4 -ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - 8. பசுவுக்குக் கிடைத்த நீதி - புத்தக வினா - விடைகள் மற்றும் கூடுதல் வினா விடைகள்

  8. பசுவுக்குக் கிடைத்த நீதி 

 இரண்டாம் பருவம் 

வாங்க பேசலாம் 

 1. நீங்கள் மனுநீதிச் சோழனாக இருந்தால், பசுவின் துயரத்தை எப்படிப் போக்குவீர்கள்?

 விடை :  நான் மனுநீதிச் சோழனாக இருந்தால் கன்றை இழந்த பசுவை அரண்மனையில் வைத்துப் பாதுகாப்பேன். அப்பசு, கன்றை இழந்த கவலையின்றி இருக்க நிறைய பசுக்களையும் கன்றுகளையும் சேர்த்து வளர்ப்பேன். 

 சிந்திக்கலாமா? 

 வீட்டிற்குப் போகும் வழியில் ஓணான் ஒன்றைச் சிறுவர்கள் சிலர் துன்புறுத்துகின்றனர். அவர்கள் செய்தது சரியா அந்தச் செயலை நீங்கள் எப்படித் தடுப்பீர்கள்? 

விடை :  அவர்கள் செய்தது சரியன்று. சிறுவர்களிடம் “நீங்கள் செய்யும் செயல் தவறானது. நாம் உயிர்களிடம் இரக்கம் கொள்ள வேண்டும்,” என்று கூறி அச்சிறுவர்கள் ஓணானைத் துன்புறுத்துவதைத் தடுப்பேன்.

  படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்! 

 சரியானச் சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா? 

 1. இன்னல் – இச்சொல்லிற்குரிய பொருள் ………………. 

அ) மகிழ்ச்சி ஆ) நேர்மை இ) துன்பம் ஈ) இரக்கம் 

விடை :  இ) துன்பம் 

2. அரசவை – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………… 

அ) அரச + அவை ஆ) அர + அவை இ) அரசு + அவை ஈ) அரச + வை

 விடை :  இ) அரசு + அவை 

 3. மண்ணுயிர் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….. 

அ) மண் + ணுயிர் ஆ) மண் + உயிர் இ) மண்ண + உயிர் ஈ) மண்ணு + உயிர்

 விடை :  ஆ) மண் + உயிர் 

 வினாவிற்கு விடையளிக்க 

 1. மனுநீதிச் சோழன் ஆராய்ச்சி மணியை அமைத்ததற்கான காரணம் என்ன?

 விடை :  மனுநீதிச் சோழன் தனது ஆட்சியில் குடிமக்கள் யாரும் துன்பப்படக் கூடாது என்று நினைத்தான். அதனால் ஆராய்ச்சி மணியை அமைத்தான்.

  2. பசு ஆராய்ச்சி மணியை அடித்தது ஏன்?

விடை :  அரசனின் மகன் தேரைத் தெருவில் ஓட்டிச் செல்லும் போது, அங்குத் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த பசுவின் கன்று எதிர்பாராத வகையில் தேர்க்காலில் மாட்டி இறந்துவிட்டது. அதனால் துயருற்ற பசு ஆராய்ச்சி மணியை அடித்தது.

 3. பசுவின் துயரை மன்னன் எவ்வாறு போக்கினான்? 

விடை :   பசுவின் துயரைப் போக்க எண்ணிய மன்னன், தன் மகனை அதே தேர்க்காலில் இட்டுக் கொன்று பசுவின் துயரைப் போக்கினான். 

 அகரமுதலி பார்த்துப் பொருள் அறிக

 1. ஆற்றொணா – தாங்க முடியாத 

2. வியனுலகம் – பரந்த உலகம் 

3. செவி சாய்த்தல் – கேட்க விரும்புதல் 

4. கொடியோன் – துன்புறுத்துபவன்

 5. பரம்பரை – தொன்றுதொட்டு 

 சொல் உருவாக்குக

கூடுதல் வினாக்கள் 

 வினாக்களுக்கு விடையளிக்க. 

