SCHOOL MORNING PRAYER ACTIVITIES - 15.07.2022





பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.07.2022

திருக்குறள் :

 

பால்:      பொருட்பால்

இயல்:     குடியியல்

அதிகாரம்சான்றாண்மை            

குறள் :     986

 

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி

துலையல்லார் கண்ணும் கொளல்.

 பொருள்

சான்றாண்மையை உரைத்துப் பார்த்துக் கண்டு அறியப்படும் உரைகல் எதுவென்றால்சிறியவர்களிடம் கூடத் தன் தோல்வியை ஒத்துக் கொள்வதே ஆகும்.

 

பழமொழி :

The worth of the thing is best known by the want

 

உப்பின் அருமை உப்பில்லாவிட்டால் தெரியும்

 



இரண்டொழுக்க பண்புகள் :

1. உளி படாத கல் சிலை ஆவதில்லைஅது போலவே உழைப்பில்லாத கனவு நனவாவதில்லை.

 

2. முயற்சியும் பயிற்சியும் சாதாரண மனிதனையும் சாதனையாளராக மாற்றும்

 

பொன்மொழி :

 உயிர் நண்பன் என்பவன் தக்க நேரத்தில்

சரியான உதவிகளை செய்பவன் தான்.

அந்த நட்பை விட்டு விடக் கூடாது.

புத்தர்

பொது அறிவு :

 

1.தண்ணீரில் கரையும் வைட்டமின்கள் எவை ?

பி1, பி2 .

2.ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் எவ்வளவு தண்ணீர் உள்ளது?

75%(45 லிட்டர்)







English words & meanings :

Warship - a ship built for the defence forces. Noun. போர் கப்பல்பெயர்ச்சொல்.

NMMS Q 25:

ஆடிகளில் தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை ஆடிகளுக்கிடையே உள்ள ____________ சார்ந்தது.

 விடைசாய்வுக் கோணத்தை

ஜூலை 15 இன்று

காமராசர்  அவர்களின் பிறந்த நாள்

 

காமராசர் (காமராஜர்) (K. Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆவார்இவர் ஒன்பது ஆண்டுகள் சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார்தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர்இவரைதென்னாட்டு காந்திபடிக்காத மேதைபெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர்இவர் "கருப்பு காந்திஎன்றும் அன்போடு அழைக்கப்படுகிறார்காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியதுமதுரைப் பல்கலைக்கழகத்திற்குமதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும்சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நீதிக்கதை

மணல் எழுத்தும் கல்லெழுத்தும்!

ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர்அவர்கள் பாலை மணல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒரு விஷயம் குறித்து வாதம் ஆரம்பித்ததுஅது வாய்ச்சண்டையாக மாறியதுநண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான் மற்றொருவன்அறை வாங்கியவன் கோபிக்கவில்லைஅமைதியாக ஒதுங்கிப் போய் மணலில் அமர்ந்தான்.


விரல்களால் மணல் இன்று என் உயிர் நண்பன் என் கன்னத்தில் அறைந்துவிட்டான்என்று எழுதினான்மற்றவனுக்கு ஒன்றும் புரியவில்லைஇருவரும் நடையைத் தொடர்ந்தார்கள்வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டார்கள்நடந்ததை மறந்துஅந்த ஊற்றில் வெக்கை தீர குளிக்க ஆரம்பித்தார்கள்கன்னத்தில் அறை வாங்கியவன் காலை திடீரென்று யாரோ இழுப்பது போன்ற உணர்வுஅவன் புதைகுழியில் சிக்கிக் கொண்டான்.


நண்பன் நிலை கண்டதும்பெரும் பிரயத்தனப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் அவனை அறைந்தவன்உயிர் பிழைத்த நண்பன் ஊற்றை விட்டு வெளியில் வந்ததும்அருகில் இருந்த ஒரு கல்லின் மீது அமர்ந்தான்அங்கு ஒரு கல்லை எடுத்து தட்டித் தட்டிஇன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான் என்று எழுத ஆரம்பித்தான்.


