EMIS INSTRUCTIONS - 13.06.2022

Student Transfers & Promotions : 


1. பள்ளியின் உயர் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் கீழ் வகுப்புகளிலிருந்து பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கும் ( திங்கள் { 13.06.2022 ) & செவ்வாய் ( 14.06.2022 } ) EMIS இணையதளம் வழியாக TC வழங்கவும்.


2. மாணவர்கள் தானாக அடுத்த வகுப்பிற்கு ( புதன்கிழமை 15.06.2022 ) பதவி உயர்வு பெறுவார்கள்.


3. மாணவர்களின் வகுப்பில் உள்ள பிரிவுகளைத் திருத்துவதற்கும் , ஒவ்வொரு பிரிவிற்கும் ( வியாழன் - 16.06.2022 ) சரியான வகுப்பு ஆசிரியர்களை நியமிக்கவும்.


4. RTE சேர்க்கைகள் மற்றும் புதிய சேர்க்கைகள் ( வெள்ளி -17.06.2022 மற்றும் சனிக்கிழமை 18.06.2022 ) . பிறந்த தேதி / ஆதார் எண் / தொலைபேசி எண்ணை மாற்ற வேண்டிய மாணவர்களுக்கு , அந்தந்த BEO LOGIN மூலம் மட்டுமே செய்ய முடியும் . இந்தத் துறைகளில் BEO க்கள் செய்த அனைத்து மாற்றங்களும் கண்காணிக்கப்படும் . எனவே , இந்த முறையின் மூலம் மட்டுமே உண்மையான மற்றும் சரிபார்க்கப்பட்ட தரவு புதுப்பிக்கப்படுவதை உறுதிசெய்யவும்.


 மாணவர் வருகைப்பதிவு in TNSED APP 


1. திங்கள் முதல் வியாழன் வரை , முந்தைய கல்வியாண்டின் அதே வகுப்பு மற்றும் பிரிவில் உள்ள மாணவர்களுக்கான வருகைப்பதிவை வகுப்பு ஆசிரியர்கள் LOGIN மூலமாக TNSED APP ல் குறிக்கவும்.


2. வெள்ளிக்கிழமை முதல் , புதிய பிரிவுகள் மற்றும் ஆசிரியர்களின்படி அனைத்து மாணவர்களுக்கும் வருகையைக் குறிக்கவும்.


3. அடுத்த வாரம் ( ஜூன் 20 ) திங்கட்கிழமை முதல் , புதிய கல்வியாண்டு பிரிவுகள் மற்றும் ஆசிரியர்களின்படி அனைத்து வருகையும் குறிக்கவும்.


4. தனியார் பள்ளிகள் RTE சேர்க்கை முடிந்ததும் அடுத்த திங்கட்கிழமை ( ஜூன் 20 ) முதல் RTE வருகையை TNSED APP ல் குறிக்கவும்.


 


ஆசிரியர் வருகைப்பதிவு in TNSED APP 


1. மனமொத்த மாறுதல் / அலகு விட்டு அலகு மாறுதல் மூலம் மாற்றப்பட்ட அனைத்து ஆசிரியர்களின் சுயவிவரங்களும் புதிய பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன.


2. திங்கட்கிழமை ( ஜூன் 13 ) HM LOGIN மூலம் ஆசிரியர் வருகையை வழக்கம் போல் குறிக்கவும்.


- STATE EMIS TEAM .

 


EMIS Online TC - Identification Mark List Details ( Tamil & English )

EMIS Online TC - Identification Mark List :


1.இடது உள்ளங்கையில் ஒரு மச்சம் A mole on the left palm

2.
நெற்றியில் ஒரு மச்சம் A mole on the forehead

3.
ஆள்காட்டி விரலில் ஒரு மச்சம் A mole on the index finger

4.
இடது முட்டியில் ஒரு தழும்பு A scar on the left knee

 
5.
வலது கணுக்காலில் ஒரு வடு A scar in the right ankle

6.
வலது முழங்கையில் ஒரு வடு A scar in the right elbow

7.
இடது கட்டை விரலில் ஒரு மச்சம் A mole on the left thumb

8.
வலது தொடையில் ஒரு தழும்பு A scar on the right thigh

9.
வலது கன்னத்தில் ஒரு மச்சம் A mole On the right cheek

10.
இடது தோள்பட்டையில் ஒரு மச்சம் A mole on the left shoulder

11.
வலதுபுற புருவத்தில் ஒரு தழும்பு A scar on the right eyebrow

12.
வலது காதின் பின்புறத்தில் ஒரு மச்சம் A mole on the back of the right ear

குறிப்பு : உங்கள் தேவைக்கேற்ப இவற்றை மாற்றி பயன்படுத்திக் கொள்ளவும்

 


School Education - Staff Leave Application Instructions ( pdf )


IMG_20220613_192048
 அனைத்து அரசு & உதவி பெறும் பள்ளிகளின்  பணியாளர்கள் விடுப்புக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் விடுப்பை அனுமதிக்கும் முறை

STAFF LEAVE APPLICATION செயல்பாட்டு வழிமுறைகள்.pdf - Download here...

தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கான புதிய கால அட்டவணை -PDF

பள்ளிக்கல்வி-ஆணையரால் வெளியிடப்பட்டுள்ள-புதிய-கால அட்டவணை-Single Pdf👇👇👇





பள்ளிக்கல்வி ஆணையரால் வெளியிடப்பட்டுள்ள புதிய கால அட்டவணை-Single Pdf







எண்ணும் எழுத்தும் பயிற்சி TLM TAMIL (PDF)

எண்ணும் எழுத்தும் பயிற்சி TLM TAMIL (PDF)...


எண்ணும் எழுத்தும் LIST OF TLM FOR ENGLISH MODULES 1-6

எண்ணும் எழுத்தும் LIST OF TLM FOR ENGLISH MODULES 1-6


எண்ணும் எழுத்தும் (வகுப்பு 1, 2, 3) பாடக்குறிப்பு

எண்ணும் எழுத்தும் (வகுப்பு 1, 2, 3) பாடக்குறிப்பு



எண்ணும் எழுத்தும் வகுப்பில் 4 களங்களில் வைக்க வேண்டிய TLM-LIST-தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடவாரியாக-PDF

எண்ணும் எழுத்தும் பயிற்சி TLM MATHS (PDF) - CLICK HERE

எண்ணும் எழுத்தும் பயிற்சி TLM TAMIL (PDF) - CLICK HERE

எண்ணும் எழுத்தும் பயிற்சி TEACHING LEARNING MATERIALS LIST (TLM) - CLICK HERE

எண்ணும் எழுத்தும் LIST OF TLM FOR ENGLISH MODULES 1-6 - CLICK HERE

எண்ணும் எழுத்தும் (வகுப்பு 1, 2, 3) பாடக்குறிப்பு - CLICK HERE

எண்ணும் எழுத்தும் IMAGES LINK 1 - CLICK HERE

எண்ணும் எழுத்தும் IMAGES LINK 2 - CLICK HERE

எண்ணும் எழுத்தும் பயிற்சி TEACHING LEARNING MATERIALS LIST (TLM)

எண்ணும் எழுத்தும் பயிற்சி TEACHING LEARNING MATERIALS LIST (TLM)



எண்ணும் எழுத்தும் பயிற்சி TLM MATHS (PDF)

எண்ணும் எழுத்தும் பயிற்சி TLM MATHS (PDF)



உலகின் சிறந்த 10 பள்ளிகள் போட்டி; இந்தியாவின் 5 பள்ளிகள் தேர்வு

உலகின் சிறந்த பள்ளிகளுக்கான போட்டிக்காக இறுதி செய்யப்பட்டிருக்கும் 10 பள்ளிகளில், இந்தியாவைச் சேர்ந்த ஐந்து பள்ளிகள் இடம்பிடித்துள்ளன. ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த 'டி4 எஜுகேஷன்' என்ற நிறுவனம், முதன் முறையாக உலகின் சிறந்த பள்ளிகளுக்கான போட்டியை நடத்துகிறது.


சமூகத்துடன் இணைந்து செயல்படுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதிய கண்டுபிடிப்பு, இடர்பாடுகளில் இருந்து மீளுதல், ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஆதரவு ஆகிய ஐந்து பிரிவுகளில் இப்போட்டி நடக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் சிறந்து விளங்கும் பள்ளிக்கு தலா, 35 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் வழங்கப்படும்


.இப்போட்டிக்கு தேர்வான 50 பள்ளிகளில், இறுதி செய்யப்பட்டிருக்கும் 10 பள்ளிகளில் இந்தியாவைச் சேர்ந்த, ஐந்து பள்ளிகள் இடம் பிடித்துள்ளன.சமூகத்துடன் இணைந்து செயல்படும் பிரிவில், மும்பையின் கோஜ் பள்ளி மற்றும் புனேவின் பி.சி.எம்.சி., பள்ளிகள் தேர்வாகியுள்ளன.புதிய கண்டுபிடிப்பு பிரிவில், மும்பையைச் சேர்ந்த சி.என்.எம்., பள்ளி, டில்லியின் எஸ்.டி.எம்.சி., ஆகியவை தேர்வாகிஉள்ளன. இடர்பாடுகளை சமாளித்து சிறப்பாக செயல்பட்ட பள்ளிகள் பிரிவில், மேற்கு வங்கத்தின் ஹவுராவில் உள்ள 'சமாரிட்டன் மிஷன்' பள்ளி தேர்வாகியுள்ளது. இறுதிப் போட்டி அக்.,ல் நடக்க உள்ளது.