  1. மனுநீதிச் சோழன் பற்றி எழுதுக. 

விடை :  மனுநீதிச் சோழன் சோழ மன்னர்களுள் ஒருவன். முறைமை தவறாது ஆட்சி புரிவதையே தன் நோக்கமாகக் கொண்டவன். அவனுடைய ஆட்சிக் காலத்தில் வாயில்லாப் பசுவுக்கு ஏற்பட்ட பேரிழப்பைத் தன் மகனைக் கொன்று சரிசெய்தவன். நீதியையே தன் பெயரில் வைத்துள்ளவன். 

 2. மனுநீதிச் சோழன் ஆராய்ச்சிமணியைப் பற்றிக் கூறியது யாது? 

விடை :  ஆராய்ச்சிமணியின் நோக்கம் உடனுக்குடன் நீதி வழங்குவது என்றும், குடிமக்கள் எப்போது ஆராய்ச்சி மணியை ஒலித்தாலும் அவர்கள் முன் தானே ஓடோடிச் சென்று, அவர்களின் மனக்குறையை உடனடியாகத் தீர்த்து வைப்பேன் என்றும் மனுநீதிச் சோழன் கூறினான். 

 3. பசுவின் கன்று எவ்வாறு இறந்தது?

விடை :   அரசனின் மகன் தேரைத் தெருவில் ஓட்டிச் செல்லும்போது, அங்குத் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த பசுவின் கன்று, எதிர்பாராத வகையில் தேர்க்காலில் மாட்டி இறந்தது.

  4. கன்றினை இழந்த பசுவின் எண்ணத்தை மன்னர் எவ்வாறு வெளிப்படுத்தினார்?

 விடை :  “நீயும் ஒரு மன்னனா? உனக்கு மகன் எப்படியோ அப்படியே எனக்கு என் கன்று அல்லவா? அந்தச் சின்னஞ்சிறு கன்று என்ன பாவம் செய்தது? அதன் உயிரைப் போக்க உங்களுக்கு எப்படி மனம் வந்தது? கன்றை இழந்து தவிக்கும் எனக்கு யார் ஆறுதல் தருவார்? இனி என் வாழ்நாளெல்லாம் வீண்தானோ என்று கேட்பது போல் இருக்கிறது” என்று பசுவின் எண்ணத்தை மன்னர் வெளிப்படுத்தினார்.


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

4 -ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - 9. வேலைக்கேற்ற கூலி - புத்தக வினா - விடைகள் மற்றும் கூடுதல் வினா விடைகள்

 தமிழ்

இரண்டாம் பருவம்

 9. வேலைக்கேற்ற கூலி

வாங்க பேசலாம்

 1. கதையை உம் சொந்த நடையில் கூறுக. 

விடை : அழகாபுரி மன்னர் நல்லமுறையில் ஆட்சி செய்து வந்தார். அவரை எல்லோரும் புகழ்ந்து பேசுவர். இரத்தினபுரி மன்னர் இதனைக் கேள்விப்பட்டார். அவர் தன்னுடைய அமைச்சர்களிடம் “நானும் நன்றாக ஆட்சி புரிகிறேன். நம் நாட்டு மக்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன். ஆனால், என்னை யாரும் புகழவில்லையே” என்று கேட்டார். அமைச்சர் ஒருவர் கொஞ்சம் தயக்கத்துடன் பேச ஆரம்பித்தார். “நான் சொல்வதைத் தவறாக நினைக்காதீர்கள். நீங்கள் அழகாபுரி மன்னருடன் ஒருநாள் முழுவதும் இருந்து அவர் குடிமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை அறிந்து கொண்டால் அதனை நாமும் பின்பற்றலாம்” என்று கூறினார்.

