluation) கட்டகம் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம் மதிப்பீட்டினை 4.7 2022 முதல் 8.7. 2022 க்குள் முடிக்க வேண்டும்


ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுக்கான Individual staff I'd and password பயன்படுத்தி தங்கள் வகுப்பு மற்றும் தாங்கள் கையாளும் மீடியம் பதிவு செய்ய வேண்டும்.


இது ஒரு முறை பதிவு செய்தால் போதுமானது. ஒவ்வொரு வாரத்திற்கும் FA(a) செயல்பாடாக வழங்கப்பட வேண்டிய செயல்பாடுகளும்  உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.


தமிழ் , ஆங்கிலம் , கணிதம்  இந்த மூன்று பாடங்களுக்கும் ஏதேனும் நான்கு செயல்பாடுகளை செய்யவைத்து அதை செயலியில் பதிவு செய்ய வேண்டும்.


 ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்  FA (b) செயல்பாடு செய்யும் வகையில் எண்ணும் எழுத்தும் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.


மதிப்பீடு நடத்துவதற்கான நேரம் கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.


மதிப்பீடு Fa (b) 22.7. 2022 முதல் நடத்தப்பட வேண்டும். Fa (a), Fa (b) ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக நடத்தப்படவேண்டும்.


செயலி வாயிலாக  நடத்தப்பட வேண்டிய  மதிப்பீடு எவ்வாறு நடத்துவது என்பதற்கான  டிஜிட்டல் வீடியோ தங்களுக்கு வழங்கப்படும்.


பருவ இறுதியில்  நடத்தப்படும் தொகுத்தறி மதிப்பீடு (SA) TN  SED APP வாயிலாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

தங்கள் வகுப்பறையில் செய்யும் செயல்பாடுகளை செயலியில் தாங்கள்  பதிவேற்றம் செய்து கொள்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படும்.


வழங்கப்பட்டுள்ள கால அட்டவணையைப் பயன்படுத்தி மட்டுமே கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை வகுப்பறையில் செயல்படுத்த வேண்டும். செயலியில் CCE format வழங்கப்பட உள்ளதால் இது தவிர தனியாக CCE பதிவேடுகளை ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டியது இல்லை.


தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 


2 ஆசிரியர்கள் மட்டுமே உள்ள பள்ளி என்றால் 1,2,3 வகுப்புகளை ஒரு ஆசிரியரும் 4,5 வகுப்புகளை  மற்றொரு ஆசிரியரும் கையாள வேண்டும்.

ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டம்மி ஸ்டேஜ் மற்றும் டம்மி மைக் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.


மாத இறுதியில் நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் எண்ணும் எழுத்தும் திட்டம் பற்றியும் அதன் செயல்பாடுகள் 

நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றத்தை பெற்றோர்களுக்கு பதிவு செய்ய வேண்டும்.


இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாத இறுதி வேலைநாளில் தனித்திறன் கொண்டாட்டம் பள்ளிகளில் செயல்படுத்தப்பட வேண்டும்.


தனித்திறன் கொண்டாட்டம் மாணவர்களின் பாடம் சார்ந்த மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொணரும் வகையில் தனியாகவோ குழுவாகவோ நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

ஏதேனும் சந்தேகம் என்றால் ஆசிரியர் பயிற்றுநரை தொடர்பு கொள்ளவும்.


எண்ணும் எழுத்தும் - அடிப்படை கற்றல் நிலை அறிதல் மதிப்பீடு (Baseline Assessment) மேற்கொள்ளுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் - Download here...


எண்ணும் எழுத்தும் திட்டத்தை வகுப்பறையில் முறையாக செயல்படுத்தி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த அனைத்து ஆசிரியர்களுக்கும்  வாழ்த்துக்கள்



Click here to Join WhatsApp group for Daily kalvi news

Temporary Teachers Application Form Download PDF

Temporary Teachers Post Application Form for Tet Paper 1 and TET Paper 2 and PG Teachers download pdf and fill this application send it to our nearest DEO, CEO Office.

13,331 இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆகிய தற்காலிக ஆசிரியர் பணிக்கு மாவட்டக் கல்வி அலுவலகம் / வட்டாரக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்தலுக்கான மாதிரி படிவம்.