இதையெல்லாம் பார்த்த மற்றவன் கேட்டான்... நான் உன்னை அறைந்தபோதுமணலில் எழுதினாய்இப்போது காப்பாற்றியிருக்கிறேன்கல்லில் எழுதுகிறார்ஏன் இப்படிஇதற்கு என்ன அர்த்தம் நண்பாஎன்றான்அதற்கு நண்பன்யாராவது நம்மை காயப்படுத்தினால்அதை மணலில் எழுதிவிடுமன்னிப்பு எனும் காற்று அதை அழித்துவிட்டுப் போய்விடும்ஆனால் யாராவது நல்லது செய்தால் அதை கல்லில் எழுது… காலத்தைத் தாண்டி அது நிலைத்திருக்க வேண்டும்என்று பதில் கூறினார்

 

இன்றைய செய்திகள் - 15.07.22

 

 ◆டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு.

தமிழகத்தில் புதிதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.




சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டு மாமல்லபுரத்தில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் ஆய்வுகாஞ்சியில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

குரங்கு அம்மை நோய் பாதிப்பு எதிரொலியாக அனைத்து மாநிலங்களையும் மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

 

அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

 

பிரிட்டன் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் கட்ட தேர்தல் சுற்றில் ரிஷி சுனக் வெற்றி பெற்றுள்ளார்இன்னும் பல கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிஇந்திய ஜோடி தங்கப்பதக்கம் வென்றது.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் :  பி.வி.சிந்துசாய்னா நேவால் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேற்றம்.

பெண்கள் உலக கோப்பை ஹாக்கி : ஜப்பான் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி.

 

Today's Headlines

◆Hall Ticket Release for TNPSC Group 4 Exam.

 ◆Tamil Nadu Health Minister has said that steps are being taken to set up 50 new primary health centers in Tamil Nadu.

◆ Survey of Tourism Development Activities in Mamallapuram ahead of International Chess Olympiad: Awareness Marathon Run at Kanchi.

◆The Union Health Ministry has directed all states to keep medical facilities ready in response to the outbreak of monkey measles.

◆ The Supreme Court is going to hear the PILs filed against the fire corridor project today.

◆Rishi Sunak has won the first round of the British Prime Minister election.  There will be several phases of elections.

◆ Shooting World Cup: Indian pair win gold

◆ Singapore Open Badminton: PV Sindhu, and Saina Nehwal advance to quarterfinals.

◆Women's World Cup Hockey: India beat Japan to win.

 

 Prepared by

Covai women ICT_போதிமரம்

TNSED - How to Update Leave Details in E Profile

TNSED எனும் பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் மாணவர் வருகை ஆப்பில் புதிய ஆப்டேட் மூலமாக E-Profile எனும் புதிய பகுதியானது சேர்க்கப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர்கள் விடுப்பு குறித்த விவரங்கள்,  விடுப்பு தேவை குறித்த விவரங்களை ஆசிரியர்கள் தங்களது Individual Login -ல் சென்று தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். 

அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற விளக்கத்தை கீழ் உள்ள இணைப்பை பயன்படுத்தி செய்யவும்.


Staff Leave Application வழிகாட்டு நெறிமுறைகள் 


 TNSED - How to Update Leave Details in E Profile - Download here



Click here to Join WhatsApp group for Daily kalvi news

எண்ணும் எழுத்தும் Baseline Survey முடிக்க கால அவகாசம் நீட்டிப்பு - SCERT இயக்குநர் அறிவிப்பு


அடிப்படை கற்றல் நிலை அறிதல் மதிப்பீட்டை ( Baseline Assessment ) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 13.07.2022 - க்குள் நடத்த ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் , சில மாவட்டங்களில் இந்த அடிப்படை கற்றல் நிலை அறிதல் மதிப்பீடு ( Baseline Assessment ) இன்னும் முழுமையாக நிறைவு பெறாமல் உள்ளது.


 ஆகவே , இம்மதிப்பீட்டை முழுமையாக 20.07.2022 - க்குள் நடத்தி முடிக்கும்படி தலைமை ஆசிரியர்களுக்கு SCERT அறிவுறுத்தியுள்ளது.