  அதன்படி இரத்தினபுரி மன்னர் அழகாபுரி நாட்டுச் சென்றார். இருமன்னர்களும் நலம் விசாரித்துக் கொண்டனர். பிறகு இருவரும் அரசவைக்குச் சென்றனர். அழகாபுரி மன்னர் தனக்குச் சமமான இருக்கையில் அம்மன்னரை அமரச் செய்தார். அப்போது விறகுவெட்டி ஒருவன் அரசவைக்கு வந்து தன் குறையைத் தீர்க்கும்படிக் கேட்டான். “ஐயா, விறகு வெட்டுபவரே, உங்கள் மனக்குறையைச் சொல்லுங்கள். என்னால் முடிந்த அளவு தீர்த்து வைக்கிறேன்” என்றார் மன்னர். விறகுவெட்டி “தன்னைப் போன்றோர்க்கு நாள்தோறும் இரண்டு ரூபாய் கூலியும், மன்னரிடம் பணிபுரிபவருக்கு மட்டும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகவும் குற்றம் சாட்டினான். மன்னர் “இதுபோல் எக்குறையும் வரக்கூடாது என்பதில் நான் கவனமாகத்தான் இருக்கிறேன். கொஞ்சம் பொறுங்கள், உங்கள் ஐயத்தைத் தீர்த்து வைக்கிறேன்” என்றார். 

  மன்னர் அமைச்சர்களுள் ஒருவரையும் விறகு வெட்டியையும் பார்த்து “அரண்மனைக்கு வெளியே ஏதாவது வண்டி செல்கிறதா? என்று பார்த்துவிட்டு வாருங்கள்” என்று கூறினார். விறகுவெட்டி வெளியில் சென்று உடனே திரும்பி வந்து “ஒரு வண்டி செல்கிறது” என்று கூறினான். அந்த வண்டியில் என்ன இருக்கிறது? எந்த ஊரிலிருந்து வருகிறது? என்று மன்னர் கேட்ட கேள்விகளுக்கு ஒவ்வொரு முறையும் வெளியில் சென்று வந்து அவன் பதிலளித்தான். அப்போது அமைச்சர் உள்ளே நுழைந்தார். “நீங்கள் என்ன பார்த்தீர்கள்?” என்று அமைச்சரிடம் மன்னர் கேட்டார். அமைச்சர் ஒரு கேள்விக்கு பல பதில்களைக் கூறி முடித்தார். விறகு வெட்டியோ மன்னர் கேட்ட ஒவ்வொரு வினாவிற்கும் வெளியே சென்று வந்து பதிலளித்தான். அமைச்சர் கூறியதைக் கேட்டு விறகுவெட்டி தன் தவற்றை உணர்ந்தான். மன்னரிடம் விறகுவெட்டி, “அமைச்சரின் அறிவுக்கூர்மையையும் என்னுடைய அறியாமையையும் புரிந்து கொண்டேன். அவரவர் திறமைக்கேற்ற வேலைக்கேற்ற கூலி கொடுப்பதுதான் நியாயம் என்பதைப் புரிந்து கொண்டேன்” என்றான். 

 இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இரத்தினபுரி மன்னரும் ‘இவருடைய புகழைக் கண்டு பொறாமை கொண்டோமே, உண்மையை உணர்ந்து கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்தது’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டார். தம் குடிமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் அறிந்து கொண்டார். 

 சிந்திக்கலாமா? 

 அமைச்சர் வண்டிக்காரரரிடம் எல்லாத் தகவல்களையும் பெறுவதற்கு என்னென்ன கேள்விகளைக் கேட்டிருப்பார்? எழுதுங்கள். ………………………………………………………………………………………. ………………………………………………………………………………………. ………………………………………………………………………………………. ……………………………………………………………………………………….

விடை : 

 வண்டியில் என்ன இருக்கிறது? 

எந்த ஊரிலிருந்து வருகிறது? 

வண்டியில் என்ன எடுத்துச் செல்கின்றார்? 

வண்டியில் எத்தனை மூட்டைகள் உள்ளன? 