பள்ளிக் கல்வி கூடுதல் பொறுப்பு - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

பள்ளிக் கல்வி கூடுதல் பொறுப்பு - பள்ளிக்கல்வி ஆணையரகம் , இணை இயக்குநர் ( இடைநிலைக்கல்வி ) திரு ச . கோபிதாஸ் சொந்த அலுவல் காரணமாக ஈட்டிய விடுப்பு - 03.06.2022 முதல் 15.06.2022 முடிய சொந்த அலுவல் காரணமாக ஈட்டிய விடுப்பு கோரியமை அன்னார் . பணியிடத்தில் முழுக்கூடுதல் பொறுப்பு அலுவலர் நியமனம் செய்து ஆணை வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்...

எண்ணும் எழுத்தும் FAQ

|முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி | BEO'S Training -Schedule 22.06.2022 &23.06.2022

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண்.40293/அ1/இ1/2022 நாள்: 09.06.2022 

பொருள்: 

பயிற்சி- முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி 19.06.2022 முதல் 21.06.2022 வரை மற்றும் 22.06.2022 முதல் 25.06.2022 வரை நடைபெறுதல் - சார்பு- 

பார்வை: 

மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் சட்டமன்ற பேரவை. - மானியக் கோரிக்கை 2022-23 

பார்வையில் கண்டுள்ள மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் சட்டமன்றப் பேரவை மானிய கோரிக்கைகள் அறிவிப்பில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. "பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள், முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் என சுமார் 12000 பேருக்கு நாட்டின் தலைசிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் உதவியுடன் பணித்திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மேலாண்மை ஆகிய பொருண்மைகளில் ஆண்டுதோறும் உள்ளுறை பயிற்சி(Residential Training) அளிக்கப்படும்" மேற்கண்ட அறிவிப்பின்படி பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்/ துணை இயக்குநர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி 19.06.2022 முதல் 21.06.2022 வரை மூன்று நாட்களும், அதனைத் தொடர்ந்து 22.06.2022 முதல் 25.06.2022 வரை முதன்மைக்கல்வி அலுவலர்கள்/துணை இயக்குநர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள்/உதவி இயக்குநர்களுக்கு எண்ணும் எழுத்தும், கற்றல் விளைவுகள், தேசிய அடைவுத் தேர்வு பகுப்பாய்வு, கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை மற்றும் பள்ளிப் பார்வை உள்ளிட்ட தலைப்புகளில் இணைப்பில் உள்ள கால அட்டவணையின்படி பயிற்சி வழங்கப்படவுள்ளது. 

இப்பயிற்சி மதுரை தேனி சாலையில் அமைந்துள்ள பில்லர் ஹால் மையத்தில் நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் பங்கேற்கவுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள்/ துணை இயக்குநர்கள் பயிற்சி துவங்குவதற்கு முதல் நாள் 18.06.2022 அன்று இரவு 8.00 மணிக்கு முன்னதாகவும், மாவட்டக்கல்வி அலுவலர்கள்/உதவி இயக்குநர்கள் 21.06.2022 அன்று இரவு 8.00 மணிக்குள் பயிற்சி மையத்திற்கு வந்து சேர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், அனைத்து அலுவலர்களும் பயிற்சிக்கு வரும் போது உடன் மடிகணினி (laptop)கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இப்பயிற்சிக்கான செலவினங்களை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட நிதியிலிருந்து மேற்கொள்ளுமாறும், பயிற்சிக்கு ஆகும் செலவினத்தை தலைப்புகள் வாரியாகத் தொகுத்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநருக்கு அளித்திடுமாறும் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.


நடுநிலை, உயர்நிலை ,மேல்நிலைப் பள்ளிகள் பள்ளி தொடங்கும் நேரம் & மதிய நேர செயல்பாடுகள்- பள்ளிக்கல்வி ஆணையரால் வெளியிடப்பட்டுள்ள பதிய கால அட்டவணை-Single Pdf


நடுநிலை, உயர்நிலை ,மேல்நிலைப் பள்ளிகள் பள்ளி தொடங்கும் நேரம் & மதிய நேர செயல்பாடுகள்- பள்ளிக்கல்வி ஆணையரால் வெளியிடப்பட்டுள்ள பதிய கால அட்டவணை-Single Pdf

அரசு மாதிரி பள்ளிகளில் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை!

அரசு நடத்தி வரும் மாதிரிப் பள்ளிகளில், மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.