Click here to Join WhatsApp group for Daily kalvi news

இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு செய்தி: 15.07.2022

 முன்னுரிமை வரிசை எண் 2602 முதல் 3250 வரை இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 15.07.2022 காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும். 

இந்த முன்னுரிமை வரிசையில் பெயர் இடம்பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் 15.07.2022 அன்று கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய அறிவுரைகள் வழங்க  வேண்டுமாய் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.


Click here to Join WhatsApp group for Daily kalvi news

Ennum Ezhuthum Kit Box Catalogue



  எண்ணும் எழுத்தும் கற்றல்-கற்பித்தல் உபகரணங்கள் பெட்டியில்  இடம்பெறும் பொருள்கள் விவரங்கள்!




விடுமுறை நாட்களில் நடைபெறும் CRC பயிற்சிக்கு ஈடு செய் விடுப்பு உண்டா? RTI Reply



 

18.06.2022 CRC க்கு ஈடு செய் விடுப்பு உண்டு - RTI தகவல்

பள்ளிக் கல்வித் துறை அரசாணை நிலை எண் 62 நாள் : 13.03.2015 ன் படி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் பயிற்சி பெறும் நாட்கள் பணி நாட்களாக இருப்பின் பணி நாட்களாகவே கருதலாம் , விடுமுறை நாட்களாக இருப்பின் 10 நாட்களுக்கு மிகாமல் ஈடுசெய் விடுப்பாக அனுமதிக்கலாம்.


Click here to Join WhatsApp group for Daily kalvi news

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாள் - ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

IMG_20220712_183527


பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜூலைத் திங்கள் 15 ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது . அவ்வகையில் , இவ்வாண்டிற்கான கல்வி வளர்ச்சி நாளிலும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு உரிய வழிகாட்டுதலின்படி அனைத்துவகைப் பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களிலும் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் திருவுருவப் . படத்தை அலங்கரித்து விழாவினைக் கொண்டாடவும் , அவர்களின் அரும்பணிகள் குறித்து மாணவர்களிடையே பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திடவும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

கல்வி வளர்ச்சி நாளை கொண்டாடியதற்கான விவரங்களைத் தொகுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இவ்வாணையரகத்திற்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கும்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

Click here to Join WhatsApp group for Daily kalvi news

  

SCHOOL MORNING PRAYER ACTIVITIES 12.07.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடு -12.7.22 - Morning prayer

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.07.2022

  திருக்குறள் :


பால்:      பொருட்பால்


இயல்:     குடியியல்


அதிகாரம்: சான்றாண்மை


குறள்:     983 


அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

ஐந்துசால் ஊன்றிய தூண்.


பொருள்: அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.


பழமொழி :

constant dripping wears away the stone.


எறும்பு ஊரக் கல்லும் தேயும்.




இரண்டொழுக்க பண்புகள் :


1. உளி படாத கல் சிலை ஆவதில்லை. அது போலவே உழைப்பில்லாத கனவு நனவாவதில்லை.


2. முயற்சியும் பயிற்சியும் சாதாரண மனிதனையும் சாதனையாளராக மாற்றும்


பொன்மொழி :


நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை


என்பதை உணர ஆரம்பித்து விட்டால்.


நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும்.


- புத்தர்


பொது அறிவு :


1.அயோடின் குறைவால் உடலில் ஏற்படும் நோய் எது? 


முன் கழுத்து கழலை. 




2 .முடக்கு வாதம் எதை பாதிக்கிறது ?


நரம்புகள்.


English words & meanings :


Timberline - the altitude above sea level at which timber ceases to grow. Noun. கடல் மட்டத்திற்கு மேல் உள்ள இடம் இங்கு மரங்கள் வளராது. பெயர்ச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


மழைக்கால ஆரோக்கியம் 


வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது வயிற்று வலி மற்றும் பிற இரைப்பை பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.


குளிர் பானங்கள் மற்றும் கார்பனேட்டட் பானங்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். 