வண்டியில் உள்ள மூட்டைகளில் என்ன இருக்கிறது?

 வண்டி எங்கிருந்து எங்கு செல்கின்றது? 

வண்டியில் யார்யார் பயணம் செய்கிறார்கள்? 

வண்டி எப்போது திரும்பி வரும்? 

வண்டி விரைந்து செல்வதற்கான காரணம் யாது? 

 வினாக்களுக்கு விடையளிக்க 

 1. அழகாபுரி மன்னர் தம் குடிமக்களை எவ்வாறு நடத்தினார்? 

விடை :  அழகாபுரி மன்னர், அமைச்சர், விறகு வெட்டி என்ற வேறுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்தினார். 

2. விறகுவெட்டி, மன்னரிடம் தம் மனக்குறையாக என்ன கூறினார்? 

விடை :  ‘மன்னர், விறகு வெட்டியான தனக்கு நாள்தோறும் இரண்டு ரூபாய் கூலியும் அமைச்சருக்கு மாதத்திற்கு ஆயிரம் ரூபாயும் கொடுப்பதாகவும் அதுவே தம் மனக்குறை என்று விறகு வெட்டி மன்னரிடம் கூறினார்.

  3. மன்னர் அமைச்சரிடமும் விறகுவெட்டியிடமும் என்ன வேலை அளித்தார்?

 விடை :  “அரண்மனைக்கு வெளியே ஏதாவது வண்டி செல்கிறதா?” என்று பார்த்து வரும்படி மன்னர் அமைச்சரிடமும் விறகு வெட்டியிடமும் கூறினார். அதற்கு அமைச்சர் ஒருமுறையே வெளியே சென்று வந்து பல பதில்களைக் கூறினார். ஆனால் விறகு வெட்டியோ ஒவ்வொரு முறையும் சென்று வந்து மன்னரிடம் பதில் அளித்தான். 

 படத்தைப் பார்ப்போம் வினாக்கள் உருவாக்குவோம்



யானை என்ன செய்கிறது? 

வரிக்குதிரை ஏன் சோகமாக உள்ளது?

 சீறி பாயும் விலங்கு எது? 

புலி சண்டை போடுகிறதா?

 நடனமாடும் விலங்கு எது?

 படத்தில் எத்தனை பறவைகள் உள்ளன? 

 மொழியோடு விளையாடு 

 சொல் உருவாக்கப் புதிர்

வடிவங்களைக்கொண்டு அவற்றிற்குரிய எழுத்துகளை எழுதிச் சொல் உருவாக்குக.

ஒவ்வொரு வடிவமும் ஓர் எழுத்தைக் குறிக்கும்



சொல் எழுதுக .சொற்றொடர் அமைக்க


விடுபட்ட எழுத்துகளை நிரப்பி விடுகதைக்கு விடையைக் கண்டுபிடிக்க

கூடுதல் வினாக்கள் .

வினாக்களுக்கு விடையளிக்க. 

 1. இரத்தினபுரி மன்னர் ஆலோசனையின் போது அமைச்சர்களிடம் என்ன வினவினார்? 

விடை :   “நானும் சிறந்த முறையில்தானே ஆட்சி நடத்துகிறேன். ஆனால், என்னை மட்டும் ஏன் யாரும் புகழவில்லை ” என்று அமைச்சர்களிடம் வினவினார். 

 2. இரத்தினபுரி மன்னருக்கு அமைச்சர் கூறிய பதில் என்ன?

விடை :   “நான் சொல்வதைத் தவறாக நினைக்காதீர்கள். அழகாபுரி நாட்டுக்குச் சென்று, ஒருநாள் முழுவதும் அந்த நாட்டு மன்னருடன் நீங்கள் உடனிருக்க வேண்டும். அவர் தம் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமக்களிடமும் எப்படி நடந்து கொள்கின்றார் என்று அறிந்து கொண்டால், நாமும் அவற்றுள் சிலவற்றையாவது பின்பற்றலாம் மன்னா” என்று அமைச்சர் மன்னரிடம் கூறினார். 

