தமிழகத்தில் சார் - பதிவாளர் அலுவலகம் செல்லாமல், வீடு, மனை விற்பனை பத்திரப்பதிவு செய்யும் பணிகள் ஐந்து கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதனால், வரிசை முறைக்கான 'டோக்கன்' பெற வேண்டிய தேவை இல்லை என, பதிவுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பதிவுத்துறையில், 'ஸ்டார் 3.0' மென்பொருள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதில், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், மனைப்பிரிவுகளில் வீடு, மனை விற்பனைக்கான பத்திரங்களை, சார் - பதிவாளர் அலுவலகம் செல்லாமல் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் ஆக., 17ல் தொடங்கப்பட்டது. புதிய வீடு மனை விற்பனை பத்திரங்கள், எம்.ஓ.டி., எனப்படும் வீட்டுக் கடனுக்கான ஆவணம் ஒப்படைப்பு அடமான பத்திரம், கடன் முடிவுக்கான ரசீது ஆவணம் ஆகியவற்றை, சார் - பதிவாளர் அலுவலகம் வராமல் பதிவு செய்யலாம். இதற்கு தேவைப்படும் கருவிகளை, மக்கள் வீட்டில் வைத்திருக்க முடியாது என்பதால், வீடு, மனை விற்பனை செய்யும் நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு சென்று, பத்திரப்பதிவு செய்யலாம். புதிதாக வீடு, மனை வாங்குவோர், இந்த புதிய பத்திரப்பதிவு நடைமுறைகளை புரிந்து கொள்ள வேண்டும். இதில், மொத்தம் ஐந்து நிலைகளில் பத்திரப்பதிவு பணிகள் நடக்கும். முதலில் சொத்து, அதை வாங்குவோர், விற்பவர், சாட்சிகள் குறித்த விபரங்களை பதிவேற்றம் செய்தல்; ஆதார் மற்றும் 'பயோமெட்ரிக்' விபரங்களை பதிவேற்றம் செய்தல்; 'ஆன்லைன்' முறையில் கட்டணம் செலுத்துதல்; பதிவுக்கு தாக்கல் செய்தல்; சார் - பதிவாளர் அதை பதிவு செய்தல் என, ஐந்து நிலைகளாக இந்த பணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, வரைவு பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்விக்கான, 'தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025'ன் அடிப்படையில், புதிய கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டங்கள் உருவாக்க, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தலைமையில், உயர்மட்ட வல்லுநர் குழு, கலைத்திட்ட வடிவமைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுவினரின் வழிகாட்டுதலின்படி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால், 6 - 10ம் வகுப்பு வரை, தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான வரைவு பாடத்திட்டம், https://tnschools.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. இது குறித்து, கல்வியா ளர்கள், பொது மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர், https://tnschools.gov.inஇணையதளத்தில், வரும் 31ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம்.
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க