தமிழகத்தில் மத்திய அரசு நிதி உதவியுடன் 32 மாவட்டங்களில் அரசு மாதிரிப் பள்ளிகளை நடத்தி வருகிறது. மேலும், கூடுதல் வசதிகளுடன் 25 மாதிரிப் பள்ளிகளை 150 கோடி ரூபாய் செலவில் துவங்கவும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

ஏற்கனவே சோதனை முறையில் சென்னையில் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மற்றும் 12 ஆம் வகுப்பில் நன்கு பயிலக் கூடிய மாணவர்களை தேர்ந்தெடுத்து போட்டித் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகளுக்கு உண்டு உறைவிட வசதியுடன் சிறப்பு பயிற்சியும் தமிழக பள்ளிக் கல்வித் துறையால் அளிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல் அரசு நடத்திவரும் மாதிரிப் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 


பத்தாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர் ஒன்பதாம் வகுப்பில் தேசிய அளவில் நடத்தப்படுகின்ற 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு எனப்படும் TRUST தேர்வு மதிப்பெண்களையும், 9ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழித் திறன் தேர்வு எனப்படும் NMMS தேர்வில் பெற்ற மதிப்பெண்களையும், 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான NTSE தேர்வு மதிப்பெண் மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு மாணவர்கள் மெரிட் அடிப்படையில் சேர்க்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் நன்கு பயிலக்கூடிய மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதலே சிறப்பு கவனம் செலுத்துவது மற்றும் சிறப்பு பயிற்சி அளிப்பது போன்றவற்றின் மூலமாக தேசிய அளவிலான கல்வி நிறுவனங்கள் மற்றும் தமிழகத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் நம் மாணவர்கள் உயர் கல்வி படிப்பதை வழிவகை செய்வதற்கு இந்த நடைமுறையை பின்பற்றி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


எண்ணும் எழுத்தும் திட்டம் தொடக்க விழா - 13.06.2022

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடக்க விழா - 13.06.2022




வரும் 13-ம் தேதி திறக்கப்படும் பள்ளிகள்  13-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து அன்றைய தினமே எண்ணும் எழுத்தும் திட்டத்தையும் துவக்கி வைக்கிறார்

CEO / DEO க்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!




முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி 19.06.2022 முதல் 21.06.2022 வரை மற்றும் 22.06.2022 முதல் 25.06.2022 வரை நடைபெறுதல்  சார்பு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!


CEO,  DEO Training Proceeding - Download here...

பள்ளிகள் திறப்பு: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளன.

 பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 


இந்த நிலையில், வரும் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 

இது குறித்து தலைமை செயலாளர் இறையன்பு அனுப்பியுள்ள கடிதத்தில், 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறப்பதால் தீவிரமாக தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் தூய்மை இயக்கத்தை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடைப்பிடிக்க வேண்டும்.

 பள்ளிகளை தூய்மைப்படுத்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் தலைமை ஆசிரியர்கள் நிதி வசூலிக்க கூடாது. பள்ளிகளை புதுப்பொலிவுடன் சீரமைத்து வகுப்புகளை நடத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில கல்வி கொள்கை: வரும் 15ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையை வடிவமைக்க, கல்வியாளர்கள், வல்லுனர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிட்டார். 


அதன்படி, மாநில கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைத்தது. அந்த குழுவில் பல்வேறு பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

 இந்த குழு, ஒரு வருடத்தில் கல்வி கொள்கையை வடிவமைத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் உயர் கல்வி, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு மாநிலக் கல்விக் கொள்கை தயார் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், மாநில கல்வி கொள்கையை எப்படி உருவாக்க வேண்டும் என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 15ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். 

கல்வி கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவினருடன் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் : அமைச்சர் அறிவிப்பு

கடந்த 2018ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள 2381 அரசு பள்ளிகளில் எல்கேஜி , யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், எல்கேஜி , யுகேஜி வகுப்புகள் நடப்பு கல்வி ஆண்டு முதல் மூடப்பட்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்படுகிறது. 

எல்கேஜி யுகேஜி வகுப்புகளை வரும் கல்வியாண்டு முதல் மூடுவதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்தது.இதற்க்கு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர் . 

இந்த நிலையில் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்த்துள்ளார் .

எல்.கே.ஜி, யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவைக்கேற்ப நியமிக்கப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார் .

பல்வேறு தரப்பு கோரிக்கையினை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைக்கிணங்க வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் .

பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் அது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் முதன்மைச் செயலாளர் அவர்கள் சுற்றறிக்கை...pdf

பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் அது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் முதன்மைச் செயலாளர் அவர்கள் சுற்றறிக்கை...pdf


Click here to download pdf file 

ஈடு செய்யும் விடுப்பு விண்ணப்பம்-PDF

ஈடு செய்யும் விடுப்பு விண்ணப்பம்-PDF