3. விறகுவெட்டி தன் தவற்றை உணர்ந்த பிறகு மன்னரிடம் என்ன கூறினான்?

விடை :   “மன்னா, என் மனக்குறை நீங்கிவிட்டது. உங்களைப் பற்றித் தவறாக எண்ணிவிட்டேன். அமைச்சரின் அறிவுக் கூர்மையையும் அவருடைய திறமையையும் கண்டுவியக்கிறேன். அவருடன் ஒப்பிடும்போது என் அறியாமையையும் நான் உணர்ந்து கொண்டேன். நான், நான்தான். அமைச்சர், அமைச்சர்தாம். அவரவர் திறமைக்கேற்ற வேலைக்கேற்ற கூலி கொடுப்பதுதான் நியாயம் என்பதைப் புரிந்து கொண்டேன்” என்றான் அந்த விறகுவெட்டி.


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

நான்காம் வகுப்பு இரண்டாம் பருவம் கற்றல் விளைவுகள் படிவம் (பாடவாரியாக)

 நான்காம் வகுப்பு இரண்டாம் பருவம் கற்றல் விளைவுகள் படிவம் (பாடவாரியாக)


Click here to download pdf file


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

4 -ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - 2.எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்! -வினா - விடைகள்

 பக்கம் - 11

வாங்க பேசலாம் 

"பணத்தையா சாப்பிடமுடியும்?” என்ற இளமாறனுக்கு நீங்களாக இருந்தால் என்ன விடை சொல்வீர்கள்?

விடை : 

 நான் கூறும் விடை :

 பணத்தைச் சாப்பிட முடியாது. ஆனால் விவசாயத்தை மேம்படுத்த முடியும். உழவுத்தொழில் சிறப்பதற்கான பணியைச் செய்வேன். வீட்டில் கால்நடைகளை வளர்த்து இயற்கை உரத்தைப் பயன்படுத்துவேன். செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்தமாட்டேன் என்று உறுதிமொழியேற்பேன். 

 சிந்திக்கலாமா? 

 நம் நாட்டில் பல தொழில்கள் நடைபெறுகின்றன. உழவுத்தொழில் செய்ய யாரும் விரும்பவில்லையெனில், உலகம் என்னவாகும்?

 விடை : சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்று திருவள்ளுவரே கூறியுள்ளார். பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும், உழவுத்தொழிலே சிறந்தது. அத்தகைய உழவுத்தொழில் நடைபெறவில்லையெனில் நம் அனைவருக்கும் உண்ண உணவு இருக்காது. உணவுக்குப் பதிலாக காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளுக்கும் மாத்திரையை விழுங்கி உயிர் வாழ வேண்டிய நிலைதான் ஏற்படும்.

பக்கம் - 12

 படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்! 

 சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா? 

 1. ‘பாய்ந்தோடும்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………………… 

அ) பாய் + தோடும் ஆ) பாய்ந்து + ஓடும் இ) பயந்து + ஓடும் ஈ) பாய் + ஓடும்

 விடை :  ஆ) பாய்ந்து + ஓடும்

 2. காலை + பொழுது – இச்சொற்களைச் சேர்த்து எழுதினால் கிடைப்பது………………. 

அ) காலைப்பொழுது ஆ) காலைபொழுது இ) காலபொழுது ஈ) காலப்பொழுது

விடை : அ) காலைப்பொழுது  

3. பின்வருவனவற்றுள் எது இயற்கை இல்லை?…………………….. 

அ) மலை ஆ) காடு இ) நெகிழி ஈ) நிலம் 

விடை :  இ) நெகிழி 

4. குனிந்து – இச்சொல் குறிக்கும் பொருள்…………………… 

அ) வியந்து ஆ) விரைந்து இ) துணிந்து ஈ) வளைந்து 

விடை :  ஈ) வளைந்து 

5. தன் + உடைய இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது…………………………………….. 

