தனியார் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை ஆண்டுதோறும் ஆய்வு செய்வது வழக்கம். வாகன ஆய்வுப் பணிகளை வருவாய், போக்குவரத்து, கல்வி, காவல் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆண்டு தேர்வு விடுமுறையின்போது மேற்கொள்வர்.வரும் கல்வி யாண்டை முன்னிட்டு, பள்ளி வாகன ஆய்வுப் பணிகளை மே மாதத்துக்குள் முடிக்குமாறு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக துறை சார்ந்த உயரதிகாரிகள் கூறியதாவது: பள்ளி வாகன ஆய்வுப் பணிகளை எந்த வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில்...