கசாயம், மூலிகை தேநீர், சூப்கள் மற்றும் பிற ஆரோக்கியமான காய்கறி மற்றும் பழச்சாறுகள் (சர்க்கரை சேர்க்காமல்), மோர் போன்றவற்றை உட்கொள்வது உடலின் செரிமானத்தை மேம்படுத்த உதவும். நச்சுத்தன்மையை நீக்கி, நோய்களுக்கு எதிராக நோய் போராட எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

NMMS Q 22: 


ஒரு நாடாச் சுருளின் நீளம் 18 3/4 மீ. ஆகும். 4 முழுச் சுருள்கள் மற்றும் ஒரு சுருளில் மூன்றில் ஒரு பகுதியின் மொத்த நீளம் என்ன? 


விடை: 80 1/4 மீ





ஜூலை 12 - இன்று


மலாலா தினம்  


மலாலா யோசப்சையி (மாற்று: மலாலா யூசுஃப்சாய், ஆங்கிலம்: Malala Yousafzai பாசுதூ: ملاله یوسفزۍ‎, பிறப்பு 1997) என்பவர் பாகிசுத்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசிக்கும் ஒரு மாணவி ஆவார். இவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்காக அறியப்படுகிறார். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009ஆம் ஆண்டிலேயே இவரது பி.பி.சியின் உருது வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் பாக்கித்தானிய தாலிபானால் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார்.இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது. மலாலாவை அக்டோபர் 9, 2012 அன்று தாலிபான் சுட்டுக் கொல்ல முயன்றது.இவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மிகவும் சிறுவயதில் அமைதி நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார். 2013ஆம் ஆண்டு ஜூலை 12-ல் மலாலா தனது 16ஆவது பிறந்தநாள் அன்று ஐக்கிய நாடுகள் சபையை தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் "மலாலா தினம்" என்று குறிப்பிட்டனர்.

நீதிக்கதை


வியாபாரியின் கதை


ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான். அவன் நன்றாக உழைத்து பணத்தைச் சேர்த்தான். அதனால் அவனுக்கு பண ஆசை அதிகரித்து! மனநிம்மதி போய்விட்டது. 


ஒருநாள் இரவு திடீரென்று அவனுக்கு ஓர்! யோசனை தோன்றியது. சன்யாசியாகி விட்டால் மன நிம்மதி கிடைக்கும் என்று முடிவெடுத்தான். 


மறுநாளே, தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் ஒரு துணியில் மூட்டையாகக் கட்டிக் கொண்டு ஊரைவிட்டு காட்டுக்கு வந்தான். 


அங்கே ஒரு சன்யாசி தவம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் பல சிஷ்யர்கள் தொண்டு செய்து கொண்டிருந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்து வியாபாரி, அந்த குருவை வணங்கி, சாமி நான் ஒரு வியாபாரி சம்பாதிக்க சம்பாதிக்க பண ஆசை நாளுக்கு நாள் அதிகரித்தது. மன நிம்மதி போய்விட்டது. நான் சேர்த்த பணமூட்டையை பெற்றுக் கொண்டு என்னையும் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பணிவாகக் கேட்டான். 


அவன் கீழே வைத்த பணமூட்டையை, அந்தக் குரு எடுத்துக் கொண்டு, திடீரென்று ஓட ஆரம்பித்தார். வியாபாரிக்கு ஒன்றும் புரியவில்லை! அவனும் அவருக்குப் பின்னே ஓடினான். அவன் தன் பின்னால் ஓடிவருவதைக் கவனித்த குரு, இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தார். வியாபாரியும் அய்யோ, என் பணமூட்டை... ! என்று கத்திக் கொண்டே அவர் பின்னால் ஓடினான். 


குரு பணமூட்டையுடன் வெகுதூரம் சென்றுவிட்டு, பிறகு மீண்டும் அவரது இடத்திற்கே வந்து பணமூட்டையை அதே இடத்தில் வைத்துவிட்டு, மீண்டும் சலனமில்லாமல் அமர்ந்து கொண்டார். 




நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வியாபாரியும் குருவிடம் வந்தான். தனது பணமூட்டை இருப்பதைப் பார்த்து குழம்பிப்போனான். 


குரு அவனைப் பார்த்து மகனே, இன்னும் பண ஆசை உன்னைவிட்டுப் போகவில்லை! அதனால் நீ மீண்டும் வியாபாரம் செய். எனது ஆசிரமத்தில் உனக்கு இப்போதைக்கு இடமில்லை! சென்று வா... ! என்று சாந்தமாக உபதேசம் செய்தார். வியாபாரி தனது பணமூட்டையுடன் ஊர் திரும்பினான். 


நீதி :

அளவோடு சம்பாதித்தால் மனநிம்மதியுடன் இருக்கலாம்.


இன்றைய செய்திகள் - 12.07.22


⚓எச்.சி.எல் நிறுவனம் சார்பில் நடைபெறும் வேலைவாய்ப்புப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


⚓புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான மத்திய அரசின் ‘இன்ஸ்பயர்’ விருதுக்கு, தகுதியான பள்ளி மாணவர்களின் பெயரை செப்.30-ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


⚓காவிரி நீர் பிடிப்புப் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 8010 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.





⚓வரும் 2023-ல் உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் சீனாவை இந்தியா முந்தும் என ஐ.நா அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. 36-வது உலக மக்கள்தொகை தினமான நேற்று இதனை தெரிவித்துள்ளது.


⚓உக்ரைனின் கார்கிவ் நகரில் அடுக்கு மாடி குடியிருப்பில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.


⚓கோத்தகிரியில் நடைபெற்ற மண்டல கால்பந்து இறுதிப்போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.


⚓உலக விளையாட்டு வில்வித்தை: இந்திய ஜோடி வெண்கலப்பதக்கம் வென்று சாதனை.



20.07.2022 அன்று தற்காலிக ஆசிரியர்கள் பணியில் சேரலாம் - தேர்ந்தெடுக்கும் புதிய வழிமுறைகள் & கால அட்டவணையினை வெளியிட்டார் பள்ளிக்கல்வி ஆணையர்.

  



1.7.2022 நாளிட்ட செயல்முறைகளில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் காலியாகவுள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்பாக பார்வை -3 ல் கண்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண் . WP.N0 : 16704 of 2022 ன் மீது மாண்பமை உயர்நீதிமன்றத்தால் 01.07.2022 ல் வழங்கப்பட்ட இடைக்கால ஆணையின் அடிப்படையில் திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் ( Revised Guidelines ) வழங்கப்பட்டுள்ளது .

Temporary Teacher Post  Revised Guidelines & Proceedings - Download here...

DEE - BT District Transfer Final Seniority List 2022

தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் மாவட்ட மாறுதல் முன்னுரிமை பட்டியல்


DEE - BT District Transfer Final Seniority List 2022 - Download here

3,4,5th Std - Term 1 - Reading & Writing Practice ( Topic Wise )

 3,4,5th Std - Term 1 - Reading & Writing Practice ( Topic Wise ) 

மூன்றாம் வகுப்பு, நான்காம் வகுப்பு & ஐந்தாம் வகுப்பு - முதல் பருவம் - வாசித்தல் & எழுதுதல் பயிற்சி.


3rd Reading & Writing Training - Download here


4th Reading & Writing Training - Download here


5th Reading & Writing Training - Download here




Primary Classes - New Method Week Time Table

Primary Classes - New Method Week Time Table

TNSED Schools App - New version 0.0.98 - Update Now - Direct Link



TNSED Schools app New version available in playstore


Version: 0.0.98

 What's New:

 Kalai Arangam and Noon Meal Term3 Changes Added


Version- 0.0.98


March-11


👇👇👇👇👇

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis






எண்ணும் எழுத்தும் தினசரி செயல்பாடுகள் ஜூலை இரண்டாம் வாரம் (DAILY ACTIVITIES - JULY 2022 )

எண்ணும் எழுத்தும் தினசரி செயல்பாடுகள் ஜூலை இரண்டாம் வாரம் (DAILY ACTIVITIES - JULY 2022 )