அ) தன்னுடைய ஆ) தன்உடைய இ) தன்னுடைய ஈ) தன்உடையை 

விடை :  அ) தன்னுடைய 

 வினாக்களுக்கு விடையளிக்க 

 1. செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?

 விடை :  நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து நோய்கள் வருகின்றன. உணவுகள் உயிர்ச்சத்தின்றி இருக்கின்றன. மண் வளம் அழிக்கப்படுகிறது. 

2. நிலத்தைத் தெய்வமாக வணங்கவேண்டும் எனத் தாத்தா கூறக் காரணம் என்ன? 

விடை : நெல், கம்பு, கேழ்வரகு, உளுந்து, துவரம்பருப்பு, எண்ணெய் வித்துகள், காய்கள், பழங்கள் எனப் பலவகையான உணவுப் பொருள்களை நிலம் கொடுப்பதால், நிலத்தைத் தெய்வமாக வணங்க வேண்டும்.

 3. ‘எல்லாரும் இப்படியே இருந்துவிட்டால்’ என இளமாறன் ஏன் கூறினான்?

விடை : இளமாறன் தன் தாத்தா கூறியவற்றைச் சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய அப்பா ”வயலுக்குச் சென்று வந்தாயா? உன் தாத்தாவை வயலுக்குப் போக வேண்டாம் என்று சொன்னால் அவர் எங்கே கேட்கிறார்?” என்று கூறினார். அதற்கு இளமாறன் “யாருமே வயலுக்குப் போகவில்லை என்றால் என்னவாகும்?” என்று கேட்டான். “எல்லாரும் இப்படியே இருந்து விட்டால் விவசாயத்தை யார் செய்வது?” என்று கேட்டுத் தன் தந்தையின் தவற்றைச் சுட்டிக் காட்டினான். 

 சொந்த நடையில் கூறுக

 உமக்குப் பிடித்த காய்கள், பழங்கள் எவை? ஏன்? 

விடை :  எனக்குப் பிடித்த காய்கள்

  •  கத்தரிக்காய், 
  • வெண்டைக்காய், 
  • அவரைக்காய், 
  • பாகற்காய், 
  • முள்ளங்கி, 
  • காரட், 
  • பீன்ஸ், 
  • உருளைக்கிழங்கு,
  •  பீட்ரூட், 
  • பூசணிக்காய்,
  •  எல்லா வகையான கீரைகள்,

 பழங்கள் 

  • அன்னாசிப்பழம், 
  • கொய்யாப்பழம், 
  • மாம்பழம், 
  • திராட்சைப்பழம்,
  •  பப்பாளிப்பழம் 

ஆகிய அனைத்தும் எனக்குப் பிடித்தவை. இவற்றை உண்பதற்கான தனித்தனிக் காரணங்கள் ஏதும் இல்லை. காய்கறிகளிலும் பழங்களிலும் தனித்தனி மருத்துவக்குணம் உள்ளது. 

 பொதுவாகக் காய்கறிகளையும் பழங்களையும் உண்பதால் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. உயிர்ச்சத்து மற்றும் தாது உப்புகள் கிடைக்கும். 

நோய் எதிர்ப்புச் சக்தி கூடுகிறது. அதனால் நோயற்ற வாழ்வு வாழ இயலும். 

பக்கம் - 13

அகரமுதலிப் பார்த்துப் பொருளறிக 

 மாசு – ……………………….. 

வேளாண்மை – …………………… 

விடை : மாசு – அழுக்கு, குற்றம், மாறுபாடு

 வேளாண்மை – உழவு

 சொற்களை இணைத்துத் தொடரை நீடித்து எழுதுக

நிறுத்தக் குறியிடுக 

1. நெல் கம்பு கேழ்வரகு போன்றவை தானியங்கள்

விடை : நெல், கம்பு, கேழ்வரகு போன்றவை தானியங்கள். 

2. வெண்டைக்காய் உடலுக்கு நல்லது

 விடை :  ‘வெண்டைக்காய் உடலுக்கு நல்லது. 

3. ஆகா பயிர் அழகாக உள்ளதே

விடை :  ஆகா, பயிர் அழகாக உள்ளதே! 

4. அடப்பாவமே அப்படின்னா நாம எதைத்தான் சாப்பிடுவது

விடை : அடப்பாவமே! அப்படின்னா, நாம எதைத்தான் சாப்பிடுவது? 

 புதிய சொற்களை உருவாக்கலாமா?


பக்கம் - 14

படத்தை பார்த்து விடுகதைகள் உருவாக்குக 


 

அகர வரிசைப்படுத்துக:



கூடுதல் வினாக்கள் :
வினாக்களுக்கு விடையளிக்க. 

 1. இளமாறன் மாடியிலிருந்து பார்த்தக் காட்சிகள் யாவை? 

விடை : மாமரத்திலிருந்த கிளிகள் கீச் கீச் எனக் குரலெழுப்பி அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன. வைக்கோல்போரின் மீது சேவலொன்று மெதுவாக நடைபயின்று கொண்டிருந்தது. தோட்டத்தில் துள்ளிக்குதித்துக் கொண்டிருந்த கன்றைக் கண்டு பசு, “ம்மா…” எனக் குரலெழுப்பியது.

2. இளமாறன் வயலுக்கு ஏன் சென்றான்? 

விடை :  இளமாறன் தன் தாத்தாவிற்கு சாப்பாடு கொடுப்பதற்காக வயலுக்குச் சென்றான். Question 3. நெல்மணிகள் எவ்வாறு இருந்தன? Answer: நெல்மணிகள் கற்றறிந்த சான்றோர் போலக் குனிந்து நின்றன. 

 4. இளமாறன் எதைப் பார்த்து வியப்படைந்தான்? 

விடை : வளையிலிருந்து நண்டுகள் எட்டிப் பார்த்து, தம் கொடுக்குகளை மேலும் கீழுமாக அசைத்து நகர்ந்தன. அதைப் பார்த்து இளமாறன் வியப்படைந்தான். 

 5. நிலத்தில் வேலை செய்வது பற்றி இளமாறன் கேட்ட கேள்விக்குத் தாத்தா என்ன பதில் கூறினார்?

 விடை :  வயலில் வேலை செய்ததால்தான் தன் உடல் வலிமையாக உள்ளது என்றும், வலிமையாக இருப்பதால் நோய்நொடியின்றி இருப்பதாகவும் கூறினார். 

6. வயலைப் பற்றி இளமாறனின் தாத்தா கூறியது யாது?

விடை : வயல்தான் தமக்குச் சொத்து. இங்கு விளைகின்ற பயிர்கள் மக்களை வாழவைக்கின்றன. உண்ணுகின்ற உணவுப் பொருள்களெல்லாம் தம்மைப் போன்ற உழவர்களின் உழைப்பின் மூலமாகவே கிடைப்பதாக தாத்தா கூறினார்.

 7. உழவர்கள் விளைவிப்பவை யாவை?

 விடை :  நெல், கம்பு, கேழ்வரகு, உளுந்து, துவரம்பருப்பு, எண்ணெய்வித்துகள், காய்கள், பழங்கள். 

 8. ஈடு இணை இல்லாதது என்று தாத்தா குறிப்பிட்டது என்ன? 

விடை : உழவர்களின் தேவைக்குப் போக விளைந்ததைப் பிறருக்குக் கொடுக்கும் போது கிடைக்கிற மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை என தாத்தா குறிப்பிட்டார்.

சிறுவினா: 
 1. தாத்தா இயற்கை உரம், செயற்கை உரம் பற்றிக் கூறியனவற்றை எழுதுக.

விடை : 

இயற்கை உரம்:

ஆடு மாடுகளின் சாணத்தை ஒன்று சேர்த்து எருவாக்கி, நிலத்தில் போடுதல். தாவரங்களின் தழைகளை மண்ணிலிட்டு மட்கச் செய்தல். இந்த இயற்கை உரங்களைப் பயன்படுத்தினால் நல்ல விளைச்சல் கிடைக்கும். நாம் நல்ல உடல் நலத்தோடும் நோய் எதிர்ப்புச் சக்தியோடும் வாழலாம்.

 செயற்கை உரம்: செயற்கை உரங்களைத் தெளிப்பதனால் தேனீ, வண்ணத்துப்பூச்சி, மண்புழு போன்றவை அழிந்து விடுகிறது. அதனால் மண் மாசடைகிறது. செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை மண்ணில் தெளிப்பதனால் தண்ணீர் மாசடைகிறது. தொழிற்சாலைக் கழிவுகளை அப்படியே நிலத்தில் விடுவதால் நிலத்தடிநீர் மாசடைகிறது. இவற்றைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுகளை உண்பதால் நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்து புதிய புதிய நோய்கள் வருகின்றன.


EE - Second Term - Learning Outcomes ( pdf)

 எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவத்தில் குழந்தைகள் பெறவேண்டிய கற்றல் விளைவுகளின் தொகுப்பு - pdf


EE - Second Term - Learning Outcomes - Download here


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

Diksha App -Direct link Available!!!

 

Diksha App -Direct link Available!!!





TNEMIS CLUB REGISTER (PDF)

ஈராசிரியர் பள்ளியிலிருந்து விடுவிக்கப்படாத ஆசிரியர்களை விடுவிக்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

 ஈராசிரியர் பள்ளியிலிருந்து விடுவிக்கப்படாத ஆசிரியர்களை விடுவிக்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

பணிமாறுதல் - ஈராசிரியர் பள்ளியிலிருந்து விடுவிக்கப்படாத ஆசிரியர்களை விடுவிக்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு நாள்:17-10-2022.




Click here to Join WhatsApp group for Daily kalvi news 

அங்கன்வாடி மையங்களில் 2381 தற்காலிக சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்தல் சார்ந்த அறிவுரைகள்!!!

 அங்கன்வாடி மையங்களில் 2381 தற்காலிக சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்தல் சார்ந்த அறிவுரைகள்!!!






எண்ணும் எழுத்தும் KIT - CATALOGUE

 

ஒவ்வொரு பள்ளியிலும் எண்ணும் எழுத்தும் KIT - CATALOGUE பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக தரப்பட்டுள்ளது.... பெட்டியில் உள்ள பொருட்களின் விவரம் பள்ளிக் கல்வித் துறைகளின் சார்பாக படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது....

தமிழ் வழியில் படித்ததற்கான சான்று இனி வழங்கப்பட வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

 தமிழ் வழியில் படித்ததற்கான சான்று இனி வழங்கப்பட வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

தமிழ் வழியில் படித்ததற்கான சான்று [ PSTM ] Online வாயிலாக மட்டுமே இனி வழங்கப்பட வேண்டும் என்பதற்கான ஆணையரின் செயல்முறைகள்...




 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு RC post அனுமதிக்கப் பட்ட ஆணை

 


பள்ளிக் கல்வித் துறை - நிருவாக சீரமைப்பு அலுவலகப் பணியாளர்கள் பணிநிரவல் செய்து ஆணை வழங்கப்பட்டது வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு பதிவறை எழுத்தர் பணியிடம் ஒதுக்கீடு செய்து திருத்திய ஆணை


BEO Office RC Post Proceeding - Download here


 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு 6 நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி

 


TRB மூலம் நேரடி நியமனம் பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு 6 நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சியளித்தல் சார்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் புதிய செயல்முறைகள்

 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சியளித்தல் சார்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்...


leadership training to HeadMasters Proceedings - Download here


 Click here to Join WhatsApp group for Daily kalvi news